புதன், 15 பிப்ரவரி, 2012

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்
சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டத்தின் பிரச்சினை என்று மட்டும் பார்ப்பதை விட ஒரு மாணவன் வளரும் சமூக சூழ்நிலையை ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. அந்தச் சூழல் எப்படி ஒரு வன்முறை மனோபாவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. பொருத்தம் கருதி அதை மீள் பிரசுரம் செய்கிறோம்.
- வினவு

சென்னை கொலை போல் நடக்கும்': ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள்

நரிக்குடி: சென்னையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளியில், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிளஸ் 2 மாணவர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மருது பாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று காலை 9.25 மணிக்கு, "பிரேயர்' நடந்தது. பிளஸ் 2 மாணவர்கள் இருவர் பிரேயருக்கு வராமல், வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்டு இடையூறு செய்தனர். இதை ஆசிரியர் சுப்பிரமணி கண்டித்தார். ""சென்னையில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்றது போல் இங்கும் நடந்து விடும்,''என, மிரட்டினார். இதை தொடர்ந்து ஆசிரியர்கள், " உயிருக்கு பாதுகாப்பு இல்லை,' எனக் கூறி, வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால், பள்ளியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

தூதரக கார் தகர்ப்புக்கு நவீன ரக காந்தக்குண்டுகள்: முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு

: டில்லியில், இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்புக்கு நவீன ரக காந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் வீட்டருகே, இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கார் நேற்று, திடீரென வெடித்து தீப்பிடித்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தை, தேசிய புலனாய்வு படையினர் ஆய்வு செய்தனர். கார் வெடித்த இடத்தில் காந்த துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

வீரபாண்டியார் குமுறல் திமுக தலைமை மனதை புண்படுத்தி விட்டது


Veerapandi Arumugam
சேலம்: திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் விட்டது எங்களது மனதைப் புண்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும், திமுகவின் பெரும் ஜாம்பவான்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றி திமுக இளைஞர் அணிக்கான நிர்வாகிகளை கட்சிப் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது.

ஆறுமாத காலத்திலேயே ஆறுமுகம் நூறு கோடி செங்கோட்டையன் பதவியேற்று



சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு திவாகரன், ராவணன் என வரிசையாக கைது நடவடிக்கைகள் தொடர்ந்தபோதுகூட ஏற்படாத அதிர்ச்சி அலையை கட்சி வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது,
அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக இருந்து வந்த ஆறுமுகத்தின் கைது! காரணம், முதல்வரே இவ்விஷயத்தில் நேரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்திருப்பதுதான்!
அமைச்சரவையில் மூத்தவரும், அ.தி.மு.க.வில் மிக முக்கிய நபரும், முதல்வருக்கு நெருக்கமானவருமான செங்கோட் டையனின் உதவியாளரைக் கைது செய்ய முதல்வரே உத்தரவிட்டது ஏன்? இதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க.வினரையும் குடைந்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமெனில், முதலில் ஆறுமுகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான் முடியும் என்பதால் அவரைப் பற்றி முதலில் விசாரித்தோம்...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

Valentine’s Day காதல் திருமணங்கள் அவசியம்

காதலை நேசிப்போருக்கு மட்டுமே உரிய நாள் அல்ல பிப்ரவரி 14!
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற "ஆதலினால் காதல் செய்வீர்" என்று மலர்க்கொடி தூக்குவோரும் "அய்யோ! சமூகக் கட்டுமானம் சரிந்து போகிறதே" என்று கலாச்சார காவலர்களாக அவதரிப்போரும் உச்சரிக்கும் நாளும்கூட!
காதலர்  தினத்தின் பின்னனி
காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரித்துப் போன பாதிரியாரின் நினைவுநாள்தான் பிப்ரவரி 14. கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து காதல் கதை!
திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரணதண்டனைப் பெற்ற பாதிரியாரின் பெயர்தான் வேலன்டைன்ஸ்!

Traffic ராமசாமிக்கு கொலை மிரட்டல்! போலீஸ் பாதுகாப்பு!


தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், இதையடுத்து போலீசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் டிராஃபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடைபாதை கடைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டது.
ஆனால், தொடர்ந்து நடைபாதை கடைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்நதேன். இதையடுத்து போலீசாருக்கு நோட்டீஸ் நீதிமன்றம் அனுப்பியது. பின்னர் பிளவர் பஸார் பகுதிக்கு உட்பட்ட நடைபாதை கடைகளை போலீசார் அகற்றிவிட்டனர்.

சசிகலா பெயரில் பேரவை சங்கரன்கோவிலில் போட்டி

ஒரு வாரத்தில் சசிகலா பெயரில் பேரவை தொடங்க ஏற்பாடு: சங்கரன்கோவிலில் போட்டி

தென்காசி: முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா பெயரில பேரவை தொடங்கி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று பூலித்தேவன் பாசறையின் மாநில பொதுச் செயலாளர் ராஜாமறவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட், சமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற சசிகலா தான் ஏற்பாடு செய்தார். ஆனால் இன்றைய நிலை வேதனை தருகிறது. முக்குலத்தோர் சமுதாயத்தின் சார்பில் சசிகலா பேரவை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கிறோம். 1 மாதத்தில் அது அரசியல் கட்சியாக மாற்றப்படும். சசிகலாவின் ஆலோசனைபடி தான் பேரவையை துவங்குகிறோம்.

நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை!


Stalin Vijayakanth and Karthi Chidambaram
சென்னை: தனியார் விமானம் ஒன்றில் 'தற்செயலாக' ஒன்றாகப் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவராகிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமான பயணத்தின்போது ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக 'வானிலிருந்து' வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்டுக் கொண்டு பிரிந்து கொள்வார்கள். யார் யாருடன் சேருகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமே இல்லை.

போஜ்புரி நடிகை தற்கொலை: நண்பர் கைது

போஜ்புரி படங்களில் நடித்து வந்த ரூபி சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பீகாரைச் சேர்ந்தவர் நடிகை ரூபி சிங்(25). போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். அவரது பெற்றோர் பாட்னாவில் வசித்து வருகின்றனர். அவர் மட்டும் மும்பையை அடுத்த கோரேகான் புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

6 நாள் மாணவர்களுடன்தானே என் தாய் இருந்தார்-ஆசிரியையின் மகள் உருக்கம்!


Daughters of Teacher Uma Maheswari
சென்னை: என் தாய், தனது பள்ளி மாணவர்களை என் பிள்ளைகள் என்றுதான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தார். ஒரு நாள் மட்டுமதான் எங்களுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைகளைத்தான் அவர் அதிகம் நேசித்தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கமாக கூறியுள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகம் மகனுக்கு திமுக மேலிடம் கண்டனம்


சேலம்: சேலத்தில் தன்னிச்சையாக இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவுக்கு திமுக மேலிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக இளைஞர் அணியைப் பலப்படுத்த அக்கட்சியின் பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் 30 வயதுக்குட்பட்டவர்களிடம் மனு வாங்கி தானே நேரில் சென்று நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

தமிழ்சினிமாவை விட்டு விலகியது ஏன்? தமன்னா

தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

குஜராத் அரசு கலவர ஆவணங்களை அழித்து விட்டது'' காவல்துறை புகார்

குஜராத் கலவரம் தொடர்பான ஆதார ஆவணங்களை அரசு அழித்து விட்டது'' காவல்துறை உயர் அதிகாரி புகார்

ஆமதாபாத், பிப். 12- குஜராத் இனக் கலவரம் தொடர்பான தும், நரேந்திரமோடிக்கு எதிரா னதுமான ஆவணங்களை மாநில அரசு அழித்து விட்ட தாக அஞ்சுவதாக சஸ்பெண்டு ஆன அய்.பி.எஸ்.அதிகாரி, நானாவதி ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.
இனக் கலவரங்கள்

Vijayakanth: என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்

அருப்புக்கோட்டை:""என்னை சீண்டினால் பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்,'' என, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது: சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு தெரியும். 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. தினமும் 8 மணி நேர மின் தடை, தொழில் முடக்கம், மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மின்சாரத்திற்காக என்ன திட்டம் தீட்டினீர்கள்.

சினிமா வன்முறை காட்சிகள்தான் என்னை கத்தி எடுக்க வைத்தன! - ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்


Student Kill Teached
சென்னை: வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.
மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன.

தனியாய்த் தவிக்கும் மாறன்கள்!

ஏர்செல் நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாக சிவசங்கரன் கொடுத்த புகாரில் கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளது என்று கடந்த இதழில் குறிப்பிட்டு இருந்தோம். மொரீஷியஸ் தீவில் இருந்து சன் டி.டி.எச். நிறுவனத்துக்கு பெரும் தொகை வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தெரிவித்து இருந்தோம்.
இந்நிலையில் மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. முறைகேடாக ரூ.550 கோடிக்கு பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி வழக்குப் போட்டிருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஹவாலா மோசடி போன்றது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும், தவறு நடந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துவிட்டது. இனி மாறன்கள் தப்பிக்க வாய்ப்புகள் குறைவு என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் அவர்கள் ஷாமீனில் வருவதும் முடியாது என்று சொல்கிறார்கள்.

சிதம்பரத்தை சிக்க வைக்கும் வரை சுப்பிரமணியன் சுவாமிக்கு உறக்கமே வராது

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்க வைக்கும் வரை, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு உறக்கமே வராது போலிருக்கிறது.
சிதம்பரத்துக்கு ஆதரவாக கீழ்கோர்ட் தீர்ப்பளித்தாலும், உச்சநீதிமன்றத்தில் விடமாட்டேன் என்று ‘ரெட்’ சிக்னல் கொடுத்திருக்கிறார்.

சங்கரன்கோவில் இலவச பொருட்கள் வினியோகம் ஜோர்


Sankarankovil By Election
சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் இடைத் தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் அங்குள்ள மக்களுக்கு ஆளுங்கட்சி சார்பில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய இலவச பொருட்கள் வினியோகம் முழு விச்சில் தொடங்கியுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை ஏப்ரல் முதல் வாரத்திற்கு முன்பு தேர்தல் நடத்தவேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் அதிமுக, தேமுதிக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்த பின்னர் தான் திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது.

சினிமா ஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அச்சம்:மாணவர்கள் என்றால், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கிறவர்கள் என்று தான், இதுவரை நினைத்தோம். தற்போது, மாணவர்கள் கூட்டமாகக் கூடினாலே, பொதுமக்களும், பெண்களும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையிலுள்ள ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியரை, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.

தே.மு.தி.க.வை உடைத்தே தீருவது

சட்டசபையில் தொடங்கிய வெளிப்படையான யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தே.மு.தி.க.வை உடைத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு அதிரடி வியூகங்களை வகுத்த படியே இருக்கிறது இலைத் தரப்பு.
தனது விசுவாசத்துக்குரிய ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகிய மூவரை யும் அழைத்து, ""தே.மு.தி.க. தரப்பில் இருந்து ஆளுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் வீதம் நம் பக்கம் கொண்டுவாருங்கள். அவர்கள் வசம் உள்ள 29 எம்.எல்.ஏ.க்களில் 15 பேரைக் கொண்டுவந்துவிட்டாலே கட்சி உடைந்துவிடும். இல்லை யேல் ஐந்தாறு பேரை அங்கிருந்து நகர்த்தினாலே விஜயகாந்த்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற மகுடம் பறிபோய்விடும், காரியத்தில் இறங்குங்கள்''’என கார்டன் கட்டளையிட்டது.

ஜெ.வின் கையெழுத்தைப்போல் பல ஆவணங்களில் போட்டது எப்படி

சசி தரப்பை கார்டனில் இருந்து துரத்திய ஜெ.வின் கோபம், முதலில் அக்கினி வளையமாகப் பாய்ந்திருப்பது திவாகரன் மீதும் ராவணன் மீதும்தான். போலீஸுக்குத் தண்ணிகாட்டி வந்த ராவணனை, ""சரண்டராகாவிட்டால் உங்கள் ஒரே மகனை எங்கள் கஸ்டடிக்குத் தூக்கவேண்டியிருக்கும்'' என மிரட்டியே சரண்டராக வைத்தனர்.
இதேபோல் தங்களோடு கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திவந்த திவாகரனை சரணடைய வைக்க, அவரது குடும்பத்தினரை விசாரணைக்கு இழுத்தனர். தனது மனைவி ஹேமலதாவை நீடாமங்கலம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அவர்கள் விசாரிப்பதைக் கண்டு வெலவெலத்துப்போன திவாகரனும் சரணடைய, திருச்சி மத்திய சிறையில் கொண்டுபோய் அடைத்து விட்டனர்.

நடப்பதோ வெறும் வசூல் வேட்டை பேரு தான் அ.தி.மு.க., கோட்டை.

கடும் மின் வெட்டு, உள்ளாட்சிகளில் ஊழல், நிர்வாகச் சீர்கேடு என, பல காரணங்களால், அ.தி. மு.க., கோட்டையான கோவையில், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் எட்டு மணி நேர மின் தடையால், தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது கோவை; சென்னையை அடுத்த பெரிய தொழில் நகரமான கோவையில், கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, படிப்படியாக அதிகரித்த மின் வெட்டு, இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வுக்கு அமோக வெற்றியைத் தந்த கோவை மக்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.தலைநகரைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும், இதே நிலை தான் என்றாலும், இந்த மின் வெட்டால், அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருப்பது கோவை நகரமே; பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின் வெட்டால் முடங்கிப் போயிருப்பது இங்கே தான்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொழில் அமைப்புகள் கூடி நின்று கொந்தளிப்பது இதனால் தான்.

BJP...ADMK கவின் கூட்டுச்சதி பெங்களூரிவில் வெளுத்தது

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி என்று சென்னையில் எல்.கே.அத்வானி பேசியதற்கான அர்த்தம் பெங்களூருவில் வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவின் சீனியர் வழக்கறிஞர்கள்.
ஜெ மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஜெ.வின் 313 ஸ்டேட்மெண்ட்டைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஸ்டேட் மெண்ட் தரவேண்டும். இது தொடர்பாக தமிழ் மொழிபெயர்ப்புகேட்டு சசிகலா தரப்பு தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்த தாலும், கூடுதல் விசா ரணைக்காக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பு செய்யா மல் முடிக்கவேண்டும் என்று உத்தர விட்டிருந்ததாலும் பிப்ரவரி 9-ஆம் தேதியன்று ஸ்பெ ஷல் கோர்ட் வளாகம் எதிர்பார்ப்புடன் இருந்தது.
காலை 10.30 மணிக்கு சசிகலா வந்தார். முகம் வாடியிருந்தது. தோற்றம் மெலிந்திருந்தது. அடிக்கடி கண்களைத் துடைத்தபடியே இருந்தார்.