நியூயார்க்:அமெரிக்காவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவியின் சடலம் காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவி ஜாஸ்மின் ஜோசப் (22). இவர் கடந்த மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் மாயமானார். சம்பவத்தன்று மாணவி கடைசியாக பெற்றோரிடம் தான் லைப்ரரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பின்பு அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. புகாரின் பேரில் அவரை தீவிரமாக தேடி வந்த நாசி கவுன்டி போலீசார், சியோசெட் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் கார் பார்க்கிங் பகுதியில் இருந்த காரில் சடலமாக ஜாஸ்மினை மீட்டனர்.