செவ்வாய், 3 ஜூலை, 2018

ராமதாஸ் : எடப்படியின் ஆடம்பரத்துக்காக சென்னை வந்த 542 பேருந்துகள்

முதல்வருக்காக சென்னை வந்த  542 பேருந்துகள்: ராமதாஸ்மின்னம்பலம்: முதல்வரின் ஆடம்பரத்துக்குப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்திக்க வேண்டுமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவை தொடக்கவிழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று (ஜூலை 3) நடைபெறுகிறது. இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கண்டிப்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண் ஜெயலலிதாவாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்க விழா தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

திமுகவின் மண்டகசாயம்.. 24 மணி நேரமும் எ.வ. வேலுவின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்டாலின்?

பணம் இருக்குன்றதுக்காக கட்சி மாறி வந்தவனை பீடத்துல உக்கார வைச்சி அழகு பாத்தா, 40 வருசமா கட்சியில இருக்குற எங்களை மாதிரி ஆளுக்கு என்ன மரியாதை ? எதுக்கு நாங்க கட்சியில இருக்கணும் ? வேலு மாதிரி ஒரு பச்சோந்தியை தளபதி இப்படி நம்பறாரேன்னு அவ்வளவு வேதனையா இருக்கு. ஆனா நாங்க இதை யாருகிட்ட சொல்ல முடியும். வேலுவை தாண்டி தளபதியை யாரும் நெருங்கக் கூட முடியாது.
savukkuonline.com : இந்த ஆண்டு மார்ச் 15 அன்று, திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மார்ச் 15 அன்றுதான் எவ.வேலுவுக்கும் பிறந்த நாள்.   அப்போது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அன்று நடந்த கூட்டத்தில் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.   10 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  அன்று அந்த கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, வேலுவை பற்றி இப்படி பேசினார் “உங்களை வழிநடத்தும் அண்ணன் வேலு, உங்களை மட்டும் வழிநடத்தவில்லை.   திமுகவையும் வழிநடத்துகிறார்.  தளபதியையும் வழி நடத்துகிறார்.   அண்ணன் வேலு மட்டும் இல்லையென்றால் திமுக 89 எம்எல்ஏக்களை பெற்றிருக்கவே முடியாது.”
வேலுவின் செல்வாக்கு அத்தகையது. இன்று வேலுவை பகைத்துக் கொண்டால், திமுகவில் இருக்கவே முடியாது.  அழித்து நசுக்கி விடுவார்.  திருவண்ணாமலை அருகே உள்ள சே.கூடலூர்.  அதுதான் அவரது சொந்த ஊர்.   வேலு பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்.   பின்னர் அவர் நடத்தும் பாலிடெக்னிக்கில் படித்த இளங்கோ என்ற மாணவர், வேலுவுக்காக எம்ஏ தேர்வு எழுதினார்.  இப்போது வேலு எம்.ஏ பட்டதாரி.   வேலுவுக்காக தேர்வெழுதிய அந்த இளங்கோ மர்மமான முறையில்  சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போனார்.
வேலுவின் தொடக்கம் மிக மிக எளிமையானது.    பம்ப் செட் மெக்கானிக்காகத்தான் இருந்தார் வேலு.  பின்னர் திருவண்ணாமலை பகுதியில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக இருந்தார். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதில் இணைந்தார் வேலு.   தண்டாரம்பட்டு ஒன்றியத்தின் துணை அமைப்பாளர் பதவி கிடைக்கிறது. 

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 3... மில்லியன் டாலர் கேள்வி?

.savukkuonline.com/ Image of a land owning farmer’s family crying after officials lay marker stones for Salem 8 lane விளம்பரப் பிரியையான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாக்கரே 22.06.2018 வெள்ளிக்கிழமை கூறியது,”விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், அதோடு சேர்த்து பொருத்தமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்திடவும், மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிலத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படமாட்டாது, நிலத்திலுள்ள மரங்கள், கிணறுகள், வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை இவற்றிற்கும் சேர்த்து இழப்பீடு வழங்கப்படும்.  நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட மதிப்பு ஆகியவற்றின் படி, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் முதல் ரூ.9.05 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நேற்று வரை, 17 கி.மீ தூரத்துக்கு சாலை அளவீடு முதற்கட்ட பணி முடிக்கப்பட்டுள்ளது. 853 பட்டா உரிமையாளர்களின் 126 ஹெக்டேர் நிலங்கள் இந்த சாலைக்காக அளவிடப்பட்டுள்ளன”.
இந்த இழப்பீடு மிகவும் தாராளமான ஒன்றாக  தோற்றமளிக்கிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை  2007-2008ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட  நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு  சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில் கூறினார்.

பாஜக ஆர் எஸ் எஸ் போலி இணையதளங்கள் .. பொய்களை பரப்பவே முழுநேர பணியாளர்கள்

Thamizh Inian : · கீழே இருக்கும் இணையதளங்கள் அனைத்தும் பீஜேபீ
ஆர்எஸ்எஸ்ஸின் நிதியில் இயங்குபவை,இவர்களின் வேலை கொஞ்சூண்டு உண்மையுடன் ஒரு டன் பொய்யைக்கலந்து வதந்தி மாதிரி பொய்யானதகவலை நிஜம்போலப்பரப்புவது,,,ஆகவே இத்தளங்கள் நம்பகமானவை அல்ல,,எச்சரிக்கை,,

திங்கள், 2 ஜூலை, 2018

11 பேர் மரணத்தில் சிக்கிய கடிதம் .. முக்தி பெறும் மார்க்கம்?

முக்திப்பேறு பெற உயிர் துறப்பா? -  11 பேர் மரணத்தில் சிக்கிய மர்ம கடிதத்தில் அதிர்ச்சி கட்டளைகள்மாலைமலர்: டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவத்தில், 11 பேருக்கும் உத்தரவு பிறப்பித்ததுபோல் உள்ள மர்ம கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 10 பேர் கண்களை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் மனைவிகள் வாடைக்கு விடப்படுகிறார்கள் .. பல ஆண்டுகளாக தொடரும்.

Chandrasekar Jkc : 18 வருடங்களுக்கு முன்பு வெளியான விஜய்-சிம்ரன் நடித்த
படம் 'பிரியமானவளே'
அதில் விஜய் மேற்கத்திய கலாச்சாரத்துடன் தாயகம் வருவார்.
அவரை திருமணம் செய்துக் கொள்ள தந்தை வற்புறுத்துவார்.
அவரோ திருமணம் பத்தாம் பசலித்தனம் என்றும் வேண்டுமானல் ஒரு அக்ரிமென்ட்படி தனக்கு ஒராண்டுக்கு சிம்ரன் மனைவிராக இருக்கட்டும்.அக்ரிமெண்ட் முடிந்ததும்...அவர்யாரோ...தன் யாரோ என்று இருவரும் பிரிந்து விட வேண்டும் என ஒப்பந்தம் போடுவார்...
பிறகு கதை பாரத பண்பாடு என்று போகும்....
நம் நாட்டில் MP மாநிலத்தில் சந்தையில் இத்தகு ஒப்பந்த மனைவிகள் வாடகைக்கு கிடைக்கிறார்களாம்...
தேவையான தனவந்தர்கள் மாத கணக்கிலோ வருட கணக்கிலோ அநதப்பெண்களை தனக்கு வாடகை மனைவியாக முத்திரை தாளில் பதிவு செய்துக் கொள்கிறார்களாம்...
இதற்கு'தாதிசா பிரதா' (Dhadeecha pratha) என்கிறார்கள்.
இதுவும் நம் தேச கலாச்சாரம்தான்.

மக்கள் அதிகாரத்திற்கு எதிராக .. மீனவரகளை ... மிரட்டிய போலீசு !


வினவு பத்திரிகைச் செய்தி :மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.
மேற்படி மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பைப் பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என  பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது.
மீனவ பிரதிநிதிகள் கொடுத்த புகார் மனுவில்……காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவை வெட்டிவிட தீர்மானம்? பல்டியோ பல்டி!

பிகார்: கூட்டணியை முறிப்பதற்கா  பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது?மின்னம்பலம்: மதுவிலக்கு அமலில் இருக்கும்
பிகாரில் மது பாட்டில்கள் வைத்திருந்ததாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் ரீதியாக அம்மாநிலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்றால் பாஜக தனித்துப் போட்டியிடலாம் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிகாரில் கூட்டணி ஆட்சி நடத்திவரும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கட்சிகளுக்குள் மோதல் வலுத்துவருகிறது.

ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினி சந்திப்பு! வர்த்தக முயற்சிகள்?

ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினி சந்திப்பு!மின்னம்பலம்: மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று (ஜூலை 2) சந்தித்துப் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தப் பின்னர் அவர் அரசியல் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ..ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மீட்கவே.. அதிமுக அரசு நீதிமன்றத்தில் தெயவிப்பு

ஓவியர் ரவி பல்லேட்
வெப்துனியா: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை காப்பாற்றவே
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆப்கான் தற்கொலை தாக்குதல் 20 பேர் உயிரழப்பு .. இந்தியர்களை குறி வைத்து ...

 ஆப்கான்,இந்தியர்களை ,குறி வைத்து, தற்கொலை,தாக்குதல்தினமலர்;  காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதிலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவர் வசித்து வருகின்றனர். பேரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டிற்கு இந்தியா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நாட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் சீக்கிய மற்றும் இந்துக்கள் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் ஜலலாபாத் நகரில் மருத்துவமனை கட்டத்தை திறப்பு விழாவில் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்டார். அவர் சென்ற சில மணி நேரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.சம்பவத்தில்20 பேர் கொல்லப்பட்டனர். கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தது.

குழந்தை கடத்தல் வதந்தியால் சென்னையில் 2 பேரை அடித்து நொறுக்கிய கும்பல்

tamil.oneindia.com-siva. சென்னை: சென்னையில்
குழந்தை கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்து 2 பேரை மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை கடத்தல்காரர்கள் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் பரவும் வதந்திகளால் பொது மக்கள் அப்பாவிகளை பிடித்து அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மகராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் குழந்தையிடம் பேச முயன்ற நபர் மற்றும் 4 பேரை குழந்தை கட்டத்தல் ஆசாமிகள் என்று தவறாக நினைத்து பொதுமக்கள் அவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் 2 பேரை குழந்தையை கடத்த வந்தவர்கள் என்று தவறாக நினைத்து பொது மக்கள் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை மெட்ரோவில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது முன்னதாக கடந்த மாதம் போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டியை மக்கள் அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப்பில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளால் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது

தமிழக கோயில்களில் 7000 மூலவிக்கிரஙக்கள் எல்லாம் போலியானவை

A.சிவக்குமார் : வேலூரில் தேர் பற்றியெரிந்தது பின்னர் அது எரிக்கப்பட்டது
என்று
கண்டுபிடித்தார்கள்
திருவேலங்காட்டில் தலமரம் எரிந்தது
பின்னர் அது மனிதர்களால் எரிக்கப்பட்டது என்று கண்டுபிடித்தார்கள்
மதுரையில் கோயில் வளாகமே தீடிரென எரிந்தது. சிசிடிவிக்கள் எப்படி ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்த நாளன்று செயலிழந்ததோ அதே மாதிரி மீனாட்சியம்மன் கோயிலிலும் எரியூட்டுவதற்கு முன்னர் மனிதர்களால் செயலிழக்க செய்யப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று சம்பவங்களும் மனிதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவங்கள் தான் என்று உறுதியானதும் அரசிடமிருந்து எவ்வித மேல் நடவடிக்கையுமில்லை.
ஆனால் சம்பவம் நடந்தவுடன் எழுந்த ஒரு கூக்குரல், கோயில்களை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று அலறியது. அதற்காக கோயில் மீட்பு இயக்கம் கூட கோலாகலமாக தொடங்கப்பட்டது. அட இது நியாயந்தானே என்று தமிழர்கள் சிலரும் பிதற்ற தொடங்கியிருந்தனர்.
இடையே இக்காட்சியில் தோன்றினார் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தீவிரமாக இயங்கியவர் சென்னையில் தீனதயாளன் என்பவரை கைது செய்தார். ஆள்வோர் பொன்.மாணிக்கத்தை பணிமாற்றம் செய்து தீனதயாளனை காப்பாற்ற முயன்றனர். நீதிமன்றம் தலையிட்டு பொன்.மாணிக்கம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தானிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது.
எம்ஜிஆரால், கலைஞரால் முயற்சி எடுக்கப்பட்டும் குஜராத்திலிருந்து தமிழகம் வந்து சேர இயலாத இரு சிலைகள் பொன்.மாணிக்கவேல் அவர்களால் தஞ்சை வந்து சேர்ந்தது.

தமிழகத்திற்கு ஜூலை ..31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை... உத்தரவு

BBC : டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். ''முதல் கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் நடந்தது. நீண்ட கால வழக்குக்கு பிறகு கிடைத்த தீர்ப்பின்படி இந்திய அரசின் ஒப்புதலோடு நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஒரு புது சகாப்தம்'' என செய்தியாளர்களை சந்தித்தபோது ஆணைய தலைவர் கூறினார்.
''நதிநீர் பகிர்வுக்கான விதிகள், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முறைப்படி தேவையான தனி அலுவலகம், உள்கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள் குறித்து விவாதித்தோம்.''
''நீர் வரவு மற்றும் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்த பல்வேறு தரவுகளை பராமரிக்கும் வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம். ஏனெனில் தண்ணீரின் இருப்பு மற்றும் பல்வேறு அணைகளில் இருந்து எந்த அளவுக்கு தண்ணீரை வெளியேற்றுவது என்பது குறித்து முடிவெடுக்க ஒரு முறையான தரவு வடிவம் அவசியம். ''
''இதுவரை பருவமழை வழக்கமான அளவு இருக்கிறது என்பதை உற்றுநோக்கியிருக்கிறோம். ஜூலை மாதம் தண்ணீர் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் விவாதித்தது. ஜூலை மாதம் எவ்வளவு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதை கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின் : நாளைக்கே இந்த ஆட்சியை கலைக்கிறேன்... கலைஞர் எந்த ஆட்சியையாவது கலைத்தார் என்பதை நிருபித்தால்

நக்கீரன் : திமுகதான்  பல முறை ஆட்சியை
இழந்துள்ளது.  கருணாநிதி யார்
ஆட்சியையும் கலைக்கவில்லை.  அப்படி அவர் கலைத்ததாக நிரூபித்தால்,  நாளைக்கே இந்த ஆட்சியை கலைக்கிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி பேசியுள்ளார்.
கரூரில் நேற்று (30-07-18) மாலை., மாணவரணி,  மாநில, மாவட்ட, மாநகர ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க வின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-கொங்கு மண்டலம் திமுக வலுவில்லாத மண்டலம். இன்னும், 15 இடங்கள் பெற்றிருந்தால் நாம் ஆட்சி அமைத்து இருப்போம். எனவே தான் முதலில் கொங்கு மண்டலத்தில் களையெடுப்பு நடந்து முடிந்திருக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் தென் மண்டல களையெடுப்பு நடக்கவிருக்கிறது.  ஆகவே, கட்சிக்கு வரலாம், எம்.பி, எம்.எல்.ஏ க்கள், மந்திரிகளாக, ஏன், ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் எல்லாம் முதல்வர் ஆகும் போதெல்லாம் யார்வேண்டுமானாலும் ஆகலாம் என்றார். ஆகவே, யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்,
ஆனால் இயக்கத்தை வலுப்படுத்த முடியாது., அப்படிபட்ட ஒரு நல்ல இயக்கம் தான் தி.மு.க தான் என்றதோடு., கட்சிகள் ஏராளமானவைகள் இருக்கலாம், இல்லை கட்சிகள் கூட இல்லாமல், நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கனவுடன் தமிழகத்தில் சுற்றலாம், ஆகவே, நான் அவர்களை பற்றி பேச விரும்ப வில்லை ஏன், என்றால் நான் கலைஞரின் மகன் என்றதோடு., உலகத்திலேயே திமுக மட்டுமே கட்டுப்பாடுடன் இருக்கிறது.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

சுவிஸ் வங்கிகளில் இருப்பது இந்தியர்களின் மூலதனம் .. அது கருப்பு பணமல்ல ... உல்லுலாயி.. உல்லுலாயி..

LR Jagadheesan : அப்ப “ஆளுக்கு 15 லட்சம் accountல வரும்”னு சொன்னது சும்மா லூலாயா? அடக்கருமமே. அதை நம்பி அவனவன் ஏராளமா கடன் வாங்கி வெச்சிருக்கான். அவன் கெதி ???
On a serious note: இந்தியாவில் தான் இதுவரை ஆட்சி செய்தவர்களிலேயே சிறந்த பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கறார்னு நீங்க தான் சொல்றீங்க. அவர் ஆட்சியில் இந்தியர்கள் மூலதனம் இந்தியாவுக்குள்ள இருப்பது, வருவது, வளர்வது தானே சரி? அதுக்கு நேர்மாறாக இந்தியாவிலிருக்கும் இந்தியர்களின் மூலதனமும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூலதனமும் சுவிஸ் வங்கியில் குவியுதுன்னா நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு மீது இந்தியர்களுக்கே நம்பிக்கை இல்லைன்னுதானே அர்த்தம்? இதுல என்ன பெருமை இருக்கு?

ஜாதி சான்றிதழ் .. கேரளா அரசின் தவறான அணுகுமுறை ... கமலின் அரை குறை புரிதல்கள்

AThi Asuran : கமல் தனது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி
குறிப்பிடவில்லை என்பதும் - கேரளாவில் 1.24 இலட்சம் மாணவர்கள் பள்ளியில் ஜாதியைக் குறிப்பிட வில்லை என்று கேரளாவின் கல்வி அமைச்சர் இரவீந்திரநாத் அவர்கள் சட்டசபையிலேயே தெரிவித்தார் என்பதும் உண்மைதான். இந்தச் செய்திகளில் இரண்டு தவறுகள்.
கேரளப் பள்ளிகளில், ஜாதி என்ற கட்டத்தில், தங்களது ஜாதிகளைத் தெரிவிக்காதவர்கள் 80 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். ஜாதியே இல்லாத இஸ்லாமியர்கள் எந்த ஜாதியைப் பதிவு செய்வார்கள்? அதே இஸ்லாமிய மாணவர்கள் Category என்ற கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.
Al-Hidayath English Medium School at Kondotty என்ற இஸ்லாமியப் பள்ளியின் செயலாளர் வீரன்குட்டி ஹாஜி என்பவர், தனது பள்ளியில் 921 இஸ்லாமிய மாணவர்கள் பள்ளியில் சேரும்போது ஜாதி குறிப்பிடவில்லை என்பதையும், அதே மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்ற பிரிவில் பதிவுசெய்துள்ளனர் என்பதையும் இண்டியன் எக்ஸ்ப்பிரஸ் 30.03.18 நாளேட்டில் தெரிவித்துள்ளார். இதே தகவலை, பல இஸ்லாமியப் பள்ளிகளும், இஸ்லாமிய மாணவர்களைச் சேர்த்துள்ள அரசுப் பள்ளிகளும் உறுதி செய்துள்ளன.

திமுக தென்மாவட்ட செயலாளர்கள் நீக்கம் .. புதியவர்கள் நியமனம்

நக்கீரன் :திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட வாரியாக நடந்த கள ஆய்வுக்கு பணிக்கு பின் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயக்குமார் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கம்பம் ராமக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட செயலர் திவாகரன் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் கே.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 மதுரை வடக்கு, தெற்கு என செயல்பட்டு வந்த 2 மாவட்டங்கள் ஒரே மாவட்டமாக மதுரை மாநகர் மாவட்டமாக மாற்றப்பட்டு அதன் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு குழு உறுப்பினராக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கறுப்புப் பணத்தை மக்களுக்கு அளிக்கும் நைஜீரிய அரசு!

கறுப்புப் பணத்தை மக்களுக்கு அளிக்கும் நைஜீரிய அரசு!மின்னம்பலம் :  சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு பணத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை நைஜீரிய அரசு செயல்படுத்தவுள்ளது.
நைஜீரியாவில் 1990ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தவர் ராணுவ தளபதி சானி அபாஷா. தான் கொள்ளையடித்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் அபாஷா பதுக்கியிருந்தார். தற்போது இதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தைத் திருப்பி ஒப்படைப்பதற்கு சுவிஸ் வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணத்தை 14 டாலர் வீதம் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நைஜீரிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நைஜீரியாவில் உள்ள 36 மாநிலங்களில் 19 மாநில மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

டெல்லி .. ஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் ... கொலையா? தற்கொலையா?


BBC :டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. வட டெல்லியில் உள்ள சத்நகர் புராரியில் 4A தெருவிற்குள் நுழைந்த போது, மூன்றடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அங்கு தற்போது ஒரு செல்ல பிராணியான நாய் மட்டும் உயிருடன் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வீட்டில் 11 பேர் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
பாட்டியா குடும்பம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட அந்த வீட்டில், 10 பேர் தூக்கிட்ட நிலையில் இருந்தனர். மேலும் ஒரு வயதான பெண்ணின் சடலம் தரையில் இருந்தது.
மொத்தம் ஏழு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள். இதில் 3 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
ராஜஸ்தானை சேர்ந்த இந்த குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக புராரியில் வாழ்ந்து வந்தனர்.75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியான நாராயண், அவரது இரண்டு மகன்கள் பூப்பி (46) மற்றும் லலித் (42), அவர்களது மனைவிகளான சவிதா (42) மற்றும் டீனா (38) ஆகியோர் இறந்து கிடந்தனர்.
பூப்பியின் இரண்டு மகள்கள், ஒரு மகன் மற்றும் லலித்தின் 12 வயதான மகனும் இறந்துள்ளனர்.
மேலும், நாராயணின் மகளும், பேத்தி ப்ரியங்காவும் (30) அந்த வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
சமீபத்தில் ஜூன் 17ஆம் தேதியன்று ப்ரியங்காவிற்கு நிச்சயதார்தம் நடைபெற்றது.

மனுவாத மார்க்சியர்கள் ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலை .. திராவிடர் இயக்கத்துக்கு பாடம் எடுக்கும் நகைச்சுவை

LR Jagadheesan : மேற்குவங்க முதல்வராக மேல்(Male)ஜாதி ஜோதிபசுவை ர், ஜெயலலிதா, விஜயகாந்த் என இந்திய/தமிழ்நாட்டு மார்க்சிய மண்டூகங்கள் சேவைசெய்த முதல்வர்கள், முதல்வர் வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றுபோதும் தமிழக அரசியலில் இடதுகள் ஆற்றிய ஆக்கப்பூர்வ பங்களிப்பின் ஆழ அகலங்களை அறிந்துகொள்ள. இந்த லெட்சணத்தில் இதுகள் திராவிடர் இயக்கத்துக்கு சித்தாந்த பின்புலமில்லை, பொருளாதார தொலைநோக்கில்லை என்று வகுப்பெடுப்பதைப்பார்க்க பார்க்க வாந்தி வருகிறது. இடதுகளின் வலுவான சித்தாந்த பின்புலத்துக்கும் பொருளாதார தொலைநோக்குக்கும் பிரேமலதா சமேத விஜயகாந்தை முதல்வர் பல்லக்கில் அவர்கள் தூக்கிச்சுமந்த கண்கொள்ளா காட்சியே சாட்சி. அவர்களின் அந்த கடைந்தெடுத்த குள்ளநரி அரசியலுக்கான விலையைத்தான் தமிழ்நாடு இன்று கொடுத்துக்கொண்டிருக்கிறது.
நீண்டநாள் தூக்கிச்சுமந்து, களப்போராளி கௌரி அம்மாள் கேரள முதல்வராவதை துவக்கத்திலேயே தடுத்து ஆனப்பெரிய அரசியல் பெண்சிசுக்கொலை செய்த மனுவாத மார்க்சியர்கள் ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலை பற்றியெல்லாம் திராவிடர் இயக்கத்துக்கு பாடமெடுப்பது காலத்தின் கோலம் தான்.

ஜாதி வெறி நெருப்பில் வசூலை வாரி குவித்த கமலின் திரை வரலாறு !

தேவர்மகன், தசாவதாரம், நாயகன், ஹே ராம், மீண்டும் கோகிலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், சதி லீலாவதி, விருமாண்டி, நல தமயந்தி, அவ்வை சண்முகி, விஸ்வரூபம் என்று கமலின் 80% படங்கள் சாதிய என்சைக்ளோபீடியாக்கள்
Shalin Maria Lawrence : 1957ம் ஆண்டு பரமக்குடி கலவரங்களுக்கு பிறகு எண்பதுகளின் நடுவில் தமிழ்நாட்டில் ஜாதிய கலவரங்கள் மீண்டும் துவங்க ஆரம்பித்தன. பின்பு தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக "திருநெல்வேலி" மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஜாதிய மனப்பான்மையில் ஒரு எழுச்சி காணப்பட்டது. கலவரங்களும் அதிக அளவில் வெடிக்க ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் தான் பரமகுடியை சேர்ந்த திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் ஒரு ஜாதிய படத்தை எடுத்தார். படம் முழுவதும் சாதியத்தை சாடுவது போல் சில வசனங்களை வைத்தாலும், முழுக்க முழுக்க அந்த படம் ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடித்தது. போதாக்குறைக்கு அந்த சாதிக்கு ஒரு caste anthem வடிவில் பாடலும் உருவாக்கப்பட்டது. எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே ஒரு குறியிட்ட ஆதிக்க சாதியை போற்றி வெளியிடபட்ட ஜாதிய கீதம் அந்த படத்தில் தான் இடம் பெற்றது.

சிலை கடத்தலில் எச் ராஜாவுக்கு தொடர்பு ? இந்து அறநிலை துறையின் வசம் இருக்கும் போதே இவ்வளவு திருட்டு ..

Karuppu Neelakandan : இந்த அய்.ஜி. பொன்மாணிக்க வேல் என்கிற
பார்ப்பனரல்லாத அதிகாரி 40,50 ஆண்டுகளாக கடத்தப்பட்ட கோயில் சிலைகளையெல்லாம் தமது சிறந்த புலனாய்வின் மூலம் பெரும்பாடுபட்டு தமிழகத்திற்கு திரும்ப கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
இவர் ஒவ்வொரு முறையும் மீட்ட சிலைகளோடு செய்திகளை ஆரவாரத்தோடும் தமிழ் அல்லது இந்தியப்பெருமிதத்தோடும் வெளியிட்டு வருகின்றன மீடியாக்கள்.
ஆனால் இந்தக் கடவுளர் சிலைகளை மாற்று பித்தளை சிலைகளை அந்த இடத்தில் செய்துவைத்து விட்டு வெளிநாட்டிற்கு கடத்த உதவியது யார் என்று இதுவரை மீடியாக்கள் விவாதித்தது உண்டா?
இந்தக் கடவுள் சிலை தழுவ கழுவ அல்லது வேறெதையோவெல்லாம் செய்து பிழைப்பு நடத்துவதை பிறப்புரிமையாக வைத்திருக்கும் அந்தப் பார்ப்பன பூசாரிக்கள் குருக்கள் அர்ச்சகர்கள் துணையின்றி இந்தத் திருட்டை ஊழலைகளை கள்ளக்கடத்தலை செய்திருக்கமுடியுமா?

ஸ்டாலின் : இன்னும் பல உண்மைகள் அணிவகுக்கின்றன... அடிமைகளிடம் என்ன பதில் உள்ளது?

நக்கீரன் : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதம்: ’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க மடல்.
எதிலுமே மரபுகளுக்கு மாறாக, சட்டவிதிகளுக்குப் புறம்பாக, ஆட்சிப் பொறுப்பின் பரிமாணங்களையும் பலவாறான உரிமைகளையும் உணராமல் ஏனோதானோவெனச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பேரவைக் கூட்டத் தொடர் என்பது சட்டமன்ற ஜனநாயகம் பாரம்பரியமாக வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்குக்கூட அனுமதி இல்லாத வாய்ப்பூட்டு நிகழ்வாகவே சடங்குக்காகத் தொடர்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மாதக்கணக்கில் இடைவெளிவிட்டு அதன்பின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் பெயரளவுக்கு நடைபெற்றுள்ளன.

காவிரி : கர்நாடக அனைத்துக்கட்சிகள் ... மீண்டும் உச்சநீதிமன்றம் ,,,,

தினமலர் :பெங்களூரு : ஜூலை 2 ம் தேதி காவிரி ஆணையத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இக்கூட்டத்தில், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி ஆணையத்திற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மூல மனுவை மீண்டும் விசாரிக்கும்படி மனுத்தாக்கல் செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூலை 18 ம் தேதி துவங்க உள்ள பார்லி., மழைக்கால கூட்டத் தொடரின் போது கர்நாடகாவை சேர்ந்த 40 எம்.பி.,க்களும் இது தொடர்பாக பார்லி.,யில் குரல் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.