மாலை மலர் : பார்ப்பனர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.
எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக