செவ்வாய், 15 டிசம்பர், 2015

அவுஸ்த்ரேலியா கார்டூன் சொல்வதென்ன? இந்தியாவில் வர்க்க வேறுபாடு...ஏழை மீண்டும் மீண்டும்....

இந்தியாவில் வர்க்கங்களிற்கிடையிலான இடைவெளி மிகவும் அதிகம் . அது இந்திய நிலப்பரப்பைப் போன்றது. சனத்தொகையில் பெருந்தொகையான மக்கள் ஒருவேளை உணவிற்கே போராடும் அவலம் இன்றும் அங்குள்ளது. அவர்கள் வாக்குகள் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தேவை . அவர்களோ அவர்களின் நலன்களோ அல்ல . ஆனால் மண்சுவர்களுக்கெல்லாம் தங்க முலாம் பூசிப் பகட்டுக் காட்டும் தந்திரத்தை இந்திய அரசாங்கம் நன்றாகவே அறிந்துள்ளது . பரீஸ் காலநிலை மாநாட்டில் 'செல்பி மோடியின்' பேச்சும் அப்படித்தான் இருந்தது . இதனைச் சுட்டிக் காட்டு விதமாகவே 'பில் லீக்' என்பவரின் காட்டூன் வெளிவந்துள்ளது . ஆனால் இது நிறவெறியென்றே மக்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது . மாங்காய் சட்னியுடன் சூரியக் கலத்தை உண்ணும் இந்தியன் என்ற சித்திரிப்பு அந்த நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கலாம் .ஆனால் அந்த காட்டூனிஸ்ட் குட்டிக்காட்ட விரும்பியது இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளையே அன்றி வேறில்லை .ஆனால் வழமையான உணர்சிகரமான சிந்தனைகளால் இந்த காட்டூன் மக்களால் புரிந்து கொள்ளப்படாமலே போகலாம் . இன்னும் சில நாட்களில் பில் லீக் மன்னிப்பு கோரவைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை .

கருத்துகள் இல்லை: