வெள்ளி, 3 ஜனவரி, 2014

கர்நாடகா: விலகிய காதலியை கத்தியால் குத்திய லெஸ்பியன் மாணவி!


ஹசன், கர்நாடகா: கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது. தன்னை விட்டு விலகிய சக மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டார் இன்னொரு மாணவி. வாணி, ராணி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள கோனனூரில் உள்ள அரசுக் கல்லூரியல் பிஏ படித்து வருபவர்கள். கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தபோது ஒரே அறையில் தங்கினர். கணவன் மனைவி போலவே நடந்து கொள்வார்களாம். இருவருக்கும் 20 வயதாகிறது.

கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-4) மன்­னர்­களின் ஆடம்­ப­ரத்­தாலும் கோயில்­களை நாள் தோறும் பரா­ம­ரிக்க வேண்­டி­ய­தாலும் கெமர் பேர­ரசின் பொரு­ளா­தார வளம் குன்­றி­யது.


1113 இல் ஆட்­சிக்கு வந்த  இரண்டாம்  சூரி­ய­வர்மன்  இன்று   உலகப் புகழ் பெற்ற பண்டைக் காலத்து அதி­சயம் எனப் புக­ழப்­படும்  ‘அங்கோர் வாட்’ (Angorwat) எனும் பெருங் கோயிலைக் கட்­டி­யெ­ழுப்­பினான். ‘அங்கோர் வாட்’ என்றால் புனித கோயில் (WAT என்­பது தாய் மொழியில் ஆலயம் பிரெஞ்சு மொழியில் VAT) அங்கோர் வாட்டைக் கட்டி முடிக்க 30 ஆண்­டுகள் ஆகி­யி­ருக்­கின்­றன.
எந்­தி­ரங்கள்  எதுவும்  இல்­லாமல்  மனி­தர்­க­ளையும்   யானை­க­ளையும் நம்பி எங்கோ இருந்து கற்­களைக் கொண்டு இந்தப் பெருங்­கோயில் கட்­டப்­பட்­டுள்ள பாங்கும் அதன் வடி­வ­மைப்பும் கட்­ட­டக்­கலை நுணுக்­கமும், இன்­றைய கட்டடக் கலைக்கே சவால் விடும் ஒன்­றாக இருக்­கி­றது.  கெமர் மன்­னர்கள் இந்து,  பெளத்தம் எனப் பல   கோயில்­களைக் கட்­டிய போதும்    உல­கி­லேயே மிகப் பெரிய கோயி­லாக   இருக்கும் அங்­கோர்வாட்  இன்று  கம்­போ­டி­யா­வுக்குப் புகழ் தரும் ஒன்­றா­கவும்  ஒவ்­வொரு  நாளும் அங்கு வந்து  குவியும் பய­ணி­களால்   அந்­நிய செலா­வ­ணியை  ஈட்­டித்­தரும்  கட்­டடச் சுரபி போல்  (அள்ள அள்ளக் குறை­யாத அமுத சுரபி போல்) இருக்­கி­றது.

ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் தேவயானியின் தந்தை உட்பட 25 பேர் முறைகேடான வழியில் ஒதுக்கீடு

மும்பை: கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் ஆதர்ஷ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.  இதில், அரசியல்வாதிகள், ராணுவ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றனர். இது தொடர்பாக நீதி விசாரணை  நடத்தப்பட்டது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், விலாஸ்ராவ் தேஸ்முக்,  சுஷில் குமார் ஷிண்டே உட்பட அரசியல்வாதிகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மகாராஷ்டிரா அரசு கடந்த மாதம் 20ம்  தேதி நிராகரித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

வியாழன், 2 ஜனவரி, 2014

சட்டமன்ற வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி ! கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் வைத்த ‘செக்’

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.  ஆம் ஆத்மி கட்சி அரசு மீது இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.   அதில், ஆம் ஆத்மி காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது.>நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அர்விந்தர் சிங் லவ்லி பேசியபோது,திரும்பவும் தேர்தல் நடப்பதை விரும்பாததால், நாங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கிறோம். இன்று சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சி முக்கிய முடிவு எடுக்கும் விசயங்களில் அவசரப்படக்கூடாது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு முடிவு எடுக்கிறவரை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆபத்து இருக்காது’’என்று தெரிவித்தார்.

பாக்., மாஜி அதிபர் முஷாரப் மாரடைப்பு காரணமாக அவசர சிகிச்சை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மாரடைப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவரது நிலை தற்போது முன்னேற்றமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1999 முதல் 2008 வரை ராணுவ ஆட்சி செலுத்தி வந்த முஷாரப், தேர்லுக்கு பின்னர் முஷாரப் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு வந்த போது நாட்டில் தேசதுரோகம் செய்தது மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் அடிப்படையில் கைது செய்ப்பட்டார். தற்போது முஷாரப் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இன்று ராவல்பிண்டி கோர்ட்டில் ஆஜராகவேண்டியது. இவருக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் முஷாரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது முஷாரப் சுய நினைவுடன் இருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

கொல்கத்தாவில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தினர்

கொல்கத்தா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை குற்றவாளிகளே தீயிட்டு கொளுத்தியதாக போலீசார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 16 வயது பள்ளி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்தது. புகாரை திரும்பபெறக் கோரி தொடர்ந்து விரட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி மாணவி தீ கொளுத்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால்


டெல்லி: குடிநீர் வசதி இல்லாதது, மோசமான சாலைகள், பற்றாக்குறை மின் விநியோகம் என அனைத்து அவலங்களுக்குமே இந்த பாழாய்ப்போன அரசியல்தான் காரணம் என்று ஆவேசமாக கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லி சட்டசபையில் கேஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரியது. அதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கேஜ்ரிவால் பேசினார். பாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால் ஆவேசம் கேஜ்ரிவால் பேச்சிலிருந்து சில பகுதிகள்.. அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது. ஊழலில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது ஒட்டுமொத்த தேசமும். ஊழலை ஒழிக்கவே அரசியல் கட்சியைத் தொடங்கினோம் மோசமான குடிநீர் விநியோகம், மின்விநியோகம், மோசமான சாலைகளுக்கு பாழாய்ப்போன அரசியலே காரணம்.

வைகோ : சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ! Because BJP கூட்டணி ! அரசியல் விபசாரத்தில் சாதனை படைக்கும் வைகோ


சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால் தற்போது சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சேதுசமுத்திரத்தைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மதிமுகவின் நீண்டகால கோரிக்கை. மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது. சேதுக்கால்வாய் திட்டத்தை அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்தை கொண்டுவந்ததில் தமக்கே முக்கிய பங்கு என்று பலமுறை அறிக்கைகளில் கூறிவந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்த கையோடு சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் வைகோ. சேதுக்கால்வாய் திட்டம் பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு வைகோ நேற்று அளித்த பதில்: சேது சமுத்திர திட்டத்தை அப்போது வெளியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தகவல் அடிப்படையில் ஆதரித்தோம். தற்போது பச்சோரி கமிஷன் ‘சேது சமுத்திர திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரமும், மீன் வளமும், சுற்றுச்சுழலும் பாதிக்கும் என்று கூறியிருப்பதையடுத்து, சேது சமுத்திர திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன் இவ்வாறு கூறினார் அரசியல் விபசாரத்தில் சாதனை படைக்கும் வைகோ
tamil.oneindia.in 

ச,ரி,க,ம,ப,நி .தமிழ் எழுத்துக்களே ! 700 ஆண்டுகளுக்கு முன்புதான் சமஸ்கிருதத்திற்கு சென்றது !


தமிழ் இசை மரபை இருட்டடிப்பு செய்து பார்பனியம் மற்றும் வடமொழி சார்ந்த ‘கர்நாடக இசை’ மரபே தமிழகத்தின் செவ்வியல் இசை மரபு என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை தஞ்சையை சேர்ந்த இசையறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே நிரூபித்தார்.
1917-ல் வெளியிடப்பட்ட அவரது கருணாமிருத சாகரம் என்னும் இசை ஆய்வு நூல் இவ்வுண்மையை ஆணித்தரமாக நிறுவுகிறது. இசைக் கல்லூரிகளிலோ, இசை விழாக்களிலோ இதுபற்றி மூச்சும் விடப்படுவதில்லை.
இதுவன்றி திரு.மு.அருணாசலம் அவர்கள் எழுதிய கருநாடக சங்கீதம், தமிழிசை ஆதிமும்மூர்த்திகள் என்ற நூலும் இசையறிஞர் தண்டபாணி அவர்களின் ‘திராவிட இசை’ எனும் நூலும் மேலும் பல அறிஞர்களின் ஆய்வு நூல்களும் இதனை நிரூபிக்கின்றன.
மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து நமது வாசகர்ரொருவர் தொகுத்தனுப்பிய விவரங்களை கீழே தருகிறோம்.
இசை மட்டுமல்ல கருவிகளும்
தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்மக்களுக்குமே உரிமையாயிருந்து, இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகளுக்கும் பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக் கருவிகளாக பல்கி பெருகியுள்ளன.

ஒரு விரலை இழந்தால் ரூ 12,000 நிவாரணம் என்றும் நான்கு விரல்கள் போனால் ரூ.48,000 உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !


சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி பகுதி தொழிற்சாலைகள் குறித்து வினவு செய்தியாளர்களின் நேரடி ஆய்வு

“50 வருஷம் முன்னேயெல்லாம் நான் சின்ன பையனா இருக்கும் போது இங்க இந்த ஃபேக்டரிங்க எல்லாம் கிடையாது சார். எல்லாம் குடிசை வீடுங்கதான். அப்புறம்தான் ஒவ்வொரு வீடா வாங்கி ஃபேக்டரிங்க கட்டிட்டாங்க. இப்போ எனக்கு 65 வயசாகுது” என்றார் அந்த பெரியவர். அவரிடம் பேச்சு கொடுத்ததும் மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள், பக்கத்து வீட்டுக் காரர்கள் என்று 10-20 பேர் கூடி விட்டார்கள்.
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
நாகல்கேணி பகுதி தோல் பதனிடும் நிறுவனங்களுக்கான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை ஒட்டிய குறுகலான சிறு தெருவில் அவர்கள் வசிக்கிறார்கள். வீடுகளின் மறுபுறம் கிங்ஸ் லெதர் தொழிற்சாலை உள்ளது.

வீடு இல்லாதவர்களுக்காக 2 நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை அமைக்கும் ஆம் ஆத்மி

டெல்லி: டெல்லியில் வீடுகள் இல்லாமல், பாலங்கள், திறந்தவெளியிடங்களில் கடும் குளிர், பனி, மழை, வெயிலில் வாடி வசித்து வரும் மக்களின் நலனுக்காக இரண்டே நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை கட்டவுள்ளது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான திட்டங்களை அறிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சி தற்போது வீடு இல்லாதவர்களுக்காக புதிய தற்காலிக ஷெல்டர்களை அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த குடியிருப்புகளை 48 மணி நேரத்தில் அதாவது இரண்டே நாட்களில் உருவாக்கித் தரத் திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி. பாலங்களுக்குக் கீழேயும், திறந்தவெளிப் பகுதிகளிலும் மழை, வெயில், பனியில் வாடி வசித்து வரும் மக்களுக்காக இந்த ஷெல்டர்கள் அமைக்கப்படும். டெல்லியில் வீடு இல்லாதவர்களுக்காக 2 நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை அமைக்கும் ஆம் ஆத்மி

உலகின் முதலாவது செயற்கை இதயம் ! பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸ் மருத்துவமனையொன்றிலுள்ள மருத்துவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயதுடைய  முதியவர்  ஒருவருக்கு முதன் முறையாக செயற்கை மனித இதயத்தினை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் இந்த செயற்கை மனித இதயம் 5 வருடம் வரை ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமென கூறப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான  செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கதுReuters) - A 75-year-old Frenchman was feeding himself and chatting to his family, more than a week after becoming the first person to be fitted with an artificial heart made by French biomedical company Carmat, one of his surgeons said.

என்.ராம்: மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி.! 2002-ல் நடந்தவை (Riots) மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.
என்.ராம், மூத்த பத்திரிகையாளர், 'தி இந்து' குழுமத்தின் தலைவர்.  அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.
எந்த வயதில் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

augusta west helicopters ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது

இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும்.
இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகின.

ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவின் துயரம்! சாதாரணனின் அசாதாரண சாதனை

அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியின் முதல்வர் ஆவது குறித்து எனக்குப் பெருத்த மகிழ்ச்சி. கட்சி ஆரம்பித்து ஒராண்டிலேயே ஒரு மாநிலத்தின் தேர்தலில் நின்று, இரு முனைப் போட்டியை உடைத்து, மூன்றாவது அணியை மாற்றாக முன்வைத்து, இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியது என்பது சந்தேகமே இல்லாமல் மாபெரும் சாதனை
இதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என்றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.

டிமாண்டை அதிகரிக்க திமுகவுடன் பேசிக்கொண்டே பாஜகவுடன் சேர்ந்த விஜயகாந்த் !

புத்தாண்டு தினமான நேற்று, கூட்டணிக்கான பேச்சு வார்த்தையை, தமிழக பா.ஜ., அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை, பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும்படி அழைப்பு விடுத்தனர். இரு கட்சி தலைவர்களுக்கும் இடையே நடந்த இந்த முதல் சந்திப்பும், பேச்சுவார்த்தையும், அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு சிறப்பு பேட்டி அளித்த, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, 'பா.ஜ., அணியில் சேர்வதற்கான, பூர்வாங்க பேச்சு முடிந்துள்ளது. மோடி தான் அடுத்த பிரதமர்' என, பா,ஜ.,வுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தார். அவரது பேட்டியை, தே.மு.தி.க., ஆதரவு, 'கேப்டன் டிவி' நேரடி ஒளிபரப்பு செய்து, கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவை வைத்து காமடி பண்ணுவதாக எண்ணிக்கொண்டு தானே ஒரு காமடியாகிவிட்டார் 

ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது

ருமேனியாவும்,  பல்கேரியாவும்  ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர்  அந்த  நாடுகளின்  பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும்.

இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன.
ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன.
அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடுப்பார்கள் என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு இனவாதம் போன்றது என்று ருமேனிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.
பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சபடுகிறார்களாம் ilakkiyainfo.com

புதன், 1 ஜனவரி, 2014

சென்னையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் ! நடிகர், நடிகைகளில் கலை நிகழ்ச்சிகள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஆண்டு முடிந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2014ம் ஆண்டு பிறந்தது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணியளவில் காமராஜர் சாலை சிவாஜி சிலை அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் சிறுவர்  சிறுமியர், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் ஏராளமானோர் குவிந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அடுத்த நொடி அதிர்வேட்டுகள் முழங்கின. வாணவெடிகள் வர்ணஜாலம் காட்டின. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்‘ என கோரசாக கோஷமிட்டனர். சிலர் அந்த இடத்தில் நியூ இயர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைஞர்களும் இளம்பெண்களும் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர்.

கேப்டன் 300 கோடி கேக்கறதா பேச்சு ! பிஜேபி அதிர்ச்சியாயிட்டாங்க


Captain_vijayakanth__13 கேப்டன் என்ன நிலைபாட்டில் இருக்கார் ? " என்றான் ரத்னவேல்.

"கேப்டன் ஒரு விஷயத்துல தீர்மானமா இருக்கார்.  எந்தக் கட்சி நெறய்ய பணம் குடுக்குதோ, அந்தக் கட்சி கூட போறதுன்றதுல தெளிவா இருக்கார். கேப்டன் கிட்டத்தட்ட 300 கோடி கேக்கறதா பேச்சு.  பிஜேபி இந்தத் தொகையைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டாங்க. இவ்வளவு தொகையை கேப்டனுக்கு கொடுக்கறதுக்கு, வேற எங்கயாவது அதை செலவு பண்ணலாம்னு நினைக்கிறாங்க.  அது தவிரவும், வைகோவை பிஜேபி பக்கம் இழுத்தா, அவர் விசுவாசமான அடிமையா இருப்பதைப் போல கேப்டன் இருக்க மாட்டாருன்னும் நம்பறாங்க"
"விஜயகாந்த் திமுகவிடம் 19 சீட் கேட்டதா ஒரு பேச்சு வருதே"
"விஜயகாந்த் 19 சீட்டெல்லாம் கேக்கலை.  15 சீட் கேக்கறார்.  திமுக எட்டுல இருந்து பேச்சுவார்தையை தொடங்கியிருக்காங்க. கேப்டன் கேட்ட தொகையையும் கொடுக்க தயாராயிட்டாங்க. இந்த முறை மத்தியில அதிகாரத்தை கைப்பற்றவில்லை என்றால், மகளையும் கட்சியையும் காப்பாற்ற முடியாதுன்றதுல திமுக தலைமை தெளிவா இருக்கு. அதனால, எப்படியாவது கேப்டனை வளைச்சு போடணும்னு தீர்மானமா இருக்காங்க"

நான் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம்: மு.க.அழகிரி எம்.பி. குற்றச்சாட்டு

புத்தாண்டையொட்டி தி.மு.க. தென்மண்டல அமைப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி.யை தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மு.க.அழகிரி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நான் மதுரையில் மக்களுக்காக பல சாதனைகளை செய்துள்ளேன். மக்களுக்கு தேவையான திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளேன். ஆனால் நான் செய்த சாதனைகளை அ.தி.மு.க. அரசு மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக எம்.ஜி.ஆர். காலத்திலேயே மாற்ற முடியாத சென்ட்ரல் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றினேன்.
மதுரை மக்களுக்கு பயன்படும் வகையில் 15 இடங்களில் நவீன இலவச கழிப்பறைகளை கொண்டு வந்தேன். இதை மக்கள் வரவேற்று பாராட்டினர். ஆனால் இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு அக்கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றி உள்ளது.

பாஜக கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ரங்கசாமி, ஈஸ்வரன், பச்சமுத்து!!

சென்னை: இதோ அதோ என்று மெதுமெதுவாக பாரதிய ஜனதாவின் மெகா கூட்டணி உதயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் போணியாக வைகோ, பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் விரைவில் இந்த கூட்டணியில் இணைய இருக்கிறார். இந்த நிலையில் மறுமலர்ச்சி திமுகவும் பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது
அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் பாஜக தலைவர் ராஜ்நாத்தை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாமகவும் பாஜக அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. நாளை நடைபெறும் பாமக பொதுக் குழுவில் அனேகமாக இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக. தேமுதிக தொகுதி பேச்சுவார்த்தை ! 1 9 கேட்கும் தேமுதிக ..7 + ஒரு ராஜ்யசபா சீட் திமுக பேரம் !.அனேகமாக 9 அல்லது 12 OK ?

திமுக அணியில் தேமுதிகவை இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி பேர பேச்சுவார்த்தை மும்முரமடைந்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிமுக முனைப்பாக இருக்கிறது. இதனால் அதன் கூட்டணிக் கட்சிகளாக கருதப்படும் இடதுசாரிகளுக்கு அனேகமாக தலா ஒரு இடம் ஒதுக்கப்படலாம். திமுகவோ, பாஜக- காங்கிரஸுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று அறிவித்துவிட்டது. தற்போதைய நிலையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவைதான் இருக்கின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரையில் எந்த அணியில் இணைவது என்ற முடிவு எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தேமுதிகவை பாஜக அணியில் இணைக்க தமிழருவி மணியன் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்
அதேபோல் தமிழகத்தில் தனித்துவிடப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் தமது அணியில் தேமுதிகவை இணைத்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு காத்துக் கிடக்கிறது.

நாளைய இயக்குனருக்கு வந்த குறும்படம் விழாவாக வெற்றி பெற்று இருக்கிறது !

விழா - விமர்சனம் ஊரில் விழுகிற இழவில் வாழ்வை நடத்தும் சாமான்ய மக்களின் வாழ்வியலை திரையில் சொல்லும் முதல் பதிவு என்றே சொல்ல முடிகிறது விழா படத்தை. வித்தியாசத்தை ஆங்கில படங்களின் டி.வி.டி.யில் தேடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு மத்தியில் விழா ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுக்கிறது. பல்லு போன கிழவிகளையும் கூட ரசிக்க முடிகிறது, கிராமத்து தெருக்களிலும் குடிசைகளிலும் இன்னும் எத்தனையோ கதைகள் ஒளிந்துகிடக்கிறது என்பதற்கு விழா ஒரு எடுத்துக்காட்டு.
சாவுக்கு பறையடிப்பவன் ஹீரோ சுந்தரம். அதே சாவுக்கு ஒப்பாரி பாடுகிறவர் ஹீரோயின் ராக்கம்மா. இவர்கள் இருவரும் காதலிக்க சாவு வீடு தான் ஒரே வழி. அடுத்த சாவு எப்போன்னு ஹீரோ காத்துக்கெடக்குறாரு... நக்கல் தூக்கலாக இருந்தாலும், ரசிக்கிற வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. பெருசுகளைப் பார்த்து ‘இப்பவே நீ செத்துப் போ’ன்னு ஒரு பாட்டே வருது. ஒரு பக்கம் இது நியாயமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவிவில்லை.

ஜெயலலிதா பொங்கல் ! 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.100 ரொக்கம்

சென்னை
கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இது குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாள்
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள், பொங்கல் திருநாள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தமிழர் கலாசாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்த தியாகத்தையும் செய்வேன் : லாலு பிரசாத் யாதவ்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவ் நேற்று சந்தித்து பேசினார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் லாலு நேற்று சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கூட்டணி பற்றி ஆலோசிப்பதற்காக இம்மாதம் மீண்டும் என்னை சந்திப்பதாக சோனியா கூறியுள்ளார்.