செவ்வாய், 24 செப்டம்பர், 2013

பலுசிஸ்தானில் 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்: டெல்லி வரை அதிர்வு

டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு
டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

ரஜினி இந்துதத்வா கொள்கையுடையவர் என்பதால் மோடியுடன் கூட்டு ?

திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்.
ஆனால், ரஜினி மவுனமாகவே இருந்து வந்தார்.
இந்தநிலையில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ரஜினி தளம் மற்றும் ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ரஜினிகாந்திற்கு நரேந்திர மோடி பூங்கொத்து கொடுப்பது போலவும், அதில் 'உங்களத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழிகாமி', 'மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம்', 'பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டர்  nakkheeran.in

VR கிருஷ்ணய்யர் மோடிக்கு ஆதரவு ! சோஷலிசம் கம்யுனிசம் எல்லாம் பார்பன தளங்கள் ஆகிவிட்டன

வி ஆர் கிருஷ்ணய்யர்மோடிக்கு ஜே போடும் கிருஷ்ணய்யரின் இடதுசாரி பார்ப்பனியம் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.! இடதுசாரி பார்ப்பனியம் !
மோடி இப்படியொரு திடீர் ஆதரவை அவரே எதிர்பார்த்திராத ஒரு நபரிடமிருந்து வருமென்று நினைத்திருக்க மாட்டார். சமீபத்தில் 63-வது பிறந்த நாளை கொண்டாடிய மோடிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பல முற்போக்காளர்களால் வியந்தோதப்படும் மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யரிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருந்தது. அதில் வரும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு மிகச்சரியான பிரதமர் வேட்பாளர் மோடி தான் என கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒன்று சூரிய மின்சக்தி, இரண்டு மது ஒழிப்பு, மூன்று மோடியும தன்னைப் போலவே ஒரு சோசலிஸ்டு! வி ஆர் கிருஷ்ணய்யர்
ஏற்கெனவே கடந்த ஜூன் மாத துவக்கத்தில் மோடி பாஜகவின் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கிருஷ்ண அய்யர் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மது ஒழிப்பையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் குஜராத்தில் கொண்டு வரும் பட்சத்தில் நல்ல தலைவராக மோடி உருவெடுக்க முடியும் என்று வழிகாட்டியிருந்தார்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியவர்களில் ஒருவர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் என்பதை மறுக்க முடியாது. பல வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் தரப்பில் நின்று விளக்கம் சொல்ல முயற்சித்தவர் தான்.

6 மெழுகுவர்த்திகள் படு சீரியசான பிரச்சனையை கையாண்டிருக்கும் படம்

படம் பார்க்கிற பெற்றோர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக 6 இருக்கும். படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேச்சுலர் பசங்களோட மனசு பதறுதுன்னா பாருங்களேன்!தன் மகன் காணாமல் போக அவனையே தன் உயிராக நினைத்து வாழ்ந்த தந்தை அவனைத் தேடிப் போக, அவனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படம். வாரம் ஒரு காமெடி என்று வரிசைக்கட்டி வரும் திரைப்படங்களில் மூழ்கி கிடக்கும் ரசிகர்களை கொஞ்சம் சீரியஸ்சாக யோசிக்க வைக்கிறார் ஷாம். கிட்டத்தட்ட பாலாவின் நான் கடவுளை நினைவு படுத்துகிற படம். அலுங்காமல் குலுங்காமல் தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஷாம். ஆனால் அதெல்லாம் முதல் மூன்று நான்கு படங்களோடு முடிந்துவிட்டது. இந்த சாக்லேட் ரொம்ப நாள் தாங்காது என்கிற உண்மையை அறிந்து தனக்கான உணவை தானே தயாரித்திருப்பதின் மூலம் ஆச்சயரிப்படுத்தவும் அதே சமயத்தில் அதிரவும் வைக்கிறார் ஷாம். ஷாமின் முயற்சிக்கு முதலில் சல்யூட்!மனைவி, மகன் என்று சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் ஷாம். தன் மகனை உலகமாக நினைக்கும் ஷாம் ஓரளவிற்கு வசதியான குடும்பம் தான். ஒரு நாள் கடற்கரையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க... கூட்டத்தில் தன் மகன் காணாமல் போகிறான். இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. போலிசில் புகார் கொடுக்கிறார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது !

சொத்துக் குவிப்பு வழக்கில் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் ஜாமீனில் வெளியே வருகிறார வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கைது செய்யப்பட்டு கடந்த 16 மாதங்களாக ஐதராபாத் சஞ்சல்கூடா சிறையில் ஜெகன் அடைக்கப்பட்டார். சிபிஐ நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு இவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ப. சிதம்பரம்

து குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 78.48 சதவீத வாக்குகளைப் பெற்று, போட்டியிட்ட 38 இடங்களில் 30-ல் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருதுகிறேன். மாகாணங்களில் முழு சுயாட்சி, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய லட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நம்புகிறேன். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கொண்டுள்ள கொள்கை சரியானது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என ப. சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்

சுப்ரமணியம் சுவாமி : காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி! இன்றைய JOKE

மும்பை:பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.மும்பையில் போட்டியிடுவாரா

திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹிந்தி படங்களை தவிர்க்கும் அனுஷ்கா

பாலிவுட்டில் என்ட்ரி
அனுஷ்கா பிடிவாதம் தளருமா? பாலிவுட் படங்களில்
நடிக்காமல் ஒதுங்கும் அனுஷ்கா, பிடிவாதத்தை கைவிட முடிவு செய்துள் ளார். அதற்கு முன்னோட் டம் பார்ப்பதற்காக அவர் நடித்த படம் இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகிறது. அசின் முதல் தமன்னாவரை தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் கால்பதித்துவிட்டனர். ஆனால் வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்காமல் கோலிவுட், டோலி வுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அனுஷ்கா. அவரது பிடிவாதத்தை தளர்த்த சில தயாரிப்பாளர்கள் பாலிவுட் படத்துக்கு கால்ஷீட் கேட்டு அவரை சுற்றி வருகின்றனர். அதற்கு முன்னோட்டமாக அவர் 2 வருடத்துக்கு முன் நடித்த ‘அருந்ததி படத்தை இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர். தமிழில் ‘அருந்ததி டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனபோது வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டதுடன் அனுஷ்கா நடித்த வேடத்தில் கரீனா கபூர் அல்லது ஐஸ்வர்ய£ ராய் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர். பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது அப்படத்தை அதேபெயரில் இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தால் பாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்க அனுஷ்கா முடிவு செய்துள்ளாராம். tamilmurasu.org

Pakistan கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 83 பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகர், கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ
தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 600 பேர் பங்கேற்றனர். பின்னர் பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தூக்கி வீசப்பட்ட மக்கள் துடித்துடித்து இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சடலங்களாக காட்சியளித்தது. பலர் ரத்தம் சொட்டச் சொட்ட துடித்துக்கொண்டிருந்தனர். இன்று காலை நிலவரப்படி 78 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. பலர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். தேவாலயத்திற்கு வாரம் தோறும் வந்து இசைக் கருவிகள் வாசிக்கும் ரியாஷ் மாசிஹ் அவரது மகன்கள் இம்தியாஸ், பிலால் ஆகியோரும் தப்பவில்லை.

நபிகள் நாயகத்தின் தாய் பெயர் தெரியாததால் சுட்டு கொலை ! கென்யா வணிக வளாகத்தில் தமிழர் படுகொலை

Kenya  தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் வணிக வளாக
கட்டிடத்திற்குள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலியாவை சேர்ந்த அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று புகுந்தனர். கையெறிக்குண்டுகளை வீசிய அவர்கள் பிறகு கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் உள்பட இரு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீதரின் மனைவியும் படுகாயமடைந்தார். மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களை மனித கேடயமாக பிடித்து வைத்துக்கொண்டு பாதுகாப்பு படையினரிடம் தொடர்ந்து அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜோஷூவா ஹக்கீம் வெளியில் வந்து லண்டன் செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த தாக்குதல் குறித்து ஹக்கீம் கூறியதாவது:- முதுகில் ஆயுதங்களை சுமந்து கையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் இளம் தீவிரவாதிகள் வணிக வளாகத்திற்குள் வந்ததை
கண்டேன். பிறகு அவர்கள் மாலில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இடையே, அவர்கள் முஸ்லிம்களை
அடையாளம் தெரிந்து கொள்வதற்காக அழைத்தனர்.

வாடகை தாய் வியாபாரத்தில் குஜராத் உலகிலேயே முதலிடம் ! மோடியின் முன்னேற்றம்(?) பாரீர் !

வாடகைத் தாய்மார்கள்
ருபத்து நான்கு மணி நேரமும், தடையில்லா மின்சாரம், மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம், அபரிமிதமான விவசாய வளர்ச்சி, வந்து குவியும் அந்நிய முதலீடுகள், அவை உருவாக்கும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் என மோடியின் குஜராத் குறித்து பொய்யானதொரு பிம்பம் உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் குஜராத் குறித்த உண்மைச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ்  உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது.  கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.
ஆனால் வேறொரு விசயத்தில் உலகிலேயே முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது குஜராத். பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடம்.

கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களில் மைனர்கள் தப்ப முடியாது ! அவர்களும் மேஜர்களாக கருதப்படுவர்! வருகிறது சட்டம்

புதுடெல்லி:கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16
வயதுக்கு மேற்பட்ட மைனர்களை வயது வந்தவர்களாக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்கள் புரிந்தாலும் அதிகபட்சம் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். அண்மைக்காலமாக பலாத்கார குற்றங்களில் மைனர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட இளம் குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கியது. அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதே போல் மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கிலும் இளம் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும். மைனர்களின் வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வயது வரம்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட தள்ளுபடி செய்து விட்டது

நரேந்திரமோடி, ராகுல் காந்திக்கு வாய்ப்பு இல்லை! 3–வது அணி ஆட்சி அமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நம்பிக்கை

டெல்லி,மத்தியில் நரரேந்திரமோடி அல்லது ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்றும், 3–வது அணிக்குத்தான் வாய்ப்பு இருப்பதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யச்சூரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது–
‘நமோ – ராகா’
‘‘அடுத்த பிரதமர் ‘நமோ’தான் (நரேந்திர மோடி) என்று பா.ஜனதாவினரும், ‘ராகா’தான் (ராகுல் காந்தி) என்று காங்கிரசாரும் கூறி வருகிறார்கள். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், இந்த இரு கட்சிகளுமே இடம் பெறாத 3–வது மாற்று அணிதான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
இரு பிரதான கட்சிகளும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தங்கள் தேர்தல் கணக்குகளைப் போட்டு வருகிறார்கள். ஆனால், ஆட்சி அமைக்கும் தலைவர் யார்? என்பதை விட, மாற்று அரசியலே தற்போது மக்களுக்கு தேவையாகும்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ராஜீவ் காந்தியின் ஆத்மாவிடம் தமிழ் தலைவர்கள் பாவ மன்னிப்பு கேட்கவேண்டும்

சரியாக இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்து
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்
மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அரசு வடக்கில் இன்று உருவாக்கி உள்ளது ,இதற்காக  உயிர்கொடுத்தவர்கள் பலர் ,ராஜீவ் காந்தி முதல் கொண்டு பத்மநாபா என்று இந்த பட்டியல் நீளும் ,  இந்த மாகாண சபைக்கு உண்மையில் சிங்கள மக்கள் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை ,  ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை தட்டி கொட்டி வெறியாட்டம் போடவேண்டும் என்று திட்டம் போட்டு  சகல அநியாயங்களையும் கட்டவிழ்த்து விட்டது பிரபாகரன் என்ற பயங்கரவாதிதான் . அந்த பயங்கரவாதியை  அன்று பலர் ஆதரித்தனர், பயத்தினாலோ அல்லது அறிவின்மையாலோ அல்லாது உண்மையில் தங்கள் சுயநலங்களை தக்க வைக்கவே அவ்வாறு நடந்து கொண்டனர்,
அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அன்று இணைந்த வடகிழக்கு மாகாண அரசு அமைந்தது , அதில் அளிக்கப்பட்ட உரிமைகள் போதாது போன்ற கோஷங்களை எழுப்பி புலிகள் அதை இல்லாமல் செய்துவிட்டனர், அது மட்டுமல்ல அதில் பங்கு பற்றிய பலரையும் கொலையும் செய்து விட்டனர், அதன் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தப்பி இந்தியாவுக்கு சென்று விட்டார் . அங்கு சென்ற இதர பிரமுகர்களையும் புலிகள் தேடி தேடி கொன்றனர் , அவர்களின் கொலையில் இருந்து மயிரிழையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தப்பினார் , பின்பு அவரே புலி விசுவாசியாக மாறினார், அவர் மட்டுமல்ல அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம் சேனாதிராஜா சம்பந்தர் போன்ற எல்லோரது கதையும் அதுதான் , புலிக்கு பயந்து பின் புலியையே ஆதரித்து அதன் பின் அவர்கள் அழிந்ததும் அப்பாடா என்று ஒருமாதிரியாக இன்று தேர்தல்களின் நின்று வெற்றிகளும் பெற்று ஆசான்களில் அமர்ந்து விட்டனர்,
இவர்களுக்கு இன்று பயங்கரவாத பயம் இல்லாத  வாழ்வை  கொடுத்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான் ,

1987 ராஜீவ் காந்தி ஒப்பந்த வட மாகாண அரசு இன்று மலர்ந்துள்ளது

1987இல் மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நேற்று தான் முதல் தடவையாக வடமாகாணசபை தேர்தல் நடைபெற்றது

30 ஆண்டுகால பயங்கரவாத அழிவுக்குப் பின்னர் வடபகுதியில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் மக்களின் ஜனநாயக சுதந்திரம் மலர்ந்துள்ளது.
தேசத்தலைவரான மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இன்று நாடு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்றி அமைதியான சூழல் நிலவுகின்றது.
வீதிகளில் அன்றிருந்த வீதித்தடைகள் அனைத்துமே முற்றாக அகற்றப்பட்டுள்ளன. இன்று மக்கள் தெற்கில் தெவிநுவரவில் இருந்து வடக்கில் பருத்தித்துறை வரை எவ்வித தடையோ, அச்சுறுத்தலோ இன்றி சென்று திரும்பக்கூடிய அளவுக்கு அமைதி நாட்டில் திரும்பியுள்ளது.
தென்னிலங்கையையும், வட இலங்கையையும் இணைக்கும் நட்புறவுப் பாலமாக இருந்த யாழ்தேவி மீண்டும் செயற்பட ஆரம்பித்துவிட்டாள். 1987ம் ஆண்டில் இந்திய பிரதமமந்திரி ராஜீவ்காந்தி திடீரென ஒருநாள் முடிவு செய்து கொழும்பு மாநகரத்திற்கு விமானம் மூலம் தனது பரிவாரங்களுடன் அதிகாலையில் வந்து சேர்ந்தார்.
அதையடுத்து அவர் ஜனாதிபதி மாளிகையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மீது அழுத்தங்களைக் கொண்டு வந்தோ, அல்லது அச்சுறுத்தல்களை மேற்கொண்டோ எதிர்ப்புகளுக்கு இடமளிக்காமல் இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மாகாணசபைகள் என்ற புதியதொரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

சனி, 21 செப்டம்பர், 2013

உ பி கலவரம் தொடர்பாக பாஜக MLA சுரேஷ் ரானா கைது !

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா.
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா.  உத்தரப் பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் சமீபத்தில் வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான், பாரத விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரைக் கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.

திண்டுக்கல் சப் கலெக்டர் மதுசுதன் ரெட்டி குடிபோதையில் அட்டகாசம் !கல்லெறிந்தார் ! போலீசின் வாக்கி டாக்கியை பறித்தார் ! கணவனுடன் வந்த பெண்ணை ?

திண்டுக்கல்: போலீஸ்காரரிடம் வாக்கி டாக்கியை பறித்தும், குறைதீர்
கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மீது கற்களை வீசியும் திண்டுக்கல் சப் கலெக்டர் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக மதுசூதன்ரெட்டி(28) கடந்த ஆக.19ல் நியமிக்கப்பட்டார். இவர் குடும்பத்துடன் திண்டுக்கல் சிறுமலை அருகே கடமான்குளம் கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை நோக்கி ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை வழிமறித்த சப்–கலெக்டர் இரவு நேரத்தில் சிறுமலையில் உங்களுக்கு என்ன வேலை? என அவர்களிடம் கேட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம், உனது மனைவியை நான் பத்திரமாக அழைத்து செல்கிறேன். என்னை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வா என கூறி விட்டு அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதனால் வனத்துறை ஊழியருக்கும், சப்கலெக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி டிரைவரிடம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தார். இதனால் டிரைவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி உடைத்ததாக தெரிகிறது.சப் கலெக்டரின் இந்த நடவடிக்கையால் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

முலயம்சிங்கின் சொத்துகுவிப்புக்கு எதிரான ஆதாரங்கள் இல்லையாமே ? சிபி ஐ திடீர் கண்டு பிடிப்பு ! வெற்றி மீது வெற்றி வந்து முலாயமை சேரும் !

புதுடில்லி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிரான,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரங்கள் இல்லை என , சி.பி.ஐ., முடிவு விசாரணையில் இருந்து விலகியது இது தொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "முலாயம் சிங்கும், அவரின் குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். அது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் விஸ்வநாதன் சதுர்வேதி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "முலாயம் சிங் குடும்பத்தினரின் சொத்து தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு, 2007, மார்ச், 1ல் உத்தரவிட்டது.

போதைவஸ்து வழக்கில் சுதாகாரன் விடுதலை ! வழக்கு போட தூண்டிய ஜெயலலிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது ?

 தமிழகம் போதை வழக்கில் சுதாகாரன் விடுதலை… வழக்கு போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: கருணாநிதி  போதை வழக்கில் சுதாகாரன் விடுதலை… வழக்கு போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: கருணாநிதி சென்னை: ஹெராயின் போதை வழக்கில் சுதாகரன் விடுதலை குறித்து ஆளுவோரின் பதில் என்ன? வழக்குப் போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹெராயின் போதைப் பொருளை வீட்டிலே வைத்திருந்ததாக ஜெயலலிதாஆட்சி யில் 2001ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பற்றி? ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலாவின் அக்காள் மகன்தான் சுதாகரன். இவரது திருமணத்தை ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் என்ற முறையில் பல கோடி ரூபாய் செலவு செய்து சென்னையில் ஆடம்பரமாக நடத்தினார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். இவர் யாரோ ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என்று புகார் வந்தது என்பதற்காக 2001ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13.6.2001 அன்று இவர் வீட்டை போலீசார் சோதனை செய்த போது 16 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். இவரையும், இவரது நண்பரையும் கைது செய்தார்கள். இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக நடைபெற்றது. 18.4.2013 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராமமூர்த்திக்கு கொலைமிரட்டல் வந்ததால் வேறு நீதிபதி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டது. இந்த வழக்கில்தான்சுதாகரனையும், நண்பர்களையும் கடந்த 16ஆம் தேதி நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. நீதிபதி சின்னப்பன் அவர்கள் தனது தீர்ப்பில், "வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் கோபு ஸ்ரீதரை அரசுத் தரப்பில் சாட்சியாக விசாரிக்கவில்லை.

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு வெறும் 330 ரூபாய்

இந்திய சினிமாதுப்புரவுத் தொழிலாளிகள்இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக தமிழ் சினிமா முதலாளிகளுக்கு ஜெயா அரசு கொடுத்திருக்கும் தொகை பத்து கோடி ரூபாய். இது போக பல்வேறு இடங்கள், மண்டபங்கள், பூங்காக்கள், மின்சாரம், அரசு விளம்பரம் என்ற வகையில் அரசு கொடுத்திருக்கும் உதவி இன்னும் அதிகம். பதிலுக்கு இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஜெயா டிவியில் காட்டுவத்தற்கு சினிமா முதலாளிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதன் வர்த்தகம், லாபம் தனி. ஆனால் தமிழக மக்கள் பணத்தில் இருந்து பத்து கோடி ரூபாயை கொடுக்கும் இந்த அரசு துப்புரவுத் தொழிலாளிகளை எப்படி நடத்துகிறது?
கையால் மலம் அள்ளுவது மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பெடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் பலரும் நோய் தாக்குதல் மூலம் விரைவிலோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து போகிறார்கள். கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்கிறது ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று.  இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.
ஐ.நா சபையானது கையால் மலம் அள்ளுவதை மனிதத் தன்மையற்ற செயல் என அறிவித்த பின் 1993-ல் இத்தகைய உலர் கழிவறைகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இந்தியாவில் மீந்துள்ளது. தமிழகத்தில் 53,000 வரை உள்ளது. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள 657 மாவட்டங்களில் 256-ல் உலர் கழிவறை முறை இன்னமும் நீடிக்கிறது. இந்தப் பெண் தொழிலாளிகளுக்கு முறையான ஊதியமோ, பணி வரைமுறையோ இதுவரை இல்லை. இளம் வயதிலேயே இப்பெண்கள் பெரும்பாலும் மரணத்தை தழுவுகின்றனர்.

ஆட மறுத்த த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் மற்றும் முன்னணி நடிகைகள் 30 கோடி ஸ்வாஹா

சென்னை:சினிமா நூற்றாண்டு விழாவில் முன்னணி நடிகைகள் நடனம் ஆட
மறுப்பதாக தகவல் பரவியுள்ளது.சினிமா நூற்றாண்டு விழா நாளை மறுதினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இது பற்றி பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண் நேற்று கூறியதாவது:
வரும் 21ம் தேதி முதல் சினிமா நூற்றாண்டு விழா தொடங்குகிறது. 4 மொழி நட்சத்திரங்கள் தவிர, பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர். இந்த விழாவுக்காக ரூ.30 கோடி செலவிடப்படுகிறது. ‘தெலங்கானா பிரச்னை காரணமாக டோலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லையா என்கிறார்கள். நிச்சயம் பங்கேற்கிறார்கள். அவர்கள் பங்கேற்கும் 4 மணி நேர நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.‘த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடிக்கின்றனர். அவர்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களா? என்றதற்கு, ‘எல்லோரும் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்‘ என்று கல்யாண் மேலும் கூறினார். ஆனால் அதே சமயம் அவர்கள் டான்ஸ் ஆட மறுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதனால் டான்ஸ் ஆடும் நடிகைகள் பட்டியலை விழாக்குழு வெளியிடவில்லை.tamilmurasu.org

வெட்கம் ! ஒரு Mob குண்டா பிரதமர் வேட்பாளராக தேசியகட்சிக்கு?

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/jayram.jpg நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதால், நாட்டில் வன்முறை, கலவரங்கள் அதிகம் நடைபெறும் என்று மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிரதமருக்கான பந்தயம்
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:–
பாரதீய ஜனதா அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை பிரதமர் பதவிக்கான பந்தய சூதாட்டமாக மாற்ற நினைக்கிறது. ஆனால் காங்கிரசும் இதனையே செய்யாது. காங்கிரஸ் பிரதமர் பதவிக்காக யாரையும் முன்னிலைப்படுத்தாது.

B.லெனின் : இந்தியசினிமா நூற்றாண்டு பித்தலாட்டம் ! முன்னோடிகள் எல்லோரையும் இருட்டடிப்பு

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!! – B. லெனின். (தமிழ் சினிமா உலகில்
மனசாட்சி உள்ள ஒரு சிலரில் B. லெனினும் ஒருவர்.  சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர்.  நாங்கள் சந்தித்துக் கொண்டது வெகு அரிதாகவேதான்.  சில சமயங்களில் போனில் பேசுவோம்.  ஆனால் லயோலா கல்லூரி கருத்தரங்கு ஒன்றில் அவர் என்னை மேற்கோள் காட்டிப் பேசிய போது அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதையும், எவ்வளவு உன்னிப்பாக என்னை வாசித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.  அவரது மிக முக்கியமான இந்தக் கடிதத்தை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்.)
இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது.

பொது கழிப்பிடங்களை ஆக்கிரமித்து கட்டணம் வசூலிக்கும் கட்சி தொண்டர்கள்

கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 903 நவீன கழிப்பிடங்கள் உள்ளன.மெரினா கடற்கரை, பிராட்வே, தியாகராயநகர் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதையை கழிக்க இந்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது.ஒரு காலத்தில் கழிவறைகள் டெண்டர் விடப்பட்டது. அதன் பிறகு இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டது.ஆனாலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கழிவறைகளை தனியார் ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்து வருகிறார்கள். மாதம் தோறும் லட்சக்கணக்கில் தனி நபர் பணத்தை சுருட்டி வருகிறார்கள் மக்கள் அதிக அளவு பயன்படுத்தாத ஒதுக்குப்புறமாக இருக்கும் கழிவறைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. அவை உடைந்து, நொறுங்கி மக்கள் அவசரத்துக்கு உள்ளே செல்ல முடியாதபடி அலங் கோலமாக உள்ளன.கட்டணம் வசூலிப்பவர்களிடம் கேட்டால் நாங்கள் பராமரிப்பதற்காகத்தான் கட்டணம் வசூலிக்கிறோம் என்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு கழிப்பறையையும் பராமரிக்க பிளிச்சீங் பவுடர், மோட்டார் வசதி, கட்டிட சீரமைப்பு போன்றவற்றை மாநகராட்சியே செய்து வருகிறது.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு படும் பாடு : பவானி சிங்தான் வேண்டும் ? பாலகிருஷ்ணாவும் வேண்டும் ? என்வழக்கில் நான்தான் வசனம் எழுதுவேன் ?

இந்த விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா? : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங்கே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?
பதில் :- நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு திரு. மல்லிகார்ஜுனய்யாவும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும் பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்?
அதுபோலவே அரசு வழக்கறிஞரான ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டா மென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்? எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா