திங்கள், 18 செப்டம்பர், 2017

சர்தார் சரோவர் அணையை திறந்தார் பிரதமர்.. மில்லியன் மக்களை தெருவுக்கு துரத்திய திட்டம்!

Ravichandran Murugesan 20 hrs · எற்கனவே இருந்த வாழ்வாதாரத்தை அழித்து புதிய அணை கட்டி புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்... சர்தார் சரோவர் அணை. குறைந்த பட்சம் பதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு மாற்று இடம் கூட வழங்காமல்.... அந்த அணையில் இருந்து வருவது தண்ணீர் அல்ல பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்.

சர்தார் சரோவர்: நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!
பிரதமர் நரேந்திர மோடி தனது 67ஆவது பிறந்த நாளான இன்று குஜராத் மாநிலம் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே உயரம் அதிகப்படுத்தப்பட்ட சர்தார் சரோவர் அணையைத் திறந்து வைத்தார் .
சர்தார் சரோவர் அணை 5.4.1956 அன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான் மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் பயனடையும் .
ஆனால், சர்தார் அணைத் திட்டத்துக்கு குஜராத் மாநிலத்தின் பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அணையின் கட்டுமான பணிகள் கடந்த 1996ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் குறித்து 2000இல் சில நிபந்தனைகளுடன் மீண்டும் கட்டுமான பணிகளைத் தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்ற அணைப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

இந்த நிலையில், உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர். மின்னம்லாம்

கருத்துகள் இல்லை: