![]() |
யுக்ரேன் தலைநகரின் கவனம் முழுவதும் வாக்னர் படைகள், அதன் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின், வாக்னர் கிளர்ச்சியினால் புதின் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றின் மீது குவிந்திருக்கிறது.
ரஷ்யாவுக்குள் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என கீயவ் கருதுகிறது.
“அவரது நாட்கள் எண்ணப்படுவதாகவே நான் கருதுகிறேன்,” என யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் ஆண்ட்ரி யெமாக் கூறுகிறார்.
கீயவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு கிரைமிய தீபகற்பத்தை தன்னகப்படுத்துவதற்காக ரஷ்யா முதன்முதலாக யுக்ரேன் நாட்டை ஆக்கிரமித்ததை நினைவுகூர்ந்தார் 2014ம் ஆண்டு யுக்ரேன் எப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொண்டது என்பது உலகறிந்த விஷயம்,” என்றார் யெமாக்.


.jpg)