வெள்ளி, 5 அக்டோபர், 2012

திரையரங்குகளில் அதிக கட்டணம் 1,000 கோடி மோசடி

விசாரிக்க உத்தவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, அக்.4- தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்து ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகில இந்திய நுகர்வோர் மற்றும் லஞ்சம், குற்றம் ஒழிப்பு அமைப்பின் தலைவராக இருக்கிறேன். சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணம் பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்து பதில் பெற்றுள்ளேன்.
திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து 31.12.2006 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்மத அம்பு சினிமாவை பார்ப்பதற்காக கொளத்தூரில் உள்ள ஸ்ரீகங்கா திரையரங்குக்கு சென்றேன். அந்த திரையரங்குக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணம் ரூ.85 ஆகும்.

உதயகுமார்: "மீடியா'க்களில் தோன்ற ஆசை. சாலைகளை தோண்டி "சீன்'

திருநெல்வேலி: கூடங்குளம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இதுவரை போராட்டம் என்ற பெயரில், "சீன்' காட்டிக் கொண்டிருந்த, வெளிநாட்டு கைக்கூலி உதயகுமார் மற்றும் ஆதரவாளர்கள், தற்போது, செய்வதறியாமல் திகைக்கின்றனர். மேலும், 8ம் தேதி, பெரிய அளவில் போராட்டம் நடத்தவும், அன்று, வன்முறையில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாவது, தங்கள் பெயர் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளிவரும் என்ற ஆசையில் உள்ளனர்.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளில், முதலாவது அணு உலையில், மின் உற்பத்திக்காக, யுரேனியம் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும், 45 நாட்களில், மின் உற்பத்தி செய்யத் துவங்கும் நிலையை அணு உலை எட்டி விடும். இந்நிலையில், வரும், 8ம் தேதி, கூடங்குளம் அணு உலையை, கடல் வழியே முற்றுகையிட, போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

கலைஞர்: கருப்புச்சட்டையை கழற்ற மாட்டேன்

M. Karunanidhiதமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு திமுக தலைவர் கலைஞர் இன்று காலை முதல் கருப்புச் சட்டையை அணிந்துள்ளார்.கலைஞரைத்தொடர்ந்து கழகத்தின் தொண்டர்கள், தோ ழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் கருப்புச் சட்டை   அணிந்து வருகின்றனர். இந்நிலையில், மணிச்சுடர் பத்திரிகையின் 25வது  ஆண் டு விழா சென்னையில் நடைபெற்றது.  திமுக  தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றுப்  பேசினார்.இந்நிலையில், மணிச்சுடர் பத்திரிகையின் 25வது  ஆண் டு விழா சென்னையில் நடைபெற்றது.  திமுக  தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றுப்  பேசினார்.<அப்போது அவர்,  ‘’பெரியார் எடுத்துக்கொடுத்த கருப்புச் சட்டைக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது.  தமிழகத்தின் இழிவு நீங்கும் வரை கருப்புச்சட்டையை கழற்ற மாட்டேன்.  மதவாதத்திற்கு திமுக என்றும் துணை  போகாது’’ என்று ஆவேசமாக பேசினார்
DMK president M. Karunanidhi on Thursday said that hereafter he would wear only black shirts in protest against the AIADMK regime.

Kingfisher விமான சேவையை இன்று துவக்குமா?

புதுடில்லி: "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் விமானச் சேவையை இன்று துவக்குமா என்பதில், நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இன்ஜினியர்கள், விமானிகளுடன் நடத்திய பேச்சில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விமானப் போக்குவரத்து ஆணையத்தின், பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே, மீண்டும் விமானச் சேவையை தொடர முடியும் என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், ஊழியர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் முதல், சம்பளம் வழங்கவில்லை.

வியாழன், 4 அக்டோபர், 2012

மானாட மயிலாட 7 First Prize பாபி- ஸ்வர்ணா

மானாட மயிலாட சீசன் 7 பட்டத்தை பாபி - சுவர்ணா ஜோடி வென்றுள்ளது. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசினை சிறப்பு விருந்தினர்கள் டாப்ஸியும், விவேக்கும் வழங்கினார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடும் இந்த ரியாலிட்டி ஷோ 7 சீசன்களை கடந்துள்ளது. சீசன் 7க்கான இறுதிப்போட்டி செப்டம்பர் மாதம் 8ம் மலேசியாவில் நடைபெற்றது. கலா, குஷ்பு, நமீதா நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் நான்கு ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக நடனமாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய பாபி - சுவர்ணா ஜோடி முதல்பரிசைத் தட்டிச்சென்றனர். இரண்டாவது இடத்தை சுஜித் - அங்கிதா ஜோடியும் மூன்றாவது இடத்தை புவியரசு - அனுஷா ஜோடி தட்டிச்சென்றனர்.

சினிமா பள்ளி' தொடங்குகிறார் கமல்!

சென்னை: சினிமா கலைஞர்களுக்கென ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாஸன்.
சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர் கமல் ஹாஸன். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சிரமங்களை அறிந்தவர் என்பதால், முடிந்தவரை அவர்களின் நலனுக்கு தன்னாலானதைச் செய்து வருகிறார்.
இப்போது சினிமா கலைஞர்களுக்கு பயிற்சி பள்ளி தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக சென்னையில் பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க கமலஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் கமல் கூறுகையில், "நான் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள இடங்களோ, வசதிகளோ கிடையாது.
ஆனால் இப்போது அதற்கான வசதிகள் பிரமிக்கத்தக்க வகையில் பெருகிவிட்டன. நடிப்பு பயிற்சிக்காக ஏராளமான பள்ளிகள் உள்ளன.
அதே சமயத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் கடினமான பணிகளை செய்பவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பள்ளிகள் கிடையாது.
எனவே அப்படிப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பள்ளியை தொடங்க முயற்சி எடுத்து வருகிறோம். இதுகுறிப்பாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்," என்றார்.

Consumerism பைக்குக்காக கொலை: தொடரும் பயங்கரம்!

புனே நகர மக்களை மட்டும் அல்லாமல் கேள்விப்பட்ட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியான அச்செய்தி. 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.
ஷூப் ராவல் என்ற 5 வயது சிறுவனின் பெற்றோர்கள் விஞ்ஞானிகளாக பணி புரிபவர்கள். அச்சிறுவனை ஹோட்டல் நிர்வாகம் படிக்கும் 19 வயது நிரம்பிய பர்மிந்தர் சிங் என்ற இளைஞனும், பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவனும் சேர்ந்து கடத்தி, பணயக் கைதியாக்கி, அவனுடைய பெற்றோர்களிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கி அதன் மூலம் மோட்டார் பைக் வாங்குவது என்று திட்டம் வகுத்து உள்ளனர்.

திமுக: கறுப்பு டிரஸ் மட்டுமே! மனித சங்கிலி போராட்டம் ரத்து

 Dmk S Human Chain At Chennai Only போலீஸ் அனுமதி கிடைக்காததால் திமுக மனித சங்கிலி போராட்டம் ரத்து: 'கறுப்பு டிரஸ்' மட்டுமே!

லாக் அப் டெத்,,விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மரணம்

எஸ்.ஜ. முனுசாமி, ஒரு விசாரணை ஸ்டேஷன் வரை வந்து விட்டுப்போ என கூட்டிச் சென்றிருக்கிறார். ஸ்டேசனில் அவரிடம் 70 பவுன் நகை திருட்டு வழக்கில் உனக்கு சம்பந்தம் உள்ளது ஒத்துக்கொள் என மிரட்டிய பேலீஸார் வெவ்கடேஷனைத் தாக்கி. 
மதுரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.  இவர் கடந்த 2010ல் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பிருந்த தால் அந்த வழக்கு பரமக்குடி நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.  அதற்கு ஆஜராகும் பொருட்டு கடந்த 2ந் தேதி மாலை பரமக்குடி வந்திருக்கிறார்.

அப்போது அவரை பரமக்குடி காவல்நிலைய எஸ்.ஜ. முனுசாமி, ஒரு விசாரணை ஸ்டேஷன் வரை வந்து விட்டுப்போ என கூட்டிச் சென்றிருக்கிறார். ஸ்டேசனில் அவரிடம் 70 பவுன் நகை திருட்டு வழக்கில் உனக்கு சம்பந்தம் உள்ளது ஒத்துக்கொள் என மிரட்டிய பேலீஸார் வெவ்கடேஷனைத் தாக்கியதாக தெரிகிறது.

காந்தி ஜெயந்தி..மாமிச உணவு BJP தலைவர் ஈஸ்வரப்பா

 Karnataka Deputy Cm Eshwarappa Draw காந்தி ஜெயந்தி..மாமிச உணவு திருவிழாவில் வகையாய் சாப்பிட்ட கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

தீவிர ஆர்எஸ்எஸ்காரரான ஈஸ்வரப்பா கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவராவார். முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுடன் தீவிர மோதலில் இருந்து வருகிறார். இவர் கட்சியின் மத்தியத் தலைமையின் ஆதரவு உண்டு.
இந் நிலையில் காந்தி ஜெயந்தியன்று தனது சொந்த ஊரான ஷிமோகாவில் நடந்த படூதா என்ற மாமிச உணவு விழாவில் கலந்து கொண்ட ஈஸ்வரப்பா வெரைட்டிகளை ஒரு கை பார்த்துள்ளார். இது குறித்து அவரது உறவினர் ஒருவரே வெளியே பெருமையாக சொல்லி, அவரை வம்பில் மாட்டி விட்டுள்ளார்.
இதையடுத்து ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரசார் கர்நாடக ஆளுநரிடம் பரத்வாஜிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், இதை ஈஸ்வரப்பா வன்மையாக மறுத்துள்ளார். நான் காந்தி ஜெயந்தியன்று எந்த மாமிச விழாவிலும் கலந்து கொள்ளவில்லை, மாமிசத்தையும் உண்ணவில்லை. இந்தத் தகவல் முழுப் பொய் என்று கூறியுள்ளார்.

Kingfisher ஊழியரின் மனைவி தற்கொலை ஊதியம் வராததால்

 Kingfisher Employee S Wife Commits Suicide ஊதியம் வராததால் குடும்பம் நடத்த வழியில்லாமல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியரின் மனைவி தற்கொலை

டெல்லி: ஊதியம் இல்லாதததால் பெரும் கஷ்டத்தில் தவித்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கணவருக்கு ஊதியம் வராததால் வீட்டில் ஏற்பட்ட கஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிரவுண்ட் ஸ்டாப் ஆக பணியாற்று வருபவர் மானாஸ் சக்ரபர்த்தி. இவரது மனைவி சுஷ்மிதா (45) இன்று டெல்லியில் மங்கள்புரி பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்!

“பிர்லாவோ அல்லது டாடாவோ
அம்பானியோ அல்லது பேட்டாவோ
எல்லாரும் அவங்கவங்க லாபத்துக்கு
நாட்டை கூறு போடுறாங்க
நம்மோட ரத்தத்திலதான்
அவங்க எஞ்சின் தட தடன்னு ஓடுது!” ஏ எம் துராஸ் என்பவர் எழுதிய இந்த பாடல் வரிகள் பிரகாஷ் ஜா இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் சக்ரவியூஹ் என்ற இந்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
‘டாடா, பிர்லா போன்ற வணிக நிறுவனங்கள் தமது லாபத்துக்காக நாட்டை சுரண்டுகின்றன’ என்ற பொருள்படும் இந்த வரிகள் இந்திய முதலாளிகளின் ஏகோபித்த எதிர்ப்பை சந்தித்திருக்கின்றன. ஆதித்ய பிர்லா குழுமத்தின் சட்டத் துறை தலைவர் அசோக் குப்தா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதைப் பற்றி முறையிடுவோம்” என்று சொல்லியிருக்கிறார்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் “இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் எந்த நபரையும் அல்லது பிராண்டையும் குறை சொல்லவில்லை” என்ற விளக்கத்தை சேர்க்கும்படி பிரகாஷ் ஜாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. “நக்சலைட்டுகள் பிரச்சனை குறித்த இந்த படத்தில் தொடர்புள்ள காட்சியில் இந்த பாடல் இடம் பெறுகிறது. எந்த ஒரு தனிநபருக்கோ பிராண்டுக்கோ தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த பாடல் எழுதப்படவில்லை. இந்த விளக்கத்துடன் பாடல் படத்தில் இடம் பெறும்’” என்று ஏற்கனவே சரணடைந்து விட்டிருக்கிறார் பிரகாஷ் ஜா.

கணவனின் செக்ஸ் கொடுமையால் மனைவி தற்கொலை

ஆவடி :பேராசிரியர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி பருத்திப்பட்டு அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் பத்மபிரியா (24). பிசிஏ பட்டதாரி. இவருக்கும் திருச்சி உத்தமர்கோயில் மங்களம் அப்பார்மென்ட்டில் வசிக்கும் கிஷோர்குமார் என்பவருக்கும் இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக கிஷோர்குமார் உள்ளார். திருச்சியில் பெற்றோர், மனைவியுடன் கூட்டு குடும்பமாக கிஷோர்குமார் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு பத்மபிரியாவை அழைத்துக் கொண்டு அவரது மாமியார் கலா, ஆவடிக்கு வந்தார். அங்கு அவரது பெற்றோரிடம், ‘பத்மபிரியாவுக்கு உடல் நலம் சரியில்லை, அதனால்தான் அழைத்து வந்தேன் என கூறி அவரை விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மபிரியா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.

நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறியவர் நரேந்திர மோடி.. திக்விஜய் கடும் தாக்கு

RSS  கொடுத்த நாஜி பாரம்பரிய


பயிற்சியில் ஊறித் திளைத்தவர் நரேந்திர மோடி. அதனால்தான் கொடும் உள் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுகள் குறித்து அவதூறாகக் கேள்வி கேட்கிறார் அவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் திக்விஜய் சிங் கூறுகையில்,
நாஜி பாரம்பரிய பயிற்சியை நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் கொடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் எப்போதுமே அப்படித்தான். அதற்கு மோடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா. அவரும் நன்றாகவே பயிற்சி எடுத்துள்ளார்.
நாஜிக்களின் பாரம்பரியமே அவதூறாகப் பேசுவது, உள்நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டுக்களை வைப்பதுதான். அதைத்தான் தற்போது மோடியும் செய்து வருகிறார். பொய்யைச் சொல்லுங்கள், அதை உரக்கச் சொல்லுங்கள், உறுதியாககச் சொல்லுங்கள், நூறு முறை சொல்லுங்கள் என்பதுதான் நாஜிக்களின் தத்துவம். அதைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் தனது தொண்டர்களுக்குச் சொல்லித் தருகிறது. The violence created a gulf between Hindus and Muslims that, even a decade later, is yet to be bridged. Compensations can hardly undo the damage. Even today, families fear to return to their original villages. Widows continue to struggle to earn their livelihood. Rape victims are still counselled for trauma. The families of the convicted cry foul. Businesses struggle to survive.
குஜராத் முதல்வருக்கும், நாஜிக்களின் பொய்ப் புளுகன் ஜோசப் கோயபல்ஸுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மோடியை நினைத்தால் கோயபல்ஸ் தான் நினைவுக்கு வருகிறார்.

ஜெயலலிதா அதிரடி 60க்கும் மேற்பட்ட நமக்கு வாய்த்த நிர்வாகிகள் dismiss

அதிமுகாவின் பொதுக்குழு தீர்மானத்திற்கு அமைய பலரின் பதவிகளை பறிக்க வேண்டி கழகம் முடிவுசெய்துள்ளது . அட நீங்க ஒன்னு ஜனநாயக நாட்டில் சும்மாவேனும் பொதுக்குழு தீர்மானம் புடலங்கைன்னு ,
கடந்த சில தினங்களாக அ.தி.மு.க.வில் அதன் பொது செயலாளர் ஜெயலலிதா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சபாநாயகர் டி.ஜெயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.நேற்று தென் சென்னை, வட சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றப்பட்டனர், மேலும் தமிழக அமைச்சரவையும் மாற்றி அமைக்கபட்டு சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு அ.தி.மு.க கொறாடா மோகனுக்கு அமைச்சர் பதவி வழங்கபட்டது.இந்த நிலையில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொது செய்லாளருமான ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் சென்னை திருவள்ளுரை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் பதவிகளை பறித்து உத்தரவிட்டு உள்ளார்.

கொத்தடிமை Cooperate நாமக்கல் பள்ளிகள்


ள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது: கர்நாடக தமிழ்ச் சங்கம்

பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை கர்நாடகம் ஏற்க மறுத்தது. பினன்ர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Super Singer Junionr 3 வைல்ட் கார்டு கடுமையான போட்டி

ஓட்டுக்கேட்டு பாட்டு பாடும் குட்டீஸ்கள்!Posted by: Mayura Akilan

சூப்பர் சிங்கர் ஜூனியரில் இப்பொழுது வைல்ட்கார்டு சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இறுதிச்சுற்றுக்கு தங்களைச் தேர்வு செய்யச் சொல்லி ஓட்டுகேட்டு பாட்டு பாடுகின்றனர் 10 குட்டீஸ்கள். இவர்களில் யாழினி, அஜீத் இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவிஞர் தாமரை சூர்யாவுக்கு ஐசோ ஐஸ்

A still from Maatraan. Photo: Special Arrangementகவிஞர் தாமரை பேசுகையில் ” சூர்யாவிற்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த இசையில் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் கற்பனை செய்துகொண்டே தான் ’யாரோ யாரோ’ பாடலை எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது” என்று கூறினார் கவிஞர் தாமரை சூர்யாவுக்கு ஐசோ ஐஸ் 

Kerala வெவ்வேறு மதங்கள் காதலன் எரித்துக்கொலை

காதல் தகராறில் கால்பந்து வீரர் எரித்து கொலை - காதலன் இந்து காதலி இஸ்லாம் கேரளாவில் மதவெறி
Hate Jihad in Kerala: Youth Set Ablaze, Succumbs to Burns A Malayali youth Jithu Mohan, who was doused with petrol and set ablaze for being in love with a girl of the Muslim community succumbed to death today. The boy was invited to the girl’s relative’s house on the pretext of peaceful discussions. But he was allegedly bathed in petrol by an Inspector named Wahab, Police Officer of AR Camp and set ablaze. Jithu succumbed to death at Amrita Hospital, Ernakulam. He is the third victim of Jihadi terrorism in Kerala in short span of time, his death following that of Vishal, Chengannur and Sachin, Kannur.

காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாருமூட்டைச் சேர்ந்தவர் மோகனன். இவரது மகன் ஜித்து மோகன் (வயது 21). ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜித்துமோகன் படித்து வந்தார் கால்பந்து வீரரான இவர் சமீபத்தில் மிசோராம் மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட போட்டியில் கேரள அணியின் துணை கேப்டனாக பங்கேற்றார். இவர் சுனக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கொடுங்கலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அங்கிருந்து அந்தப் பெண் ஜித்துமோகனை தொடர்பு கொண்டு பேசினார். இதனால் வெளியூரில் இருந்தாலும் இருவரின் காதலும் தொடர்ந்தது.
இது உறவினர்களுக்கு தெரிய வந்ததும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பெண்ணின் நெருங் கிய உறவினரான போலீஸ்காரர் ஒருவரிடம் இப்பிரச்சினையை பேசி தீர்க்கும்படி கூறினர்.அதன்படி போலீஸ்கார உறவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜித்துமோகனை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

Theme parks Chennai 6 மாதங்களில் 3 விபத்துக்கள் அதிகாரிகள் தட்டிகழிப்பு

ஒரு இரும்பு கம்பி மட்டும் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பிக்கு கீழே அதிகமான இடைவெளி உள்ளது. இதன் வழியாக பருமனான உடல் கொண்டவர்கள் கூட விழ வாய்ப்பு உள்ளது. 
பொழுதுபோக்கு பூங்காக்களில், உபகரணங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததும், பூங்காக்களின் செயல்பாடுகளை அரசு முறையாக கண்காணிக்காததுமே விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி., பொழுதுபோக்கு பூங்காவில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அபியா மேக், 25 என்ற விமான பணிப்பெண், ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றிய போது, தவறி விழுந்து இறந்தார். இதே பூங்காவில் கடந்த ஆறு மாதங்களில் தற்போது நடந்தது மூன்றாவது விபத்து. கடந்த ஏப்ரல் மாதம் சின்மயா நகரைச் சேர்ந்த ரிச்சாஷா என்ற இளம்பெண், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற 16 வயது சிறுவன் சறுக்கி விளையாடிய போது, தவறி விழுந்தார். இதில், காயம் ஏதுமின்றி தப்பினார். எச்சரித்தும் அலட்சியம்:

இந்தித் எதிப்பு திராவிடர் கழகமும் திமுகவும் இருமுனைகளில் போராடின.

நிறைவேறிய காந்தி கனவு


மொழிப்போர் / அத்தியாயம் 9
இந்தியாவின் ஆட்சிமொழி எது என்பதில் மத்திய சட்டமன்ற (நாடாளுமன்ற) காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அவற்றைக் களைந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. என். கோபாலசாமி அய்யங்கார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதுல்லா, எம்.என்.ராய், அபுல் கலாம் ஆசாத், பண்டித பந்த், புருசோத்தம தாஸ் தாண்டன், பாலகிருஷ்ண சர்மா, சியாமா பிரசாத் முகர்ஜி, கே. சந்தானம் ஆகியோர் இடம்பெற்றனர்.

எதிர்ப்பை கண்டு பயப்பட மாட்டேன்: சோனியா ஆவேசம்

ராஜ்கோட்:""நாட்டு நலனுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்ப்பு எழுவது வழக்கமானது தான்; இது போன்ற எதிர்ப்புகளை கண்டு, இப்போது மட்டுமல்ல, எப்போதும் பயப்பட மாட்டேன்; நாட்டு நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்,'' என, காங்., தலைவர் சோனியா பேசினார்.
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கியுள்ளன. ஆளும் பா.ஜ., சார்பில், முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், பிரசாரத்தை துவக்கி விட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், பிரசார களத்தில் இறங்கியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் நேற்று நடந்த விவசாயிகள் மாநாட்டில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர் ஊழல் செய்வதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ., ஆளும் மாநில அரசுகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளது; இதுகுறித்து, பா.ஜ., மேலிட தலைவர்கள், வாய் திறக்க மறுப்பது ஏன்?

மேதகு வேண்டாம்; பிரணாப் அறிவுரை

புதுடில்லி :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "அழைப்பிதழ்களில், என் பெயருக்கு முன், "மேதகு' மற்றும் "மாண்புமிகு' போன்ற வார்த்தைகளை போட வேண்டாம். "ஸ்ரீ' என்ற வார்த்தையை போட்டால் போதும்' என, தன்னை, நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மரபுகளை தகர்த்தெறிந்து, "மக்களின் ஜனாதிபதி' என, பெயரெடுத்த பெருமை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சேரும். இவர், ஜனாதிபதியாக இருந்தபோது, ஆடம்பரங்களை தவிர்த்து, எளிமையை பின்பற்றினார். நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும், சாதாரண மக்களுடன் நெருக்கம் காட்டி வந்தார்.தற்போதைய ஜனாதிபதியான, பிரணாப் முகர்ஜியும், சமீபகாலமாக எளிமையை பின்பற்ற துவங்கியுள்ளார்.

புதன், 3 அக்டோபர், 2012

மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டின் சஸ்பெண்ஷன்-ஒரு வழக்கில் ரத்து

குஜராத் கலவரத்தின்போது குஜராத் மாநில உளவுப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக பதவி வகித்து வந்தார் பட். மேலும் நரேந்திர மோடி வீட்டில் கலவரத்திற்கு முன்பு கூடிய கூட்டத்தின்போதும் பட் உடன் இருந்தார். அப்போது குஜராத் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாமல் விடுமாறும், இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும்படியும் காவல்துறை உயர் அதிகாரிகளை மோடி அறிவுறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் பட். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட்டிலும் தெரிவித்திருந்தார்.
அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த நடவடிக்கையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
இருப்பினும் மேலும் 2 வழக்குகளில் சஞ்சய் பட்டுக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த பெரும் இனக்கலவரத்தில் ஆயிரத்திற்கும மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் பட் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்தார். அதில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கியத் தகவலை அளித்திருந்தார். இதையடுத்து பட் மீது மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மோடி அரசு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சஸ்பெண்ட் செய்தது.