
சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.< ராகுல் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மறைந்து திரியும் ஒரு கெரில்லாவால் இப்படி மடிப்பு களையாத, புத்தம் புது சீருடைய அணிந்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.
தலைச் சிறந்த மானுடவியலாளர்கள் இந்தச் சம்பவம் கொலம்பிய இராணுவம், அப்பாவி மக்களைக் கொன்று அவர்களுக்கு கெரில்லா படையினரின் சீருடைகள் அணிவித்ததை நினைவுப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். /thetimestamil.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக