சனி, 20 பிப்ரவரி, 2021

'அமித்ஷா' ஆஜராக வேண்டும்! - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நக்கீரன் செய்திப்பிரிவு : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில், மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னை அவதூறாகப் பேசியதாக அபிஷேக் பானர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்து, அமித்ஷாவுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: