ஞாயிறு, 25 மார்ச், 2012

BJP அதிர்ச்சி. கருநாடகத்திலும் குஜராத்திலும் தோல்வி!

பெங்களூரு, மார்ச்.22- கருநாடக எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், பா.ஜனதா மேலிடம் அதிர்ச்சி அடைந் துள்ளது. இதனால் கருநாடகத் தின் புதிய முதல் அமைச்சராக எடியூரப்பா மீண்டும் அறிவிக் கப்படுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
தென் மாநிலங்களில், கருநா டகாவில்தான் முதன் முறையாக எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.   சட்ட விரோத சுரங்க ஊழல் விவகாரத்தில் லோக் அயுக்தா நீதிமன்றத்தால் குற்றம் சாட் டப்பட்டதைத் தொடர்ந்து, கருநாடக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விலகினார்.
இதற்கிடையில், சட்ட விரோத சுரங்க ஊழல் பிரச் சினையில் எடியூரப்பா குற்ற மற்றவர் என்று, கடந்த 7-ஆம் தேதி அன்று கருநாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அன்று முதல், தனக்கு மீண்டும் முதல் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி கட்சி மேலிடத்துக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.
கருநாடக சட்டசபையில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க் களில் 70 பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளனர். எடியூரப் பாவை முதல்-அமைச்சராக்க கோரி, சட்டசபை கூட்டத்தை அவர்கள் புறக்கணித்ததால், கருநாடக பா.ஜனதா ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது முதல் அமைச்சராக பதவி வகித்து வரும் சதானந்தா கவுடா எம்.பி. பதவியை ராஜினாமா செய்த உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா வேட்பாளர் சுனில் குமார் 45 ஆயிரத்து 724 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங் கிரஸ் வேட்பாளர் ஜெயப் பிரகாஷ் ஹெக்டேவிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வியால் பா.ஜனதா மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், ஆட்சியை காப் பாற்ற மீண்டும் எடியூரப்பாவை முதல் அமைச்சர் ஆக்குவது குறித்து மேலிடம் பரிசீலித்து வருகிறது.
அதைத் தொடர்ந்து மேலி டத்தின் அவசர அழைப்பின் பேரில் எடியூரப்பா நேற்று டெல்லி விரைந்தார்.  கட்சி மேலிடத்தின் கட்ட ளையைத் தொடர்ந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்ட சபையை புறக்கணிக்கும் முடிவை எடியூரப்பா கைவிட்டு விட்டார். இந்த நிலையில், எடி யூரப்பாவை மீண்டும் கர்நாடக முதல் அமைச்சராக்கும் அறி விப்பை மேலிடம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குஜராத்திலும் பி.ஜே.பி. தோல்வி
குஜராத் மாநிலத்தில் நடை பெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆந்திர மாநிலத்தில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.
குஜராத் மாநிலத்தில், இன் னும் 8 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், குஜராத் தலைநகர் காந்திநகர் அருகில் உள்ள மான்சா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் மங்கள் தாஸ் பட்டேல் (பா.ஜனதா) மரணம் அடைந்ததால் அந்த தொகு தியில் இடைத்தேர்தல் நடை பெற் றது.
சட்டசபை தேர்தலுக்கு முன் னோட்டமாக நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு இந்த தேர்தல் கவுரவ பிரச்சினையாக கருதப்பட்டது. ஆனால், கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து தனது வசம் இருந்த இந்த தொகுதியை பா.ஜனதா இழந்து விட்டது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பாபுஜி தாகூர், 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் டி.டி.பட்டேலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர் தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாமல் படுதோல் வியை சந்தித்தன.
அடிலாபாத், காமா ரெட்டி, கொல்லாபூர், ஸ்டேஷன் கான்புர் ஆகிய 4 தொகுதிகளில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், நாகர்கர்னூல் தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
தெலுங்கானா பிராந்தியம் அல் லாத ஒரே தொகுதியான கடலோர ஆந்திராவின் கோவூரில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் என்.பிரசன்ன குமார் ரெட்டி வெற்றி பெற்றார்.
ஒடிசா
ஒடிசா மாநிலம், அத்கார் தொகுதி யில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரும், 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப் பட்டவருமான ராணேந்திரபிரதாப் ஸ்வைன், 47 ஆயிரத்து 390 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட் பாளரை வீழ்த்தினார்

கருத்துகள் இல்லை: