ஹைதராபாத்:
ஸ்ரீகாகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் தெலுங்கு தேசம் தலைவர்களுள்
ஒருவரான எர்ரன் நாயுடு எம்பி பலியானார். அவருக்கு வயது 55.
அவர் பயணம் செய்த கார், ஒரு டேங்கர் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்த எர்ரன் நாயுடு, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஸ்ரீகாகுளம் தொகுதியின் இப்போதைய எம்பியாகவும் இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் கூட.
ஒரு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, இன்று அதிகாலை 2 மணிக்கு விசாகப்பட்டணத்திலிருந்து ஸ்ரீகாகுளத்துக்கு சென்று கொண்டி்ருந்தார் எர்ரன் நாயுடு. அப்போது ரணஸ்தலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நடந்தது.
உடனடியாக அவரை ராஜீவ் காந்தி மருத்துமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் 3.30 மணிக்கு எர்ரன் நாயுடு இறந்தார்.
எர்ரன் நாயுடுவுக்கு ஒரு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
அவரது மறைவு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக