திங்கள், 13 பிப்ரவரி, 2012

குஜராத் அரசு கலவர ஆவணங்களை அழித்து விட்டது'' காவல்துறை புகார்

குஜராத் கலவரம் தொடர்பான ஆதார ஆவணங்களை அரசு அழித்து விட்டது'' காவல்துறை உயர் அதிகாரி புகார்

ஆமதாபாத், பிப். 12- குஜராத் இனக் கலவரம் தொடர்பான தும், நரேந்திரமோடிக்கு எதிரா னதுமான ஆவணங்களை மாநில அரசு அழித்து விட்ட தாக அஞ்சுவதாக சஸ்பெண்டு ஆன அய்.பி.எஸ்.அதிகாரி, நானாவதி ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.
இனக் கலவரங்கள்

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங் கள் மூண்டன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத் திய இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு நீதி பதி நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது.
அய்.பி.எஸ். அதிகாரி கடிதம்
மேலும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஆர்.கே. ராகவன் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழு, முதல் அமைச்சர் நரேந்திரமோடி குற்றமற்றவர் என தனது இறுதி அறிக்கையில் சான்று வழங்கி உள்ளது.
இந்த நிலையில் விசாரணை ஆணைய நீதிபதிகள் நானாவதி, அக்ஷய் மேத்தா ஆகியோருக்கு, இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ள அய்.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
இனக்கலவரங்கள் தொடர் பான ஆவணங்கள் குஜராத் மாநில அரசாலும், ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினரா லும் நேர்மையற்ற முறையில் மறைக்கப்பட்டு விட்டன அல்லது அழிக்கப்பட்டு விட் டன என கருதுகிறேன்.
செல்வாக்குமிக்க நபர்களை காப்பாற்ற
செல்வாக்குமிக்க நபர் களை சட்டத்தின் தண்டனை யிலிருந்து காக்க வேண்டும், தொடர்புடைய ஆதார ஆவணங்கள் நீதிமன்றங்களின் முன் வரக்கூடாது என்ற கொடூரமான எண்ணத்தின் காரணமாக இது செய்யப் பட்டுள்ளது.
கலவரம் தொடர்பான பதிவேடுகளையும், ஆவணங் களையும் கேட்டு வரவழைப்பதில் விசாரணை ஆணையம் காட்டிய தாமதம், குஜராத் முதல் அமைச்சர்  மற்றும் பிற அமைச்சர்களுக்கு எதிரான ஆதார ஆவணங்களை அழிக்க வழி வகுத்து விட்டது. இந்த நிலையில், தீய சக்திகளால் கலவரம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்படவில்லை என்பதை விசாரணை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், குஜராத்தில் உளவுத்துறை துணை ஆணையராக பணியாற்றிய வர், முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு காவலரை வாக்குமூலம் அளிக்க நிர்ப்பந்தம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: