செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நகராட்சிகளில் ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் எண்ணிக்கை: முழு விவரம்

 மாலைமலர் : நகராட்சி வார்டுகளில் தி.மு.க. 2,360 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க. 638 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா 56 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. 138 நகராட்சிக்கான 3,843 வார்டுகளில் ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 18 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றது. நேரம் செல்லசெல்ல அவை அனைத்தும் வெற்றிகளாக மாறின. மாலை 6.30 மணியளவில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. 2360 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ்- 151
பா.ஜனதா- 56
பா.ம.க.- 48
சி.பி.ஐ(எம்)- 41
மதிமுக- 34
அமமுக- 33
விடுதலை சிறுத்தைகள்- 26


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 23
சி.பி.ஐ- 19
தேமுதிக- 12
மனித நேய மக்கள் கட்சி- 4
பி.எஸ்.பி.- 3
புதிய தமிழகம்- 1
சுயேட்சை- 381

கருத்துகள் இல்லை: