திங்கள், 26 மார்ச், 2012

TN Budget புகழுக்கு மயங்கியவர் யாரும் நல்ல ஆட்சி கொடுக்கமுடியாது

தமிழக பட்ஜெட் இன்று காலை சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது. அடிப்பøடை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வி.ஏ.,ஓ.,க்களுக்கு லேப்டாப் வழங்குதல், பயிர்க்ககடனுக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு , 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கப்படும், இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்படும் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ. 14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க,. எம்,எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை ஜெயலலிதாவின் புகழ் பாடிய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஜெ.,தயாரித்துள்ள தொலைநோக்கு திட்டம் வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு: வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9. 3 சதமாக இருக்கும். அதன்படி அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தை பெருக்கிட முக்கிய வழிமுறை காணப்படும். ஏற்றத்தாழ்வுகளை களைந்திட சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து சீரான வளர்ச்சி அடைய 100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 12 ம் திட்ட நிதியை 1.85 லட்சம் கோடியை 2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
ஆதிதிராவிட மற்றும் கிராமப்புற வறுமையை களைந்திட கூடுதல் நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருக்கிட தனியார் நிறுவன துணையுடன் புதிய திட்டம் செயல்படுத்த ரூ.. 193 .2 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மின் ஆளுமைக்கு புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும், வருவாய், பதிவு, சமூக, வேலை வாய்ப்பு ஊரக துறைகளில் ஒட்டுமொத்த கணினி மையம் கொண்டு வரப்படும். ஒரு லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா : * நகர்ப்புற மையங்களில் பொதுச்சேவை மன்றங்கள் அமைக்கப்படும், ஒரு லட்சம் பட்டாமனை வழங்க திட்டம் * மடிக்கணினி வரும் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் * சட்டம் ஒழுங்கு முக்கிய குறிக்கோள் ஆகும். கடந்த 10 மாதங்களில்சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டுள்ளது. முதல்வர் இதில் முழு உறுதி யாக உள்ளார். நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் மூலம் 724 கோடிக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்பு வசதிகள் 100 சதம் நிறைவேற்றப்படும் * ரோந்து படை உயர்த்தப்படும் * தீயணைப்பு நிலையங்கள் மேம்படுத்திட 197.58 கோடி ஒதுக்கீடு * வேளாண்உற்பத்தி 120 லட்சம் டன் உற்பத்தி இலக்கு * இ, செல்லான் திட்டம் விரிவாக்ககம்* ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு ரூ. 15 கோடி * வேளாண்மை துறைக்கு 3 ஆயிரத்து 804 கோடி ஒதுக்கீடு * வேளாண் பன்முனைத்திட்டம் அறிமுகம் *
உரம் குறைந்த விலையில் வழங்கிட ஏற்பாடு விசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை குறைந்த விலையில் வழங்கிட இணையத்திற்கு 150 கோடி உயர்த்த வழங்கப்படும்* பயிர்க்கடன் இலக்கு 4

ஆயிரம் கோடி * கால்நடை துறைக்கு 816. 3 கோடியாக உயர்த்துதல் * மீனவர்கள் நிவாரண தொகை தொடர்ந்து வழங்ப்படும்* வெள்ளாடுகள் வழங்குவதற்கு ரூ. 244 கோடி ஒதுக்கீடு பயிர்காப்பீட்டு திட்டம்*
சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் :அணை பராமரிப்புக்கு ரூ. 745 கோடி * சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலக்காடு மேம்படுத்த திட்டம் * வடக்கு சென்னை துறைமுகம் இணைக்கும் திட்டம் * தொழில் முனைவோர் ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கிட 100 கோடி முதலீட்டு மாநியம் * திருப்பூர் கழிவு நீர் வெளியேற்றத்தில் புதிய திட்டங்கள் * யானை தடுப்பு அகழிகள் * 100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள் * சூரிய மின் ஒளி கொண்ட பசுமை வீட்டுக்கு மேலும் 60 ஆயிரம் வீடுகள் அமைக்க ரூ. 150 கோடி செலவு* மின் உற்பத்தியை பெருக்கிட சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்* சூரிய மின் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும் * மின் சேமிப்பு நோக்கில் சி,எல்.எப்.,பல்புகள் வழங்கப்படும் * ஸ்ரீரங்கம், பழநி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் *

கருத்துகள் இல்லை: