திங்கள், 26 மார்ச், 2012

2 இந்திய வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் ஆசிய பெண்கள் குத்துச்சண்டை

Boxersஉலன்பாடர்: ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.
மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மிடாஸ் மோகன் ஏன் கைது? இவர் ‘தட்டியது’ யாரை?

Viruvirupu, சின்டிகேட்டின் மற்றொரு முக்கிய புள்ளி மிடாஸ் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாஸ்திரி நகர் போலீஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிடாஸ் மோகனைக் கைது செய்தனர். பண மோசடி புகாரில் அவர் கைதாகியுள்ளாராம். அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாமே தவிர, அதுதான் காரணம் என்று டிடித்துச் சொல்ல முடியாது.சசிகலா குடும்பத்திற்கு ‘ரொம்பவும் வேண்டப்பட்ட’ ஆட்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பணத்தை வாரிக் கொட்டிய மிடாஸ் நிறுவனம், இப்போது பழைய சுறுசுறுப்பில் இல்லை. இந்த நிறுவனத்தின் ஓனர்ஷிப் பற்றி பேசினால், தலை சுற்றும். அந்த அளவுக்கு, பேப்பரில் ஒரு பெயர், நிஜத்தில் ஒரு ஆள், கன்ட்ரோல் பண்ணுவது ஒருவர், ஹேன்டில் பண்ணுவது ஒருவர் என்று மாயக் குகை இது.

இனி அத்தனையும் இலவசம்!1-10 வரை மாணவர்களுக்கு செருப்பு முதல் பென்சில் வரை


Students
சென்னை: 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு அத்தனையும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அரசு நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தபின் வட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 313.13 கோடி ரூபாய் மாணவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் கடும் எதிர்ப்பு..திருமண சட்ட திருத்த மசோதாவில் புதிய விதி

மனைவி விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லாமல் போகிறது



சென்னை: மத்திய அரசின் திருமண சட்ட திருத்த மசோதாவில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் பெண்களுக்கு மட்டுமே சாதகமானது என்பது ஆண்கள் சங்கத்தின் கருத்து.
இது தொடர்பாக தமிழ்நாடு(கண்றாவி ) ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.அருள் துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

TN Budget புகழுக்கு மயங்கியவர் யாரும் நல்ல ஆட்சி கொடுக்கமுடியாது

தமிழக பட்ஜெட் இன்று காலை சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது. அடிப்பøடை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வி.ஏ.,ஓ.,க்களுக்கு லேப்டாப் வழங்குதல், பயிர்க்ககடனுக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு , 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கப்படும், இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்படும் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ. 14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க,. எம்,எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை ஜெயலலிதாவின் புகழ் பாடிய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஜெ.,தயாரித்துள்ள தொலைநோக்கு திட்டம் வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.

மேல்தட்டு இனவெறி... கிராமப்புற மக்கள் சமாதானமாக வாழ விரும்புகிறார்கள்.

மற்றவர்களைக் காட்டிலும் கொழும்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினரே அதிகளவு இனவெறி உள்ளவர்களாக இருக்கிறார்கள் எனக் கல்விமான் ஒருவர் தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா எதிர்கொள்ளும் அதிக சவாலான விடயம், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், எனப் பாகுபாடற்ற ஸ்ரீலங்காவாசிகள் என்கிற சமுதாயத்தை உருவாக்க, கல்வித் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது...... வர்த்தக சமூகத்தினருக்கு இதில் முக்கிய பாத்திரம் உள்ளது.
பேராசிரியர் றோகான் குணரத்ன, சமீபத்தில் கல்வி ஊடாக சமரசம் என்கிற கருத்தரங்கில் உரையாற்றும்போது, வர்த்தக சமூகத்தினருக்கு நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு முக்கிய பாத்திரம் காத்துக் கிடக்கிறது, ஆனால் நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளைக் காட்டிலும் கொழும்பிலுள்ள உயரடுக்கு பிரிவினரிடையேதான் அதிகளவு இனவெறி காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

எந்தெந்த நடிகைகளோடு தொடர்பு இருந்தது?ராவணனின் மன நிலை

காண்ட்ராக்டரை மிரட்டி பணம் பறித்துக்கொண்டதாக ஜனவரி 27-ந் தேதி கைது செய்யப்பட்ட ராவணன் மீது, மேலும் பல மோசடி வழக்குகள் பதியப்பட்டு அவர், இன்றுவரை நீதிமன்றம், போலீஸ் கஸ்டடி, சிறைவாசம் என தொடர்ந்து அனுபவித் துக்கொண்டிருக்கிறார். ‘
ஆடிய ஆட்டத் துக்கான வெகுமதி செமையாகக் கிடைத்திருக்கிறது‘ என ர.ர.க்களில் பெரும்பான்மையானோர் உற்சாகத்தில் திளைத்துவரும் நிலையில்...

560 மடிக்கணினிகள் தூக்கம் தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டது

சென்னை, மார்ச்.25-பட்ஜெட் தேதி அறிவிக்கப் பட்ட பின்னர் புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பது முறைதானா? தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட 560 மடிக்கணினிகள் பரணில் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்று தி.மு.க. தலைவர்  கலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- தமிழக அரசின் 2012-13ஆம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கை 26-ஆம் தேதி வர விருப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பிறகு, முதல்-அமைச்சர் சில அறிவிப்புகளை செய்திருப்பது முறைதானா?
பதில்:- கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய வரிகளை தமிழக அரசின் சார்பில் விதித்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைப் போலவே தான் 26ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ள நிலையில்; முதலமைச்சர் காவல் துறையை அதிநவீனமயமாக்க ரூ.34 கோடிக்கு முன் னோடி திட்டங்களையும், ஆதிதிராவிடர், பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் 4,050 பேர் பயன்பெறத்தக்க வகையில் ரூ.5.34 கோடிக்கு 53 விடுதிகளை தொடங்கவும், 187 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், போடியில் ரூ.94 கோடியில் புதியதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதாக செய்தி வந்துள்ளது. நிதிநிலை அறிக்கை என்றாலே அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கும் அறிக்கைதான். ஆனால் நிதிநிலை அறிக்கை 26-ஆம் தேதி என்று அறிவித்துவிட்டு, இவ்வாறு அரசின் அறிவிப்புகளையெல்லாம் முதலமைச்சர் செய்வது முறை தானா?

கணவரின் ஓய்வூதிய பலன்களை பெற 2ஆவது மனைவிக்கு உரிமை இல்லை குழந்தைகளுக்கு உரிமை உண்டு

சென்னை, மார்ச் 25-ஆவடியை சேர்ந்தவர் சாய்ராம். மத்திய அரசு ஊழியர்.இவரது மனைவிகிருஷ்ண வேணி, 2 குழந்தைகள் பிறந்த பிறகு, கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து, சாய் ராம் அதே பகுதியை சேர்ந்த மீராவை இரண் டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. பின்னர் சாய்ராம் மரண மடைந்தார்.மீரா பெயரை வாரிசு என்று சாய்ராம் குறிப்பிட்டி ருப்பதால், கிருஷ்ண வேணிக்கு ஓய்வூதியப் பலன்களை தர முடி யாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதை எதிர்த்து, கிருஷ்ண வேணி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சாய் ராமின் ஓய்வூதியப் பலன்களைபெற கிருஷ்ணவேணிக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட் டது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, விமலா அடங் கிய அமர்வு அளித்த தீர்ப்பு: முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது 2ஆவது திரு மணம் செய்வது இந்து திருமணச் சட்டத்தின் படி சட்டபூர்வமாகாது. எனவே, முதல் மனைவி கிருஷ்ணவேணிதான் சாய்ராமின் சட்ட பூர்வமான வாரிசு. அவ ருக்கும் அவரது 2 குழந் தைகளுக்கும் சாய்ரா மின் ஓய்வூதியப் பலன் களைப் பெற உரிமை உள்ளது. மீரா சட்ட பூர்வமான வாரிசு இல்லாவிட்டாலும், அவரது குழந்தைகள் சாய்ராமின் சட்டபூர்வ வாரிசாகிறார்கள்.

Pakistan கட்டாய மதமாற்றம் தடுக்க புதிய சட்டம் கொண்டு வர கோரிக்கை



பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் தேவை என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, மதச் சிறுபான்மையினரை பாதுகாப்பது குறித்து, தேசிய நல்லிணக்க அமைச்சர் அக்ரம் மஷிஹ் கில் அளித்த பேட்டியில்,  

‘’இது போன்ற கட்டாய மதமாற்றங்கள், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானவை. மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் ஒன்று தேவை.

பாபா ராம்தேவுடன் இணைந்து செயல்படுவேன்: ஹசாரே


ஊழல் புகார்கள் உள்ள அனைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார்.
 வலுவான லோக்பால் மசோதா கோரி புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், யோகா குரு பாபா ராம்தேவுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார்.

France இஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி

இஸ்லாமாபாத் : பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 12 க்கும மேற்பட்ட முஸ்லிம் இன மக்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ‌வடமேற்கு பகுதியில் தீவிரவாத பயிற்சி அளித்து வருகின்றனர் என பாகிஸ்தானின் உளவு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தி்ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பள்ளிக்குழந்கைளின் மீதான தாக்குதல் ஒரு சிறு உதாரணமாகும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த மூன்றாடுகளில் மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நாட்டை ‌சேர்ந்த முஸ்லிம் இன மக்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் வடக்கு வார்சிஸ்தான் பகுதியி்ல் தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். இவற்றில் பிரான்ஸ் நாட்டு தளபதியாக விளங்கியவர் அபு தரீக் என்பவர் .இவரின் ஆணைப்படி ஐந்து பேர் கொண்ட குழுவினர் கடந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் நாட்டில் சில பணிகளை செய்து முடிக்கும் படி கட்டளையிட்டுள்‌ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு எதிர்ப்பு போராட்டத்திற்கு பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட பின்னணி குறித்து, கைதான பாதிரியார் உள்ளிட்டோர் மூலம், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன.
கூடங்குளம் அணு உலை போராட்டத்திற்கு எதிராக, உதயகுமார் தலைமையிலான குழுவினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு மின் நிலையத்தை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்த பின்பும், உதயகுமார் குழுவினர் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்ட களமான இடிந்தகரை கிராமம், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு, போராட்டக்காரர்கள் அனுமதியுடன் தான், அரசு ஊழியர்களோ, பொதுமக்களோ செல்லும் நிலை உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஜெயலலிதாவின் அலட்சியம்

கடந்த தி.மு.க., ஆட்சியில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தற்போது குறைந்து உள்ளது. ஆட்சி அமைந்த பிறகு, சுழல் நிதி வழங்குவதிலோ, மானியம் பெற்று தருவதிலோ அரசு முனைப்பு காட்டவில்லை என, மகளிர் சுய உதவி குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் ஜோர்: கடந்த தி.மு.க., ஆட்சியில், சமூகநல துறை வசமிருந்து, இந்த குழுக்களின் கட்டுப்பாடு, ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறையை, தன் வசம் வைத்திருந்த துணை முதல்வரான ஸ்டாலின், மாதத்தில் பாதி நாட்கள் மகளிர் சுய உதவிக் குழு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டினார். அரசின் ஆர்வம் காரணமாக, வங்கிகள் போட்டி போட்டு கடன் வழங்க முன்வந்தன. கடந்த தி.மு.க., ஆட்சியில், 1.50 லட்சம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 20 லட்சம் பெண்கள் உறுப்பினர் ஆக்கப்பட்டனர்

நித்தி'யானந்தா! - காமெடி கலாட்டா


ஞாயிறு, 25 மார்ச், 2012

Priyamani: பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல

பொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வேண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட்டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லாமல் போனால் மலையாளம், கன்னடத்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.
தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எங்கு போனாலும், அதற்குத் தகுந்த மாதிரி தன்னைத் தயார் செய்து கொண்டு போவதே அவர் விருப்பமாம்.
பாலிவுட்டில் ஏற்கெனவே இரு படங்களில் நடித்த அனுபவம் ப்ரியாமணிக்கு உண்டு. அந்த அனுபவம் தந்த பாடமோ என்னமோ... புதிதாக வந்த இந்திப் பட வாய்ப்பு ஒன்றை மறுத்துவிட்டாராம். தேஷ்துரோஹி 2 படத்தில் மோனிகா பேடி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் வேண்டாம் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் ப்ரியா மணி.

BJP அதிர்ச்சி. கருநாடகத்திலும் குஜராத்திலும் தோல்வி!

பெங்களூரு, மார்ச்.22- கருநாடக எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், பா.ஜனதா மேலிடம் அதிர்ச்சி அடைந் துள்ளது. இதனால் கருநாடகத் தின் புதிய முதல் அமைச்சராக எடியூரப்பா மீண்டும் அறிவிக் கப்படுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
தென் மாநிலங்களில், கருநா டகாவில்தான் முதன் முறையாக எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.   சட்ட விரோத சுரங்க ஊழல் விவகாரத்தில் லோக் அயுக்தா நீதிமன்றத்தால் குற்றம் சாட் டப்பட்டதைத் தொடர்ந்து, கருநாடக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விலகினார்.

மம்தா பானர்ஜியின் ஜனநாயக விரோத போக்கையும், இறுமாப்பையும், இளக்காரத்தையும்

பார்லிமென்ட் இதுவரை, இப்படிப்பட்ட கேவலத்தைச் சந்தித்ததில்லை. இந்திய ஜனநாயக வரலாற்றில், இதுவரை எந்த அமைச்சரும், தன் சொந்தக் கட்சித் தலைமையால், பார்மென்டில் இப்படிக் கேவலப்படுத்தப் பட்டதில்லை. அதுவும், பட்ஜெட் தாக்கல் செய்த உடனேயே.
இது, பார்லிமென்டிற்கே நேர்ந்த அவமானம். அரசுக்கு மட்டுமல்ல; எந்தப் பிரதமரும் இதுவரை சந்தித்திராத அவமானம் இது. கூட்டணி பேரங்களையும், நிர்பந்தங்களையும் கூட்டணி தர்மம் என்று வர்ணித்து, தன் இயலாமையை அவமானங்களின் மீது, கவுரவப் போர்வையாகப் போர்த்தி வந்துள்ள மன்மோகன் சிங்குக்கு, இதுவும் வேண்டும்,

லோக்சபா தேர்தலிலும் தனித்து ? அ.தி.மு.க., முடிவு

S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
சங்கரன் கோவில் வெற்றி என்பது காசு கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி, அதுபோல் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாமென பாட்டியம்மா நினைத்து தனியாக நின்றால் மக்கள் ஊ .... ஊ ... என சங்கு ஊதிவிடுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல், இரு இடைத்தேர்தல் ஆகியவற்றில், தனித்து நின்று அமோக வெற்றி பெற்ற பின், தனது இலக்காக வைத்துள்ள லோக்சபா தேர்தலிலும், தனித்து நின்றே களம் காண, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய ஆட்சியில், தி.மு.க., அங்கம் வகித்து வருகிறது. இந்த இடத்தில், அ.தி.மு.க., முன்பு இருந்தது. தி.மு.க.,வை வெளியேற்றி, மீண்டும் அந்த இடத்துக்குப் போவதே, முதல்வர் ஜெயலலிதாவின் அடுத்த இலக்காக உள்ளது.ஓட்டு வங்கி அதிகரிப்பு:இதற்காக, இப்போதிருந்தே திட்டங்களை வகித்து வருகிறார். சட்டசபை தேர்தலில், கூட்டணியாக இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க., போன்ற பெரிய கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறிய பின், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை. மாறாக, ஓட்டு வங்கி அதிகரித்தே உள்ளது.

இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்கள்; பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்!

எல்லாம் விளம்பர இன்பம்!
கலைஞர் அறிக்கை;
விளம்பர இன்பத்துக்காக இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்களை முதல்வர் வெளியிடுகிறார் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேள்வி :  தமிழக அரசின் 2012 2013ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 26ந்தேதி வரவிருப்பதாக ஏடுகளில் எல்லாம் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பிறகு, இன்றைய தினம் முதலமைச்சர் சில அறிவிப்புகளைச் செய்திருப்பது முறைதானா?

சசிகலா அண்ணன் மகன் மகாதேவனை தேடும் ADMK போலீசார்

நில அபகரிப்பு வழக்கில், சசிகலா அண்ணன் மகன் மகாதேவனை கைது செய்ய, 100க்கும் மேற்பட்ட போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். மகாதேவன் தலைமறைவாகி விட்டதால், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துபாயில் வசித்து வரும் அமலா புஷ்பமேரி என்பவருக்கு, தஞ்சாவூர் அடுத்த விளார் கிராமத்தில், இரண்டு கிரவுன்ட் நிலம் உள்ளது. இதை, சசிகலாவின் அண்ணன் டாக்டர் வினோதகனின் மகன் மகாதேவன் அபகரித்துக் கொண்டதாக, தஞ்சாவூர் நில அபகரிப்பு மீட்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை வீட்டு வாடகை!போலியான ஒரு டிமாண்ட்

High house rent

சென்னையில் கண்டபடி உயர்ந்து வரும் வீட்டு வாடகை அனைவரையும் கவலை கொள்ள வைத்துள்ளது குறிப்பாக நடுத்தர மக்களை.
முன்பு பேச்சலர்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று கூறியவர்கள் தற்போது அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாடகைக்கு விட யோசிக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் கணிப்பொறி துறையில் கிடைக்கும் அதிக சம்பளம். முக்கியமாக யாரும் அலைய தயாராக இல்லை என்பதால் 1000 அல்லது 2000 அதிகம் என்றாலும் சரி என்று ஒத்துக்கொள்ளும் மனோபாவம்.

மக்கள் நலப்பணியாளர் தற்கொலை!


மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், பணிகளை வழங்காத தமிழக அரசை எதிர்த்து வேலூரில் மக்கள் நலப்பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பணியாளர்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பலநாட்களாக ஆகியும் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ஆயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்கள் ஏழ்மையில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற மக்கள் நலப்பணியாளர் தமிழக அரசின் நடவடிக்கையால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!



டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 8 வரை உயர்த்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
இந்தியாவில் பெட்ரோலின் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

முப்படை முற்றுகையில் கூடங்குளம்...

 தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக வந்​திருந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார், துணை ராணுவப் படையினர் அப்படியே கூடங்​குளத்தைச் சுற்றி குவிக்கப்பட்டனர். தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 'ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்’ படையினருக்கும் சிறப்பு அழைப்பு. போதுமான அளவுக்கு போலீஸார் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர்ந்ததும், கூடங்குளம் எதிர்ப்பாளர்களைக் கொத்துக் கொத்தாக அள்ள ஆரம்பித்தது போலீஸ். அவர்களை ரிமாண்ட் செய்து பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் என்று பல்வேறு திசைகளில் உள்ள சிறைகளில் அடைத்தனர்.
இடிந்தகரைக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உள்ளே இருந்து யாரும் வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. ராதாபுரம் தாலுக்கா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலைகள் முழுக்க போலீஸ் வாகனங்களின்ரோந்து.