
tamiloneinida -Veerakumar
திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை தரிசனத்திற்காக முதல் முதலில் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரேனும் சபரிமலைக்கு வருகிறார்களா என்பதை கேரளாவிலுள்ள பெண்களே கண்காணித்து வருகிறார்கள்.
பஸ்களில் பெண்களே அதிரடியாக சோதனையிட்டு, சபரிமலை நோக்கி வரும் பெண்களை ஆங்காங்கு இறக்கிவிட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.கேரள கம்யூனிஸ்ட் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, பாஜக சார்பில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 90 கி.மீ. தொலைவுக்கு நேற்று பெண்கள் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணிக்கு பிரமாண்ட ஆதரவு கிடைத்தது. ஒரு லட்சத்திற்கும் அதிக ஆண், பெண்கள் இதில் பங்கேற்றனர்.

















