திங்கள், 14 நவம்பர், 2016

கத்தரிக்காய் வாங்கவோ, வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? கலைஞர் கேள்வி

ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? பிரதமர் மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்படுவது சாமானியர்கள்தான் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.இது தொடர்பாக  திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால்,  
இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக நாளேடுகள் வாயிலாகவும், நேரிலும் கண்டு வருகிறோம்.  அதைத்தான் எனது முதல் அறிக்கையிலேயே "வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும்,  இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர் களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும்  தங்களிடம் உள்ள ஒரு சில 500 ரூபாய் நோட்டை வாங்கு வதற்கு யாரும் முன் வராத நெருக்கடி நிலையில் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது” என்று நான் குறிப்பிட்டதைத்தான் அன்றாடம் நேரிலே கண்டு வருகிறோம்.  

மனிதாபிமானமே இல்லாமல் நடக்கும் கொடுமையை இணையத்தில் ஆதரித்துப் பேசுகின்றவர்களில் 10க்கு 9பேர் பார்ப்பனர்கள்?

மோடியின் துக்ளக் தர்பாரில் நடக்கும் இந்த 1000/500 ரூபாய் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், இந்தக் கொடுமையை இணையத்தில் ஆதரித்துப் பேசுகின்றவர்களில் 10க்கு 9பேர் பார்ப்பனர்கள்.
இரவு 9மணிக்கு மோடி பஞ்ச் டயலாக் பேசினால் 8மணி 59நிமிடத்தில், "ஆஹா ஓஹோ.. இதனால இந்தியா வல்லசரசு ஆயிரும். அதுவரைக்கும் பக்கத்து வீட்ல கடன் வாங்குங்க. கிட்னியை வைத்து சட்னி வாங்குங்க. ஜெய்ஹிந்த்," என்று வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, "மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு. சாட்டிலைட்டுகுள்ள கேக்கு வச்சிருக்காரு...," என வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
"ஏழைங்க எல்லாம் எப்படி சில்லறை இல்லாமல், ரூபாய் நோட்டு இல்லாமல் சாப்பிடுவாங்க?" என யாராவது கேட்டால், "ரேஷன்ல அரிசி ஃப்ரீதானே? நாட்டுக்காக ரெண்டு நாள் பட்டினி கிடந்தா ஒன்னும் செத்துவிட மாட்டாங்க," என க்ரெடிட் கார்டு திமிரில் பதில் போடுகின்றவன் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.

டொனால்ட் ட்ரம்ப் ; 30 லட்சம் சட்டவிரோத வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் .

வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார், இவர் 2017 ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ட்ரம்ப் இன்று பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் அதிபரானதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற்றப்படுவர்.

வைகோ: விஜயகாந்த் சேர்ந்ததால் ம.ந.கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை .. நிலை கெட்டுபோன நயவஞ்சகனின் நாக்கு இதுதான்!

மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறியது உண்மைதான் என வைகோ தெரிவித்துள்ளார்
மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது உண்மைதான் என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலின் போது தொகுதி உடன்பாடு மட்டும் வைத்திருந்தோம். அக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லாததால் நாங்கள் வெளியேறிவிடோம் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக வைகோ தெரிவித்துள்ளதாவது: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு சீரிய முயற்சியை மேற்கொண்டோம். மக்கள் நலக் கூட்டு இயக்கம், மக்கள் நலக் கூட்டணி என அது உருவானது. தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டணி அமைத்தால் மிகப் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை இருந்தது.  உலகத்திலே பயங்கரமான ஆயுதம்? நிலை கெட்டு போன நயவஞ்சகனின் நாக்கு தான் அது 

துரைமுருகன் அப்போலோவில் இருந்து வீடு திரும்பிட்டார் .. வதந்தி இல்லைசார்!

துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் திமுகவின் சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விமான நிலையத்தில் அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து துரைமுருகனின் நலம் விசாரித்தார்கள். மாலையில் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.நக்கீரன்.இன்

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் .. முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்.. நம்புங்க சார் ..

இடைத்தேர்தல் - ஜெ. அறிக்கை? - அதிமுகவினர் ஆச்சரியம்! அப்பல்லோ
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளதாக சொல்லப்படும் அறிக்கையில், ’’தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். விரைவில் முழு நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். என் மீது அக்கறைகொண்டவர்களின் பிரார்த்தனையால் நான் மறுபிறவி எடுத்துள்ளேன்’’ என்று ஜெ. தெரிவித்துள்ளதாக உள்ளது. இந்த அறிக்கை அதிமுகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு தெளிவாக அறிக்கை விட்டுள்ள ஜெ. இடைத்தேர்தல் தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜெ. ஆடியோ வடிவில் வேண்டுகோள் விடுப்பாரா என்று கேள்வி எழுப்புகின்றனர் அதிமுகவினர்.நக்கீரன்.இன்

மக்கள் கோபத்துக்கு ஆளான மோடி! வாக்களித்த மக்களை வதைக்கும் ஆட்சி..

பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப்பணத்தை காணாமல் போக்கவும், கள்ள நோட்டுகளைக் களையவும், ரூபாய் 500, 1000 நோட்டுகள் இனி செல்லாது என்று அதிரடியாக அறிவித்த ஐந்தாவது நாள் இன்று. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், காலை 6.00 மணிக்கு கடை வீதிக்கு சென்று மீன், கறி, காய்கள் வாங்கப் போனவர்கள், 10:00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதில் பலர் சுகர், பி.பி, தைராய்டு பிரச்னை உள்ள நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைவீதிக்குப் போனவர்கள் இன்னும் வரவில்லையே என்று வீட்டிலிருந்து மனைவிக்கு கணவரும், கணவருக்கு மனைவியும் கைபேசிக்கு தொடர்புகொண்டு கேட்டால், “ஏன் இப்படி உயிரை வாங்குற, காலையிலிருந்து ஏடிஎம் வாசல்ல வரிசையில் கால் கடுக்க நின்னுகிட்டு இருக்கேன்” என்று சொல்ல, பதிலுக்கு, “பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்கு வந்திருங்க. நீங்க சுகர் டேப்லெட் போட்டுக்கணும். டென்ஷன் ஆகாதீங்க” என்று சொல்ல, இந்த உரையாடல் பக்கத்தில் இருந்தவர் காதில் விழ, அவர் சத்தமாக, “நாட்டில் கொள்ளையடித்து பணத்தை பதுக்கி வைத்திருப்பவனும் வரி ஏய்ப்பவனும் சொகுசா இருக்கானுங்க. எங்களைப் போல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களையும், அப்பாவிகளையும், வாக்களித்த குற்றத்துக்கு வதைத்து எடுக்கிறார் பிரதமர் மோடி” என்றார் கோபமாக. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கிற வேதனையால், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் மோடி அரசு மீது திரும்பியுள்ளது.  minnambalam.com

கறுப்புப்பணம் தங்க கட்டிகளாக மாறிவிட்டது: சீதாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்று நாள் சிறப்பு மாநில மாநாடு நெல்லையில் நேற்று காலை தொடங்கியது. மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கொடியேற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எம்.பி. பேசியதாவது: “இந்தியாவில் தொழில் வர்த்தக வளர்ச்சி எதிர்மறையாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு கோடி வேலையில்லா பட்டதாரிகள் உருவாகின்றனர். பிரதமர் அறிவித்தபடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்காமல் தற்போது ரூபாய் 500, 1000 நோட்டுகளை தடை செய்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 1000 நோட்டை முடக்கிவிட்டு ரூபாய் 2000 நோட்டை சப்ளை செய்வதால் ஊழல் இரண்டு மடங்கு உயர்வதற்கு வழி ஏற்படும். மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அதற்காக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தன்னை முன்னிறுத்தி வருகிறது.

அப்போலோவில் தீவிர சிகிச்சை பிரிவில் துரைமுருகன்! (அங்கிருந்தே அரவக்குறிச்சி தஞ்சாவூர் தேர்தல்... நாமளும் சொல்லுவோம்ல?)


சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரும், திமுக மூத்தத் தலைவருமான துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா 50 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் ஒவ்வாமை காரணமாக கட்சியினர் யாரையும் சந்திக்காமல் வீட்டில் இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சுகவீனத்தால் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. இந்நிலையில்தான், திமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகனுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

உயிரோடு எரிக்க திட்டமிட்டாலும் பயப்படமாட்டேன்-மோடி ஆவேசம்! (அட குஜராத்தில் இவர் செய்ததை எல்லாம் இவரே சொல்கிறார்)


இன்று, வடக்கு கோவாவில் க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஊழலுக்கு எதிராகவே வாக்களித்தனர். கறுப்புப்பணத்தை ஒழிக்கவே எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அரசு எடுத்துள்ள கறுப்புப்பண நடவடிக்கையால் பலர் தூக்கத்தை தொலைத்து விட்டனர். 7௦ ஆண்டு கால நோய்க்கு 17 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக என்னை உயிரோடு எரிக்க திட்டமிட்டாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓய மாட்டேன்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

இந்தியாவில் "பணக் கலவரம்" மூளும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லி: கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு மத்திய அரசு மக்களைத் தள்ளி விட்டுள்ளது. மக்களை விரைவில் அரசு திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மிகப் பெரிய "பணக் கலவரம்" மூளும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் சாலை சாலையாக, சாரை சாரையாக மக்கள் பணம் எடுக்கக் காத்துக் கிடக்கிறார்கள். கடும் வெயிலில் காத்துக் கிடக்கும் மக்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தங்களது சொந்தப் பணத்தை எடுக்கவும், கையில் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டை மாற்றவும்தான் இப்படி மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

எப்படியாவது தப்பித்தால் போதும் மனநிலையில் பிரதாப் ரெட்டி - ஆனா.. இப்படியே வச்சிருந்து கைரேகையை ஒத்தி ஒத்தி.. எத்தனை பத்திரங்கள்?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இன்றுடன் 52 நாட்கள் ஆகின்றன.

அப்பல்லோ அக்டோபர் 21 ம் தேதியிட்ட அறிக்கையில் சுமார் 15 ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் ஜெ வுக்கு சிகிச்சை கொடுப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஜெ மற்றவர்களுடன் இன்டரேக்ட் செய்கிறார் என்றும், அவரது உடல்நிலையில் கிராஜுவல் இம்புரூவ்மெண்ட் அதாவது கொஞ்சங் கொஞ்சமாய் முன்னேற்றம் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை. இதனிடையே அக்டோபர் 28 ம் தேதி முன்னணி ஆங்கில நாளிதழில் வந்த செய்தியில் ஜெ மூன்று நாட்களில் சிசியூ விலிருந்து சாதாரண வார்டுக்கு வந்து விடுவார், எல்லாம் சரியானால் அவர் மூன்று வாரங்களில் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டது.

மலையாள நடிக ரேகா மோகன் மர்ம மரணம் .. திரிசூரில்

பிரபல மலையாளர் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ரேகா மோகன்
திருச்சூரில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 45 வயதான ரேகா மோகன் முன்னணி நடிகர்களான மம்மூட்டி (உதயனபலகன்) மற்றும் மோகன் லால் (யாத்ராமொழி) ஆகியோருடன் நடித்துள்ளார். மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருச்சூரில் வாடகை வீட்டில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வையூர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ரேகா மோகனின் கணவர் அயல்நாட்டில் பணியாற்றி வருகிறார். ரேகா மோகனிடம் எந்தவொரு பதிலுமே இல்லாததால் அவருடைய வீட்டுப் பூட்டை உடைத்து திறந்த போதுதான் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

7.8 ரிச்டர் அளவில் நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது

நியூஸிலாந்தில் நள்ளிரவு நேரப்படி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தின் தாக்கமாக முதல் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது. நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என்று நியூஸிலாந்தின் சிவில் டிபன்ஸ் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது. மேலும் நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது

ரூ.570 கோடி எங்கே.. பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி!!

புதுச்சேரி மாநிலத்தில், நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் வருவதையொட்டி அங்கு முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூரில் கன்டெய்னரில் பிடிப்பட்ட ரூ.570 கோடியை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு பொதுமக்களின் பணத்தை செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்த பணத்திற்கு இன்னும் விடை தெரியவில்லை. கருப்பு பணம் ஒழிய வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்காமல் இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது பொதுமக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.முகநூல் பதிவு லிவ்டே

உலகபுகழ் பெற்ற ஆப்கான் பெண்ணுக்கு பெங்களூரு சிகிச்சை .. பாகிஸ்தான் நாடுகடத்திய National Geographic கண்ணழகிக்கு ..


ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக பாகிஸ்தான் சென்ற குலா என்ற பெண்ணை கடந்த 1985 ஆம் ஆண்டு   National Geographic புகைப்படக் கலைஞர் Steve McCurry படம் எடுத்து அட்டைப் பக்கத்தில் போட்டார். இதனால் உலகம் முழுவதும் குலா பிரபலமானார். இந்நிலையில் கல்லீரல் அலற்சி பிரச்சனையால் பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த அவர், சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கி இருப்பதாக கூறி ஆப்கான் அனுப்பப்பட்டார். இந்நிலையில் ஆப்கான் அரசின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க இந்திய அரசு சம்மதம் தெரிவித்தது.

வெளிநாட்டுக்கு எடுத்து செல்லக்கூடிய பணத்தின் அளவை 75000 டாலரில் இருந்து 1250000 டாலராக உயர்த்திய கறுப்புப்பணமோடி

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவில் இருந்து கருப்புபணம் அரசாங்க ஒத்துழைப்புடன் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டாலர் பத்திரமாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தன.
கருப்பு பணத்தால் உருவாக்கப்பட்ட பிரதமர் எப்படி ஒழிப்பார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 75000 டாலர் மட்டுமே வெளிநாடுகளில் எந்த அனுமதி இன்றி பொருட்கள் மற்றும் வீடுகள் தொழில்கள் என இந்தியாவில் உள்ள பணத்தை கொண்டு செல்லலாம்.
நரேந்திர மோடி 2014 ஆட்சி வந்தவுடன் 1, 25, 000 லட்சம் டாலர் என நிர்ணயம் செய்தார்கள். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கள்ள பணம் வெளிநாடுகளில் போய் தஞ்சமடைந்தன.
பின்னர் 2015 1,25, 000 டாலரை தொகை மாற்றி 2,50,000 (இரண்டு லட்சத்தி ஐம்பாதிரம் டாலர்) என உயர்த்தி ஒரு அரசானை வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மே மாதம் வரை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள மொத்த முதலாளிகள பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டன. முகநூல் பதிவு
-- By Nimalan Kumar

நடிகை சபர்ணா.. அதிர்ச்சி தகவல் .. பாலியல் பலாத்காரம்.. கொலை செய்யப்பட்டிருக்கலாம்? தற்கொலை அல்ல?

சென்னை:  நடிகை சபர்ணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, சபர்ணா வீட்டில் இருந்து அவரது டைரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம், உடுமலைபேட்டை அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்த அனந்தகுமார்- புஷ்பலதா தம்பதி மகள் சபர்ணா (25). சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ெதாகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘பிரிவோம், பூஜை, குடியரசு, காளை’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.
சினிமா புள்ளி ஒருவரை சபர்ணா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி: இந்தியா முழுவதும் சந்தைகள் சீரழிந்து விட்டது ... உடனடியாக ரூபாய் நோட்டு மாற்றத்தை ரத்து செய்யவும்!

ரூ.500, ரூ.1000 நடவடிக்கையினால் நாடு முழுதும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிய நிலையில் இந்த ‘கறுப்பு அரசியல் முடிவு’ வாபஸ் பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி இது குறித்து பதிவிட்டது: “இந்த கறுப்பு அரசியல் முடிவை வாபஸ் பெறவும், சாதாரண மக்கள் கடுமையாக அவதிப்படும் இந்த முடிவை உடனடியாக ரத்து செய்யுங்கள். இந்தியா நெடுக சந்தைகள் சீரழிந்துள்ளன. கொள்முதல் திறன் சரிவடைந்துள்ளது. பெரியோர், சிறியோர் என்று அனைவரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர் எனவே மீண்டுமொருமுறை நான் மத்திய அரசிடம் இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்கிறேன். இது ஒரு பெரிய கறுப்பு மோசடியாக உருவெடுத்துள்ளது. சாதாரண மக்களுக்கு அல்லல், நிதிமுறைகேடு செய்பவர்களுக்குக் கொண்டாட்டமாகியுள்ளது. இந்த அரசியல் மற்றும் நிதி அராஜக நிலைக்கு எதிராக எதிர்க்கட்சிகளான நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும். ஏழை விரோத அரசுக்கு எதிராக நாம் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்திய மக்களை அவதிக்குள்ளாக்கி, ஏழைகளாக்கிவிட்டு ஜப்பான் சென்று விட்டார் நம் பிரதமர் மோடி” என்று சாடியுள்ளார்.  tamilthehindu.com

கமிஷனுக்கு பணம் மாற்றிக் கொடுக்கும் வியாபாரம் மட்டுமே சூடு பிடித்துள்ளது . நாடு கோவிந்தா?

கறுப்புப்பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க, பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் 500, 1000 நோட்டுகள் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று அவசர அறிவிப்பு செய்தார். இதனால் கறுப்புப்பணமோ, கள்ள நோட்டோ ஒழிந்து விடவில்லை. சாதாரண உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், வியபாரிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிள்ளை பெற்றவர்கள் திருமணத்தை அறிவித்துவிட்டு, வீதியில் கண்கலங்கிப் போய் நிற்கிறார்கள். கை நிறைய பணம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாததால் பலர் இது போல் ஒரே இரவில் நிர்க்கதியாயினர். இந்நிலையில், கிடைக்கிற சமயத்தை பயன்படுத்தி பலர் பண வியாபாரத்தை படு ஜோராக செய்தனர்.
ரயிலில் பயணம் செய்பவர்கள், பணம் இருந்தும் சாப்பிட வழியில்லாமல் தவிப்பதை அறிந்து ஒரு கும்பல், ரயிலில் சுண்டல் விற்பனை செய்வதுபோல் வந்து பண வியாபாரம் செய்தனர். ரூபாய் 1000 வாங்கிக்கொண்டு ரூபாய் 250 கமிஷன் எடுத்துக்கொண்டு மீதி ரூபாய் 750 கொடுக்கிறார்கள்.

கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் ..கேஜ்ரிவால் மோடி அரசுக்கு சாபம்!

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  ‘’மத்திய அரசின் இந்த நடவடிக்கை சாதாரண மக்கள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதல் ஆகும். இது கருப்பு சந்தையில் உள்ளோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறுவது பற்றிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு முன்பாகவே பஞ்சாப் மாநில பா.ஜனதாவின் சட்டப்பிரிவு தலைவர் சஞ்சீவ் கம்போஜ் புதிய ரூ.2,000 நோட்டுகளுடன் காணப்படுவது போன்ற காட்சி சமூக ஊடகங்களில் பரவி உள்ளது. நான் கூறுவது ஒன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல.கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் முடிய நாட்டின் அனைத்து வங்கிகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய காலாண்டு காலத்தில் மிகவும் குறைவாகவே வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

நிதி நெருக்கடி: ஆங்காங்கே வெடிக்கும் வன்முறைகள்! நாட்டை நாசமாக்கியே தீருவேன் என்று மோடி கும்பல் சபதம்?


‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்கள். இன்று இந்திய மக்களின் நிலை கிட்டதட்ட அதுதான். கையிலே ரூபாய் ஆயிரம் இருந்தாலும் அதைக் கொண்டு ரூபாய் பத்துக்கு இட்லி வாங்கி உண்ண முடியாத நிலை. இன்றோடு ஐந்தாவது நாளாக இந்திய மக்கள் பணத்துக்காக அல்லாடித் தவித்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் அன்றாட பணிகளை விட்டுவிட்டு பணத் தேவைக்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் காத்து கிடக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் ஏழைகளே. பணத்துக்காக காத்திருந்து, காத்திருந்து பொறுமை இழக்கிறார்கள் மக்கள். பொறுமை இழந்த மக்கள் தன் நிலை மறந்து வன்முறையில் இறங்குவது இயல்பு. அதுதான் நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த பணத்தட்டுபாடு காரணமாக ஆங்காங்கே வன்முறை வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. முதல் சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கொல்லம், வவாக்கம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி திருவாங்கூர் கிளை முன் நேற்று முன்தினம் காலை ஏராளமான மக்கள் காத்திருந்தனர். வங்கி கதவு திறக்கப்பட்டதும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வங்கிக்குள் பணம் பெற நுழைந்தனர். இதைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ப.சிதம்பரம் :17 லட்சம் கோடியில் 400 கோடி மட்டுமே கள்ளநோட்டு . 17லட்சம் கோடிக்கு 400 கோடியை முடக்குவது என்ன நியாயம்:

'நாடு முழுவதும் உள்ள ரூ.400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க ரூ.17 லட்சம்
கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதா?' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியிலிருந்து சனிக்கிழமை சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கறுப்புப் பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளும் ஒழிக்கப்படும் எனக் கூறி ஒரே இரவில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதன் மூலம் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும்? நாடு முழுவதும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 86 சதவீதம் 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக உள்ளன. அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளில் 86 நோட்டுகளை திடீரென முடக்கியுள்ளனர்.

புது ரூ.2000 கள்ளநோட்டு சிக்மகளூரில் வியாபாரியிடம் சிக்கியது. அறிமுகமான 3வது நாளே கள்ளநோட்டு...

சிக்மகளூர் பழைய ரூபாய் 500, 1000 செல்லாது என்று பிரதமர் மோடி
அறிவித்திருந்தார். இதனால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளை பொதுமக்கள் பெற்று வருகின்றனர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதனால் அதை வைத்து கள்ளநோட்டுகள் அச்சடிக்க முடியாது என்று கூறப்பட்டது. 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நானோ சிப் உள்ளதால் அதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இது உண்மை இல்லை என நிதியமைச்சகமே மறுத்து உள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டில் எந்தவித புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்படவில்லையாம். அதனால் அதே போன்று கள்ளநோட்டுகள் அடிப்பதில் சிக்கல் இருக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அம்சங்களும் கள்ளநோட்டு கும்பலால் எளிதில் காப்பியடிக்க முடியும் என கூறப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா.. நாட்டுக்காக கோடிகளை அள்ளி கொடுத்த வள்ளல் .. நாடு மறந்த ராமேஸ்வரம் மகான்


சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா
(அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்)
சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) நேதாஜியுடன் இருந்த காலங்கள், மகாத்மா காந்தியின் பரிந்துரையால் மரணப் பிடியிலிருந்து மீண்டது, மதக் கலவரத்தில் தந்தையைப் பரி கொடுத்தது என எல்லாவற்றையும் அடுக்கடுக்காக சொல்கிறார்.
அமீர் ஹம்சா அவரது பெயர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்த வால்டாக்ஸ் சாலையில் உள்ளது அவரது வீடு. விதவை மகளுடனும், வறுமையுடனும் வசித்து வந்தார். பூர்வீகம் இராமநாதபுரத்தில் உள்ள அபிராமம் கிராமம். தாத்தா காலத்திலேயே பர்மாவுக்கு சென்று ரங்கூனில் தங்கம், வைரம், வெள்ளி தான் வியாபாரம்.