வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இதுதான்..! வெளியான உத்தேச பட்டியல்

தேமுதிக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் - 14 விருகம்பாக்கம் எழும்பூர் கொளத்தூர் ராணிப்பேட்டை விருத்தாச்சலம் ரிஷிவந்தியம் திருவெறும்பூர் கடையநல்லூர் கள்ளக்குறிச்சி (தனி) திருப்பரங்குன்றம் வால்குடி ஆத்தூர் (திண்டுக்கல்) தாராபுரம் (தனி) திருச்சுழி

Divakar M - Samayam Tamil : 2021 சட்ட சபை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்ற உத்தேச தொகுதி பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 16 ஆவது சட்ட சபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. வருகின்ற மே மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்க பட வேண்டும். அதற்காக தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பொறுத்தவராவை முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி '' வெற்றிநடை போடும் தமிழகம்'' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதே சமயம் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் காரசார பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக இரு வலுவான கட்சிகளை பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கிறதா என்பதே மர்மமாக உள்ளது. கடந்த 2011 சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.



அதிமுக வேட்பாளர்கள் 150 தொகுதிகளில் வெற்றி ஆட்சியை கைப்பற்றினர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான திமுக வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2016 சட்ட சபை தேர்தலில் அதிமுகாவுடனான கூட்டணியில் இருந்து விடுபட்ட தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் இணைந்தது. அதனை தொடர்ந்து வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இம்முறை தேமுதிக தரப்பில் 41 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வி பிரேமலதா விஜயகாந்துக்கு எழவே, 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட தயாராக இருப்பதாக அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார். தற்போது வரை அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதி பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேமுதிக போட்டியிடுவதான 14
உத்தேச தொகுதிகளை பார்க்கலாம்.

தேமுதிக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் - 14

விருகம்பாக்கம்
எழும்பூர்
கொளத்தூர்
ராணிப்பேட்டை
விருத்தாச்சலம்
ரிஷிவந்தியம்
திருவெறும்பூர்

கடையநல்லூர்
கள்ளக்குறிச்சி (தனி)
திருப்பரங்குன்றம்
வால்குடி
ஆத்தூர் (திண்டுக்கல்)
தாராபுரம் (தனி)
திருச்சுழி

கருத்துகள் இல்லை: