Thamizh Inian :
இவர்தான் எடியூரப்பா!
எடியூரப்பா யார்? மகன் - மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை
ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள
சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு கொடுத்தது, அதன் மூலம்
ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம்
கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில்
சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால்
ஆட்சியை இழந்து சிறைக்குச் சென்றவர் தான் இந்த எடியூரப்பா!!!
எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் அமைச் சரவையில் இடம் பெற்றிருந்த ரெட்டி
சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து அரசு அனுமதி
பெறாமல் சீனாவிற்கு இரும்புத்தாதுக்கள் கொண்ட மணலை கப்பல் கப்பலாக அனுப்பி
வைத்தனர். இதன் மூலம் சுமார் ரூ.30,000 கோடிகளுக்கு மேல் அரசுக்கு வரி
இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருநாடக் லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே
கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ஊழல் பணம் மட்டும் ரூ.16,000 கோடிகள்
எடியூரப்பாவிற்குக் கைமாறியிருக்கிறது. லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள
பட்டியலில் ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க
ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு நிலம், பணம், நகைகள், பங்கு
பத்திரங்கள், வைப்புத்தொகை போன்ற பலவகைகளில் கையூட்டு கொடுத்த விவரங்கள்
அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ஆம் அத்தி யாயத்தில், எடியூரப்பா
குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிட
மிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளன. இதனடிப்படையில்,
எடியூரப்பாவின் மீது முதல்தகவ லறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
எடியூரப்பா செயலக அதிகாரிகள் 784 பேருக்கு கோடிக்கணக்கில் பணம், பங்களா -
வீடுகள், மற்றும் தங்க வைர நகைகள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. இதன்
விவரங்களும் சந்தேஷ் ஹெக் டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.