செவ்வாய், 26 டிசம்பர், 2017

Gone With The Wind என்னைவிட...ஏன் உன்னையும் விட நீ நேசித்தது இந்த மண்ணைத்தான் !




Gone With The Wind  கோன் வித் த வின்ட் ...இது  1939 வெளியான ஹாலிவூட் திரைக்காவியம், இதுவரை இதன் வசூல் சாதனையை வேறு ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதாவது   $3,440,000,000  டொலர்கள் வசூலித்தது இன்னும் இதன் வியாபாரம் டிவிக்களிலும் டிவிடிக்களாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மார்கிரட் மிச்சல் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட ஒரே ஒரு நாவல் இதுதான் இது புலிட்சர் பரிசு பெற்றது . இது மிகப்பெரிய படமாகும் இதன் மூலப்பிரதியான நாவலும் மிகவும் பெரியதாகும், இதன் கதையை சுருக்கமாக காட்டுவது கூட மிகவும் கடினமாகும்,  இதைபடமாக்க MGM Panavision போன்ற பெரிய நிறுவனங்கள் தயங்கி கொண்டிருந்த வெளியில்  டேவிட் சொல்செனிக் என்ற ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். சுமார் இரண்டுவருடங்கள்  பலவித இன்னல்களையும் சோதனைகளையும் தாண்டவேண்டி இருந்தது. படப்பிடிப்ப்பு நடந்த சில காலத்திலேயே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில்  வேற்றுமை அதிகமாகி இயக்குனர் சென்றுவிட்டார்.பின்பு  விக்டர் பிளெமிங் என்ற ஒரு இயக்குனரை கொண்டு பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட விடயம் அதன் வர்ண சேர்க்கையாகும். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திருப்தி இல்லாததால் எடுக்கப்பட்ட பிலிம் மேல் மீண்டும் வர்ணங்கள் சேர்க்கப்பட்டன .இது அந்த காலத்தில் மிகவும் அற்புதமாக பரீட்சித்து பார்த்து வெற்றி அளிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும் .

பாஜக எம்பி : மாடுகளை கடத்துபவர்கள் வெட்டுபவர்களை கொல்லுவோம் ..

பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்: ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கைமாலைமலர் :பசு மாடுகளை கடத்துபவர்களும், வெட்டுபவர்களும் கொல்லப்படுவார்கள் என ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு வாகனத்தில் பசு மாடுகளை கடத்திவந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர். துப்பாக்கியால் சுட்டபடி அந்த வாகனத்தில் வந்தவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் அப்பகுதி பொதுமக்களில் சிலர் அவர்களை பிடித்து சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராம்கர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் தேவ் அஹுஜா, பசு கடத்தல்காரர்களுக்கு பொதுமக்கள் தாக்கியதில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தான் காயம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி அழகிரி : திமுக தொண்டரகள் விலை போனதாக கூறுவது மனதை புண்படுத்துவதாக ...

Dhaya Alagiri @dhayaalagiri  : தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா
 Gajalakshmi - Oneindia Tamil சென்னை : திமுகவினரே காசுக்குவிலை போனதாக சொன்ன துரைமுருகன் மீது கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளிவரத் தொடங்கிய நிலையில், முன்னிலை நிலவரம் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளர் துரை முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ஆர்.கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது. ஆர்.கே நகரில் ஜனநாயகம் தோற்றுவிட்டது,

ஆர் கே நகர் தேர்தலிலும் வாக்கு இயந்திர மோசடியா ? சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு புள்ளி விபரம் ,

ராஜா ஜி : இதுதான் ஊரெல்லாம் சுத்துது ;
Rk nagar election
TTV got each round 4500 to 5000
Admk got 2500to 3000
DMK got 1200 to 1500
Nam thamilar got 250 to 275
bjp got 65to 75
notta 110 to 130,upto19 rounds .
how it is possible??

யாருயா கோடிங் எழுதினது?
ஒரு பக்ஸ் கூட இல்லாம இருக்கு!!
👆இன்னாபா இப்படி எல்லாம் கேள்வி கேக்குறாக

திங்கள், 25 டிசம்பர், 2017

கழிவு நீர் நச்சு வாயு உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில்

விஷவாயு தாக்கி உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்!
மின்னம்பலம் :கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய தொழிலார் நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கழிவு நீர்த் தொட்டி அடைப்பு, மழை நீர் வடிகால் போன்றவற்றில் ஏற்படும் அடைப்புகளைச் சுத்தம் செய்யத் துப்புரவுத் தொழிலாளர்களே அதிக அளவில், முறைகேடாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடும்போது பலர் உயிரிழக்கின்றனர். இதனைத் தவிர்த்து இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் கழிவு நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், “கழிவு நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி நாடு முழுவதும் 232 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதில் 144 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் : பாஜகவின் முட்டாள்தனத்தால் தினகரன் மீது ஊடக வெளிச்சம் பாய்ந்து இந்த வெற்றி ...

மின்னம்பலம் :மக்கள் மத்தியில் தினகரனின் மதிப்பீட்டைக் கூட்டியது மத்திய பாஜக அரசின் தவறான அரசியல் அணுகுமுறைதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகருக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனன் தோல்வியடைந்தார். தேர்தலில் 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே கிடைத்தது.
இந்தச் சூழ்நிலையில் தினகரனின் வெற்றி குறித்து சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களின் கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார்.

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை ஒதுக்கிவிட்டு அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தது அதிமுகவினர் அல்ல, மாறாக அதனைச் செய்தது பாஜகதான்.

ஜிக்னேஷ் மேவானி :தமிழ்நாட்டில் நோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி...

nakkeeran :ஆர்.கே.நகரில் நோட்டாவை விடவும் குறைவான வாக்குகள் பெற்ற பாஜகவை மிஸ்டு கால் கட்சி என கிண்டலாக பதிவிட்டுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி.<>சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அங்கு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். அதிமுகவின் மதுசூதனன் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும், திமுக, பாஜக உட்பட 57 வேட்பாளர் டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆனால், 2,373 வாக்குகள் பெற்று நோட்டா பாஜகவை முந்தியிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி நீக்கம்! அதிமுக அதிரடி நடவடிக்கை

நக்கீரன்: ஆர்.கே.நகர் தோல்வியை அடுத்து அதிமுவின் அவசர ஆலோனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.எஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை என்று தினகரனை ஆதரிக்கும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதன் பின்னர், அதிமுக செய்தித்தொடர்புக்குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

திமுக விசாரணை குழு .. ஆர் கே நகர் தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய முடிவு !

tamilthehindu: ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் திமுக தோல்வியை தழுவியதற்கு என்ன காரணம் எனபதை ஆராய விசாரணை குழு ஒன்றை திமுக அமைத்துள்ளது.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஏறத்தாழ 30 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றது. இது திமுகவுக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தேர்தல் தோல்வி அல்ல என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தொண்டர்களுக்கு கடிதமாக எழுதியிருந்தார். ஆனால் அதன் பின்னர் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர். தேர்தல் தோல்வி குறித்து ஆராய திமுக அமைத்துள்ள விசாரணைக்குழுவில் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, சட்டத்துறைசெயலர் கிரிராஜன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசனும் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தினகரன் வீட்டு வாசலில் 20 ரூபாய் டோக்கனோடு ஆர் கே நகர் வாக்காள பெருமக்கள்?

தினகரன் :சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்கள் கையில் ரூ.20 டோக்கனுடன் பணம் வருமா என்று எதிர்பார்த்து கொண்டுள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் ரூ.20 டோக்கனுக்கு ரூ.10 ஆயிரம் வரை தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர் அளித்த வாக்குறுதியை நம்பி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம் என்று ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார். ரூ.20 நோட்டை வைத்துக்கொண்டு டி.டி.வி வீட்டு வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் ஒரு மாயமான் என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

தினகரன் சசிகலா புஷ்பா சந்திப்பு .... இணைந்து பணியாற்ற முடிவு .

ஜெயலலிதா மீது பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனுடன் திடீர் சந்திப்புமாலைமலர் :மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் முன்னர் பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனை சென்னையில் சந்தித்து பேசினார். ஜெயலலிதா மீது பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனுடன் திடீர் சந்திப்பு சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நேற்று தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஷால், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் அடையாறில் இல்லத்தில் தினகரனுடன் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா சந்தித்து பேசினார். நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டபோது முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை நீங்கள் முன்னிலை வகித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், உங்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினேன். வருங்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்' என சசிகலா புஷ்பா கூறியதாக தெரிவித்தார்.

ஆறு அமைச்சர்கள், 16 எம்.எல்.ஏ.,க் கள், தினகரனுக்கு தொலைபேசியில் வாழ்த்து

தினமலர் :தினகரன் வெற்றி பெற்றதால், முதல்வர் மாற்றம் வரலாம் என்ற பேச்சு, அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது.>சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், தினகரன், அபார வெற்றி பெற்றுள்ளார். 'மூன்று மாதங்களில், ஆட்சி கவிழும்' என, வெற்றிக்கு பின், அவர் தெரிவித்துள்ளார். அவரது ஆதரவு, முன்னாள், எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன், 'எங்கள் பக்கம், 60 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.இது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது: தினகரன் தரப்பினர் கூறுவது போல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், < அவர் பக்கம் சாய்ந்தால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். அதற்குள், கட்சியில் அதிரடி மாற்றங்களை செய் தாக வேண்டும்.ஆர்.கே.நகர் தோல்விக்கு, முதல் வர், பழனிசாமி அணியினர், முறையாக தேர்தல் பணியாற்ற வில்லை என, துணை முதல்வர், பன்னீர் அணியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தினகரன் ஆதரவாளர்கள், தற்போதும், அ.தி.மு.க., பொறுப்பில் நீடிக்கின்றனர். அவர்களை நீக்கி விட்டு, புதியவர்களை நியமித்தால் தான், மற்றவர்களுக்கு பயம் வரும். இதை, முதல்வர் பழனிசாமியிடம் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும், அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எடப்பாடி அரசு கவிழுமா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

எடப்பாடி அரசு கவிழுமா?மின்னம்பலம் :ஆர்.கே.நகரில் தினகரன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழக மற்றும் தேசிய அளவிலான அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படுத்துமா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்.
தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்களுக்கும் தேசிய அளவிலான அரசியல் போக்குகளுக்கும் தொடர்பில்லை என்ற நிலையே சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தேசிய ஊடகங்களின் கவனம் தமிழகத்தின் மீது அதிகளவில் படியாதது, இதை அடிக்கோடிட்டுக்காட்டி வந்தன. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதை வெளிக்காட்டும்விதமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய். “இந்தியாவின் ஒரு மூலையான தமிழ்நாட்டில் மோடி மற்றும் அமித் ஷாவின் மாயாஜாலம் வேலை செய்யாதெனத் தெரிகிறது. ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கு 102 வாக்குகளும் பாஜகவுக்கு 66 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன” என்று நேற்று (டிசம்பர் 24) காலை 11 மணியளவில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

BBC பழ கருப்பையா : மோடி மீது உள்ள கோபத்தை தினகரன் அறுவடை செய்துவிட்டார்

பழ. கருப்பையா
தினகரன்நரேந்திர மோதியின் வதைகளின் எதிர்விளைவாக வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன் என்று பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்துள்ளார் மூத்த அரசியல்வாதியும் திமுகவைச் சேர்ந்தவருமான பழ. கருப்பையா. தினகரனின் வெற்றிக்கு, மோதியின் நிலைப்பாட்டை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதே காரணம் என்றார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டதும் தேர்தல் அறிவிப்பு வெளியானது எல்லாவற்றுக்கும் நரேந்திர மோதி பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டிய பழ. கருப்பையா, தினகரனை உருவாக்கியது மோதிதான் என்றார். அதாவது, மோதி உருவாக்க நினைத்தது எடப்பாடியை, ஆனால், உருவாக்கியது தினகரை என்றார் கருப்பையா.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் இணைந்த பிறகும் அதிமுக வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை உருவாக்கினாலும், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கருப்பையா கருத்துத் தெரிவித்தார்.

திமுக தினகரன் கூட்டு சதி ... எடப்பாடி பன்னீர் தரப்பு குற்றச்சாட்டு

tamilthehindu :ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தினகரனும், திமுகவும் செய்த சதியின் வெளிப்பாடாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ''தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றிருக்கிறது. ஆர்.கே.நகரில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை திமுகவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். திமுகவும் டிடிவி தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டு சதியை அறிந்து பதவிக்காக இப்படியும் செய்வார்களா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தினகரன் வெற்றி ...அதிமுக கூடாரத்தில் வெடிப்பு... செங்குட்டுவன் எம்பி தாவல் .. மேலும் பலர் மூட்டை முடுச்சுகளுடன் ..

வேலூர் எம்பி செங்குட்டுவன் எடப்பாடி - ஓபிஎஸ் அணியில் இருந்து டிடிவி
தினகரன் அணிக்கு தாவியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதையடுத்து செங்குட்டுவன் டிடிவி தினகரன் அணிக்கு தாவியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் அவரை நேரில் சந்நதித்து ஆதரவை தெரிவித்தார். இதேபோல் அதிமுக மேலும் பல எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் :டிடிவி தினகரன் வெற்றி எதிரொலி - கொங்கு மண்டல அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட ஒரு மடங்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிமுகவின் பலம் வாயந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் .... அடுத்த வரவிருக்கும் மாற்றங்கள்

Karthikeyan Fastura : ஒரே கல்லுல எத்தனை மாங்கா
1. பிஜேபிய அசிங்கப்படுத்தி, மதவாதத்திற்கு இங்கே வேலையில்லை என்றாக்கியாச்சு
2. நாம் தமிழர் கட்சியையும் காமெடி பண்ணியாச்சு
3. சட்டமன்றத்தை கலைக்க தேன்கூட்டில் கல்லெறிஞ்சாச்சு
4. பதவி மோகத்தில் மதவாதத்திற்கு ஆதரவளித்த OPS-EPS கூட்டணிக்கும் ஆப்பு வச்சாச்சு
5. திமுக கூட்டணியை உசுப்பேத்தியாச்சு
6. தினகரனுக்கு ஆசை காட்டியாச்சு
7. இரட்டை இல்லை சின்னம் எல்லாம் ஒண்ணுமே இல்ல என்று புரியவச்சாச்சு.
8. மீடியாவோட பிஜேபி சாயத்தை காண்பித்து கொடுத்தாச்சு
9. கொடுத்தகாசுக்கு கூவின மாதிரியும் ஆச்சு. அதன்மூலமா ஒளிச்சுவச்சிருந்த கருப்பு பணத்தில் குக்கர் வாங்கின மாதிரியும் ஆச்சு.
10. மீதமிருக்கும் கருப்பு பணத்தையும் தினகரனை சட்டமன்ற தேர்தலில் இறைக்கவைக்க ரெடி பண்ணியாச்சு. இறைத்தபிறகு திமுகவை ஜெயிக்கவைத்து தினகரனுக்கு அல்வா கொடுத்த மாதிரியும் ஆச்சு

தினகரன் : நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து சிலீப்பேர் செல்லுகளும் வெளியே வருவார்கள்

Mayura Akilan - Oneindia Tamil சென்னை: மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அச்சாரமாக இந்த ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றி அமைந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ராணி மேரிக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாளை முதல் எனது செயல்பாட்டை பாருங்கள் என்று கூறினார். இனிமேல் நிகழப்போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பாருங்கள். காவல்துறையினரின் செயல்பாடு கண்டனத்திற்குரிய வகையில் உள்ளது. நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன் காவல்துறையினர் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும் கூறியுள்ளார். மதுசூதனனுக்கு பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. ஆளுங்கட்சி என்பதால் டெபாசிட் பெற்று தப்பித்துக்கொண்டனர் என டிடிவி விமர்சித்துள்ளார். பணப்பட்டுவாடா செய்ததாலேயே 2வது இடத்தை ஆளுங்கட்சி பெற்றுள்ளது. 58 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் 58 வேட்பாளர்களில் மதுசூதனன் மட்டும் தப்பித்துக்கொண்டார்.& ஆர்.கே.நகரில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாக தொடருவேன். பொதுச்செயலாளர் அனுமதியோடு அனைத்தும் செயல்படுத்தப்படும் என டிடிவி. தினகரன் கூறினார்.

இப்படி எல்லாம் இருந்தா திமுகவை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது

ஜகஜால வித்தைகாரரான தினகரன் அதிமுகவை பிரிப்பார் ,மீட்டெடுப்பார் அப்படியே அந்த வித்தைகள் கொண்டு தான் முதல்வராக பார்ப்பாரே ஒழிய இவர் அத்தனையும் செய்தது இன்னொரு கட்சியின் தலைவரை முதல்வராக்க அல்ல.
Shalin Maria Lawrence : இங்கே ஒரு பிரச்சனை இருக்கிறது.
ஆயிரம்தான் அரசியல் தந்திரங்கள் புரிந்தாலும் ,ஆயிரம் சாதுர்யங்கள் செய்தாலும் இங்கே ஒரு கட்சியின் வெற்றி என்பது முழுக்க முழுக்க அதற்காக வேலை செய்யும் தொண்டர்களையே சார்ந்திருக்கிறது.
அந்த தொண்டன் பேசும் பேச்சும் ,அந்த தொண்டம் புரிய கள பணியுமேதான் ஒரு வாக்காளனை அந்த கட்சியின் சின்னத்தில் பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்த வைக்கிறது.
அப்படி பட்ட சொல்லும் செயலும் எப்படி இருக்க வேண்டும் ?
தேர்தலுக்கு முன்னேயே தினகரனை தலைமேல் வைத்து கொண்டாடி விட்டு இப்பொழுது தோற்றபின்னும் அவரை ஒரு புனிதர் போல் சித்தரிக்கும் விதம் திமுகவினர் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு சமம்.
கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளலாம் ,சிரித்துக்கொள்ளலாம் ,ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி கொள்ளலாம் .அது அரசியல் நுட்பம்.
ஆனால் தொண்டர்ப்படையோ எதிரியை விழுங்க தயாராக இருக்கும் சிங்கங்களை போல் இருக்கவேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே தினகரனை கிழித்திருக்க வேண்டும் .செய்யவில்லை.
இப்பொழுது தோற்றப்பின் ,அவர் நல்ல அரசியல்வாதி ,மக்களிடம் நன்றாக பழகுகிறார் ,சிரிக்கிறார் ,நடக்கிறார், பாஜகவை போல அல்ல,ஓபிஎஸ் போல இல்லை என்று தினகரன் அணி செய்யய் வேண்டிய வேலைகளை திமுகவினர் செய்து கொண்டிருக்கினர் .
இப்பொழுதும் கூட தினகரனை அட்டாக் செய்து பேசாமல் அவருக்கு சாமரம் வீசி கொண்டிருப்பது மிக மிக கேவலமானது.
தென் மாவட்ட சாதி வன்முறை ,மன்னார்குடி மாபியா ,பினாமி கம்பனிகள் ,டாஸ்மாக் ,நில மோசடி என்று ஆயிரம் சொல்லலாம் தினகரன் மற்றும் குடும்பத்தை பற்றி.
நான் கேக்குறேன் ,உனக்கு என்ன அரசியல் நாகரிகம் ? ஸ்டாலின் நாகரிகம் பாக்கலாம் .நீ பாத்தா உனக்கும் இருக்குறதும் போச்சு.
இப்படி எல்லாம் இருந்தா திமுகவை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது

ஆர்.கே.நகர் திமுக டெபாசிட் இழப்பு! .. இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான

தினத்தந்தி :ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு
நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு அடுத்து நடந்த இந்த தேர்தல் ஈபிஎஸ் - ஒபிஎஸ் ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. முடிவில் திமுகவின் அதிகமான வாக்குகள் டிடிவி தினகரன் வசம் சென்றதாக தெரிகிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசின் மீதான விமர்சனத்திற்கு இடையே களமிறங்கிய திமுக வெற்றியை தனதாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகதரப்பில் இருந்தது. இப்போது ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிடவும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். காலையில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்ற போது அதிமுக மற்றும் திமுக அலுவலகங்கள் பெரிதும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஸ்டாலின் : ஆர் கே நகரில் தாராளமான ஏராளமான தர்மம் வென்றது

நக்கீரன்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட "தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்" வென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தது. பாளைச் சிறையில் இருந்து வெளிவந்த தலைவர் கலைஞர் அவர்களிடம், பத்திரிக்கையாளர்கள் "தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?" என்று
கேட்டபோது, தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த ”தர்மம் வென்றது” எனக் குறிப்பிட்டார்.

தினகரன் 89013 வாக்குகள் பெற்று பெருவெற்றி... மதுசூதனன் 48306 - மருதுகனேஷ் 24651....

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி
மாலமலர்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு:
சுயேச்சை - தினகரன்: 89, 013 
அ.தி.மு.க. - மதுசூதனன்: 48,306
தி.மு.க. - மருதுகணேஷ்: 24,651
நாம் தமிழர் - கலைக்கோட்டுதயம்: 3,802
பா.ஜ.க. - கரு. நாகராஜன்: 1,368
நோட்டா: 2,348

களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன்  சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

தினமும் 10 பெண்களுடன் பாலியல் ...டெல்லி சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித் லீலைகள்

டெல்லி:
tamiloneindia :டெல்லியில் உள்ள சாமியாரின் ஆஸ்ரமத்தில் 100க்கும் மேற்ட்ட சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்வதாக, 40 பெண்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
; பகவான் கிருஷ்ணரை போல 16000 பேரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தினசரி 10 பேரை படுக்கைக்கு அழைத்துள்ளார் பலே சாமியார். அந்த சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 டெல்லியின் ரோகினி என்ற பகுதியில் உள்ளது ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆஸ்ரமம். இங்கு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தும், போலீஸார் கண்டுகொள்ளவில்லை எனவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான ஒரு பெண் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அந்த ஆஸ்ரமத்தில் 100க்கும் அதிக பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆர் கே நகரில் தினகரன் : 10421- மதுசூதனன்: 4521- மருதுகனேஷ் : 2383 வாக்குகள்

 மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது
Breaking news  : வாக்கு  எண்ணிக்கை இடை நிறுத்தம் . தினகரன் எடப்பாடி ஆதரவாளர்கள் கைகலப்பு !

தினகரன் : 7260
மதுசூதனன்: 2738
மருதுகனேஷ் : 1182
Mathi - Oneindia Tamil சென்னை: ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 1891 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்., -ஆர்கே நகரில் பாஜகவை விட நோட்டாவுக்கு வாக்குகள் அதிகம் -பாஜக- 66; நோட்டா- 122 -கலைக்கோட்டுதயம் 258 -கருநாகராஜ் 66 -போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் - மதுசூதனன் -ஆர்கே நகர் முதல் சுற்று முடிவுகள் குறித்து மதுசூதனன் கருத்து -ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது - தமிழிசை தற்போதைய நிலவரம்: தினகரன் 5339 மதுசூதனன் 2738 மருதுகணேஷ் 1182 கலைக்கோட்டுதயம் 12 கருநாகராஜ்

2 ஜி தீர்ப்பு திமுக தொண்டர்களுக்கு பெரும் எழுச்சியை கொடுத்திருக்கிறது!

விகடன் :RAJASEKARAN K - வி.ஶ்ரீனிவாசுலு கையில் ‘முரசொலி’யுடன் கழுகார் நம்முன் ஆஜரானார். 2ஜி வழக்கின் தீர்ப்பை வைத்து 22-ம் தேதி, வெளியான ‘முரசொலி’யில், ‘வாய்மை வென்றது! பொய்மை புதைக்குழிக்குச் சென்றது’ என்று தலைப்புச்செய்தி வெளியிடப்பட்டது. ‘அன்றே சொன்னார்’ என்று கருணாநிதியின் கையெழுத்தில் ஒரு குறிப்பும் இருந்தது. ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என்று எழுதி மு.க. என்று கருணாநிதி அதில் கையெழுத்துப் போட்டுள்ளார். ‘2ஜி வழக்கு ஆரம்பித்தபோதே தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.அவை அனைத்தையும் நம்மிடம் காட்டிய கழுகார், அது பற்றிய மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். ‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்ச்சி சைனிப் பெயர்ச்சியாக ஆரம்பித்துவிட்டது...” ‘‘கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்கிறதே?” ‘‘ஆ.ராசாவும், கனிமொழியும் விடுதலை ஆகிவிட்டார்கள் என்ற தகவலை அன்பழகனும் ஸ்டாலினும் கருணாநிதியிடம் சொல்வதற்கு கையில் சால்வையுடன் சென்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்ததும் கருணாநிதி சிரித்தார். சால்வையை கருணாநிதியிடம் ஸ்டாலின் கொடுத்தார். அப்போது அன்பழகன், ‘2ஜி வழக்கில் கனிமொழியும் ராசாவும் விடுதலையாகிவிட்டார்கள். நாம் வென்று விட்டோம்’ என்று சொன்னார். அதே தகவலை ஸ்டாலினும் உரக்கச் சொன்னார். மீண்டும் கருணாநிதி சிரித்தார்.