புதன், 7 மார்ச், 2018

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

தினகரன் : கோவை: கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுவீசி, ஆட்டோவில் தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.  பெட்ரோல் குண்டு வீசப்படும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை ... துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு ,,,

காவல்துறையில், அதிகரிக்கும்,தற்கொலை தினமலர் :போலீசார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது காவல்துறை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. இவற்றை தடுக்க போலீசாருக்கு, மன உறுதியை வளர்க்கும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை சென்னை அயனாவரம் காவல்நிலை எஸ்.ஐ. சதீஷ்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஞாயின்று ஆயுதப்படை போலீஸ்காரர் அருண்ராஜ் என்பவர் மெரினாவில் ஜெ., நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் இரு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது

லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்

திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் போராட்டம் நடத்தியது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் படம் எரிக்கப்பட்டது. ம.க.இ.க. சென்னைக் கிளையின் செயலாளர் தோழர் வெங்கடேசன் இப்போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே மாலை 5.30 மணிக்கு நேரு பார்க் அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் 3 போலீசு வாகனங்களும் குவிக்கப்பட்டன.

ரஜினி விதியை மீறி கட்டிய ராகவேந்திரா மண்டபம் அவரே ஒப்புதல் வாக்குமூலம்..!


savukkuonline.com : 1984-ம் ஆண்டு ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டிக்கொண்டிருந்தபோது, விதிமுறை மீறல் இல்லாததால் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முதல் தளம் வேலை நடந்தபோது, திடீரென்று ஒப்புதல் கொடுக்காமல் பணியை நிறுத்திவிட்டார்கள். ஒரு நபர் வந்து, அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை, சில விதிமுறை மீறல் இருக்கிறது என்று கூறி, கட்டுமான பணி தொடர்பான கோப்பை மேலே செல்ல விடாமல் தடுக்கின்றனர். என்னுடைய ஆட்களை என்னவென்று பாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்களை சந்திப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை. அதன் பின்னர் நானே சென்றேன். எனக்கும் சந்திப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. 6 மாதம் 7 மாதம் ஆகியது, மழைக்காலம் வந்துகொண்டிருக்கிறது, அதற்கு பின்னர் எனது நண்பர்கள் இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் முதல்–அமைச்சரை சென்று பார்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். எனக்கு ஒரு தயக்கம். யாரிடமும் கேட்டு பழக்கமே இல்லை. நியாயமாகவும் இருக்கிறது, அதற்கு பின்னர் வேறு வழியில்லாமல் அப்போது நான் மும்பையில் இருந்தேன், நான் போன் செய்து முதல்–அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டேன். மறுநாளே எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துவிட்டார்கள். 

ரஜினியின் எம்ஜியார் புராணம் ... அத்தனையும் பொய் ....

அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து எம்ஜியாருக்கும் தனக்கும் ரொம்பவே நெருங்கிய தொடர்பு உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டதாக விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, நேற்று மாலை ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.
அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது. எம்ஜிஆர் ஆதரவு வாக்குகள்
மூத்த அரசியல்வாதியும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தவருமான ஏ.சி.சண்முகத்தின் கல்லூரி அது என்பதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் உரையை நிகழ்த்துவார் என கூறிவந்தனர் அரசியல் விமர்சகர்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் ரஜினிகாந்த்தின் பேச்சு இருந்தது. எம்ஜிஆர் ‘பக்தர்களின்’ வாக்குகளை குறிவைத்தே ரஜினிகாந்த் பேச்சின் பெரும்பகுதி அமைந்திருந்தது. எம்ஜியாருக்காகவே ஓட்டு

செவ்வாய், 6 மார்ச், 2018

சீமான் : எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்ததை ரஜினி பார்த்தாரா?

சீமான்மலையரசு, விகடன் :  எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்ததை ரஜினி பார்த்தாரா என சீமான் கூறியுள்ளார்.
சென்னை  வேலப்பன் சாவடியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், அரசியல் வருகை, ஆன்மீக அரசியல் போன்று இத்தனை நாள் தன்னைப் பற்றி வெளியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்விதமாகப் பேசியிருந்தார். அதில், "எம்.ஜி.ஆர் கொடுத்த நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்றும், தமிழக அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படாததால்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றும் பேசினார். இவரது பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ரஜினிகாந்த்தின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல். ஆங்கிலத்தில் பயின்றால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. தாய் மொழியில் பயின்று சாதனைபடைத்தவர்கள்தான் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர்.

திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பு ? பிடிபட்ட பாஜக பிரமுகரை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்குதல்


Mathi - Oneindia Tamil திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 
 மதிமுக பொதுச்செயலர் வைகோ, களவாணிகளைப் போல இரவில் உடைக்காமல் பகலில் நேரம் குறித்துவிட்டு வாருங்கள். கை கால்களை துண்டாக்குவோம் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் இரவில் உடைத்துள்ளனர்.

மதுவின் உடலில் 50 காயங்கள் - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்


ஆதிவாசி மாணவன் மது பள்ளிகூட நாட்களில் நண்பர்களோடு எடுத்து கொண்ட புகைப்படம் .
கேரளாவில் பொதுமக்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த ஆதிவாசி
இளைஞர் மதுவின் உடலில் 50 காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில், கையில் அரிசி மூட்டையோடு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் சராமரியாக அடித்து உதைத்து அவரை போலீசாரிடம் ஒப்படத்தனர். ஆனால், போலீஸ் ஜீப்பிலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். விசாரணையில், அவர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது(27) என்பதும், வயிற்றுப்பசிக்காக சிறு சிறு திருட்டை அவர் செய்து வந்தார் எனவும் தெரிய வந்தது. அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் புயலை கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது.
இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். எனவே, இந்த விவகாரத்தை திசை திருப்ப முயன்ற சிலர், மதுவிற்கு காதல் தோல்வி. எனவேதான் காட்டில் வாழ்ந்து வந்தார்.

தமிழிசை : தமிழகத்திலும் பாஜக நல்லாட்சியை தரும் .

வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? : தமிழிசை கருத்துமின்னம்பலம்: தமிழகத்தில் தலைவர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவேன் என்று நேற்று (மார்ச் 5) சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதற்குப் பதிலளித்துள்ள பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஒவ்வொருவரும் மக்கள் பிரச்சனைகளில் செயலாற்றுவதைப் பொறுத்து அதனை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நேற்று (மார்ச் 5) எம்ஜிஆர் சிலை திறப்புவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், தமிழகத்தில் தலைவர்களுக்காக உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன் என்று கூறினார். மேலும், எம்ஜிஆர் ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று தெரிவித்தார். இதுகுறித்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

டெல்லியில் அதிமுக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் ..காவிரி மேலாண்டமை வாரியம் அமைக்க கோரி

காவிரி: ஒன்றிணைந்த அதிமுக, திமுக!

மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று (மார்ச் 6) நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒன்றாக இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இது குறித்துப் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, "காவிரி விவகாரம் தொடர்பாகப் பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும், பிரதமரைச் சந்திக்க இதுவரை அனுமதி அளிக்காதது வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்னும் நிதின் கட்கரியின் கருத்து தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எதிரான ஓன்று" என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலஹாசன் உட்பட 138 விஐபிகள் விதிகளை மீறி கிழக்கு கடற்கரையில் பங்களா .. நீதிமன்ற அழைப்பாணை

விதிகளை மீறி பங்களா: 138 விஐபிகளுக்கு நோட்டீஸ்!மின்னம்பலம்: சென்னை உத்தண்டி கடற்கரை அருகே விதிகளை மீறி பங்களா கட்டியதாகக் கூறி நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 விஐபிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உத்தண்டி கடற்கரையில் தனக்கு பங்களா கட்ட மாநகராட்சி இடம் தரவில்லை; எனவே பங்களா கட்ட அனுமதி தர வேண்டும் என்றும் அரசு விதிகளை மீறி பலர் அப்பகுதியில் பங்களா கட்டியுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 6) நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியலிங்கம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “கடற்கரை அருகே கட்டப்பட்ட ஆடம்பர பங்களாக்கள் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளனவா” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, 138 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சிம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர்.
அதன்படி நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எச் ராஜா :பெரியார் சிலை உடைக்கப்படும் .... அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்


தினத்தந்தி :எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை; திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்குவந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா வெற்றிப்பெற்றதை அடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் வெடித்து உள்ளது. திரிபுராவில் லெனின் சிலைகளும் உடைக்கப்படுகிறது.
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்" வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்"
;
இதனை குறிப்பிட்டு தன்னுடைய முகநூல் பதிவில் கருத்து வெளியிட்ட பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பா.ஜ.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார். 

BBC :இலங்கை: சிங்கள முஸ்லிம் கலவரம் .. 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்,,,

இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக அந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பதற்றத்தை தணிக்க கூடிய வகையில் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறிய அவர், உடனடியாக போலிஸாரும் ராணுவத்தினரும் அதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியுள்ளார்.
அவசரகாலநிலையை மேலும் நீடிப்பதா என்பது குறித்து 10ஆவது நாளில் ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து கண்டி மாவட்டத்தில் நேற்று இரவு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், தாம் தங்கியிருந்த பகுதிகளின் மீது இரவு வேளையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டன அல்லது நிர்மூலம் செய்யப்பட்டன.

எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

thetimestamil :சமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தோழர்களே!
நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்.
நமது இந்த முயற்சியை முறியடிக்க,தொடர்ச்சியாக தலித் விரோத இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன.
ஒருசில தற்குறி தலித்களை வைத்து ‘லெட்டர் பேடு’ அமைப்புகளை உருவாக்கி தங்களது அடிமைகளாக வைத்துக்கொள்வதை நாம் அறிவோம். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக போஸ்டர் போடுவது, நமது அமைப்புக்கு எதிராகப் பேசுவது என பச்சைத்துரோகத்தைச் செய்து வருகிறார்கள். அவர்களிடம் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

கார்த்தி சிதம்பரம் ரூ. 1.8 கோடி பணம் ப.சிதம்பரத்துக்கு கொடுத்தார்

Karti Rs 1.8 crore transaction: This is the UPA minister he transferred it to siva. Oneindia Tamil மும்பை: கார்த்தி சிதம்பரம் ரூ. 1.8 கோடி பணத்தை யாருக்கு கொடுத்தார் என்பது தெரிய வந்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.< இந்நிலையில் கார்த்தி ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் சென்னை கிளையில் உள்ள தனது கணக்கில் இருந்து அதிகாரம் படைத்த அரசியல்வாதி ஒருவருக்கு ரூ. 1.8 கோடி பண பரிமாற்றம் செய்துள்ளது குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் கார்த்தி தனது தந்தையின் வங்கி கணக்கிற்கு அந்த ரூ. 1.8 கோடி பணபரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பண பரிமாற்றத்திற்கும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

திரிபுராவில் லெனின் சிலையை பாஜக அகற்றியதால் பரபரப்பு

திரிபுராவில் லெனின் சிலையை பாஜக ஆதரவாளர்கள் அகற்றியதால் பரபரப்பு தினதந்தி : திரிபுராவில் லெனின் சிலையை பாஜக ஆதரவாளர்கள் அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மார்ச் 06, 2018, 09:38 AM அகர்தலா, திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. 25 ஆண்டு கால இடது சாரிகள் தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டிய பாஜக முதல் முறையாக அங்கு ஆட்சி அரியணையில் ஏற உள்ளது. பாஜக பெற்றுள்ள இந்த வெற்றியை அம்மாநில பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்கிடையில், அங்கு பா.ஜ.க தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஸ்ரீ தேவி ... போனி கபூர் டுப்பிளிகேட் சாவி போட்டு கதவை திறந்தது ஏன்?.. மும்பாயில் இருந்து துபாய்க்கு திடீரென ... சந்தேகம் கொள்ள முகாந்திரம் உள்ளது?

போன் பாத்ரூம் Siva - Oneindia Tamil போனி கபூரின் சர்ப்ரைஸ் கிப்ட்டைப் பார்க்காமலேயே போன ஸ்ரீதேவி!- வீடியோ மும்பை: 24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் நடந்தது என்ன என்பது குறித்து போனி கபூர் சினிமா வர்த்தக ஆய்வாளர் கோமல் நஹ்தாவிடம் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் முழ்கி கடந்த 24ம் தேதி உயிர் இழந்தார். 24ம் தேதி இரவு துபாய் ஹோட்டல் அறையில் நடந்தது பற்றி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சினிமா வர்த்தக ஆய்வாளர் கோமல் நஹ்தாவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து கோமல் நஹ்தா கூறியிருப்பதாவது, சந்திப்பு சந்திப்பு 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடந்த மீட்டிங் ஒன்றில் போனி கபர் கலந்து கொண்டார். அன்றைய தினம் ஸ்ரீதேவி துபாயில் தனது தோழிகளுடன் ஹோட்டல் அறையில் பேசி மகிழந்தார். போன் போன் 24ம் தேதி காலை போனி கபூர் ஸ்ரீதேவிக்கு போன் செய்து பேசியுள்ளார். நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அப்பா(ஸ்ரீதேவி தனது கணவரை அப்பா என்றே அழைத்து வந்தார்) என்று ஸ்ரீதேவி போனி கபூரிடம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி ஸ்டாலினுக்கு அழைப்பு .... மத்தியில் பலம்வாய்ந்த மூன்றாவது அணி

மு.க.ஸ்டாலினுக்கு, மம்தா பானர்ஜி அழைப்புதினத்தந்தி :தேசிய அளவில் பா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார். இருவரும் 12 நிமிடம் தொலைபேசியில் இது தொடர்பாக பேசினர்.
புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் மேற்கொண்டு உள்ளது.
இதனிடையே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் 3-வது அணி அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் சில நாட்களுக்கு முன்பு குரல் கொடுத்தார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருந்தார். தன்னுடைய முடிவுக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக சந்திரசேகரராவ் கூறினார்.

மதவெறிக்கு எதிரான வாட்சப் தன்னார்வ குழு

Ellaam Samam : வசந்தன் என்பவரின் வாட்ஸ் ஆப் பதிவு
நாங்கள் யார்? யூதர்களா? இலுமினாட்டிகளா?
நாங்கள் ஏன் மதவெறிக்கு எதிராக எப்பொழுதும் குரல் ஒலித்து கொண்டே இருக்கிறோம்? ..
சில உண்மைகளைப் பகிர்கிறேன்
சிறு வயதிலிருந்து கிறித்துவ மதம் என்மீது அதிகமாக திணிக்கப்பட்டதாலும் என் பெற்றோர்களின் கிறித்துவ மதவெறியால் நான் பல நல்ல விடயங்களை இழக்க நேரிட்டதாலும் என் தேடல் எப்பொழுதும் அறிவியல் சார்ந்ததாகவும் தமிழ் சார்ந்ததாகவுமே இருந்துள்ளது
2016 நவம்பர் இறுதியில் தவ்ஹீத் ஜமாத்தின் வாட்ஸ் ஆப் இசுலாமிய தவா குழுவில் எதேச்சையாக என்னை யாரோ இணைத்தார்கள்...
மதம் என்றாலே கசக்கும் எட்டிக்காயாக இருந்த எனக்கு அந்த குழு நல்ல பொழுது போக்கு.
நாளைடைவில் மதவெறி அடிப்படைவாதத்திற்கு எதிரான அணியில் அந்த வாட்ஸ் ஆப் குழுவிலுள்ள இறை மறுப்பாளர்கள் சிலர் கருத்தியல் ரீதியாக அறிமுகம் ஆனோம்
பிறகு எங்களுக்குள் ஒரு தனி வாட்ஸ் ஆப் குழு நியமித்தோம்
பின் அந்த குழுவில் உறுப்பினரான ஃபாரூக் என்பவர் திடீரென கோவையில் மதவெறியர்களால் வெட்டபட எனக்குள் மேலும் இசுலாமிய மதவெறியின் மீது கோபம் வந்தது
செப்டம்பர் 2017 ஒரு நன்னாளில் வாட்ஸ் அப் குழு இறை மறுப்பாளர்கள் ஒன்றாக சென்னையில் சந்திக்கலாம் என முடிவு கொண்டோம்
அதில் எனக்கு மேலும் ஆச்சரியமே காத்திருந்தது
சென்னை குரோமபேட்டையில் ஒரு குளிர் சாதன அறையில் ஒரு 4-5 நபர்கள் இருந்தனர்
நான் எதிர்த்த பார்த்த ஒரு நாத்திக நண்பர் அங்கு இல்லை என்றதும் ஒரு வேளை என்னை கொல்ல சதியோ என்று கூட பயந்தேன்.

திங்கள், 5 மார்ச், 2018

தமிழகத்தின் மீது உச்சநீதி மன்றத்தின் போர் .... காவிரி தீர்ப்பு!

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தின் மீதான டில்லியின் போரை பிரகடனப்படுத்தி இருக்கிறது. காவிரி தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்சினைகளிலும் தமிழகத்தை டில்லி புறக்கணித்துவருகிறது.
வினவு :உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வராய், தீபக்மிஸ்ரா, கான்வில்கர்
கை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட  தஞ்சை டெல்டா விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்தும் நோக்கில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி டெல்டா பகுதியைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்றத் துடிக்கும் மைய அரசின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தமிழகம், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் இந்தத் தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, குறுவைச் சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12 அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தில் நிலவிவரும் நடைமுறை மட்டுமல்ல, அறிவியல்பூர்வமான அணுகுமுறையும்கூட.

சிதம்பரம் விவகாரத்தில் ராகுல் மவுனம் ஏன்?: பா.ஜ., கேள்வி

காங்கிரஸ்,பா.ஜ, ராகுல் மவுனம், ராகுல் காந்தி , சிதம்பரம் விவகாரம், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐக்கிய முற்போக்கு கூட்டணி,கீதாஞ்சலி நிறுவனம் ,  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், 
Congress, BJP,  Rahul Gandhi, Chidambaram affair, Minister Ravi Shankar Prasad, United Progressive Alliance, Geetanjali company, former Prime Minister Manmohan Singh, P.Chidambaram,BJP,Bharatiya Janata Party,Rahul,தினமலர் :காங்கிரஸ்,பா.ஜ, ராகுல் மவுனம், ராகுல் காந்தி , சிதம்பரம் விவகாரம், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐக்கிய முற்போக்கு கூட்டணி,கீதாஞ்சலி நிறுவனம் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், புதுடில்லி: சிதம்பரம் விவகாரத்தில் ராகுல் மவுனம் காப்பது ஏன் ? என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாங்குகளை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

மத்திய பிரதேசம் .. இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிரோடோடு .. Brain-dead man found alive on autopsy table in MP hospita

Shyamsundar - Oneindia Tamil போபால்: மத்திய பிரதேசத்தில் இறந்து போனதாக உடற்கூறுக்கு எடுத்து செல்லப்பட்ட நபர், பிரேத பரிசோதனை அறையில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிமான்ஸா பரத்வாஜ் என்ற சிந்த்வாரா பகுதியை சேர்ந்த நபர்தான் இந்த அதிசயத்திற்கு சொந்தக்காரர். இவருக்கு நேற்று பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரை நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு இவரை காப்பற்ற முடியாது என்று கூறியுள்ளனர். மூளைச்சாவு மூளைச்சாவு இதையடுத்து அதே பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு இவர் எடுத்து செல்லப்பட்டு இருக்கிறார்.
அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவரது மூளை இறந்துவிட்டது என்றுள்ளார். இதயம் மட்டுமே துடிக்கிறது என்று கூறியுள்ளனர்.
 மரணம் ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயம் துடிப்பதும் நின்று இருக்கிறது. இதையடுத்து இவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்


மாலைமலர் :நீங்கள் என்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன் சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு?
எதிர்க்காலத்தை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும். அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அமைச்சர்களின் பிள்ளைகள், அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

எம்ஜிஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்; இனிதான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள் ரஜினிகாந்த்


சென்னை, ரஜினிகாந்த் பேசுகையில் இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன்.,
இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது, இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார் என சிரிப்புடன் கூறினார்.
அவருடைய அரசியல் பேச்சை கேட்க ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். ரஜினிகாந்த் பேசுகையில், அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன், மற்றவைகளை வேறு விழாக்களில் வைத்துகொள்வோம் என்றார். மேலும் அவர் பேசுகையில், எம்.ஜி.ஆரை போல சினிமா உலகில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்.
பேண்ட்-சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன் டூயட் பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்? என்கிறார்கள். அய்யா நான் மற்றவர்களை பற்றி பேசவில்லை. என்னை பற்றி மட்டும் சொல்கிறேன்.

திரிபுரா EVMfraud ..தேர்தல் கமிஷனும் சேர்ந்து செய்த வாக்கு இயந்திர மோசடி ... இந்தியா முழுவதும் இனி இது நடக்கும்..

Venkat Ramanujam : திரிபுராவை போன்ற நிலைமை தமிழ்நாட்டில் விரைவில் வரும் என்கிறாரே Tamilisai Soundararajan

அதாவது நாலே மணி நேரத்தில் முடிய வேண்டிய 3100 EVM பூத் கொண்ட திரிபுராவில் .,19 லட்சம் ஒட்டுகளை எண்ண ஒரு நாள் எடுத்த மாதிரி ..

தமிழ் நாட்டில் 65000 EVM பூத் கொண்ட., 320 லட்சம் ஒட்டுகளை எண்ண 20 நாள் தேர்தல் கமிஸன் எடுத்துக்கும்னு சொல்றாங்க ..

திரிபுராவில் #பாஜக தலையில் வைத்து கொண்ட சில வைரங்களை இப்போ பார்ப்போமா :

📌 #rafalescam , #petrolscam #pnbscam ஊழல் பணத்தை வெள்ளமென அனைத்து பகுதிகளிலும் விநியோகித்து காங்கிரஸை சார்ந்த 45 சட்டமன்ற உறுப்பினர்கள்/ தலைவர்கள் பாஜக வில் இணைந்து தங்கள் முந்தைய தொகுதிகளிலேயே பாஜக சார்பில் போட்டியிட வைத்தது..

📌 தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் இறுதி வரை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாமல் துனை ராணுவ படைகள் மாநில பிஜேபி தலைவர்களின் கண்ணசைவுக்கு செயல்பட்டது..

📌 உதய்பூர் சப்-டிவிசனில் டெபானியா, ஜாம்ஜூரி, ராஜ் தர்நகர்பெலோனியா சப்-டிவிசனில் கபுர்ச்சாரா, சோனாமுரா சப்-டிவிசனில் தன்பூர்ஆகிய இடங்களில் இந்து கோயில்களில் உள்ள விக்ரகங்களைச் சேதப்படுத்தியும், முஸ்லீம் மசூதிகளைச் சேதப்படுத்தியும் இனக்கலவரத்தை அரங்கேற்றியது.