வியாழன், 17 டிசம்பர், 2015

சென்னை மக்களுக்கு கைகொடுத்தது தன்னார்வ தொண்டர்களும் சக மனிதர்களும்தான்...அரசாங்கம் அல்ல.

கேள்வி :- “துக்ளக் தர்பார்”  என்பதற்கு அண்மைக் கால நடவடிக்கை ஒன்றின்
மூலம் விளக் கம் கூறுங்களேன்!
கலைஞர் :-  டி.ஜி.பி. யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆர். நட்ராஜ்.  அவர் ஓய்வு பெற்ற பிறகு, அ.தி.மு.க.வில் உறுப்பினராகி, தேர்வாணைக் கழகத்தின் தலைவராகவும் அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டார்.  அவர் 13-12-2015 அன்று அ.தி.மு.க.விலிருந்து “டிஸ்மிஸ்” செய்யப்பட்டார். 14-12-2015 அன்று மீண்டும் கட்சியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்டால் சிரிப்புதான் வரும்.   தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், தொலைபேசி வாயிலாக நட்ராஜ் என்ற பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு, அவரிடம் கேள்வி கேட்டு பதிலும் பெற்று வெளியிட்டார்கள்.  அப்போது பத்திரிகையாளர் நடராஜின் புகைப்படத்தை வெளியிடுவதற்குப் பதிலாக, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர். நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். தொலைக்காட்சி நிறுவனம் செய்த தவறு அது.  அது உண்மையா இல்லையா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்! அர்ச்சகர் வழக்கில்...

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

அவனை தீ வைத்து எரிக்க வேண்டும் : ஜோதி சிங் தாயார் ஆவேசம்.....


புதுடெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாயார் மூன்று வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று அறிவித்து உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சிறுவனை விடுவிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு, இதே டிசம்பர் 16–ந் தேதி இரவு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் 3-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவியின் தாயார் ஆஷா தேவி பேசுகையில், தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்றும், என்னுடைய மகளின் பெயரை கூறுவது எனக்கு வெட்கமானது கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.   இந்த சம்பவ டாகுமேண்டரி படத்தை திரையிட விடாமல் தடுத்த மோடியின் அரசும் மிகபெரும் குற்றவாளிதான் , குற்றவாளிகளை பற்றி மக்களுக்கு தெளிவு பிறக்க கூடாது என்று சங்பரிவார் ஏன் தடுக்கிறது?

புதன், 16 டிசம்பர், 2015

கலைஞர் : உயர்நீதிமன்றத்தின் அர்ச்சகர்கள் பற்றிய தீர்ப்பு..ஆராய்ந்துவருகிறோம்....ஆவன செய்வோம்!

ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது என்பதிலே திமுகவுக்கு அழுத்தமான கொள்கை உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் இன்று அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆக முடியாது. ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி நாங்களும் குரல் கொடுத்தோம், கொடுத்து வருகிறோம். கி. வீரமணியும் எங்களைப் போலவே குரல் கொடுத்து வருகிறார்.
அவரும், நானும் மற்றும் அர்ச்சகர் சட்டத்தைப் பற்றி ஆதரவாக பேசி வருபவர்களும் கலந்து பேசி எந்த வகையிலே உச்ச நீதி மன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு முடிவு செய்வோம். இந்திய உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எப்படி எல்லாம் சட்டத்தை வளைக்கலாம் உடைக்கலாம் என்று ஒரு முன்மாதிரியை உலகுக்கு காட்டி உள்ளது. உயர்நீதிமன்றமே அரசியல் அமைப்பை நயவஞ்சமாக ஏமாற்றி உள்ளது. எல்லாஜாதியும் அர்ச்சகலாம் என்ற திமுக அரசின் சட்டத்தை ஏற்பதாக கூறிவிட்டு ஆனால் அந்தந்த கோவில்களில் உள்ள ஆகம விதிகளின் படி அவர்கள் அர்ச்சகராக தொடர அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளது, அதாவது பார்ப்பான் மட்டுமே தொடர்ந்து அர்ச்சகராக இருக்கலாம்.

மலாலா: தீவிரவாதத்திற்கு முஸ்லீம் மக்ககளை குற்றம் சொல்ல கூடாது..நோபல் பரிசு பெற்ற..


இஸ்லாமாபாத் - தீவிரவாதத்திற்கு மக்கள் அனைத்து முஸ்லீம்களையும்
குற்றம் சொல்லகூடாது இது அதிக ஜிகாதிகளை தீவிரவாதிகள் தேர்வு செய்ய உதவியாக அமைகிறது என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி வரும் நோபல் பரிசு பெற்ற இளம் பெண் மலாலா யூசுப் கூறி உள்ளார்.  அரசியல்வாதிகள் எதையும் சிந்தித்து பேச வேண்டும் இதனால் தீவிரவாதிகள் தீவிரமடைய செய்யவே முடியும்.பாரீஸ் தீவிரவாத தாக்குதல் மற்றும் சான் பிரான்சிஸ்கோ துப்பாக்கி சூடு ஆகியவற்றிற்கு பிறகு  இஸ்லாமிய எதிர்ப்பு என இன்னும் அதை மோசமாக்கும் எனகூறி உள்ளார். நான் ஒரு விஷயத்தை முக்கியமாக கூறுகிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக நீங்கள் அனைத்து முஸ்லீம்களையும் பேச அது மேலும் அதிக தீவிரவாதிகளையே உருவாக்கும்.

ஜெயலலிதா: எந்தநேரத்திலும்,உங்களுடனேயே இருப்பேன்..கலங்காதீர்..எண்ணம் முழுவதும் உங்களை பற்றியே....

சென்னை :எந்த நேரத்திலும், உங்களுடனே இருப்பேன்; கலங்காதீர். என்னுடைய எண்ணம் முழுவதும், உங்களை பற்றியதாகவே இருக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வெள்ள சேதங்களில் இருந்து, மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிற பெரும் பணியில், அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. நிவாரணப் பணிகளில், எல்லாரும் பங்கேற்கும் வகையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர். நிவாரணப் பணிகளில், தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரும், தங்களால் இயன்ற அளவுக்கு, மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, நிவாரண நிதியாக வழங்குவர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்: சமுகநீதிக்கு எதிரான தீர்ப்பு ! உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தை உதாசீனம் செய்துள்ளது


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:’கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு வகை செய்து சட்டம் இயற்றப்பட்டது.  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்தது.  அதில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருந்தது.  7 ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களுக்கேற்பத்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், அப்படி நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சாப்பாடு செலவு ரூ.40 கோடியா?: வெள்ள நிவாரணத்தில் ஊழல்- விசாரணை கோரும் அன்புமணி

சென்னை: கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மட்டும் ரூ.40 கோடி செலவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே நடக்காத நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவழிக்கப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக எம்.பி, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசாரணைக்கும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடிந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தக்கட்டமாக நிவாரண உதவி வழங்கும் பணியும், மறுவாழ்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். Anbumani Ramadoss request an inquiry in to the flood relief scam

சிதம்பரம் ஆகமவிதிப்படியான நியமனங்கள் சரி; உயர்நீதிமன்றம் தீர்ப்பு ...நீதித்துறை பார்பனர்களின் எடுபிடி....

சிதம்பரம் கோவில் உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் தமிழக அரசின் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் நடைமுறை/மரபு எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படைத் தத்துவத்துக்கு முரணானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கோவில் கட்டினவனுக்கு அங்கே இடம் இல்லை வந்தேறுகுடி பார்ப்பானுக்கு சேவகம் செய்யும் உயர்நீதிமன்றம்

அடுத்த தியேட்டர் அடிச்சு வீழ்த்தியாச்சு...வெள்ளம் ஒருபக்கம் கிடக்கட்டும்...


  மக்கள் பலரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழலில் ஆயிரம் கோடியில் தியேட்டர் வாங்குகிறார்கள் என கார்டனை நோக்கி ஏவுகணை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ஜாஸ் எனப் பெயர் மாற்றப்பட்ட ஹாட் வீல்ஸ் நிறுவனம் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் தியேட்டரை சொந்தம் கொண்டாடி, அதன் பெயரில் வங்கிக் கடன் பெற்றிருப்பதை ஏற்கனவே ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது நக்கீரன். அதே நிறுவனம், பட்டுக்கோட்டை யில் ஒரு ஏ.சி. திரையரங்கை கடந்த ஆண்டு பத்திரப் பதிவு செய்திருப்பது இப்போது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வருகிறது.

எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து ரூ.2.5 கோடி நன்கொடை பெற்ற பா.ஜனதா!

ருமை மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி 2.5 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2013-14, 2014- 15 ம் ஆண்டுகளில் இந்த நன்கொடையை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2014-ம் ஆண்டு பொது தேர்தலின் போது, பிரிகிரோபிகோ அல்லானா, பிரிகிரோபிகோ  கன்வென்ரா அல்லானா, இன்டக்ரோ புட்ஸ் நிறுவனங்களிடம் இருந்து 2 கோடி ரூபாயை நன்கொடையாக பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! வானத்தில் வாக்காளர்களை சந்திக்கமுடியாது...விகடன்

அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்ட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்? பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர்.

ஜெயலலிதா 700 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியை மூடி....ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளித்தார். சைதாப் பேட்டையில் உள்ள ஜோதியம்மன் நகர், கோதாமேடு, சீனிவாசா தியேட்டர், எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் உடமைகளை இழந்த 14,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள்,போர்வை, புடவை, லுங்கி, பாய் உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது, ’’முதல்வர் தனக்கென்று குடும்பம் கிடையாது என்று கூறி இருக்கிறார். ஆனால் வேளச்சேரி மாலில் உள்ள 11 தியேட்டர்களை தன்னுடைய தோழி சசிகலா பெயரில் வாங்கியது குறித்து இந்து பத்திரிக்கை ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. அதற்கு எந்தவிதமான மறுப்பும் ஜெயலலிதா இன்னும் தெரிவிக்கவில்லை.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

Y.G.மகேந்திரா: பீப் பாடல் குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும்...

சென்னை: கடும் கண்டனம் மற்றும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பீப் பாடலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தூக்கிலிட வேண்டும் என்று ஒய்.ஜி.மகேந்திரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
பீப் பாடலுக்கு எதிராக நாளுக்குநாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இப்பாடல் குறித்து ஏற்கனவே கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில்அனிருத்தின் நெருங்கிய உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
ஒய்.ஜி.மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஆவேசமாக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறும்போது "மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல் பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை எனத் தெளிவாகக் கூறி இருக்கிறார்

அதிமுக உள்வீட்டுக்குள் திமுக ஆதரவு புயல்? 2016-ல் அதிமுகவுக்கு படுதோல்வி- திமுகவுக்கே வெற்றி- நமது எம்ஜிஆர் கணிப்பு...அதிர்ச்சி!

சென்னை: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்." இணைய பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 2016-ல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என 85.38% எனவும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என வெறும் 13.02% பேர் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ உடனடியாக அந்த கருத்து கணிப்பை நீக்கிவிட்டது நமது எம்.ஜி.ஆர். இணையதளம். சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது. drnamathumgr இதனைத் தொடர்ந்து நட்ராஜ் நீக்கம் உத்தரவை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையபக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருந்தது. 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்? என கேட்கப்பட்டிருந்தது. அதில் அதிமுக கூட்டணிக்கு 13.02%; திமுக கூட்டணிக்கு 85.38% ; மற்றவை 1.66% என பதிவாகி இருந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் இணைய தளத்திலேயே அதிமுகவுக்கு வெறும் 13.02% தான் ஆதரவு என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அப்படியே பிரிண்ட்ஸ்கிரீன் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்... இதனால் அதிர்ச்சி அடைந்த நமது எம்ஜிஆர் தரப்பினர் உடனடியாக இணையதளத்தில் இருந்து இந்த கருத்து கணிப்பையே நீக்கிவிட்டனர். அதிமுகவுக்கு கட்டம் சரியில்லை போல!
Read more at://tamil.oneindia.com

முதல்வர் பதவியை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே ஜெயலலிதா கருதுகிறார். சவுக்கு .com

2176838929_30c714cf74_b
K__Gnanadesikan_2230438e-horzமக்கள் கடும் அவதியில் இருக்கையில்,  புலிக்குட்டிகளுக்கு NAKULAA, DEVAA, KALAA, MALAA  என்று நியுமொராஜி படி பெயர் வைத்த ஒரே ஒரு உலகமகா அறிவுகொழுந்து ....அதைவேற  பத்திரிக்கை செய்தி வெளியிட ஒரு கல்நெஞ்சம்முட்டாள் அரசாக இருந்து வந்த ஜெயலலிதா அரசை, இந்த மழை வெள்ளம் அயோக்கிய அரசாக மாற்றியிருக்கிறது.    அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.    லும்பன்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கட்சியில் இடம் கிடையாது.    லும்பன்களால்தான், ஊழல் வழக்கில் சிறைசென்ற தலைவிக்காக காவடி தூக்கவும், நீதித்துறையை திட்டி போஸ்டர் ஒட்டவும் முடியும். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு அபாயகரமான மழையும் வெள்ளமும், தமிழகத்தைத் தாக்கியபோது, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததோடு நிவாரணப் பணிகளையும் சரிவர கையாளவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது.
டிசம்பர் 1 அன்று பெய்யும் கனமழையை எதிர்ப்பார்த்து, ஏற்கனவே கொள்ளளவு நிரம்பும் அளவுக்கு இருந்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட ஏன் தாமதம் என்றும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணிக்கு ஏன் 29 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது என்ற கேள்வியே இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.  நவம்பர் 26 மற்றும் 29 அன்று மழை குறைவாக இருந்த அன்று ஏன் தண்ணீரைத் திறந்து விட்டு, ஏரியின் கொள்ளளவை குறைக்கவில்லை. இதயதெய்வத்தின் அருள்பெற்று மக்களை மூழ்கடித்த  கூட்டு குற்றவாளிகள் ஷீலா பாலகிருஷ்ணனும் ஞானதேசிகனும் நிச்சயம் புரட்சியை காலை வாருவாங்க..பொறுத்திருந்து பாருங்கம்மா...

சிபிஐ ரெய்டு..கேஜ்ரிவால் ஆவேசம்: அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாத மோடியின் கோழைத்தன செயல்-

டெல்லி: தன் அலுவலகத்தில் நடந்த சிபிஐ ரெய்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட கோழைத்தன நடவடிக்கை என்று கோபம் வெளிப்படுத்தியுள்ளார். When Modi cudn't handle me politically, he resorts to this cowardice : Arvind Kejriwal கெஜ்ரிவால் ஆபீசில் சிபிஐ ரெய்டு நடத்திய தகவல் வெளியான சில நிமிடங்களில், தனது டிவிட் ஒன்றில், சிபிஐ ரெய்டு நடந்திருப்பதை அவர் உறுதி செய்திருந்தார். மற்றொரு டிவிட்டில், மோடியை கடுமையாக சாடியிருந்தார் கெஜ்ரிவால். அவர் கூறுகையில், "அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், இந்த கோழைத்தன நடவடிக்கையை மோடி தூண்டிவிட்டுள்ளார்" இவ்வாறு கெஜ்ரிவால் கூறியிருந்தார். Read more at://tamil.oneindia.com/

அவுஸ்த்ரேலியா கார்டூன் சொல்வதென்ன? இந்தியாவில் வர்க்க வேறுபாடு...ஏழை மீண்டும் மீண்டும்....

இந்தியாவில் வர்க்கங்களிற்கிடையிலான இடைவெளி மிகவும் அதிகம் . அது இந்திய நிலப்பரப்பைப் போன்றது. சனத்தொகையில் பெருந்தொகையான மக்கள் ஒருவேளை உணவிற்கே போராடும் அவலம் இன்றும் அங்குள்ளது. அவர்கள் வாக்குகள் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தேவை . அவர்களோ அவர்களின் நலன்களோ அல்ல . ஆனால் மண்சுவர்களுக்கெல்லாம் தங்க முலாம் பூசிப் பகட்டுக் காட்டும் தந்திரத்தை இந்திய அரசாங்கம் நன்றாகவே அறிந்துள்ளது . பரீஸ் காலநிலை மாநாட்டில் 'செல்பி மோடியின்' பேச்சும் அப்படித்தான் இருந்தது . இதனைச் சுட்டிக் காட்டு விதமாகவே 'பில் லீக்' என்பவரின் காட்டூன் வெளிவந்துள்ளது . ஆனால் இது நிறவெறியென்றே மக்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது . மாங்காய் சட்னியுடன் சூரியக் கலத்தை உண்ணும் இந்தியன் என்ற சித்திரிப்பு அந்த நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கலாம் .ஆனால் அந்த காட்டூனிஸ்ட் குட்டிக்காட்ட விரும்பியது இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளையே அன்றி வேறில்லை .ஆனால் வழமையான உணர்சிகரமான சிந்தனைகளால் இந்த காட்டூன் மக்களால் புரிந்து கொள்ளப்படாமலே போகலாம் . இன்னும் சில நாட்களில் பில் லீக் மன்னிப்பு கோரவைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை .

டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து.....அதிமுகவில் இருந்து தவறுதலா அவசரகுடுக்கைதனமா நீக்கிட்டோம்ல

சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் டிஜிபி நீக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு பற்றி தந்தி டிவி நடந்த நிகழ்ச்சியில், 12-ம் தேதி காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பான வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி தொலைபேசியில் கருத்துக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன். அப்போது அவரது புகைப்படத்திற்கு பதில் முன்னாள் டிஜிபி நடராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர். இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து போனது. இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆர்.நட்ராஜ் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 13ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். former dgp natraj removal Cancel

திங்கள், 14 டிசம்பர், 2015

ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த...செம்பரபாக்கம் பேரழிவு முகம்

மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரிஅரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் புழுப் பூச்சிகளைப் போல் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் ! மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென வெள்ள நீர் திறந்து விட்டப்பட்டது, அது தொடர்பான பொதுப்பணித்துறை விதிமுறைகள் மற்றும் வருவாய்த் துறை செய்திருக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள், வெள்ளம் சென்னையை மூழ்கடித்த பின் செய்திருக்க வேண்டிய மீட்புப் பணிகள் என்று சகல அம்சத்திலும் அரசும் அதன் மொத்த நிர்வாக அமைப்புகளும் சீட்டுக் கட்டு மாளிகை போல் சரிந்து விழுந்துள்ளது.
டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகமெங்கும் பேய் மழை பெய்யப் போகும் தகவல் சாதாரண மக்களுக்கு வேண்டுமானால் முன்கூட்டியே தெரியாமலிருக்கலாம். ஆனால், இந்த தகவல் அரசுக்குத் தெரியும். சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் இந்த தேதிகளில் பெருமழை பெய்யப் போவதை முன்னறிவித்திருந்தன.

மதிமுகவை விட்டு 4 மா. செ. க்கள் திமுகவில் இணைந்தனர் ...

கன்னியாகுமரி: மதிமுகவில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகிய நால்வரும் சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தென் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. More MDMK leaders join DMK, party in shock இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் தில்லை செல்வம் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். செய்தியாளர்களிடம் பேசிய குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி தொண்டர்களின் கருத்தை ஒருபோதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார். மதிமுகவில் இரண்டாம் மட்ட தலைவர்கள் எப்போதுமே மட்டந்தட்டப்பட்ட டம்மி பீஸ்கள்தான் .வைகோ யாரையும் தலைதூக்க விடவே மாட்டார். வைகோ ஏன் இன்னும் படத்தில் நடிக்கவில்லை. திரையுலகம்  சிவாஜிக்கு பின்பு ஒரு அற்புத நடிகனை இழக்கிறது 

காசுக்காக எந்த அளவும் கீழிறங்க....திரை உலகம் சிம்பு- அணிருத் அதன் வெளிப்பாடு,,,,,

தந்தி டிவியில் சிம்புவுக்கும் அனிருத்துக்கும் ஆதரவாக  ஹரிஹரன் என்ற பிரகிருதி  கருத்துக்களை   பொழிந்தார்,  சிம்பு  ராஜேந்தர் அனிருத்  போன்றோர் கொஞ்சம்  கூட நேர்மையோ  தைரியமோ  இல்லாமல்  ஒரு  பினாமியை  விவாதத்துக்கு  அனுப்பியுள்ளனர்.
அந்த பாட்டை   நானும் கேட்டேன். அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று அறிவதற்காக கேட்டேன், கண்றாவி ... இவ்வளவு தரம் தாழ்ந்த தமிழ் பாட்டு வாழ்நாளில் யாரும் கேட்டிருக்க  மாட்டார்கள். அவ்வளவு மோசம்.
பீப் சத்தத்தில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை  எங்குமே யாராலும் சொல்லி காட்டவே முடியாத படு கேவலமான ஒரு வார்த்தையை  டி .ராஜேந்திரின்  தறுதலை புத்திரன் சிம்புவும் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் நெருங்கிய உறவினர் அணிருத்தும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். அல்ல அல்ல .. விளம்பரத்திற்காக லீக் செய்துள்ளனர். அப்புறம் அனிருத் அதை தான் இசையமைக்க வில்லை என்று பின்வாங்குகிறார், சிம்புவோ சொந்த குரலில் பாடியதால் வேற வழியே இல்லாமல் கண்ணதாசன் இயற்றவில்லை வாலி இயற்றவில்லையா என்று புலம்புகிறார்,
நாக்கு அழுகிடும்..கண்ணதாசன் வாலி பெயர்களை உச்சரிக்க கூட தகுதில்லாத இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த படவேண்டியவர்கள்.
இவர்கள் மட்டும் அல்ல திரையில் பச்சை ஆபாசத்தையும் வன்முறையையும் விற்று வயிறு வளர்க்கும் அத்தனை  பெரிய நடிகர்களும் டைரக்டர்களும் கூட தண்டிக்க படவேண்டியவர்களே.

செம்பரப்பாக்கம்: கலெக்டர் சுந்தரவவல்லியின் எச்சரிக்கையை தூக்கி எறிந்த ஜெயலலிதாவின் .....!

மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
சென்னை மூழ்க என்ன காரணம்?‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகி​விட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.
சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்​டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?

சென்னை. தெருக்களில் துர்நாற்றம் குப்பையும் சாக்கடையுமாகத்தான் உள்ளது

சென்னை: வெள்ளம் வந்தாலும் வந்தது சென்னை நொந்து நூடூல்ஸாகி விட்டது. வெள்ளம் வடிந்து நாட்களாகியும் கூட இன்னும் தேறவில்லை சென்னை. எங்கு பார்த்தாலும் குப்பையும், சாக்கடையுமாகத்தான் உள்ளது இன்னும்.
பல பகுதிகளில் இன்னும் கூட வெள்ள நீர் வடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமையாக உள்ளது. அந்த வெள்ள நீர் தற்போது சாக்கடையாக மாறி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சாக்கடை கலந்த மழை நீர் எப்போது வடியும் என்று தெரியாமல் மக்கள் கடுப்படைந்து காணப்படுகின்றனர்.
வீடுகளில் கருமை.. பூஞ்சை பெரும்பாலான வீடுகள் மழை நீரில் ஊறிப் போய் கருப்பு நிறத்திற்கு மாறி விட்டன சுவர்கள். சுவர்களில் ஈரப்பதம் இன்னும் போகாததால் பூஞ்சை பிடித்துக் காணப்படுகிறது.
தெருக்களில் துர்நாற்றம் பெரும்பாலான தெருக்களில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. இதனால் சாக்கடை போல அவை காணப்படுகின்றன. கருப்பு நிறத்துடன் காணப்படும் அந்த நீரில் கொசுக்கள் குடித்தனம் செய்து வருகின்றன. நாற்றம் தாங்க முடியவில்லை.
திருவொற்றியூர் கார்கில் நகர், அன்னை சத்யா நகர், அம்பத்தூர், சூளை, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ராம்நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், தாம்பரம், அனகாபுத்தூர், முடிச்சூர், லட்சுமிபுரம், எருமையூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு தண்ணீர் இன்னும் குட்டை போல் தேங்கி கிடக்கிறது.

சவுதியில் 17 பெண் வேட்பாளர்கள் வெற்றி! முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை....At least 17 Saudi women have wo

ரியாத்: வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில் நடைபெற்ற, உள்ளாட்சி தேர்தலில், முதன் முதலாக, பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், மெக்கா நகரின் மத்ரக்கா பஞ்சாயத்து கவுன்சிலுக்கு போட்டியிட்ட, சல்மா பின்ட் ஹிசாப் உட்பட பதினேழு பெண் வேட்பாளர்கள்   வெற்றி பெற்றுள்ளனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் தோல்வி அடைந்தனர். மொத்தம் 17 பெண்கள்  வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது . ஆண் வாக்காளர்களிடம் நேரடியாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட அனுமதி வழங்கப்படாத நிலையில், சல்மா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதுAt least 17 Saudi women have won seats on local municipal councils a day after women voted and ran in elections for the first time in the country’s history, according to initial results released yesterday. The women hail from vastly different parts of the country, ranging from Saudi Arabia’s second largest and most cosmopolitan city to a small village near Islam’s holiest sites. Though not many women were expected to win seats, even limited gains are seen as a step forward for women who had previously been shut out of elections.