![]() |
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021
புதுச்சேரி: `ஒரே நாளில் இரண்டு விக்கெட்!’ - எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவால் காங்கிரஸ் அதிர்ச்சி
கமல் ரஜனி சந்திப்பு ! பேசிய அரசியல் என்ன? ஜீவ சகாப்தன் அதிரடி
![]() |
ஸ்டாலின் : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து... கசிந்த ரகசியம்?
மே.வங்க பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கையினோடு கைது
வழக்கமாக அரசியல்வாதிகள் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டால், எதிர்க்கட்சியின் சதி எனக் கூறுவது வழக்கம். அதற்கான வாய்ப்புகளும் அதிகம். பமீலாவோ தன் கட்சி சக நிர்வாகியான ராகேஷ் சிங் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். பாஜகவின் மாநிலக் குழு உறுப்பினரான ராகேஷ் சிங்தான் தன் மீதான வழக்குக்கு பின்னணிக் காரணம் என்பது பமீலாவின் குற்றச்சாட்டு.
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க நமச்சிவாயம் பாஜகவில் புகலிடம்!·
- /tamil.samayam.com : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு.
- சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
புத்தரின் பஞ்சசீல (ஒழுக்கம்) கொள்கையை பின்பற்றியதால் பஞ்சமர்கள் என்றனர் .. புத்தர் சிலைகளின் தலைகளை அகற்றி யானை தலைகளை ஒட்டி விநாயகர் என்றனர்
சனி, 20 பிப்ரவரி, 2021
காந்தி சிலை - கரூர் எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்
இன்று இதைக் கண்டித்து காங்கிரஸார் சார்பாக போராட்டம் நடைபெற்றபோது ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர் போலீசார். இதனால் நிலைகுலைந்து போன ஜோதிமணி போலீஸுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினார். இது கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது,
மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின்
![]() |
இன்று (20-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - கோவை ரோடு, சங்கம்பாளையம் - ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற, கோவை கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
40 சீட்டுகள்! கட்சிகளை இணைத்து காட்டுகிறேன் பழிவாங்க மாட்டேன் சசிகலா உத்தரவாதம் ..எடப்பாடி மறுப்பு ? புரோக்கர் அமித் ஷா பேச்சு தோல்வி?
![]() |
Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "40" சீட்டுகள்..! சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்பிருந்தே, தமிழக அரசியலில் களை கட்டி வருகிறது.. ஜெயிலுக்கு போய்விட்டு வருவதால், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு ஏராளமாக இருக்கும் என்று கணக்கு போட்டார் சசிகலா.
சென்னைக்கு காரில் வந்த அன்றும், 23 மணி நேர தொண்டர்களின் வரவேற்பை பார்த்து மிரண்டும் போய்விட்டார்.. அதனால், எப்படியும் அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தாவி வருவார்கள் என்று நினைத்தா சசிகலா "கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்று செய்தியாளர்களிடம் வேனில் உட்கார்ந்தபடியே சொன்னார்.. அதிமுகவில் ஒருபுயலே வீச போகிறது என்ற ரீதியில் எதிர்பார்ப்பும் கிளம்பியது. ஆனால். ஒன்றுகூட நடக்கவில்லை.. எல்லாமே புஸ்ஸென்று போய்விட்டது. எதனால் சசிகலா அமைதியாக இருக்கிறார்? ஏதோ பெரிய அளவுக்கு மெகா பிளானை தீட்டி வருகிறார் என்ற யூகங்கள் இன்றும் வலம் வருகின்றன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்.. மூன்றாண்டுகளாக போராடியும் மதிக்காத மத்திய அரசு”
இதனைக் கண்டித்தும், எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, “ஒருபுறம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்து வரும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.
புதுச்சேரியில் திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக
![]() |
minnambalam :புதுச்சேரியில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த நிலையில், தற்போதைய தனது நடவடிக்கைகள் மூலம் இந்த இரு கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது பாஜக.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- திமுக இணைந்து போட்டியிட்ட 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 2 மொத்தம் 17 எம். எல்.ஏ. க்களுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதல்வரானார் நாராயணசாமி. கடந்த ஆறு மாதங்களாகவே முதல்வர் மீது அதிருப்தியான திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுவந்தார்கள். ஒரு கட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புதுச்சேரி திமுக நிர்வாகிகள் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினை ஒன்றாக சென்று அறிவாலயத்தில் சந்தித்து, ‘புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று வலியுறுத்தினார்கள்.
134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு...
![]() |
இந்தியன் 2. இந்த பிரம்மாண்டத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பேயில்லை. நம்புங்கள்... ஜீவசகாப்தன்
![]() |
'அமித்ஷா' ஆஜராக வேண்டும்! - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரையில் ராமர் ரத யாத்திரை நடத்த அனுமதி!
nakkeeran : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் உள்ள 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதிக்கக் கோரி உதவி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தோம்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டும், சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இன்று (19/02/2021) இரவு 08.00 மணி முதல் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு ரத யாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
![]() |
தமிழ்நாட்டில் நட்டநடுநிலை, நடு சென்டர்களின் அட்டகாசம்!!!
திமுக, குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை; கமிஷன் பார்ப்பதற்கு!!!
திமுக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை: கமிஷன் அடிப்பதற்கு!!! திமுக, நில உச்சவரம்பு மூலமாக குத்தகைதாரர்களுக்கே நிலங்களை பட்டா போட்டு கொடுத்தது,
நட்ட நடுநிலை: சொந்த கட்சிக்காரங்களுக்கு எங்கள் நிலத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்!!!
தமிழக இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுகிறாரா பாமக ராமதாஸ்?
![]() |
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
தெலுங்கானா வக்கீல் தம்பதி படுகொலை : சந்தேக வலையில் ஆளும் கட்சி பிரமுகர் TRS தலைவரான குந்தா சீனிவாஸ்
![]() |
தெலுங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்த தம்பதி ஜி. வாமன் ராவ் (52) மற்றும் ஜி நாகமணி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பெடப்பள்ளி மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காரை வழிமறித்த மர்மநபர்கள் தம்பதி இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது கணவர், வாமன் ராவ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் 108 ஆம்புன்சில் அவரை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்நதார். இந்த படுகொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிடிவி தினகரன் விடுத்த திடீர் அழைப்பு.. மௌனம் கலைப்பாரா ஒபிஎஸ்! செம்ம பரபரப்பு
இந்த அழைப்பை ஏற்பாரா அல்லது மௌனம் கலைத்து டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளார். கூட்டுறவு கடன் ரத்து, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து என பல்வறு அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு
![]() |
* கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
* சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.
* கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.
* காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
PetrolPriceHike பெட்ரோல்விலை ! எதிர்கட்சிகள் எப்போது மக்களுக்காக வாய் திறப்பார்கள்? எப்போது போராடுவார்கள்?
உங்களின் பொருளின்/சேவையின் விலை என்பது கைக்கு எட்டும் உயரத்தில் வாடிக்கையாளர் கண்ணின் உயரத்திற்கு இருக்கவேண்டும்.
தரையில் கிடக்கவும் வேண்டியதில்லை. கைக்கு எட்டாத உயரத்திலும் இருக்க கூடாது.
கையை எட்டி பிடிக்கும்படி இருந்தாலோ, தாவி பிடிக்கும்படி இருந்தாலோ என்னதான் சிறப்பான பொருளாக இருந்தாலும் தேவையான பொருளாக இருந்தாலும் சரியான விலையாக இருக்க முடியாது என்பேன்
பெட்ரோல் விலை இன்று 92 ரூபாய்க்கு வந்திருக்கிறது. கேஸ் சிலிண்டரின் விலையில் மானியத்தையும் ரத்து செய்தும் ரூபாய் 785க்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே சரியான விலைதானா என்றால் நிச்சயம் இல்லை. பொருளாதார சுமையை அவரவர் பொருளாதார வளத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்காமல் பொதுமக்களின் தலையில் மட்டுமே சுமத்தியுள்ளது அரசு. கோவிட் பிரச்சனையால் மக்கள் அவதியுறும்போது பெருநிறுவனங்கள் அதன் முதலாளிகள் நல்ல லாபம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான முதலீடு தங்குதடையில்லாமல் வருகிறது.
இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!
![]() |
அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இதுதான்..! வெளியான உத்தேச பட்டியல்
தேமுதிக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் - 14 விருகம்பாக்கம் எழும்பூர் கொளத்தூர் ராணிப்பேட்டை விருத்தாச்சலம் ரிஷிவந்தியம் திருவெறும்பூர் கடையநல்லூர் கள்ளக்குறிச்சி (தனி) திருப்பரங்குன்றம் வால்குடி ஆத்தூர் (திண்டுக்கல்) தாராபுரம் (தனி) திருச்சுழி
Divakar M - Samayam Tamil : 2021 சட்ட சபை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்ற உத்தேச தொகுதி பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.தமிழகத்தில்
16 ஆவது சட்ட சபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. வருகின்ற மே
மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்க பட
வேண்டும். அதற்காக தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை
விரைவாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக
பொறுத்தவராவை முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி
பழனிசாமி '' வெற்றிநடை போடும் தமிழகம்'' என்ற பெயரில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு வருகிறார்.
அதே சமயம் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் காரசார பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக
இரு வலுவான கட்சிகளை பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கிறதா
என்பதே மர்மமாக உள்ளது. கடந்த 2011 சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில்
போட்டியிட்ட தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில்
29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.












