வெள்ளி, 2 நவம்பர், 2012

இலை உடையில் அனுஷ்கா! செல்வராகவனின் முயற்சி!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ’இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கபழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையை அப்படியே திரையில் கொண்டுவரும் முயற்சியில் ஆர்யாவையும் அனுஷ்காவையும் இலைகளை மட்டுமே உடையாக அணிந்து நடிக்க வைத்திருக்கிறாராம் செல்வராகவன். ஒரு பெண்ணாக இருந்தும் இலைகளை மட்டும் உடுத்திக் கொண்டு நடித்த  அனுஷ்காவின் தைரியத்தையும், அனுசரிப்பையும் படக்குழுவினர் பாராட்டினார்களாம். 
மலைப் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை 
ளாக நடித்துள்ளனர்

சந்தேகத்தில் மகளைக் கொன்ற பெற்றோர்!



Parents kill teenage daughter in acid attack in Kashmir

Parents kill daughter by pouring acid on her face after being caught talking to a boy

பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சொந்த மகளை திராவகம் ஊற்றிக் கொலை செய்த தாய், தந்தையரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கொட்லி மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் உயிழந்த சிறுமியின் வயது வெறும் 15 ஆகும்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அவர்களை அச்சிறுமி பார்த்துக்கொண்டிருந்துள்ளமையை பெற்றோர் கண்டுள்ளனர்.
எனவே அச்சிறுமி குறித்த இளைஞர்களில் ஒருவருடன் காதல் தொடர்பில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்த பெற்றோர் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் மீது திராவகத்தையும் ஊற்றியுள்ளனர். சிறுமி வலியால் துடிப்பதை கண்டும் அவரது பெற்றோர் அக்கறையின்றி இருந்துள்ளதுடன் அடுத்த நாளே சிறுமியை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு தொடர்வேன்- ராகுல் எ‌ச்ச‌ரி‌க்கை

அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக கூ‌றிய ஜனதா தள‌ம் க‌ட்‌சி‌த் தலைவரசுப்பிரமணிசுவாமி மீதஅவதூறவழக்கதொடர இரு‌ப்பதாக ராகு‌ல் கா‌ந்‌தி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மக‌‌‌ன் ராகுலும் ரூ.1600 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக ஜனதா தள‌ம் க‌ட்‌சி தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர்.

ஆனாலஇந்குற்றச்சா‌ற்றை மறு‌த்து சு‌ப்‌பிரம‌ணியசுவா‌மி‌க்கு ராகு‌ல் கா‌ந்‌தி எழு‌தியு‌ள்ள கடி‌த‌த்‌தி‌ல், தங்களகுற்றச்சா‌ற்று முற்றிலுமபொய்யானது, அடிப்படஆதாரமற்றது.

உள்நோக்கமகொண்டபத்திரிக்கையாளர்களுக்கசெய்தி அளித்தவருமஉங்களஆதாரமற்குற்ற‌ச்சா‌ற்றை எதிர்த்தசட்டப்பூர்நடவடிக்கைகளஎடுக்ி‌ர்‌ப்ப‌ந்‌திக்கபட்டுள்ளது.

எழுத்துரிமமற்றுமபேச்சுரிமையதனிநபர்களபயன்படுத்தி அவதூறசெய்வததடுக்இந்நடவடிக்கையமேற்கொள்வதாகடிதத்திலதெரிவித்துள்ளார்  http://tamil.webdunia.com/newsworld/news/national/1211/02/1121102018_1.htm

அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!

வினவு"
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று."அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!"ன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் காங்கிரசு கூட்டணி அரசின் நிர்வாகத்தை உறுதிப் படுத்த அமைச்சரவை மாற்றங்களை செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியை ‘முக்கியத்துவம் இல்லை’ என்று சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மாற்றியிருப்பது. ‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக’ பெட்ரோலிய அமைச்சர் பொறுப்பு வகித்த கார்ப்பரேட் தரகர் முரளி தியோராவிடமிருந்து 2011 ஜனவரியில் பெட்ரோலிய அமைச்சகத்தின் பொறுப்பைப் பெற்றார் ஜெய்பால் ரெட்டி. அதற்கு முன்பு பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் ‘ஈரானிலிருந்து குழாய் அமைத்து வாயு கொண்டு வரும் திட்டத்தை முடுக்கி விட்டதால்’ 2006ம் ஆண்டு முரளி தியோரா அமைச்சராக்கப்பட்டார்.

இனி சத்துணவில் பிரியாணி, புலவு, முட்டை மசாலா வழங்க முதல்வர் உத்தரவு

 Tn School Children Get Briyani Pulao
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் இனி விதவிதமான உணவு வகைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து காலத்திற்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், உணவு முறையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். புதிய வகை உணவு முறையினை அறிமுகப்படுத்துவது குறித்து புகழ் பெற்ற சமையற் கலைஞர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னையில் விமானம் மீது பாய்ந்த லேசர்.. விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்த பைலட்டுகள்!

சென்னை: விமானத்தின் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி பைலட்டின் கண்களை சில நொடிகள் இருள வைத்து விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் சதி சென்னையில் நடந்துள்ளது.
துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.
அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.

தமிழ் பட கதைகள் பிடிக்கவில்லை : மதுஷாலினி தடாலடி

சென்னை: தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மது ஷாலினி. ‘அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி. இப்படத்துக்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் டிபார்ட்மென்ட் இந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பூத் ரிட்டர்ன்ஸ்Õ படத்தில் நடித்தார். படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதுபற்றி மது ஷாலினி கூறியதாவது: பூத் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தபிறகு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறது. பாலிவுட்டில் புதிய பட குழுவினர் தொடங்கும் மற்றொரு திகில் படத்தில் நடிக்கிறேன்.

புஷ்பவனம் குப்புசாமி ஏன் அழுதார்? யார் நோகடித்தார்?

புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது. 
ஆனால் அவரது நெகிழ்ச்சி சிலரால் கிண்டலடிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. வருத்தம் புஷ்பவனத்தை எண்ணியல்ல  - கிண்டல் செய்தவர்களை நினைத்து. 
மேற்குறிப்பிட்ட நேர்காணலில் இசையைக் கற்றுத்தர மறுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டவர், கர்நாடக சங்கீத வித்வானின் பெயரைக் குறிப்பிடாது தவிர்த்திருந்தார்.

நொய்டா பார்முலா 1 கார் பந்தயம் 1.15 லட்சம் பீர் பாட்டில் காலி

நொய்டா: பார்முலா 1 கார் பந்தயத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் பீர் பாட்டில்களை வாங்கி குடித்துள்ளனர் என்ற தகவலை கலால் வரித்துறை தெரிவித்துள்ளது.நொய்டாவில், உலக பிரசித்தி பெற்ற சர்வதேச அளவிலான பார்முலா 1 கார் பந்தயம் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ரேஸ் கிளப் உரிமையாளர்கள் மற்றும் உலக அளவில் பிரபலமான வீரர்கள் பங்கேற்றனர். போட்டி நடைபெற்ற இடத்தில் மதுபானங்கள் விற்க குறிப்பிட்ட சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை குகைக்குள் வெடிக்கவிருந்த "டைம்பாம்' செயலிழப்பு

மதுரை திருப்பரங்குன்றம் மலை குகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சக்தி வாய்ந்த "டைம்பாம்' உட்பட வெடிகுண்டு புதையலை நேற்றிரவு போலீசார் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தர்கா பின்புறம், 250 அடி தூரம், அடிவாரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து மலையின், 100 அடி தூரத்திற்கு இடையே, குகைக்குள் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது.

கார் விபத்தில் தெலுங்கு தேசம் முன்னணி தலைவர் எர்ரன் நாயுடு பலி!

 Tdp Leader Yerran Naidu Killed Road Accident
ஹைதராபாத்: ஸ்ரீகாகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் தெலுங்கு தேசம் தலைவர்களுள் ஒருவரான எர்ரன் நாயுடு எம்பி பலியானார். அவருக்கு வயது 55.
அவர் பயணம் செய்த கார், ஒரு டேங்கர் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்த எர்ரன் நாயுடு, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஸ்ரீகாகுளம் தொகுதியின் இப்போதைய எம்பியாகவும் இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் கூட.
ஒரு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, இன்று அதிகாலை 2 மணிக்கு விசாகப்பட்டணத்திலிருந்து ஸ்ரீகாகுளத்துக்கு சென்று கொண்டி்ருந்தார் எர்ரன் நாயுடு. அப்போது ரணஸ்தலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நடந்தது.

வியாழன், 1 நவம்பர், 2012

பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் நடித்த 'தேனி கைனா ரெடி' (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் ஆனது. விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். மோகன்பாபுவின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிராமனர்களை இழிவுப்படுத்தும் காட்சி இடம் பெற்று இருப்பதாக படம் ரிலீசாகி 5 நாட்களுக்கு பிறகு பிராமனர்கள் சங்கம் குற்றம்சாட்டி நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணி அளவில் 50 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஐதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு வந்தனர். திடீரென அவர்கள் கற்களை வீசி ஜன்னல் கதவுகளை உடைத்தனர். மேலும் கதவையும் உடைக்க முயன்றனர்.

9 வருடமாக இழுத்து வந்த ஆபாசப் பட வழக்கிலிருந்து ஷகீலா ஒரு வழியாக விடுதலை

Shakeela Gets Freedom After 9 Years
நெல்லை: ஆபாசப் படத்தில் நடித்ததாக நெல்லை மாவட்ட கோர்ட்டில் கடந்த 9 வருடமாக இழுபறியாக இருந்து வந்த வழக்கிலிருந்து கவர்ச்சி நடிகை ஷகீலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போலீஸார் ரெய்டு போனார்கள். அங்கு அப்போது ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சோதனையின்போது சென்சார் போர்டின் அனுமதி பெறாத ஆபாசக் காட்சிகள் அடங்கிய படச்சுருளை போலீஸார் கைப்பற்றினர். அதில் ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

துப்பாக்கிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி: கஜோலுக்காக பணம் போட்டார் விஜய்!


Viruvirupu
தீபாவளி ரிலீஸூக்காக வேகமாக தயாராகிவரும் துப்பாக்கியின் ‘திரைமறைவு தயாரிப்பாளர்’ விஜய்தான் என்பதாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் பரவலாக அடிபடுகிறது. துப்பாக்கியின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு என்று தெரிந்த நிலையிலும், இந்த பேச்சு ஓயவில்லை.
காரணம், கலைப்புலி தாணுவே, “இந்த ப்ராஜெக்ட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், கை கொடுத்தவர் விஜய்” என்று கூறியதுதான். தாம் கொடுத்த பணத்தை, தயாரிப்பில் பங்கு என்ற வகையில் கொடுத்தார் என்கிறார்கள், கோடம்பாக்கம் பைனான்ஸ் புள்ளிகள் சிலர்.

Jayalalitha: சாதிக் கலவரம் பரவுகிறது என்ற வாசகத்தை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம்

 Normalcy Returns Ramnad District Says Cm
சென்னை: தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பரவிக் கொண்டு இருக்கிறது போன்ற வாசகங்களை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது:
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை 28.10.2012 அன்று காலை பசும்பொன்னில் துவக்கப்பட்டு நடந்து வந்தன. 28.10.2012 மற்றும் 29.10.2012 ஆகிய நாட்களில், தேவர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தன.

கோவை: 2 சிறுவர்கள் கொலை வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை

 Death Sentence Manoharan Coimbatore கோயம்புத்தூர்: கோவை பள்ளிக் குழந்தைகள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
வழக்கு என்ன?
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசிடம் சிக்கிய மோகன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். அவனது கூட்டாளி  போலீசிடம் பிடிபட்டான்.
குற்றவாளி என தீர்ப்பு

சோனியா, ராகுல் மீது சு.சுவாமி பரபரப்பு மோசடி புகார்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் வத்ரா மீது கெஜ்ரிவால் சுமத்திய புகாரின் பேரலைகள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை! அதற்குள் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது அதிர்வலைகளைக் கிளப்பும் புகார்களை சுமத்தியிருக்கிறார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி!
சுப்பிரமணிய சுவாமி சொல்லும் அதிரடிப் புகார் தான் என்ன?
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குதாரர்களாக இருப்பவர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இது ஒரு தனியார் நிறுவனம். ஏஜேஎல் என்ற அசோசியேட் ஜேர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பொதுத் துறை நிறுவனம். ஏஜே எல் நிறுவனத்தின் சொத்துகளை சோனியாவும் ராகுல் காந்தியும் உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக கபளீகரம் செய்தது என்பதுதான் சுப்பிரமணியசுவாமியின் புகார்
அப்படியென்ன முறைகேடு செய்தார்கள்?
ஏஜேல் நிறுவனத்துக்கு டெல்லியில் ரூ1,600 கோடி மதிப்பிலான ஹெரால்ட் ஹெளஸ் இருக்கிறது. இந்த இடத்தை நிர்வகிப்பது சோனியா- ராகுலின் நிறுவனமான யங் இந்தியாதான்!
சரி இந்த ஏஜேஎல் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் யார் தெரியுமா? காங்கிரஸ் கட்சிப் பொருளாளர் மோதிலால் வோராதான்! ஏஜேஎல் நிறுவனத் பங்குதாரர்களாக் இருப்பவர்கள் யாரெல்லாம் தெரியுமா? மறைந்து போன ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பெரோஸ் காந்தி, பிர்லா இவர்கள்தான். இப்படி இறந்துபோனவர்களெல்லாம் கூடித்தான் சோனியா நிறுவனத்துக்கு ஹெரால்ட் ஹெளஸை கொடுக்கச் சொன்னார்களாம்!

பாடகி சின்மயி விவகாரத்தில் உண்மையில் நடந்தது?

நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.
ஆனால் எதையும் பகுத்தறிந்து ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லுகிற முற்போக்காளர்களாக அறியப்படும் சில எழுத்தாளர்கள் கூட அதே பாணியில் தீர்ப்பு எழுதுவதையும், இதுதான் சாக்கு என நானும் உத்தமன்தான்.. பெண்களை தாயாக மதிக்கிறேன்.. என நிருவ முயல்வதையும் ‘’ பிரபல பாடகி சின்மயி - ஆபாச ட்விட்’’ விவகாரத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. என்னதான் அறிவுஜீவிகள் சொன்னாலும் உண்மை வேறு மாதிரி இருந்தது.

Ambaniகாகவே அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர்? கெஜ்ரிவால் கேள்வி

நாட்டை வழிநடத்துவது பிரதமரா? முகேஷ் அம்பானியா?: கெஜ்ரிவால் கேள்வி




டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆதாயம் அடைவதற்காகவே நாட்டின் மத்திய அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர் என்றும் நாட்டை வழிநடத்துவது பிரதமர் அல்ல... முகேஷ் அம்பானி தான் என்றும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலியத் துறை அமைச்சகப் பொறுப்பு பறிக்கப்பட்டு அவர் முக்கியத்துவமில்லாத அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டார். இது கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
கிருஷ்ணா- கோதாவரி படுகையில் அரசுக்கு பல்லாயிரம் கோடி நட்டம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவுக்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பதாலே ஜெய்பால் ரெட்டியின் அமைச்சகப் பொறுப்பு மாற்றப்பட்டது என்று அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர்.

DMK MLA க்கள் வெளியேற்றம்- சேது' குறித்துப் பேச தடை


சென்னை: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர முயன்ற திமுக உறுப்பினர்களுக்கு சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களை அவைக் காவலர்களை வைத்து சபாநாயகர் தனபால் வெளியேற்ற உத்தரவிட்டார்.
சட்டசபையில் இன்று சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர் திமுக எம்.எல்.ஏக்கள். ஆனால் அதற்கு அனுமதி தர சபாநாயகர் தனபால் மறுத்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து அனைவரையும் வெளியேற்றினர். இதைக் கண்டித்து அவைக்கு வெளியே திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் பங்கேற்கத் தடை

ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு

திருவாரூர் தங்கராசு திராவிடகழகத்தின் தூணாக பெரியார் காலத்தில்
இருந்தவர். ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்.  
Rattha Kanneer 1954

M. R. Radha, M. N. Rajam, Sriranjani Jr, S. S. Rajendran, J. P. Chandrababu, ‘Appa’ Duraiswami, S. R. Janaki, K. S. Angamuthu, Kusalakumari - Sai-Subbulakshmi (dances)
பெரியார் இறந்தபோது தி.க உடைந்தது.
அய்யா இறந்து பிணம்  எடுக்குமுன்னரே  இரு கோஷ்டிகளும் தனித்தனியாக உட்கார்ந்துவிட்டனர் என்பதே உண்மை. மணியம்மையை முன்னிறுத்தி வீரமணிகோஷ்டி.திருவாரூர் தங்கராசு கோஷ்டி. இரு தி.க வாக உடைந்ததற்கு கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் தான் காரணம். தி.கவிலும் தி.மு.க.,அ.தி.மு.க அரசியல்.
திமுக மணியம்மைக்கு ஆதரவு. அதிமுக திருவாரூர் தங்கராசுவுக்கு ஆதரவு.
அந்த துக்க நிகழ்வில் ஒரு அதிசயம். எம்.ஆர்.ராதாவும் திருவாரூர் தங்கராசுவின் அபிமானியாதலால் எம்.ஜி.ஆரும் ராதாவும் ஒரே பகுதியில் அமர்ந்தனர்!

மனைவி டெலிவரியைப் பார்த்து செக்ஸே வெறுத்துப் போச்சு... ஒரு கணவரின் அனுபவ ரிப்போர்ட்!

லண்டன்: என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர் எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர்.
மனைவி கர்ப்பமாக இருக்கும்போது 'சைடு சானல்' பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நானும் சரி எனது மனைவியும் சரி பத்து வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் ரீதியான எந்த செயல்பாடுகளும் இல்லை, பேச்சுக்களும் இல்லை. இருவருக்குமே செக்ஸில் விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் செக்ஸ் இடம் பெறவில்லை.

சென்னையில் தரை தட்டிய கப்பல் :பொறியாளர் பலி

சென்னையில் இருந்து குஜராத் புறப்பட்ட கப்பல் நீலம் புயலால் தரை தட்டியது. இதையடுத்து படகு மூலம் 17  பேர் தப்பிக்க முயன்றனர்.  இதனால் விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தினால்17 பேரும் மருத்துவமனையில் 17 பேரில் ஆனந்த் என்ற பொறியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான ஆனந்த், விழுப்புரம் மாவட்டதைத்சேர்ந்தவர்எஞ்சிய 16 பேர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டுள்ளனர்

Super Singer பிரகதிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிய பிரகதிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தியாசமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த பிரகதியை தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.

ஜாமீனில் வெளியில் வந்த பொன்முடி மீண்டும் கைது

திருச்சி: செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக திருச்சி சிறையில் அடைக்கபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாமீனில் வெளியில் வந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.