ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

தே.மு.தி.க.வை உடைத்தே தீருவது

சட்டசபையில் தொடங்கிய வெளிப்படையான யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தே.மு.தி.க.வை உடைத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு அதிரடி வியூகங்களை வகுத்த படியே இருக்கிறது இலைத் தரப்பு.
தனது விசுவாசத்துக்குரிய ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகிய மூவரை யும் அழைத்து, ""தே.மு.தி.க. தரப்பில் இருந்து ஆளுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் வீதம் நம் பக்கம் கொண்டுவாருங்கள். அவர்கள் வசம் உள்ள 29 எம்.எல்.ஏ.க்களில் 15 பேரைக் கொண்டுவந்துவிட்டாலே கட்சி உடைந்துவிடும். இல்லை யேல் ஐந்தாறு பேரை அங்கிருந்து நகர்த்தினாலே விஜயகாந்த்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற மகுடம் பறிபோய்விடும், காரியத்தில் இறங்குங்கள்''’என கார்டன் கட்டளையிட்டது.
கார்டன் உத்தரவுப்படி விஜயகாந்துக்கு மிகமிக நெருக்கமானவர்கள் யார், யார், என பட்டியல் எடுத்துக் கொண்டு அவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பினர் ஆளும்கட்சிப் புள்ளிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு முன்பாக சில முக்கிய புள்ளிகள் சிக்கினர். இவர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வந்தாலே விஜயகாந்த்துக்கு மனவலியை உண்டாக்க முடியும் என வியூகம் வகுக்கப்பட்டது. . விஜயகாந்த்தின் இளம்வயது மதுரைத் தோழர்கள் என்றால் இப்ராஹிம் ராவுத்தர், சுந்தர்ராஜன், ரவீந்திரன், ராமுவசந்தன் ஆகியோர்தான். இதில் விஜயகாந்த்துக்கு ரசிகர் மன்றத்தை ஏற்படுத்தி நடத்திய ராமுவசந்தன், சில கசப்பான அனுபவங் களுடன் சில வருடங்களுக்கு முன் இறந்துபோய்விட்டார். அவரது குடும்பத்தினரை கட்சிக்கு இழுக்க ஒரு பக்கம் அப்ரோச் நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையே விஜயகாந்த்துக்கு திரையுலகில் துணை நின்றவரும் தே.மு.தி.க. தொடங்கப்பட்ட போது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியவரும் இப்ராஹிம் ராவுத்தர்தான். சமீப காலமாக விஜயகாந்துக்கும் ராவுத்தருக்கும் உறவு சரியில்லை என்றபோதும் அவர், விஜயகாந்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்காமல் ஒதுங்கியே இருந்தார். அப்படிப்பட்டவரை அணுகி, தங்கள் பக்கம் அழைத்தனர். அவரும் நீண்ட யோசனைக்குப் பின் சம்மதம் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து விஜயகாந்தின் மற்றொரு பால்யகாலத் தோழரான ரவீந்திரனையும் அணுகினர். விஜயகாந்த் குறித்து இவருக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்பார்கள். அவரையும் அதை, இதை சொல்லி வளைத்து விட்டனர். ஆனால் விஜயகாந்தின் இளம்வயதுத் தோழரும் அவரது உறவினருமான சுந்தர்ராஜனைத்தான் இலைத் தரப்பால் வளைக்க முடியவில்லை.


ரவீந்திரன் மூலமே கட்சியின் தேர்தல் பிரிவுச்செயலாளர் ஜெகவீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் குமார், எக்ஸ் எம்.எல்.ஏ. ஜெய்சன் ஜேக்கப் ஆகியோரையும் வளைத்து விட்டனர். இதேபோல் விஜயகாந்த்தால் ’அண்ணே’ என வாய்குளிர அழைக்கப்பட்டவர் கட்சிப்பிரமுகரான வேல்முருகன். இவரை சமீபத்தில்தான் தே.மு.தி.க. தொழிற்சங்கப் பேரவையின் மாநில செயலாளராக ஆக்கி அழகு பார்த்தார் விஜயகாந்த். கடந்த மேயர் தேர்தலின் போதும் அவரையே வேட்பாளராக நிறுத்தினார். இந்த வேல்முருகன், அமைச்சர் செங்கோட்டையனின் நட்பு வளையத்தில் இருப்பவர் என்பதால், கட்சியில் முக்கிய பதவி தரப்படும் என வாக்குறுதி கொடுத்து அவர் மூலமே வளைத்துவிட்டார்கள்.


இப்படி முதற்கட்டமாக விஜயகாந்த்தின் நம்பிக்கைக்குரியவர்களை கட்சிக்குக் கொண்டு வந்து 6-ந்தேதி இணைப்பு விழாவையும் ஜெ.’முன்னிலையிலேயே நடத்தி விஜயகாந்துக்கு ஹெவி ஷாக் கொடுத்திருக்கிறது இலைத்தரப்பு. இந்த இணைப்புப் பட்டியலில் நடிகை குயிலியும் உண்டு.



அடுத்தகட்டமாக இப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசுவதில் பிஸியாக இருக்கிறது இலைத் தரப்பு. எனினும் பெரும் பாலான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள். விஜயகாந்த்தால்தான் இப்படியொரு எம்.எல்.ஏ. பதவி தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என நெகிழ்ந்துகொண்டிருப்பவர்கள். எனவே இவர்களை அணுகுவதே கார்டன் தரப்புக்குப் பெரும்பாடாக இருக்கிறது.


கட்சிக்கு கொண்டுவரப்பட்ட ரவீந்திரன் மூலமாகவே பண்ருட்டியார், திருமங்கலம் எம்.எல்.ஏ. ராஜா, திருவெறும்பூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார், பேராவூரணி எம்.எல்.ஏ. நடிகர் அருண்பாண்டியன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. முருகேசன் ஆகிய ஐவருக்கும் ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றப் போக்கைக் கண்டித்து தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையோடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பண்ருட்டியாரும் அருன்பாண்டியனும் மட்டும் கருப்புச்சட்டை அணியாமல் இருந்தனர். இவர்களை விஜயகாந்த் கேள்விக்குறியோடு பார்க்க, பண்ருட்டியாரோ பார்வையின் அர்த்தத் தைப் புரிந்துகொண்டு ""நான் பொதுக்கணக்குக் குழு தலைவராகவும் இருக்கிறேன். அந்த ரிப்போர்ட்டை சப்மிட் பண்ணவேண்டியிருந்த தால்தான் கருப்பு சட்டை அணியவில்லை''’என தானாகவே தன்னிலை விளக்கம் கொடுத் திருக்கிறார். அருண்பாண்டியனிடம் இருந்து இதற்கு விளக்கம் வரவில்லை.


இலைத் தரப்பு, தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரிப்பதைக் கண்ட விஜயகாந்த், அடிக்கடி எம்.எல்ஏ.க்களைத் தொடர்புகொண்டு பேசி வருவதோடு, ""நாம் யார்னு அந்தம்மாவுக்கு காட்டவேண்டும்''’என அவர்களுக்கு முறுக்கேற் றிக்கொண்டு இருக்கிறார். இலைத்தரப்பின் சதியை முறியடித்து கட்சியை வலிமைப்படுத்து வதில் தீவிர கவனம் எடுத்துவரும் விஜயகாந்த், ஜெ.’அரசை, அதன் மக்கள் விரோதப் போக்கு களை மக்களிடம் அம்பலப்படுத்துவதன் மூலமே பலவீனப்படுத்தவேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறார். மக்கள் பிரச்சினைக் கான போராட்டங்களில் மற்ற கட்சிகளுடன் இணைந்து கள மிறங்க ரெடியாகிவிட்டார் விஜயகாந்த்.


சூடாகத்தான் இருக்கிறது இந்த மோதல்.


-பிரகாஷ், ஜெ.டி.ஆர்.

thanks nakkeerAN +raj trichy

கருத்துகள் இல்லை: