திங்கள், 26 மார்ச், 2012

France இஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி

இஸ்லாமாபாத் : பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 12 க்கும மேற்பட்ட முஸ்லிம் இன மக்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ‌வடமேற்கு பகுதியில் தீவிரவாத பயிற்சி அளித்து வருகின்றனர் என பாகிஸ்தானின் உளவு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தி்ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பள்ளிக்குழந்கைளின் மீதான தாக்குதல் ஒரு சிறு உதாரணமாகும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த மூன்றாடுகளில் மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நாட்டை ‌சேர்ந்த முஸ்லிம் இன மக்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் வடக்கு வார்சிஸ்தான் பகுதியி்ல் தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். இவற்றில் பிரான்ஸ் நாட்டு தளபதியாக விளங்கியவர் அபு தரீக் என்பவர் .இவரின் ஆணைப்படி ஐந்து பேர் கொண்ட குழுவினர் கடந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் நாட்டில் சில பணிகளை செய்து முடிக்கும் படி கட்டளையிட்டுள்‌ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளி குழந்தைகள் சுடப்பட்ட சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகளின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதி முகம்மது மெர்ஹா எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் நிகோலஸ்சர்கோசி தீவிவா‌திகளி்ன் தாக்குதல்களில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவி்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை: