திங்கள், 18 செப்டம்பர், 2017

நீதிமன்றம் கைவிட்டால் ராஜினாமா - திமுக திடீர் முடிவு!

டிஜிட்டல் திண்ணை: நீதிமன்றம் கைவிட்டால் ராஜினாமா - திமுக திடீர் முடிவு!மின்னம்பலம் :  “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்துவிட்டார் சபாநாயகர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும், ஆட்சி கலையும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பாக இருந்தது. திண்டுக்கல்லில் நடந்த முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘எப்போது திமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருகிறார்கள். மைனாரிட்டி அதிமுக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் மக்கள் விரும்பாத இந்த எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என வெளிப்படையாகவே அறிவித்தார். எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் எடப்பாடி அரசு வீட்டுக்குப் போய்விடும் என்பதுதான் ஸ்டாலின் எதிர்பார்ப்பாக இருந்தது.

துனீசியா .. முஸ்லிம் பெண்கள் வேற்று மதத்தினரை இனி திருமணம் செய்யலாமாம். , இஸ்லாமிய வாதிகள் கண்டனம்

துனிஸ்: இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் துனிசியா நாட்டில் ஷரீஅத்
சட்ட,திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. பெற்றோரின் சொத்துகளில் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது. மகன்களுக்கு இரண்டு பங்கும், மகள்களுக்கு ஒரு பங்கும் வழங்கும் பழக்கம்தான் செயல்பாட்டில் உள்ளது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் எந்த மதத்தை சேர்ந்த பெண்ணையும் காதலித்து, திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால், முஸ்லிம் பெண்ணை காதலிக்கும் வேற்று மதத்தவர் யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக மதம் மாறிய பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சட்டம் கடந்த 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சட்டம் பெண்களுக்கான சம உரிமையை பறிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பெண் அதிகாரி தலைமையிலான கமிஷன் ஒன்றை அமைத்து துனிசியா அதிபர் பெஜி கைய்ட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டிருந்தார்.

BBC : தினகரன் எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்.. ஜனநாயகப் படுகொலை

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் சேர்ந்தால்தால்தான் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2011 வரை தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன், ''தற்போது சபாநாயகர் தனபால் எடுத்துள்ள நடவடிக்கை கட்சி தாவல் தடை சட்டத்திற்கு எதிரானது. கட்சி தாவல் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலுக்கு எதிரானது,'' என்று தெரிவித்தார். அதிமுகவில் நிலவிவரும் அசாதாரண சுழலில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை செயல் தலைவர் முக ஸ்டாலின் நாளை செவ்வாய்க்கிழமை கூட்டியுள்ளார். சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் அதிமுக இருப்பதால், எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் தெரிவித்த 18 எம்எல்ஏகளை நீக்கிவிட்டு, குறுக்குவழியில் ஆட்சியை தக்கவைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்க விவகாரம்: உத்தரகாண்ட் தீர்ப்பும், தமிழக நிலவரமும்

மு.அப்துல் முத்தலீஃப் : tamilthehindu : 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் பலரும் எடியூரப்பா வழக்கு தீர்ப்பை உதாரணம் காட்டி வந்தாலும், இதே போன்ற விவகாரத்தில் உத்தரகாண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அது குறித்து ஒரு அலசல்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்ட 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற தீர்ப்புகளை பலரும் காரணம் காட்டி பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனேகம் பேர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் தனபாலின் முடிவைப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சிலர் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிலர் உதாரணம் காட்டுகின்றனர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்த பொழுது சபாநாயகர் 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி: தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச்செயலாளர் கடிதம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பேரவைச்செயலர் பூபதி கடிதம் எழுதியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநருக்கு கடிதம் கொடுத்து தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதியை காலியிடம் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த அறிவிப்பு குறித்து உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தினகரன் தரப்பு அறிவித்துள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பெரியார் பிறந்த நாளில் பாமக சமூக நீதி மாநாடு!

பெரியார் பிறந்த நாளில் பாமக சமூக நீதி மாநாடு!வன்னியர் சங்கப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளை தியாகிகள் தினமாக அனுசரித்துவருகிறது பாமக. இந்த ஆண்டு தியாகிகள் தினத்தைச் சமூக நீதி மாநாடாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, மூன்று மாதங்களாக மாநாட்டு வேலைகளைச் செய்துவந்தார்கள். கடந்த ஒரு வாரமாக பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு, முன்னாள் எம்.பி. தன்ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் விழுப்புரத்தில் தங்கி வேலைகளைக் கவனித்து வருகிறார்கள்.
மாநாடு மேடை 30*80 அளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது, அலங்கார வளைவுகள், பேனர்கள் கண்கள்படும் இடமெல்லாம் காணப்பட்டன.

சர்தார் சரோவர் அணையை திறந்தார் பிரதமர்.. மில்லியன் மக்களை தெருவுக்கு துரத்திய திட்டம்!

Ravichandran Murugesan 20 hrs · எற்கனவே இருந்த வாழ்வாதாரத்தை அழித்து புதிய அணை கட்டி புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்... சர்தார் சரோவர் அணை. குறைந்த பட்சம் பதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு மாற்று இடம் கூட வழங்காமல்.... அந்த அணையில் இருந்து வருவது தண்ணீர் அல்ல பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்.

சர்தார் சரோவர்: நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!
பிரதமர் நரேந்திர மோடி தனது 67ஆவது பிறந்த நாளான இன்று குஜராத் மாநிலம் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே உயரம் அதிகப்படுத்தப்பட்ட சர்தார் சரோவர் அணையைத் திறந்து வைத்தார் .
சர்தார் சரோவர் அணை 5.4.1956 அன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான் மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் பயனடையும் .
ஆனால், சர்தார் அணைத் திட்டத்துக்கு குஜராத் மாநிலத்தின் பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அணையின் கட்டுமான பணிகள் கடந்த 1996ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் குறித்து 2000இல் சில நிபந்தனைகளுடன் மீண்டும் கட்டுமான பணிகளைத் தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்ற அணைப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

சென்னை அப்போலோவில் பிகார் எம் பி உயிரழப்பு

சென்னையில் பீகார் எம்பி மரணம்!
பீகார் மாநில எம்.பி முகமது தஸ்லிமுதீன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முகமது தஸ்லிமுதீன் கடந்த 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற லோக்சபா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செப் 17) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று இரவு சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

ஜெயலலிதா ஏன் அழகிரியை எதிர்த்தார் ... செல்லூர் ராசு தகவல்


மின்னம்பலம் திமுக செயல்தலைவர்
அழகிரியை புகழும் அமைச்சர் !ஸ்டாலினை விட அழகிரி திறமையானவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து எடப்பாடி அணிக்கும் தினகரன் அணியும் தினந்தோறும் கருத்து மோதல் நடந்துகொண்டிருக்கிறது. தற்பொழுது நடைபெறும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம், திமுக மனு கொடுத்தும்,ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்திலும் திமுக வழக்குத் தொடுத்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் செப் 20 ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பிற்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின்," நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராவிட்டால், பெருமளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்"என்று தெரிவித்திருந்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் கறுப்பு சட்டைக்கு தடை

மின்னம்பலம்  : இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள்
போட்டி நடைபெற்றுவரும் சேப்பாக்கம் மைதானத்திற்குக் கருப்பு சட்டை அணிந்து சென்றவர்கள் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் நீண்ட வரிசையில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கினர். இன்று செப்.17 நடைபெற்றுவரும் போட்டியை காண்பதற்காகத் திரளான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

தினகரன் + சசிகலா அணி .. அதிமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம்

சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இரு அணிகளும் ஒன்றாக இனைந்த பின், சமீபத்தில் பொதுக்குழு கூடி மொத்தம் 12 தீர்மானங்களை நிறைவேற்றியது. 8வது தீர்மானமாக, சசிகலாவின் நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தினகரன் தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவின் அனுமதி இல்லாமல் கூட்டப்பட்ட இந்த கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது எனக் கூறிவருகிறார். அதோடு, ஏற்கனவே தினகரன் தரப்பில் டெல்லிக்கு சென்ற அவரின் ஆதரவு எம்.பிக்கள், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, சசிகலாவின் அனுமதியில்லாமல், பொதுக்குழு கூட்டத்தை கூட்டியதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என மனு அளித்துள்ளனர்.

தந்தை பெரியார் 139-வது ஆண்டு பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை!

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய பகுத்தறிவுப் பகலவன்
தந்தை பெரியாரின் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் இன்று (17.9.2017) உலகெங்கும் தேசியத் திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியாவில் புதுடில்லி, மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் திராவிடர் கழகத் தோழர் களால் பட்டி தொட்டியெங்கும் பல்வேறு நல செயல்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.
;இன்று (17.9.2017) காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் தோழர்கள் - தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தார். ;பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்தில்மலர் வளையம் வைத்து தந்தை பெரியார் விட்டுச்சென்ற இலட்சிய பயணம் தொடரும், மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள் தோல்வி அடையும் வரை நமது அறப்போர் கருத்துக் கொள்கைபோர் என்றும் தொடரும் என்று தமிழர் தலைவர் சொன்ன உறுதிமொழி கழகத் தோழர் - தோழியர்கள் சொல்லி உறுதி ஏற்கப்பட்டது. அம்மா சிலை, நினைவிடத்தில் மரியாதை: முன்னதாக வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள்- தோழியர்கள் ஊர்வலமாக சென்று கழக மகளிரணி சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் தமிழர் தலைவர் முன்னிலையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியாரின் கொள்கையில் நடைமுறை மாற்றங்களை கொண்டுவந்தவர் அண்ணா: சுப.வீ.

சுப.வீரபாண்டியன்.சி.என்.அண்ணாதுரைதமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நீடிக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் என்று அங்கீகரிக்கப்படும் தலைவர் மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரை. அதிமுக என்னும் கட்சியின் பெயரிலும், கொடியிலும் அவரே இருக்கிறார்.
தற்போது உடல் நலமில்லாமல் ஓய்வில் இருக்கும் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி அவரை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசக்கூடியவர்.
அவரது பிறந்த நாளை ஒட்டி, அண்ணாவின் அரசியல் பாரம்பரியம் என்பது எதைக் குறிப்பது என்பது குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் பிபிசி தமிழிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
“அண்ணாவின் அரசியல் என்பது மொழி உரிமை, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றை வலியுறுத்தியது”.
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கம் தொலைநோக்குப் பார்வையோடு அண்ணாவால் முன்வைக்கப்பட்டது. அண்ணா 1969ல் இறந்துவிட்டாலும், அந்தக் கோரிக்கை இன்னமும் வலிமையாக நிற்கிறது. முன்னெப்போதையும்விட அதற்கு இப்போது தேவை அதிகமாக இருக்கிறது.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ரயிலில் தூங்க கட்டுப்பாடு! 8 மணி நேரம் மட்டுமே தூங்க ...

ரயிலில் தூங்க கட்டுப்பாடு!
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகள் 8 மணி நேரம் மட்டுமே தூங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் படுக்கை வசதியுள்ள இருக்கையில் சில பயணிகள் முன்னதாகவே தூங்க செல்வதால் மற்ற பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. எனவே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரத்தை குறைத்து ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்த பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 8 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை பயணிகள் 9 மணி நேரம், அதாவது, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்த்தக்கது. நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிரந்திரமாக கைவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் விலையை விண்ணைத் தொடும் அளவிற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உயர்த்திக் கொண்டே போவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இருந்ததைவிட தற்போது கச்சா எண்ணெயின் சர்வதேச விலை ஒரு பேரலுக்கு 52 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ள நிலையில், அப்போது இருந்ததை விட 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது, “எங்கள் அரசின் நோக்கம் மக்கள் நலனே”, என்று 2014ல் நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. இன்றைக்கு தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, மக்கள் தலையில் “பெட்ரோல், டீசல் விலை உயர்வு” என்ற “சுமைதாங்கி பாறாங்கல்லை” தூக்கி வைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 11 முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று அனுமதித்து, இன்றைக்கு பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 73.09 ரூபாயையும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 62.02 ரூபாயும் விற்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டது.

கவிழும் கப்பல்... அதிகாரிகள் தயாராகி விட்டார்கள் ...

சவுக்கு : தனபாலை எந்த நெருக்கடி அளித்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத கையறு நிலையில்தான் எடப்பாடி இருக்கிறார். வழக்கமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஊழல் அதிகாரிகளும் சரி, நேர்மையான அதிகாரிகளும் சரி. அடுத்து எந்த அரசு வரும். அதில் நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதை மிக மிக கவனமாக அலசி ஆராய்வார்கள். அவர்களின் கருத்து முக்கியமானது. தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளிடையே கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் விவாதம் என்ன தெரியுமா ? இன்னும் எத்தனை நாள் ? எடப்பாடி அரச கவிழும் கப்பலா இல்லையா ?
காகித ஓடம், கடலலை மீது, போவது போலே இருவரும் போவோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் இணைப்பு விழாவுக்கு பிறகு பயணம் தொடங்கிய கப்பலில் விழுந்த ஓட்டைகள் கப்பலை கவிழும் நிலைக்கு தள்ளியுள்ளன.   ஏற்கனவே இருந்த சிறு சிறு ஓட்டைகளை, தனது கை மற்றும் தலை, கால் என அனைத்தையும் வைத்து வித்யாசாகர் ராவை அடைக்கச் சொன்னார் மோடி.   இத்தனை ஓட்டைகளையும் அடைத்தும், கப்பலில் தண்ணீர் ஏறுவதை தடுக்க முடியாமல், திமுக மற்றும் டிடிவி தினகரன் போடும் புதிய ஓட்டைகள் கப்பலை முழுகும் நிலைக்கு தள்ளியுள்ளது.

தமிழக சபாநாயகருக்கு ஒரு திறந்த மடல்.... சவுக்கின் சாட்டை..

ஜெயலலிதா உங்களை புகழ்ந்து பேசியதையும், நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அப்படி நீதி வழுவாமல் நீங்கள் சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தமிழகம் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்றினார், ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தார் என்று நீங்கள் புகழப்பட வேண்டும். ஆளுங்கட்சிக்கு துணையாக, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார் என்ற தீராத அவப்பெயர் உங்களுக்கு வருவதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி தடம் மாறிச் சென்றீர்கள் என்றால், தமிழக மக்கள் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் ஆன்மாவும் உங்களை மன்னிக்காது.
அன்பார்ந்த சபாநாயகர் அவர்களே, வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் வருங்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகமே நீங்கள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று ஆவலோடு எதிர்நோக்கி உள்ளது.
2016 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்திருந்தனர்.   ஆனால் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார்.  அடுத்த ஐந்தாண்டுகளும் வழக்கமான சம்பிரதாயமான சபாநாயகர் பணியாகவே உங்கள் பணி அமையப் போகிறது என்றுதான் நீங்களும் எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.  ஆனால் காலம் நாம் போடும் கணக்குகளை அப்படியே நடக்க விடுமா என்ன ?
ஜெயலலிதாவின் மரணம், தமிழகத்தின் அரசியல் சூழலையே மாற்றிப் போட்டது. கட்டுக்கோப்பான ஒரு ராணுவத்தைப் போலத்தான் அதிமுகவை நடத்தி வந்தார் ஜெயலலிதா. ராணுவத்தில் கட்டளையை மீறி எதிர்த்துப் பேசினால் அளிக்கப்படும் தண்டனையைப் போலத்தான் தன் கட்சியினருக்கும் தண்டனை அளித்து வந்தார்.   அப்படிப்பட்ட ஒரு ராணுவ தளபதி திடீரென்று இல்லாமல் போனால் கட்டுக்கோப்பாக இருந்த ராணுவம், கூலிப்படையினர் கூட்டமாக மாறிப் போகும்.  அப்படிப்பட்ட ஒரு கூலிப்படை  கூட்டமாகத்தான் இன்று அதிமுக மாறியுள்ளது.

மீண்டும் ஜெ. மரண அரசியல்! வெளியாகுமா சிகிச்சைப் படங்கள்?


மின்னம்பலம் : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற புதிதில் இருந்து செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் சரி, விழாக்களில் பேசும்போதும் சரி அளந்து அளந்து பேசுவார். ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும், ‘என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்ற வார்த்தைகளையே பொருத்திப் பொருத்திப் பேசுவார். ஒரு செயற்கையான புன்னகையை பிற்சேர்க்கையாக வைத்திருப்பார்.
ஆனால், கடந்த சில வாரங்களாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் தென்படும் எடப்பாடியாரின் பாடி லாங்வேஜும் வேறு, அவரது பேச்சு மொழியும் வேறு. மைக் ஆடும் வகையில், மைக் பெட்டியை தட்டி, பேச்சுக்காக எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைக்கூட பார்க்காமல் ஆவேசமாக, ‘இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது’ என்று கர்ஜனையாக பேச ஆரம்பித்தார் எடப்பாடி.

ஆர்எஸ்எஸ் பொய்யர்களின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலம்

நந்தன் ஸ்ரீ நந்தன் : இந்த ஆர்எஸ்எஸ் பார்ப்பன பிடுங்கிகளின் அடுத்த பொய் அம்பலத்துக்கு
வந்திருக்கிறது.
கௌரி லங்கேஷ் படுகொலையை எதிர்த்து கேரள DYFI யினர் ஒரு தெரு நாடகம் போடுகிறார்கள். அதில் நாடகத்துக்காக கௌரி லங்கேஷ் மாதிரி ஒருவரை காரில் இருந்து இழுத்து ஆர்எஸ்எஸ்காரர்கள் வெட்டுவதாக ஒரு காட்சியை காட்டுகிறார்கள்..
இந்த பார்ப்பனப் பிடுங்கிகள் இதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். மலையாளத்தில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று மற்ற மொழி பேசும் மக்களுக்குப் புரியப் போவதில்லை என்ற தைரியத்தில் இது கம்யூனிஸ்ட்டுகள் ஆர்எஸ்எஸ் பெண்மணியை கொலை செய்த வீடியோ என்று பரப்பி இருக்கிறார்கள்..

2019ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் .. தமிழக பாஜகவின் கூட்டணி கனவு!

தினமலர் : பாஜகவின் பெரிய கூட்டணி...  வரும், 2019ல் நடக்கவுள்ள
லோக்சபா தேர்தலை சந்திக்க, தமிழகத்தில், மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது. தி.மு.க.,வை பரம எதிரியாக கருதி, விமர்சித்து வந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சென்னையில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். அப்போது வைகோவை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்.பின், செப்., 5ல் நடந்த, 'முரசொலி' பவள விழாவிலும், வைகோ பங்கேற்றார்.< கோரிக்கை</ இதையடுத்து, 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., சேரும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தஞ்சாவூரில் அளித்த பேட்டியில்,
'தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இடம் பெறாது' எனக்கூறி, வைகோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், மும்பையில் பிறந்த நாள் கொண்டாடிய, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானியை சந்தித்து, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

கி.ரா :திருமணத்தை நிறுத்துவதுதான் சமூகத்தின் விடிவுகாலம்: கரிசல் விருது விழாவில் கி.ராஜநாரயணன்

tamilthehindu :திருமணத்தை நிறுத்துவதுதான் சமூகத்தின் விடிவுகாலம். இதை யாரும்
கேட்கமாட்டார்கள். பின்னர், இப்படி சொன்னதை நினைத்துப் பார்ப்பார்கள் என்று எழுத்தாளர் கி.ரா.பேசினார்.
எழுத்தாளர் கி.ரா. 95 விழா புதுச்சேரியில் இன்று தொடங்கியது. இவ்விழாவில் கரிசல் விருது வழங்கும் நிகழ்வு நடந்தது. நாள்முழுக்க நடக்கும் இந்நிகழ்வில் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்த எழுத்தாளர் கி.ரா. 'மனித இயல்புகளை சொல்வதுதான் இலக்கியம். தைரியமாக சொல்வதை வரவேற்பது அவசியம்' என்று குறிப்பிட்டார்.
கி.ராஜநாராயணனன் என்னும் படைப்பாளுமை, தமிழ் உலகம் இதுவரை கண்டிராத அபூர்வம். இந்த நதிமூலம் 1923 ல் உற்பத்தியாகி, தீரா நதியாய் பெருக்கெடுத்து ஓடி, 2017 செப்டம்பர் 16ல் தன் 95 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.

ஸ்டாலின் :நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்

நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்
நடத்தப்படும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார். திண்டுக்கல், தி.மு.க. சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள், தி.மு.க. ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நேர்மையாக பணியாற்றிய ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்று, பணமுடிப்பு, பதக்கம் மற்றும் சான்றோர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர் விருது பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நடிகர் சரத்குமார் எம்பி ஓய்வூதியத்தை மறுத்து மாநிலங்கள் அவை செயலருக்கு கடிதம்

சென்னை: தனக்கு வழங்கப்படும் முன்னாள் எம்.பி.க்கான ஓய்வூதியத்தை
நிறுத்தக்கோரி மாநிலங்களவை செயலாளருக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார். பிறவழிகளில் வருவாய் பெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வசதி உள்ளவர்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தந்தால் அரசுக்கு பலகோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்றும் ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே ஓய்வூதியத்தை நம்பியுள்ளனர் என்று சரத்குமார் கூறியுள்ளார். தினகரன்

நீட் தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு கேட்ட கவுதமி ,,, பிரகாஷ் ஜாவுடேகர் சாதகமான பதிலை வழங்கி உள்ளார்?

Lakshmi Priya Oneindia Tamil  கவுதமியிடம் அவர் எப்படி அப்படி சொல்லலாம்? தமிழக பாஜக குழப்பமாம்? | சென்னை: நீட் தேர்வு குறித்து நடிகை கவுதமியிடம் சாதகமான பதிலை அமைச்சர் வழங்கியுள்ளதன் மூலம் நீட் குறித்து பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக தோற்றத்தை உருவாக்கும் என்பதால் மாநில பாஜக அதிருப்தி அடைந்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் அந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நீட் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டாவது விலக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் காணப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை நடிகை கவுதமி சந்தித்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று கவுதமி மனு அளித்துள்ளார்.

வாருங்கள் அறிவால் இணைவோம் .பெரியாராய் வாழுவோம் . ஷாலின் மரிய லாரன்ஸ்!


கடந்த வாரம் நிகழ்ச்சியின் போதே அறிவிக்க வேண்டியது .ஆனால் என்
தோழன் பெரியாரின் பிறந்தநாள் அன்று அறிவிக்க வேண்டுமென்பது என் அவா .
Old madras writers company என்கிற அமைப்பை தலித் இலக்கியம் மற்றும் தலித் எழுத்தாளர்களை popular medium (பொது ஊடகங்களில் ) முன்னிறுத்த உருவாக்கினேன் .
அதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பை ஒரு சமூக நீதி இயக்கமாக மாற்றியமைக்கிறேன் என்பதை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி .
கடந்த நான்கு வருடங்களாக தமிழகம் முழுவதும் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி பெரும்பாலான இளைஞர்களுக்கு சமூக நீதி மற்றும் சமநீதி பற்றிய தெளிவு அதிகம் இல்லாதது தெரியவந்தது . இதன் நிலையில் அதிக இளைஞர்கள் வலது சாரி இயக்கங்களின் பின்னாலும் ,தமிழ் தேசியம் என்கிற பெயரில் இயங்கிவரும் மக்கள் விரோத பாசிச அமைப்புகளின் பின்னும் கவர்த்திழுக்கப்பட்டு அதிக அளவில் திசை மாறி சென்று கொண்டிருக்கின்றனர் . தங்கள் சக மனிதர்கள் எதிர்கொள்ளும் சமூக ,உளவியல் பிரச்சனைகளை இவர்கள் கண்டும் காணாமல் ,கேட்டும் கேட்காமல் இருக்கின்ற நிலை தொடருகிறது . இந்த போக்கினால் நாம் முத்துகிருஷ்ணன்களையும் ,அனிதாக்களையும் நம் கண்முன்னே இழந்து வருகிறோம் .