வெள்ளி, 17 ஜூன், 2016
ஓமர் மதின் ஏற்கனவே ஓரின சேர்க்கையில் ஈடுபாடு?
ஸ்டாலின் : அம்மா அம்மா என்று அம்மா பட்டியல்..
அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல்
ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்
மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த
ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது
வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர்
உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே
நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த
விளக்கமும் அதில் இடம்பெறவில்லை.
சத்தியமங்கலம் ஐபிஎஸ் அதிகாரி சசிகுமார் ஆந்திராவில் கொலையா? தற்கொலையா? நேர்மையான அதிகாரி..
;ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை குப்புசாமி, மைலம்மாள் தம்பதியினரின் மகன் சசிகுமார் . விவசாய குடும்பத்தில் பிறந்த சசிக்குமார் 2012 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலகட்டா ஏ.எஸ்.பி. யாக 2014 ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கு ஆதரவான மசோதா அமெரிக்க செனட்டில் தோல்வி
இந்தியாவை உலகளாவிய ராணுவக்
கூட்டாளியாக சேர்ப்பது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான
செனட்டில் தோல்வியடைந்தது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்
தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் விளக்கமளித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
அமெரிக்க செனட் அவையில் இந்தியாவுக்கு ஆதரவாகக் கொண்டு
வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்பது ஊடகச் செய்திகள் மூலம்தான்
வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு அமெரிக்க
தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தை வடிவமைக்கும் பணி இப்போதுதான்
அந்நாட்டில் நடைபெற்று வருகிறது.
BBC : பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. சுடப்பட்டு கத்தியால் குத்தி கொலை!
பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. சம்பவ இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீசார்
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை புத்தக கண்காட்சி மக்களை கவர தவறிவிட்டது ? வசதிகள் போதாமை, அதிக வெப்பம்...
7 லட்சம் பேர் திரண்டனர் ; ரூ. 10 கோடி வியாபாரம் என்று பபாசி அறிவித்தாலும் , உண்மையில் மூன்றை லட்சம் பேரே திரண்டு இருக்கின்றனர். ரூ. 5 கோடி அளவில் வியாபாரம் ஆகி இருக்கிறது
இரா.தெ.முத்து :ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி பதிமூன்றாம் தேதி வரை நடைபெற்ற 39 ஆவது சென்னை புத்தகக் காட்சி முடிவடைந்திருக்கிறது. பொதுமக்களும் வாசகர்களும்தான் இதனை திருவிழாவாக கடந்த காலங்களில் மாற்றி இருக்கிறார்கள். திரண்டு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுத்து பெரும் கொண்டாட்டமாக மாற்றத் தவறி இருக்கிறது தென்னிந்திய பதிப்பாளர் விற்பனையாளர்கள் சங்கம் (BPASI)
இரா.தெ.முத்து :ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி பதிமூன்றாம் தேதி வரை நடைபெற்ற 39 ஆவது சென்னை புத்தகக் காட்சி முடிவடைந்திருக்கிறது. பொதுமக்களும் வாசகர்களும்தான் இதனை திருவிழாவாக கடந்த காலங்களில் மாற்றி இருக்கிறார்கள். திரண்டு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுத்து பெரும் கொண்டாட்டமாக மாற்றத் தவறி இருக்கிறது தென்னிந்திய பதிப்பாளர் விற்பனையாளர்கள் சங்கம் (BPASI)
தென்தமிழகத்தில் சாணாரை கண்டாலே தீட்டு? பொன்னர் மறந்தாரா? திராவிடர் கழக மாநாட்டில் நாடார் சமையல்...
சமஸ்கிருதம் தெரியாததற்காக பொன்னார் வெட்கப்படுகிறாராமே -தென் தமிழகத்தில் சாணாரை கண்டாலே தீட்டு என்ற நிலை நிலவியது பொன்னாருக்கு தெரியாதா?
தோள்சீலை போராட்டம் அவர் பிறந்த குமரி மண்ணில் நடந்ததென்பதும் தெரியாதா?
கண்டாலே தீட்டு என்றால் அக்ரகார தெருவில் நுழையவே தடை, பார்ப்பான்
குளிக்கும் முன்பே இவர்கள் நடமாடலாம், இவர்களைப் பார்த்தால் மீண்டும்
குளிக்கும் நிலை ஏற்படும் நிலை இருந்ததே அதெல்லாம் பொன்னாருக்கு தெரியாதா?
இவரின் குமரி மாவட்டம் திருவிதாங்கூரில் இருந்தவரை இவர் சமூகத்தினர் திவானை (அதிகாரி) பார்க்கச் சென்றால் எத்தனை அடி தொலைவிலிருந்து பேசவேண்டும் என்பதை மறந்தாரா?
கண்டாலே தீட்டு என்ற நிலையிருந்த நாளில் திராவிடர் கழ மாநாட்டில் நாடார் சமையல் உண்டு என்ற வாசகத்தை மறந்தாரா? இத்தனை இழிவையும் இவர்கள் மீது தினித்த ஆரிய மொழியை கொண்டாட காரணம்தான் என்ன? நிச்சயம் மறக்கவில்லை -
பதவி சுகத்துக்காக இவ்வளவு தரம் இறங்கித்தான் பேசனுமா?
காவி மத்திய அரசின் பிரதிநிதியாக ஒட்டுமொத்த தமிழரையும் அவமானப்படுத்தி விட்டார்.
நன்றி: facebook ராஜராஜன்
இவரின் குமரி மாவட்டம் திருவிதாங்கூரில் இருந்தவரை இவர் சமூகத்தினர் திவானை (அதிகாரி) பார்க்கச் சென்றால் எத்தனை அடி தொலைவிலிருந்து பேசவேண்டும் என்பதை மறந்தாரா?
கண்டாலே தீட்டு என்ற நிலையிருந்த நாளில் திராவிடர் கழ மாநாட்டில் நாடார் சமையல் உண்டு என்ற வாசகத்தை மறந்தாரா? இத்தனை இழிவையும் இவர்கள் மீது தினித்த ஆரிய மொழியை கொண்டாட காரணம்தான் என்ன? நிச்சயம் மறக்கவில்லை -
பதவி சுகத்துக்காக இவ்வளவு தரம் இறங்கித்தான் பேசனுமா?
காவி மத்திய அரசின் பிரதிநிதியாக ஒட்டுமொத்த தமிழரையும் அவமானப்படுத்தி விட்டார்.
நன்றி: facebook ராஜராஜன்
வியாழன், 16 ஜூன், 2016
குஜராத் சமுக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் என் ஜி யோவின் உரிமம் ரத்து..
டெல்லி: குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ராங் டிரஸ்ட்
என்ற என்.ஜி.ஓவின் லைசென்ஸை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன்
மூலம் சப்ராங் டிரஸ்ட் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற முடியாது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு மத கலவரம் தொடர்பான ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தியவர் டீஸ்டா செதல்வாட். மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் டீஸ்டா செதல்வாட் மற்ரும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின.< டீஸ்டா செதல்வாட் நடத்தி வந்த சப்ராங் டிரஸ்ட், சப்ராங் கம்யூனிகேசன்ஸ் அண்ட் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதி குறித்த விவரங்களை கையிலெடுத்தது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு மத கலவரம் தொடர்பான ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தியவர் டீஸ்டா செதல்வாட். மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் டீஸ்டா செதல்வாட் மற்ரும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின.< டீஸ்டா செதல்வாட் நடத்தி வந்த சப்ராங் டிரஸ்ட், சப்ராங் கம்யூனிகேசன்ஸ் அண்ட் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதி குறித்த விவரங்களை கையிலெடுத்தது.
Porn Hub பார்வையற்றோருக்காக பாலியல் இணையம்!
போர்ன்
ஹப்’ இணையதளம் என்பது வயதுவந்தோருக்கான தளம். ஆனால், வயதுவந்தோருக்கான
தளம் என்பதில் மட்டுமே அது கவனம் செலுத்தாமல், முழுக்க முழுக்க ஒரு
தொழில்முறை இணையதளத்தின் குணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. வருடந்தோறும்
அது வெளியிடும் டேட்டா தொடங்கி உடற்பயிற்சி வீடியோ, உடல் அழகை தக்கவைக்க
பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என ஒரு பக்கத்திலும் மற்றொருபக்கத்தில்,
அமெரிக்கா கொடுக்கும் கருத்து சுதந்திரவெளியைப் பயன்படுத்தி ஜனாதிபதி
வேட்பாளர் ட்ரம்ப்பின் வேடத்தில் ஒருவரை போர்ன் வீடியோவில் நடிக்கவைத்தது.
தற்போது இந்தத் தளம், பார்வையில்லாதவர்களுக்கான ஆடியோ போர்ன் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதாவது, சாதாரண ஆபாச விடியோக்கள்போல அல்லாமல் இதற்கென பிரத்யேகமான ஆட்களைக் கொண்டு ஆடியோ பதிவுமூலம் உருவாக்கியுள்ளனர்.
தற்போது இந்தத் தளம், பார்வையில்லாதவர்களுக்கான ஆடியோ போர்ன் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதாவது, சாதாரண ஆபாச விடியோக்கள்போல அல்லாமல் இதற்கென பிரத்யேகமான ஆட்களைக் கொண்டு ஆடியோ பதிவுமூலம் உருவாக்கியுள்ளனர்.
அமித்ஷா தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்க...தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை
உத்தரப்பிரதேசம்,
அலகாபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வரும் 2017ம்
ஆண்டு நடக்கவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத்
தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தலைவர் அமித்ஷா சில யோசனைகளையும்,
வழிகாட்டுதல்களையும் பாஜக-வினருக்கு வழங்கியுள்ளார். அவை…‘1. தாழ்த்தப்பட்ட மக்களை மாநில, மாவட்ட, கிராம அளவிலான நிர்வாகப் பொறுப்புகளில் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.
2. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்த வேண்டும்.
3. ‘முத்ரா வங்கி’ திட்டத்தின்கீழ், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள், பயனடையாதவர்களைக் கண்டறிந்து அவர்களை இந்த வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி
பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி
பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவாக நக்கீரன் கோபால் தொடங்கிய சின்னக்குத்தூசி
நினைவு அறக்கட்டளையின், அச்சு ஊடகம் சார்ந்த சிறந்த கட்டுரையாளர்களுக்கான
& வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கு விழா சென்னையில் நடைபெற்றது.
வாழ்நாள் சாதனையாளருக்கான் விருதை பதிப்பாளர்
வைகறைவாணன் பாராட்டு, பட்டயம், ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் பெற்றுக்
கொண்டார். ஜீவசுந்தரி பாலன், ஹெச்.பீர்முகமது, பேரா.என்.சீனிவாசன் ஆகியோர்
சிறந்த கட்டுரைக்கான தலா 10,000 ரூபாய் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
சின்னக்குத்தூசியின் எளிமை, கொள்கை பிடிப்பு, யாவர் மீதும் காட்டிய அவர்
காட்டிய அன்பு, தகவல் களஞ்சியமாக விளங்கியமை, சனாதன, சாதிய சக்திகளுக்கு
எதிராக கருத்துப் போரை நடத்தியது என நக்கீரன் கோபால், கோவி லெனின், கோபண்ணா
போன்றோர் சுட்டிக் காட்டிப் பேசினர்.
ரங்கராஜ் பாண்டேக்கு உடம்பு சரியில்லையாம்? பெரியாரை அவமதித்த வழக்கில் ஆறு வாய்தா வாங்கிய பேச்சு பல்லக்கு..
சென்னியப்பன் வழக்குரைஞர்
பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில்
ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த பாண்டே, தொடர்ந்து ஆஜராகத் தவறினால்
பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த
13.6.2016 அன்று திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரிடையாக ஆஜரானார்.
பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி, “சட்டத்தை மதிக்க
வேண்டும் என்று கிலோ கணக்கில் டிவியில் அறிவுரை சொல்றீங்களே நீங்கள் கடந்த
ஆறு வாய்தாக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே ஏன்? என்பதுதான். ;இதற்கு “எனக்கு உடல்நிலை சரியில்லை” என்று பாண்டே ஒரு குண்டை தூக்கி போட்டார். அதைக் கேட்டு சிரித்த நீதிபதி “நான் அன்றாடம் டிவியில உங்களை பார்க்கிறேனே” என்றவுடன் அசடு வழிந்தார் பாண்டே.
கேரளா தலித் மாணவி ஜிஷா கொலைகாரன் பிடிபட்டான்.. அஸ்ஸாம் கூலி அமீர் உர் இஸ்லாம் !
கைது செய்யப்பட்டுள்ள அமியுல் இஸ்லாம் (24) இரண்டு
நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த போது,
தமிழக எல்லையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அமியுல் இஸ்லாம், ஜிஷாவின் வீட்டுக்கு அருகே செயல்பட்டு
வந்த ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த பலாத்காரக் கொலையை செய்துவிட்டு, அவர் அஸ்ஸாம்
தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதிமுக மணிமாறன் 3000 தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார்.... மதிமுக சுயநல கூடாரமாகிவிட்டது! அதிரடி குற்றச்சாட்டு .
மதிமுக-வில்
தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வேளச்சேரி மணிமாறன்.
வைகோ-வுக்கு மிகமிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர்
மணிமாறன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுக்கு, எடைக்கு எடை வெள்ளிக் கட்டி,
தங்கப் பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர
ஆதரவு மாவட்டச் செயலாளராக வலம்வந்தவர். தனித்த செல்வாக்கானவர். செலவு செய்ய
அஞ்சாதவர்.
மல்லை சத்யா, வைகோ-வின் வலதுகரம் என்றால் மணிமாறன், இடதுகரமாகத் திகழ்ந்தவர்.
மல்லை சத்யா, வைகோ-வின் வலதுகரம் என்றால் மணிமாறன், இடதுகரமாகத் திகழ்ந்தவர்.
விழுப்புரம் திருவிழா மின்விளக்கு விபத்து 6 பேர் மரணம் ..ஒப்பந்தகாரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2008ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மின்விளக்கு ஒப்பந்தக்காரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது
/tamil.oneindia.com/
இளங்கோவன் ; ஜெயலலிதா தன்னை காப்பாற்றி கொள்ளவே மோடியை சந்தித்தார்
27.9.2015 அன்று கருங்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியபோது, தமிழக முதல்வர் குறித்து விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக குமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோவில் கோர்ட்டில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இளங்கோவன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மோடியின் முன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் குஜராத் ஐ ஏ எஸ் அதிகாரிகள்
மோடி குஜராத்தில் ஐ.எ.எஸ் அதிகாரிகளையே முட்டி போட வைத்தவர், தன்னை சந்திக்க வந்த ஐ,பி.எஸ் அதிகாரி கூலிங் கிளாஸ் போட்டதற்கே உடன் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்தவர், பிரதீப் குமார் ஐ.எ.எஸ் அவர்களின் வாக்குமூலங்களை வாசித்து பாருங்கள் அவர் எவ்வாறு கதற கதற விரட்டப்பட்டார் என்று, இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கு மக்களே....
உங்கள் மறதி தான் தவறான அரசியல்வாதிகள் தொடர்ந்து ஆட்சி செய்ய மூலதனமாக திகழ்கிறது.. வாழ்த்துக்கள்.. நான் என்றால் அது அவளும் நானும் .. அவள் என்றால் அது நானும் அவளும் புதன், 15 ஜூன், 2016
கேரளாவில் பாஜக.. கம்யுனிஸ்டுகள் வளர்த்துவிட்ட இந்துத்வா... ம்ம்ம்ம் வேதங்களோட நாடு (EMS.நம்புதிரிபாடு CP -M)
இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…
– கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை!
நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில்
கேரளா தவிர, இதர மாநிலங்களில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி
அடைந்துள்ளனர். கேரளத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும், போலி
கம்யூனிஸ்டு ‘இடதுசாரி’ கூட்டணி 91 இடங்களிலும், காங்கிரசு கூட்டணி 47
இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.க.
வெற்றி பெற்றுள்ள போதிலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது
பல இடங்களில் இரு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று அச்சுறுத்தும் அபாயமாக
வளர்ந்துள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…ஸ்ட்ரெச்சர் தள்ள.. பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல..
*வீல் சேர் / ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கு – ஐம்பது ரூபாய்
*கர்ப்பிணி பெண்களை குளிக்க வைக்க / எனீமா அளிக்க / ஷேவ் செய்ய – நூறு ரூபாய்
*பிறந்த குழந்தையை குளிப்பாட்ட – ஐநூறு ரூபாய்
*அறுவை சிகிச்சைக்கு முன்பான ஸ்கேன்– இருநூறு ரூபாய்
*பிணத்தை வார்டிலிருந்து, மார்ச்சுவரிக்கு எடுத்து செல்ல – ஐநூறு ரூபாய் *பிணத்தை சுத்தம் செய்ய – ஆயிரம் ரூபாய்
*பிணத்தை உறவினர்களிடம் அளிக்க- முன்னூறு ரூபாய்
*கர்ப்பிணி பெண்களை குளிக்க வைக்க / எனீமா அளிக்க / ஷேவ் செய்ய – நூறு ரூபாய்
*பிறந்த குழந்தையை குளிப்பாட்ட – ஐநூறு ரூபாய்
*அறுவை சிகிச்சைக்கு முன்பான ஸ்கேன்– இருநூறு ரூபாய்
*பிணத்தை வார்டிலிருந்து, மார்ச்சுவரிக்கு எடுத்து செல்ல – ஐநூறு ரூபாய் *பிணத்தை சுத்தம் செய்ய – ஆயிரம் ரூபாய்
*பிணத்தை உறவினர்களிடம் அளிக்க- முன்னூறு ரூபாய்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி
என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம்
ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு
வந்துள்ளார்.
300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன் என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன் என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
பேராசான் சுப்பிரமணியன் சுவாமியும் திருமுருகன் காந்தி, கிளிமூக்கு அரக்கன் முகநூல் சண்டையும்
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து எழுதும் ஒரு முகநூல் பக்கத்தின்
பெயர் கிளிமூக்கு அரக்கன். இந்தப் பக்கத்தில் பாஜக மூத்தத் தலைவர்
சுப்பரமணியம் சுவாமியை பேராசான் என்றும் ஈழத்தை வைத்து சிலர் வியாபாரம்
செய்வதாகவும் அதில் திருமுருகன் காந்தி முக்கியமானவர் என்றும் ஒரு பதிவு
வெளியாகியுள்ளது. முதலில் கிளிமூக்கு அரக்கனின் பதிவு:
“வசூல் சக்கரவர்த்தியும் பேராசானும்
சில நேரங்களில் தம் மீதான குற்றங்களை துகிலுரிக்கின்றவர்களை எப்படியாவது சமூகத்தின் முன்பு குற்றவாளிகளாக காட்டவேண்டுமே என்ற பதட்டத்தில் இன்னும் மோசமாக செயல்பட்டு தனது சுயரூபத்தை வெளிப்படுத்திவிடும் முட்டாள்கள் உண்டு. பங்குனி17 சமூகவிரோத இயக்கத்தின் திருமுருகன் காந்தி இந்த வகைதான். பேராசான் சுப்பிரமணியஸ்வாமியை எப்போதுமே நான் வெளிப்படையாக பேராசான் என அழைப்பவன்.
சில நேரங்களில் தம் மீதான குற்றங்களை துகிலுரிக்கின்றவர்களை எப்படியாவது சமூகத்தின் முன்பு குற்றவாளிகளாக காட்டவேண்டுமே என்ற பதட்டத்தில் இன்னும் மோசமாக செயல்பட்டு தனது சுயரூபத்தை வெளிப்படுத்திவிடும் முட்டாள்கள் உண்டு. பங்குனி17 சமூகவிரோத இயக்கத்தின் திருமுருகன் காந்தி இந்த வகைதான். பேராசான் சுப்பிரமணியஸ்வாமியை எப்போதுமே நான் வெளிப்படையாக பேராசான் என அழைப்பவன்.
மலக்குழி மரணங்கள் மறைக்கப்படுகின்றன.. திவ்யபாரதி ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர்
சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே
இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை
மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம்
ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர்
கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. 2000ஆம்
ஆண்டைக் கடந்த போதிலும் கையால் மலம் அள்ளுவது வடமாநிலங்களில் தீவிரமாகவே
தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தன்னார்வலர்கள், தனிநபர்களின் நீதிமன்ற
வழக்குகள் காரணமாக ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தத்
தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்’ என்கிற புதிய சட்டம் 2013-ஆம்
ஆண்டும் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க துப்பாக்கிச்சூடு -உமர் மதீனின் மனைவி நூர் சல்மானுக்கு முன்கூட்டியே தெரியும்!
அமெரிக்காவின்
ஃபுளொரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் உள்ள ஓரினச் சேர்க்கை இரவு
விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர்
உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், துப்பாக்கிச் சூடு நடத்திய
ஒமர் மதீனின் மனைவிக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் அவருடைய மனைவியும்
இந்த பயங்கரவாத சம்பவத்தில் சேர்க்கப்படலாம் என்று அமெரிக்க சட்ட
அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.ஒமர் மதீனின் மனைவி நூர் சல்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தைப் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை குழுவின் செனட் உறுப்பினர் அங்குஸ் கிங் தெரிவித்துள்ளார்.
15 வயது தலித் மாணவன் கொடூர கொலை.. 12.06.16 லக்ஷ்மணன் பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் மதுரை SMP காலனி
மதுரை SMP காலனியை சேர்ந்த லக்ஷமணன் என்னும் பதினைந்து வயது மாணவன்,
12.06.16 அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் கொடூரமாக
அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை “எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்” கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை “எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்” கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து என்கவுண்டர்... மாவோயிஸ்ட்டாம்... மடிப்பு கலையாத சீருடை அணிவித்து..
The uniform is brand new and crisp. Can the uniform of a guerrilla killed in an encounter be so unblemished? சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.< ராகுல் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மறைந்து திரியும் ஒரு கெரில்லாவால் இப்படி மடிப்பு களையாத, புத்தம் புது சீருடைய அணிந்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.
கேரள தலித் மாணவி ஜிசாவின் கொலையாளிகள்....கண்டுபிடிக்க படவில்லை
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிக்கள் கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஜிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிசாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். thetimestamil.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














