புதன், 23 பிப்ரவரி, 2022

பழம்பெரும் மலையாள நடிகை லலிதா காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகை லலிதா காலமானார்

தினத்தந்தி  : பிரபல பழம்பெரும் மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து உடல்நிலை சற்று தேறியநிலையில் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார்.

கோவை தேர்தல் முடிவுகள்! சுயேச்சைகளின் கை ஓங்கியது...

   tamil.samayam.com : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கையானது 17 மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒத்தையில நிக்குறேன்; உரசி பார்க்காதே; மிரட்டும் காட்டு யானையின் வீடியோ! கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால் இந்த மண்டலத்தில் உள்ள சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கைப்பற்ற ஆளும் திமுக அரசு பல்வேறு வியூகங்களை வகுத்தது.

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக: முழு விவரம்!

 மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
மாநகராட்சி வாரியான விவரம்
1.சென்னை மாநகராட்சி (200 வார்டுகள்)
திமுக - 153, அதிமுக - 15, காங்கிரஸ் -13, சுயேச்சைகள் -5, சிபிஐ-1, சிபிஐ(எம்)-4, மதிமுக-2, ஐயுஎம்எல்-1, விசிக-4, பாஜக -1, அமமுக- 1
2.தாம்பரம் மாநகராட்சி (70 வார்டுகள்)
தி.மு.க. கூட்டணி-55, அதிமுக-8, சுயேச்சை-7
3.ஆவடி மாநகராட்சி (48 வார்டுகள்)
திமுக-34 அதிமுக-4, காங்கிரஸ்- 3, சுயேச்சை-1, சிபிஎம்-1, மதிமுக-3 விசிக-1
4.காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)
திமுக - 31, காங்கிரஸ்-1 , அதிமுக - 9, பாமக - 2, பாஜக -1,தாமக-1 சுயேச்சைகள்- 6
5.கோவை மாநகராட்சி (100 வார்டுகள்)
திமுக -76, காங்கிரஸ்-9, அதிமுக-3, மற்றவை-4, சி.பி.ஐ(எம்)-4, சி.பி.ஐ-4
6.சேலம் மாநகராட்சி (60 வார்டுகள்)

உக்ரேனிய இரண்டு பிரதேசங்களை சுதந்திர நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது

  BBC : உக்ரேனுடனான அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாய் அதிகாலையில் உக்ரேனின் இரண்டு பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்.
நாட்டிற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரைக்கு பின்னர், புடின் உக்ரேனின் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதத் தலைவர்களுடன் நட்பு மற்றும் உதவி ஒப்பந்தங்களில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்.
இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில் புடின், நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை கிழக்கு பிராந்தியங்களில் “அமைதியைப் பேணுவதற்கான செயல்பாட்டை” ஏற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

சென்னை 200 வார்டுகளில் 178 மாமன்ற வார்டுகளில் வரலாறு காணாத வெற்றி ..

May be an image of text that says 'தேர்தல் முடிவுகள்- 2022 மாநகராட்சி வார்டு உறுப்பினர் (மொத்த எண்ணிக்கை: 1374) மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சதவீதம் வாரியாக) அறிவிக்கப்படாதது (0.29%) வேட்பு மனு தாக்கல் இன்மை (0.00%) தேர்தல் தள்ளி வைப்பு (0.07%) தேர்தல் ரத்து (0.00%) அ.இ.அ.தி.மு.க(11.94%) அ.இ.தி.கா பி.எஸ்.பி (0.00%) பி.ஜே.பி (1.60%) சி.பி.ஐ (0.95%) சி.பி.ஐ(எம்) (1.75%) தே.மு.தி.க (0.00%) தி.மு.க (69.00%) இ.தே.கா (5.31%) என்.சி.பி (0.00%) தே.ம.க(0.00%) மற்றவை (9.10%)'

Venkat Ramanujam  : பலர் ஐயையோ ஒரு வார்டில் பாஜக  சென்னை மாநகராட்சியில் ஜெயித்து விட்டது .. இனி என்ன ஆகுமோ..
என நேரடியாக புலம்புவதை பார்த்ததும்.. திமுக கூட்டணி எப்படி இதை எப்படி கோட்டை விட்டது என்று கோபத்துடன் கேட்பதை பார்த்ததும்..
வருத்தம் வரவில்லை புன்சிரிப்பு  மட்டுமே வருகிறது..
காரணம்..
 மொத்தமாக 21 மாநகராட்சியில் இட ரீதியாக கட்சிகள் பெற்ற விகிதாசாரம் முறையே:
திமுக : 69%
அதிமுக: 12%
காங்கிரஸ் : 5.3%
சிபிஎம்: 1.75 %
பாஜக : 1.6%
உண்மைதான் உலகத்திலே பணக்கார கட்சியான பாஜக ..  மேற்கு மாம்பலத்தில் அந்த ஒரு வார்டில் மட்டுமே 50 லட்ச ரூபாயை செலவு செய்து உள்ளதாக செய்திகளை நாதுராம் கோட்சே புத்திரிகள் மறுக்கவில்லை..
தனக்கென்று கொள்கைகள் ஏதும் இல்லா நாம் தமிழர் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தினகரன் கட்சி  விஜயகாந்த் கட்சி இவர்களைக் காட்டிலும் .. தீவிர இந்துத்துவா கொள்கையை போதிக்கும் #பாஜக முந்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை..
ஆனால் வெறும் ஒன்றரை பர்சன்டேஜ் வைத்துள்ள கட்சியை 70% உள்ள கட்சியுடன் ஒப்பிடுவது . .

மாநகராட்சி + உள்ளூராட்சிகளில் திமுக சூறாவளி அதிர்ச்சியில் அதிமுக பஜாக.... கொங்கு மண்டலத்தையும் கைப்பற்றியுள்ளோம்: மகிழ்ச்சியில் ஸ்டாலின்

 மின்னம்பலம் : இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக 140 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 வார்டுகளிலும், அதிமுக 13 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.
100 வார்டுகளை கொண்ட மதுரையில் திமுக 51 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
100 வார்டுகளை கொண்ட அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக 35 வார்டுகளிலும், அதிமுக - 3, சிபிஐ-1. சிபிஐ (எம்)-3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
சேலத்தில் திமுக 29 இடத்தையும், அதிமுக 4 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

நகராட்சிகளில் ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் எண்ணிக்கை: முழு விவரம்

 மாலைமலர் : நகராட்சி வார்டுகளில் தி.மு.க. 2,360 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க. 638 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா 56 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. 138 நகராட்சிக்கான 3,843 வார்டுகளில் ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 18 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றது. நேரம் செல்லசெல்ல அவை அனைத்தும் வெற்றிகளாக மாறின. மாலை 6.30 மணியளவில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. 2360 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ்- 151
பா.ஜனதா- 56
பா.ம.க.- 48
சி.பி.ஐ(எம்)- 41
மதிமுக- 34
அமமுக- 33
விடுதலை சிறுத்தைகள்- 26

ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..! AIADMK ex-minister Jayakumar remanded in custody for 15 days

 tamil.asianetnews.com  : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில்  வைக்க எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வருகிறது.

ஆர் கே செல்வமணி நிஜமாகவே இயக்குனரா? பாக்யராஜ் கடும் தாக்கு

 tamil.indianexpress.com  : நீ எடுத்த படம் எல்லாம் நல்ல ஒடிச்சுன்னு சொன்னாங்க. ஆனால் அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் வந்து விட்டது” என இயக்குனர் செல்வமணியை, கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்
K.Bhagyaraj slams RK Selvamani on Director Association election issue: சர்க்கார் படக்கதை விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், உண்மையிலேயே அவர் இயக்குனர் தானா என எனக்கு சந்தேகம் வந்துவிட்டதாகவும் இயக்குனர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி மகன் பேட்டி . கைதின் போது நடந்தது என்ன?

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்தார்

 தினத்தந்தி : சென்னை : தமிழக இளம் வீரரான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை பாடியில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டி களில் அசத்தி வருகிறார்.
5 வயது முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் ஏழு வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற அவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல் பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 21 பிப்ரவரி, 2022

சித்ரா ராமகிருஷ்ணன் + ஆனந்த் சுப்பிரமணியன்= தேசிய பங்கு சந்தையில் மெகா ஊழல்...

May be an image of 2 people

Senthilraj Thiraviyam  :  இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பங்கு சந்தையில் ஒரு மெகா ஊழல் நடந்து இருக்கிறது.
ஆனந்த் சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர்  சித்ரா ராமகிருஷ்ணன் என்ற NSE யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனரை மத நம்பிக்கையில் வசியம் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு போலியான ஈ மெயில் முகவரியை உருவாக்கி இமயமலையில் இருக்கும் யோகியிடம் இருந்து கட்டளைகள் வருவது போன்று இவனே அனுப்பி ஒரு சாதாரண வேலையில் ஆண்டுக்கு 15 லட்சங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் சித்திரா ராமகிருஷ்ணனின் மூலம்  1.68 கோடிகள் சம்பளத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய பங்கு வர்த்தக மையங்களுள் ஒன்றான என் எஸ் சியின் ஆலோசகராக நுழைந்து விடுகிறான்.  
அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி அந்நியன் ரெமோ என்று வேறு வேறு அவதாரம் எடுப்பது போன்ற ஒரு சினிமாத்தனமான நிகழ்வு உண்மையில் நடந்தேறி இருக்கு.

மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைப்பு - ரூ.4 கோடி வாடகை பாக்கி! அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி!

கலைஞர் செய்திகள்  : வாடகை பாக்கியை நிலுவை வைத்துள்ள சென்னை மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் உள்ள 42 கிரவுண்ட் 1566 சதுரஅடி பரப்பளவுள்ள மனை மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு 99 வருட நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டு 27.8.2000 அன்று குத்தகை காலம் முடிவடைந்தது.
அந்த இடத்தினை மீண்டும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக மயிலாப்பூர் கிளப் நிறுவனம் கோரியதையடுத்து,
தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித்துறை 2007-ல் 42 கிரவுண்ட் 1566 சதுரஅடியில் ஒரு பகுதியான 18 கிரவுண்ட் 2364 சதுரஅடி நிலத்தை திருக்கோயில் வசம் ஒப்படைத்தனர்   அரசாணையின்படி மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் 18 கிரவுண்ட் 2364 சதுரஅடி பரப்பளவுக்கு பதிலாக 2007ஆம் ஆண்டு 18 கிரவுண்ட் 1581 சதுர அடி நிலத்தை ஒப்படைத்தனர். தற்போது மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் வசம் 23 கிரவுண்ட் 2,385 சதுரஅடி பரப்பளவுள்ள மனை உள்ளது. மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவிகிதம் வாடகை உயர்வு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது.

கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலை! தொடரும் பதற்றம்

 தினமலர் : ஷிவமொகா: கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமொகா நகரில் நேற்றிரவு (பிப்.,20) பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகியான ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு - கைது செய்யப்படுவார்?

 மின்னம்பலம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது.
சென்னை ராயபுரம் பகுதியில் திமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாக அன்றைய தினம் மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக ஜெயக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு கள்ள ஓட்டுப் போட்டதாக ஒருவரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவரை தாக்க முயன்றனர்.

சென்னையில் திமுக நிர்வாகி மதன் கொலை!

சென்னையில் துணிகரம்: திமுக நிர்வாகி கொலை!

மின்னம்பலம் : சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில் உச்சக்கட்டமாக நேற்று திமுக நிர்வாகி மதன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளரின் அடியாட்கள் கைது!

 மின்னம்பலம்  : சென்னை 176ஆவது வார்டு அதிமுக வேட்பாளருக்குத் தொடர்புடைய இடங்களில் ரவுடிகள் பிம்பத்திலிருந்த கொத்தனார் உள்ளிட்ட கூலியாட்கள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேட்பாளர் தேர்வு, மனு பரிசீலனை, பிரச்சாரம், பறக்கும் படை சோதனை, வாக்குப்பதிவு என கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த உள்ளாட்சித் தேர்தல் களம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால் வேட்பாளர்களை மிக கவனமாகத் தேர்வு செய்தது அதிமுக.
வேளச்சேரி 176ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஏ.மூர்த்தி சீட் கேட்டதற்கு, அந்த மாவட்ட செயலாளர் அசோக் மறுத்திருக்கிறார். இதனால், நேரடியாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சீட் வாங்கினார். ‘எனக்கு கட்சி சார்பில் பணமெல்லாம் செலவு செய்ய வேண்டாம். அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்டுகிறேன்’ எனக் கூறி சீட் கேட்டு பெற்றார் எம்.ஏ.மூர்த்தி.

டேய் சட்டையை கழட்ரா! தேர்தல் களத்தில் ஜெயக்குமார் அடாவடி!

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

பாகிஸ்தான் 31 இந்திய மீனவர்களை கைது செய்தது

 மாலைமலர் : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்படித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் பதற்றம்; இந்திய தூதரகத்தின் புதிய அறிவுறுத்தல்!

 ukraine indian embassy instruction

நக்கீரன் : உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துச் செல்வதற்கான பணிகளை வெளிநாட்டு தூதரகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.
அந்த வகையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவ்வப்போது அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.
மேலும், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்க கூடுதல் விமானங்களை இயக்க, விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த வகையில், இன்று (20/02/2022) மீண்டும் இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மக்கள் கவுன்சிலர்களின் பொருளாதார வளர்ச்சியை, அடாவடியை நேரடியாக பார்த்து உணர்கின்றனர்.

May be an image of 1 person and text

Kandasamy Mariyappan  : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களுக்கு..,
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்களை காப்பாற்றும் வல்லமை, திராவிட சித்தாந்தம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உண்டு என்ற எண்ணத்திலான ஒரு இணைய உடன்பிறப்பின் கடிதம்.!
நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் மூன்று நாட்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் தெரிந்து விடும்.!
அதற்கு பிறகுதான் உங்களது பணி கூடுதலாக இருக்கும் என்பது எனது பார்வை.!
2011ல் கழகத்தின் தோல்விக்கு..,
2G பிரச்சினை 7%
குடும்ப அரசியல் பிரச்சினை 8%
கட்சி Heavy weight சொத்துகள் 10%
கிராமப்புறங்களில் கட்ட பஞ்சாயத்து 15% என்றால்...,

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட் லுக் நோட்டீஸ்

 Chinniah Kasi  : - தீக்கதிர்  : இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் கேட்டு பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்த  தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட்லுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா.
அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு  மற்றும் பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதுமட்டும் இல்லாமல் இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக சித்ரா மீது புகார் எழுந்தது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரம்!

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு: முழு விவரம்!
மின்னம்பலம் : தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 12,838 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 பேர் போட்டியிட்டனர்.  கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 21 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

1.37 கோடி ஆண் வாக்காளர்களும், 1.42 கோடி பெண் வாக்காளர்களும், 4,323 திருநங்கைகளும் என மொத்தம் 2.79 கோடி பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர்.

மதுரை வாக்குச்சாவடி ஹிஜாப் - பாஜக முகவருக்கு சிறை!

 மின்னம்பலம் : மதுரையில் வாக்கு செலுத்த வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்சினை செய்த பாஜக பூத் முகவர் கிரிராஜனை மார்ச் 4 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதையடுத்து வருகிற 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த நகராட்சியில் 8வது வார்டில் அல்அமீன் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார்.

பெங்களூரு ஹிஜாப் விவகாரத்தில் தொடர் போராட்டம்; 58 முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம்

 தினத்தந்தி  : ‘பெங்களூரு: ‘ஹிஜாப்’ விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால் சிராளகொப்பா அரசு கல்லூரியில் இருந்து 58 மாணவிகள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே திலகமிட்டு வரும் மாணவர்களை தடுக்க கூடாது என மந்திரி நாகேஸ் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் போராட்டம்
கா்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் மாணவிகள் வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளி, கல்லூரி முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.