வெள்ளி, 20 மே, 2016
சிறுதாவூரில் தொடங்கிய கண்டெய்னர் சர்ச்சை திருப்பூரில் சிக்கி, டெல்லி வரை விவகாரமாகியுள்ளது.
ஒரு சதவீத வாக்குகளால் வெற்றியை இழந்த திமுக கூட்டணி ... வெறும் ஒரு சதவீத வாக்குகள் அதிமுகவை வெற்றி...
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது அதிமுக. அதிமுக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கர பந்தாவுடன் வலம் வந்த தேமுதிக படு கேவலமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி திமுக - அதிமுக கூட்டணிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: அதிமுக கூட்டணி - 40.8%
அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.
திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.
திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி)
காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்)
புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்)
மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8%
வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம்.
tamil.oneindia.com/
அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.
திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.
திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி)
காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்)
புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்)
மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8%
வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம்.
tamil.oneindia.com/
வியாழன், 19 மே, 2016
2016 தேர்தல் வைகோவின் சாணக்கிய வெற்றி ! பெற்றுக்கொண்ட காசுக்கு வேலைபார்த்த Political pimp ?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி
என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான்
சொல்ல முடியும்.
மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு
சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து
அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே
உறுதிபட மறுக்கவில்லை.
மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது
போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத்
தொடங்கினர்.
அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர்
விஜயகாந்த்தை இழுத்தபோதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள கேம் பிளான்
என்ற கூற்று வலுப்பட்டது.
இப்போதுதான் சற்று வெளிப்படையாக ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தார்
வைகோ. அப்படியும் கூட அவர் மீதான சந்தேகப் பார்வை போகவில்லை.
விலகவில்லை.இப்போது கிட்டத்தட்ட எல்லாமே தெளிவாகி விட்டது. சுப்ரமணியம் சுவாமிக்கு தமிழ்நாட்டில் இவர் ஒரு Sub Contractor அல்லது ஒரு பீ டீமாக வேலை பார்க்கிறார் என்பது ரொம்ப லேட்டாக தான் எனக்கே(?) தெரியவந்தது
சாராயம்: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! அதை தலை வணங்கி மகிழ்வுடன் ஏற்றுகொள்கிறேன்
ஒன்றும் செய்ய முடியாது இப்படியே அடிமையாக இருந்து சாக வேண்டியதுதான் தமிழ் மக்கள் அந்தம்மா தனி மனுஷியாக நின்னு ஜெயிக்கவில்லை.....
இது ஒரு குமாரசாமித்தனமான வெற்றி தான்....
அதிமுக + மதிமுக + தேமுதிக + விசிக + பாமக + பாஜக + நாம் தமிழர் + சில பல உதிரி கட்சிகள் + தேர்தல் கமிஷன் + மீடியா + மத்திய அரசு + பணபலம் துணை கொண்டு குறுக்கு வழியில் சேர்த்த வெற்றி இது....
மேலே இருக்கிற எந்த கட்சியும் ஆளும்கட்சியான அதிமுகவை விமர்சிக்கவில்லை..... மாறாக திமுக மேலேயே அர்த்தமில்லாத அவதூறுகளை சொல்லி வன்மத்தோடு பிரச்சாரம் செய்தது.....
கன்டைனர் கன்டைனரா பணத்தை வாரி இறைக்க
ஆளும் கட்சிக்கு துணை போனது தேர்தல்
கமிஷனும், மத்திய அரசும்....
இத்தனை கட்சிகளையும் தடைகளையும் தவிடு பொடியாக்கி அதிக பலத்தோடு, அசுர பலத்தோடு
எதிர்க்கட்சி ஆகி இருக்கிறது திமுக.... sumi b facebook
மூன்றாவது அணியின் வாக்குகள் என்ன தாக்கத்தை கொடுத்தது ...
கோப்புப் படம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச்
சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டு ஜுலையில் மக்கள் நலக்
கூட்டியக்கத்தை உருவாக்கினர். இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி
என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக மாறியது. அதன்பிறகு இந்தக் கூட்டணியில்
தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது
அணியாக உருவானது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணியின் நிலை சொல்லும் 10
தகவல்கள்:
* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே தோல்வியை தழுவியுள்ளது.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு சென்றார்.
* காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் விசிக
தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை
இழந்தார்.
திருமாவளவனை வீழ்த்திய தேர்தல் தந்திரங்கள்... வெறும் 87 வாக்குகள்..
ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா to ஞானதேசிகன்: திருப்பூர் கண்டெய்னர் விவகாரத்தால் நமக்கு எதாவது மைனஸ் ஏற்படுமா?'
ஸ்டாலின் :வரலாற்றில் மிகபெரும் எதிர்கட்சியாக திமுகவை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் ....மகிழ்ச்சியே
சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு சற்றேறக் குறைய 100 தொகுதிகள் கிடைத்துள்ளன.
திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்று 50 தொகுதிகளில்
முன்னிலையில் உள்ளது. எனவே, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை
தொகுதிகளுடன் திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த திமுக பொருளாளர்
மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை வரலாற்றில் இவ்வளவு பெரும்பான்மையுடன் ஒரு
எதிர்க்கட்சியாக திமுகவை தமிழக மக்கள் அமர்த்தியிருக்கிறார்கள்.
திமுகவுக்கு இந்த ஒரு பெருமையை மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் தினமணி.காம்
திமுகவுக்கு இந்த ஒரு பெருமையை மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் தினமணி.காம்
அழகிரி :நான் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை... மீண்டும் இணைவது பின்பு முடிவு செய்வேன்
ஒரு வலுவான கூட்டணி அமைக்காதது மற்றும் திமுக தலைமைதான் என்னை வேண்டாம் என்று ஒதுக்கியதால் இந்த மாபெரும் தோல்வியை சந்தித்தார்கள்.
திமுகவில் வேட்பாளர்கள் சரியில்லை மற்றும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது.
திமுகவின் இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு என்று அனைவருக்கும் தெரியும்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை
என்பதுதான் என் நிலை" என்று தெரிவித்திருக்கிறார் அழகிரி
மீண்டும் திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, "மீண்டும் இணைவது குறித்து
பின்னர் யோசித்து முடிவு செய்வேன்" என்று பதிலளித்துள்ளார். tamil.thehindu.com
25 தொகுதிகள் வாக்குகள் எண்ணிக்கை நிறுத்தம் திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் ....ராஜேஷ் லகனி +அதிகாரிகள் ந்தை
திமுக சொற்ப வாக்குகளில் முன்னணி வகிக்கும் 25 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை அதிமுக பிரமுகர்களோடு அதிகாரிகளும் சேர்ந்து தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ,திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு போன்றோரின் தொகுகளும் அடக்கம்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் தலைமை அலுவலரிடம் இது பற்றி முறையீடு செய்ய பட்டுள்ளது .
அதிமுகவும் மோடியின் அரசும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடு படுகிறார்கள்.
அந்த 25 தொகுதிகள் முடிவு திமுகவுக்கே சாதகம் . இது தேர்தல் அமைப்பையே கேள்வி குறியாக்கி உள்ளது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் தலைமை அலுவலரிடம் இது பற்றி முறையீடு செய்ய பட்டுள்ளது .
அதிமுகவும் மோடியின் அரசும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடு படுகிறார்கள்.
அந்த 25 தொகுதிகள் முடிவு திமுகவுக்கே சாதகம் . இது தேர்தல் அமைப்பையே கேள்வி குறியாக்கி உள்ளது.
டாஸ்மாக் Factor.. ஒரு கோடி பேர்கள் டாஸ்மாக் பூட்டபடுவதை விரும்பவில்லை
சென்னை,மே 19 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு
நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக மீண்டு ஆட்சியைப் பித்து ஜெயலலிதா
முதல்வராவது உறுதியாகிவிட்டது.
தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப் பதிவுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட பல கருத்து கணிப்புகளில் திமுக-வே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக அமைந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் புதுமை, இளைஞர்களை கவர்ந்த விளம்பரங்கள் என்று தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட திமுக-இப்படி தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக அரசியல் ஆர்வலர்கள் பலவற்றை கூறினாலும், அதில் முக்கியமான முழு மதுவிலக்கு அமல்படுத்துவது தான்.
நாட்டுக்கு நல்லது தானே முழு மதுவிலக்கு என்றால், நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அது நல்லதாகவே படவில்லை என்று கூறுகிறார்கள்.
தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப் பதிவுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட பல கருத்து கணிப்புகளில் திமுக-வே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக அமைந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் புதுமை, இளைஞர்களை கவர்ந்த விளம்பரங்கள் என்று தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட திமுக-இப்படி தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக அரசியல் ஆர்வலர்கள் பலவற்றை கூறினாலும், அதில் முக்கியமான முழு மதுவிலக்கு அமல்படுத்துவது தான்.
நாட்டுக்கு நல்லது தானே முழு மதுவிலக்கு என்றால், நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அது நல்லதாகவே படவில்லை என்று கூறுகிறார்கள்.
87 வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் தோல்வி.....விஜயகாந்த் டெபாசிட் போனது
விடுதலை சிறுத்தைகள தலைவர் தொல்.திருமாவளவன் 87
வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர்
முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதிகளில்
காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. 1962-ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவில்
தொகுதி உருவானது. பொதுத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி 1967-ஆம் ஆண்டு
தனித் தொகுதியானது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கடைசி வரை கடுமையாகப் போராடித் தோல்வியைத்
தழுவினார்.
இத்தொகுதியில் அவருக்கும், அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கும் இடையே கடும்
போட்டி நிலவியது. மிக மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன்
இருந்ததால் எப்படியாவது வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
கடைசியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன்
வெற்றி பெற்றார்.
திருமாவளவன் தோல்வி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியனரை மட்டுமல்லாமல் பல்வேறு
தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தேர்தல் முடிவுகள்... – பணம்தான் ரிசல்ட்...தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !
தேர்தல் முடிவில் பாசிச ஜெயாவின் கன்டெய்னர் வெற்றி குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இங்கே அந்த வெற்றியை தந்தி டி.வி பாண்டே கொண்டாடுவதில் உள்ள அழுகுணி ஆட்டத்தை மட்டும் பார்ப்போம்.
சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். அநேர்மைக்கு புகழ்பெற்ற பாண்டே இந்த கணிப்பு நேர்மையாகவும், நடுநிலைமையுடனும் எடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
அதிமுகவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி
அதிமுக கூட்டணி
|
131
|
திமுக கூட்டணி
|
100
|
தேமுதிக - ம.ந.கூ
|
00
|
பாமக
|
01
|
பாஜக கூட்டணி
|
00
|
நாம் தமிழர்
|
00
|
தனியார் பள்ளிகள் பென்சில் படத்துக்கு எதிராக ஏன்...? குற்றங்கள் அம்பலமானால் கோபம் வரும்தானே?
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்துபோகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு பணம் கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.
இது மட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றனவாம். தனியார் பள்ளிகூடங்களை அரசே பொறுபேற்று நடத்த வேண்டும்.. கல்வி கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட இதுதான் ஒரே வழி
இலங்கையில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி...150 பேரை காணவில்லை !
கொழும்பு: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக
இலங்கையில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஏற்பட்ட
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 150 பேர் என்ன ஆனார்கள் என
தெரியவில்லை.
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, 19 மாவட்டங்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 68 வீடுகள் முற்றிலும் இடிந்து
தரைமட்டமாகியுள்ளன.
sri Lanka landslides killed 40 people தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கெகல்லே மாவட்டத்தில்
வெள்ளத்தோடு சேர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
புதன், 18 மே, 2016
BBC : இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு.. பல இஸ்லாமிய நாடுகளில் இந்த கொடுமை தொடர்கிறது
இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு
20 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தோனேஷியாவில்
இருக்கும் பன்னிரெண்டு வயதுக்குக் குறைவான சிறுமிகளில் பாதிக்கும்
அதிகமானவர்களுக்கு ஏதோ ஒருவகையான பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்திருக்கிறது.முன்பு கணித்திருந்ததைவிட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.
பெண் பருவமடைவதை கொண்டாடும் மற்றும் ஒரு சடங்காகவே இந்த பழக்கம் அங்கு பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இது பெண்குழந்தைகள் மீதான வன்முறை என்று வர்ணித்துள்ள ஐநா, இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுத்திருக்கிறது.
இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு
பெங்களூரு பி வி ஆர் திரையரங்கில் திருட்டு விசிடியாம்....விஷால் ரெட்டி குற்றச்சாட்டு
பெங்களூரு பிவிஆர் திரையரங்கில் தமிழ் திரைப்படங்களின் திருட்டு விசிடிகள்
தயாரிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம்
தயங்குவதாகவும் நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், திரையரங்குகளில் தான்
புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்படுவதாக
குற்றம்சாட்டினார். பல
திரையரங்குகளில் ஆப்பரேட்டர் அறைக்குள் இருந்து
ரகசியமாக படம் பிடிப்பதாக கூறினார்.நாட்டை குட்டி சுவராக்கும் பாலியல் ( Erotic Seducing , Violence Terror ), எரோடிக் காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகளை காட்டி இளையதலைமுறையை கெடுக்கும் இந்த பெரிய பட்ஜெட் மாஸ் சினிமாக்களை திருட்டு விசிடியால்தான் ஒழித்து கட்ட முடியும். அத்தனை சினிமா கீரோக்களும் கருப்பு பண முதலைகள்தான் .சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு மட்டும்தான் ஆதரவு கொடுக்கவேண்டும் மதிமுகவிலிருந்து விலகினார் மணிமாறன் .. தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர்...
ரிசர்வ் வங்கி: 570 கோடி விவகாரம் தேர்தலால் பெரிதுபடுத்தப்படுகிறது .. So வங்கி கொள்ளையர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்படும் ?
சென்னை: கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து ஆந்திர வங்கிக்கு கொண்டு
செல்லப்பட்டதாக கூறப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கிய ரூ.570 கோடி
தொடர்பாக, தொடர்ந்து மர்மம் நீடித்தது. இது பற்றி இன்று முதன்முதலாக
ரிசர்வ் வங்கி வாயை திறந்துள்ளதுவங்கிப் பணம் என்ற போதிலும் அது
கொண்டு சென்றப்பட்ட விதத்தில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் நேரம்
என்பதால், இந்தப் பணம் யாருடையது, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என
ஏகப்பட்ட அனுமானங்கள் தோன்றின. பத்திரிகைகளிலும் பல்விதமாக இது
விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், ரூ.570 கோடி ரூபாய் விவகாரம் முடிவுக்கு
வரும் வரை தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி
டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 18 ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. செய்தி . இத சொல்லவா இத்தன நாலு உங்களுக்கு ???? எங்கயோ படு ஸ்ட்ராங்கா இடிக்குது ??
இஷ்ரத் ஜஹான் வழக்கை சட்டப்படியே ஊத்தி மூடிவிட மோடி.கடும் முயற்சி !
மதுவிலக்கு...சிறையில் இருக்கும் மாணவர் மாரிமுத்து 12ம் வகுப்பில் 971
ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?
அவர்கள்… “மக்கள் அதிகாரம்’ அமைப்பின் தோழர்கள். ஆண்-பெண் பேதமின்றி இந்த அமைப்பில் உள்ள எல்லோருமே தோழர்களெனவே அழைக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் பெரும் வெள்ளம், நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு; 150 பேரை காணவில்லை
ப்ளஸ் 2வில் 71% மார்க் எடுத்த கோவை மாணவர் ஃபெயில் பயத்தில் ரிசல்டுக்கு முன்பு தற்கொலை
கோவையில் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்
ஒருவர் முடிவு வெளியாகும் முன்பே தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை
வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா
மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் 1,200க்கு
1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
Class-12 Student Hangs Self Fearing Failure In Exams
கோவை மாவட்டம் பெரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சக்திகணேஷ்(17).
காரமடையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்த அவர் ப்ளஸ் 2 தேர்வு
எழுதியிருந்தார்.
கல்வி வியாபாரிகள் பரீட்சை தேர்வு சாதனைகளை மீடியாக்களில் ஹைலைட் பண்ணுவது பணம் பண்ணத்தான்.. இந்த வியாபாரிகளின் கூட்டு கொள்ளைக்காக அப்பாவி மாணவர்கள் பலியாவது வேதனை. பரீட்சையில் தோத்தா ஒண்னும் குடி முழ்கி போய்விடாது... அட நீங்க ஒன்னு நான் எந்த பரீட்சையிலும் இதுவரை பாஸ் பண்ணலையே ... நல்லாத்தான் அதுவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறேன். படிச்ச பெரியவங்க ஒன்னும் பெரிசா கிளிசுடல ....
கல்வி வியாபாரிகள் பரீட்சை தேர்வு சாதனைகளை மீடியாக்களில் ஹைலைட் பண்ணுவது பணம் பண்ணத்தான்.. இந்த வியாபாரிகளின் கூட்டு கொள்ளைக்காக அப்பாவி மாணவர்கள் பலியாவது வேதனை. பரீட்சையில் தோத்தா ஒண்னும் குடி முழ்கி போய்விடாது... அட நீங்க ஒன்னு நான் எந்த பரீட்சையிலும் இதுவரை பாஸ் பண்ணலையே ... நல்லாத்தான் அதுவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறேன். படிச்ச பெரியவங்க ஒன்னும் பெரிசா கிளிசுடல ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








