வியாழன், 29 ஜூன், 2023

முதல்வர் ஸ்டாலின் : ஆளுநருக்கு அதிகாரமில்லை . சட்டரீதியாக சந்திப்போம்! செந்தில் பாலாஜி ..

மின்னம்பலம் - Jegadeesh : தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஜூன் 29) உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில்,அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும்.
இது இறுதியில் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளதால் அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான அதிகாரம் கிடையாது. நாங்கள் அதை சட்டரீதியாக சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.  மு.வா.ஜெகதீஸ் குமார்
 

கருத்துகள் இல்லை: