ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பிரபாகரனை காப்பாற்றும் திட்டம் நெடியவன் பணந்தர மறுத்ததால் தோல்வியடைந்தது

- கே.பி டெய்லி மி்ரருக்காக வழங்கிய செவ்வி பாகம் 3
போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ( சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு  தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது  ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின்  மீதான தமது கட்டுப்பாட்டை  தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும். 

- கே.பி டெய்லி மி்ரருக்காக வழங்கிய செவ்வி பாகம் 3
 விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-
    கேள்வி: பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் ஹெலிகொப்ரர் மூலம் காப்பாற்றும் உங்கள் திட்டத்திற்கு இறுதியில் என்ன நடந்தது? ஏன் அது செயற்படவில்லை?
பதில்: அது மிகவும் துயரமான கதை. பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவரது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து வான்வழி மூலம் ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன். எல்.ரீ.ரீ.ஈ. இன் விமானப்படையின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம். பிரபாகரன் விரும்பினால் சார்ள்ஸ் அன்ரனியை தவிர  குடும்பத்தின் ஏனையோர் வெளியே கொண்டுவரப்படுவர். தலைவருக்கு விருப்பமில்லையென்றால்  அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் சிலரும் சிரேஷ்ட தலைவர்களும்  ஹெலிகொப்டரர் மூலம் இலங்கையில் ஒரு குறித்த காட்டுப் பகுதியில் இறக்கப்படுவர். அதன்பின் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இன்னும் ஒரு சிலர் ஆகியோரை கப்பலுக்கு ஹெலிகொப்ரர்  கொண்டு செல்லும். நான் கப்பலில் இவர்களுக்காக காத்திருந்திருப்பேன். பின்னர் இந்த குடும்பத்தை மூன்று நாடுகளில் ஒன்றில்,  சில சமயம் சுழற்சி முறையில் வைத்திருக்க எண்ணினேன்.
    கேள்வி: இந்த நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனவா? இவை மேற்கத்தைய நாடுகளா?
பதில் : இல்லை. அவை மேற்கத்தைய நாடுகள் இல்லை. அவற்றில் இரண்டு ஆபிரிக்க நாடுகள்; ஒன்று ஆசிய நாடு. எனது பிரதிநிதிகள் மூலம் இந்த நாடுகளின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் நான் தொடர்பிலிருந்தேன். இதைப்பற்றி அவர்களுடன் பேசியபோது அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
     கேள்வி: இந்தத் திட்டம் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருந்ததே? இது வெற்றிபெறும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா?
பதில் : ஆம். ஆபத்துமிருந்ததுதான். ஆனால் நான் அதை முன்னெடுக்க தயாராகவிருந்தேன். இந்த ஆபத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருக்கவில்லையென்றால் அடுத்தது மரணம்தான். பிரபாகரன் கடைசி நிமிடத்தில் வெளியேவர சம்மதிக்கலாம் என்ற இரகசியமான எண்ணம் எனக்கிருந்தது. இதனால்தான் நான் இந்த திட்டத்தை தீட்டினேன். எதிர்பாராத செயற்பாடு என்பதே முக்கியம். முதல் கட்டம் வெற்றி பெற்றால் வேறு ஆட்களையும் காப்பாற்ற முயன்றிருக்கலாம்.
    கேள்வி: அப்படியானால் எங்கு பிழை நடந்தது?
பதில் : அது ஒருபோதும் நினைத்த மாதிரி இருக்கவில்லை. அந்த திட்டத்தை செயற்படுத்த 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்பட்டது. என்னிடமோ அவ்வளவு பணம் இல்லை. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப் பணத்தை தந்திருக்க வேண்டும். நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்ரனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். பணம் வந்து  கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை. வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார்.  அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ  விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன். ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.மே மாதத்தின் நடுப்பகுதியில்  இலங்கை இராணுவம் மும்முனைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. அதன்போது வலைஞர்மடம் - முள்ளிவாய்க்கால்- வட்டுவாகல் பகுதிகளை முற்றுகை அரணுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றும் முயற்சி சாத்தியமற்றுப்போனது. பெரும் சோகத்துடன் நான் அந்த திட்டத்தை கைவிட்டேன். நெடியவன் , காஸ்ட்ரோ ஆகியோர் மீது நான் பெரும் சினங்கொண்டேன். ஆனால் எதுவுமே செய்யமுடியாத நிலை.
    கேள்வி: சில நாட்களுக்குள் எல்லோரும் இறந்துவிட்டனரா?
பதில் : ஆம். அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது.  பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை  என்பார். நான் அவனுடன் கதைப்பேன். பின்னாளில் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் நான் இன்னும் அவன் நினைவாகவே உள்ளேன். சண்டை உரத்து ஷெல் வீச்சு அதிகரித்தபோது அவன் பயந்து போயிருந்தான். பின்னர் சாள்ஸ் வான்வழியே தப்புவதற்கான ஒழுங்கை மேற்கொள்ளும்படி என்னை கேட்டிருந்தபோது பயப்படாமல் இருக்கும்படியும் விரைவில் கேபி மாமாவிடம் போய்விடுவாய் என்றும் கூறப்பட்டது. இந்த சின்னப்பையன் தனது பொருட்களில் சிலவற்றை பையொன்றில் போட்டு போகுமிடமெல்லாம் கொண்டு திரிந்தான். நான் கேபி மாமாட்ட போறன் என்று கூறுவானாம். சில சமயம் பாலச்சந்திரன் பையை வைத்துக்கொண்டு தான் கே.பி மாமாவுடன் போகப்போவதாக ஆட்களுக்கு கூறி;க்கொண்டு நடக்கப்போகாத காப்பாற்றும் நடவடிக்கைக்காக காத்திருப்பதை எனது மனத்திரையில் காண்பேன். இப்படி நினைக்கும் போது நான் பெருங்கவலைப்படுவேன். திட்டத்தை செயற்படுத்தாது குழப்பிய நெடியவன் மீது கோபங்கோபமாக வரும்.
    கேள்வி: ஏன் அவர் அப்படிச் செய்தார்?
பதில் :  எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இது காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நடந்திருக்கலாம். கே.பிக்கு இந்த பெருமை கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இல் காணப்பட்ட பிழையின் வெளிப்பாடுதான், தனிநபர்கள் தங்களது சிறுபிள்ளைத்தனமான பொறாமைகள், பிரிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக இயக்கத்தையும் போராட்டத்தையும் கெடுத்துக்கொண்டனர்.
    கேள்வி: முழுக்குடும்பமுமே கொல்லப்பட்டுவிட்டது என உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் , மதிவதனி உயிரோடு இருக்கிறார் என்றெல்லாம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சில பகுதியினராலும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் கதைகள் பரப்பப்பட்டுள்ளனவே? நீங்கள் என்;ன சொல்கிறீர்கள்.?
பதில் : இப்படியான கதைகள் சிலரது சுயநலனுக்காகப் பரப்பப்படுகின்றன. மற்றும் சிலர் இப்படி நடந்து விட்டதை ஏற்க மனமில்லாமல் இந்த கதைகளை நம்புகின்றனர்.
    கேள்வி: இதுப பற்றி நேரடியாகக் கண்டக் சாட்சிகள் உங்களிடம் இல்லையல்லவா?
பதில் :  உண்மைதான். கடைசிக் கட்டம்வரை  நான் சூசையுடன் தொடர்பிலிருந்தேன். இது பற்றி நான்  உத்தியோக பூர்வமான மூலங்களிலிருந்தும் கேள்விப்பட்டுள்ளேன். முக்கியமாக நான் பிரபாகரனின் உடலை ரிவியில் பார்த்தேன்.
    கேள்வி: அது அவர்களது உடல் அல்ல என இவர்கள் கூறி மறுக்கின்றனரே?
பதில் : முழு முட்டாள்தனமான கதை. ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன்  பழையதை நினைத்து அழுதேன்.
    கேள்வி: இந்த குழப்பத்துக்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றீர்கள். பிரபாகரனின் மரணம்பற்றி செய்திகள் வந்தபோது அவர் மரணிக்கவில்லையென்றும் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளதாகவும் நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் மறுப்புரையை வாபஸ் பெற்றீர்கள். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை பெரிதும் சிதறிப்போனது. இது உங்களை விமர்சிப்பவர்களுக்கு நல்ல ஆயுதமாயிற்று. ஏன் இந்த தடுமாற்றம்? விளக்கமுடியுமா?
பதில் : ஆம். இதற்கான விளக்கத்தை தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நடந்தது இதுதான். பிரபாகரன் பொட்டம்மான் மற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் வழியாக அதன் கரையூடாக வெளியேறினர். வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் சென்றனர். காட்டுக்குள் போய்ச் சேர்வதுதான் இவர்களது எண்ணமாக இருந்தது.முற்றுகையிடப்பட்ட பகுதியைச் சுற்றி மூன்று அடுக்குகளாக படைவீரர்கள் நிற்பதனை முன்னைய உளவுபார்ப்புகள் கண்டறிந்திருந்தன. என்னோடு தொடர்பிலிருந்த சூசை, பிரபாவும் பொட்டுவும் மூன்று அடுக்கு காவலையும் தாண்டி சென்றுவிட்டதாக எனக்கு அறிவித்தார். இதன் பின்  பிரபாகரன் குழுவுடன் தொடர்பேதும் கிடைக்கவில்லை. எனவே நானும் சூசையும் தலைவர் பாதுகாப்பான இடத்துக்கு போய்ச் சேர்ந்து விட்டார் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்பு சாதனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கருதினோம்.
இதன் பின்னரே எமது ஆயுதங்களை மௌனிப்பது பற்றிய அறிக்கையை வெளியிட்டேன். இதை நான் சூசையுடன் பேசிய பின்னர்தான் செய்தேன். சமாதான முன்னெடுப்புகளை விரைவுப்படுத்தவும் எஞ்சியுள்ளோரை காப்பாற்றவும் ஒரு அத்திவாரம் இடும் வகையில்தான் நான் அறிக்கையை வெளியிட்டேன்.  வேறு ஒரு இடத்திலிருந்த நடேசனும் புலித்தேவனும் கூட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர். பிரபாகரன் இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்களை கடந்து சென்றுவிட்டார் என முதலில் எனக்கு கிடைத்த தகவல்தான் அவர் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டார் என நம்பவைத்தது. இந்த நம்பிக்கைதான் பிரபாகரன் இறந்ததுவிட்டார் என்ற செய்தியை மறுக்கவும் அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் கூறவைத்தது. அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற முதலாவது ஊடக அறிக்கை அம்புலன்ஸில் தப்பிப்போகும் முயற்சியுடன் தொடர்பாக வெளிவந்தது. ஆனால் அந்த அறிக்கை தவறானது. பிரபாகரன் அம்புலன்ஸ் எதிலும் இருக்கவில்லை.
சூசையுடன் நான் தொடர்பை இழப்பதற்கு சற்று முன் பிரபாகரனால் முற்றுகையை தாண்ட முடியவில்லை. அவர் திரும்பிவந்துவிட்டார் என பதறி சூசை என்னை திகைப்படைய செய்தார். பிரபாகரன் இருந்த இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலேயே தான் நின்றதாக கூறினார். இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்குகளை தாண்டும் முயற்சி சரிவரவில்லை என்றும் பொட்டம்மான் இன்றி பிரபாகரன் தனியே திரும்பிவிட்டதாக சூசை கூறினார். சண்டை கடூரமாக நடக்கின்றது என்பதற்கு மேலாக எந்த தகவலையும் அவரால் தரமுடியவில்லை. சிறிது நேரத்தின்பின் நான் சூசையுடன் தொடர்பை இழந்துவிட்டேன்.
சிறிது நேரத்தின்பின் தொலைக்காட்சியில் பிரபாகரனது உடலை பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால். பிரபாகரனின் இறப்பை மறுத்த முதலாவது அறிக்கை பின்னர் அதை உறுதி செய்து விடப்பட்ட அறிக்கை எல்லாமே நேர்மையாக விடுவிக்கப்பட்டவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரையும் பிழையாக வழிப்படுத்தும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அந்த அறிக்கைகள் அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் என்னால் விடுக்கப்பட்டவை. சண்டை தொடர்ந்து கொண்டிருந்ததது. தொடர்பாடல் கஷ்டமாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நிலைமைகள் பற்றி மக்கள் தவறான தகவல்களை பெற்றுக்கொள்ளும் போர் நிலைமைகளை போரின் மூடுபனி எனக் கூறுவர்.
    கேள்வி: ஆம். கிளொஸ்விற்ஸ் என்பவர்தான் இந்த பதத்தை முதலில் பயன்படுத்தினார். பின்னர் இந்த சொல் றொபேட் மக்னமராவினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. சரி பிரபாகரன் எப்படி இறந்தார் என்று சொல்லுங்களேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
பதில் : ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் அங்கு இருக்கவில்லை. எனக்கு சொல்லப்பட்டதையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்துத்தான் கூறவேண்டும். பிரபாகரனின் மரணத்தை பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல் இது. பிரபாகரனும் 60 பேர் கொண்ட புலிகளின் குழுவும் நந்திக்கடல்  அருகே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் யாவருமே கடைசிவரை போராடினார். மரணத்தை தழுவிக்கொண்டனர்.
    கேள்வி: பிரபாகரன் சரணடைந்தார் அவர் மானபங்கப்படுத்தப்பட்டபின் சுடப்பட்டார் என்ற கதைகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்.?
பதில் :   இல்லை. அது நடக்கவில்லை. எனக்கு பிரபாகரனை தெரியும். அவர் ஒருபோதும் சரணடைந்திருக்க மாட்டார். எனக்கு இந்த கதைகள் தெரியும். சிலர் வேண்டுமென்றே இதை செய்கின்றனர். சிலர் காதில் விழுவதை யோசிக்காமல் திருப்பிக் கூறுகின்றனர். எனக்கு நன்றாகத் தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் பிரபாகரன் சரணடைந்தார் எனவும் பின்னர் சரத்பொன்சேகாவிடம் கொண்டுவரப்பட்டதாகவும் அங்கே சரத்பொன்சேகா அவரை முழங்காலில் இருக்கவைத்து சுட்டதாகவும் கூறித்திரிந்தார். அபத்தமானகதை. பழைய தமிழ் தலைவர் பிரபாகரன் முன்னால் பயந்து நெளிபவர் அவர் இறந்தப்பின் இந்த மாதிரி ஏன் பேசவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் பிரபாகரனை தோற்கடித்த இராணுவத்தினர் அவரைப் பற்றியும் அவர் மரணித்த விதம் பற்றியும் உயர்வாகவே பேசுகின்றனர். பாதுகாப்பு அமைப்பில் உச்ச நிலையில் உள்ள சிலர் - உங்களுக்கு இவர்கள் யார் என விளங்கும் என நினைக்கின்றேன். இந்த குழு கடைசிவரையும் வீரத்துடன் போராடி சரணடையாமல் மரணத்தை தழுவினர் என்பதையிட்டு மிகவும் கௌரவமாக என்னிடம் கூறினார். ஆனால் எமது ஆட்களில் சிலர் பிரபாகரனை பற்றி அவர் இறந்தபின் கேவலமாக பேசுகின்றனர். நான் திருப்பித் திருப்பிச் சொல்கின்றேன். எனது தலைவர் கடைசிவரை போராடி வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
    கேள்வி: இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரனின் ஒரு மெய்ப்பாதுகாவலரிடம் பெற்றோல் கலன் ஒன்று இருக்குமாம். தான் இறந்தால் இராணுவத்திடம் தனது உடல் அகப்பட்டக் கூடாது. என்பதற்காக தனது உடலை கொளுத்திவிட வேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை. ஆனால் இது இந்தமுறை நடந்ததாகத் தெரியவில்லையே. என்ன நடந்தது?
பதில் : இந்த முறையும் இப்படியான ஒழுங்கு செய்யபட்டிருந்தது என நான் கேள்விப் பட்டேன். தனது உடல் வேறு யார் கையிலும் போய்ச் சேராது  அழிக்கப்பட வேண்டும் என்பது பிரபாகரனுக்கு மிக முக்கியமான விடயமாக இருந்தது. பெற்றோல் கான் நீரில் விழுந்திருக்கலாம். அல்லது பெற்றோல் கான் ஒப்படைக்கபட்ட போராளி பிரபாகரன் இறக்கும் முன் கொல்லப்பட்டிருக்கலாம். இது எனது ஊகம்தான். எனக்கு உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியாது.
    கேள்வி: பொட்டு அம்மான் பற்றி....? அவருக்கு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
பதில் : பிரபாகரனும் பொட்டுவும் ஒன்றாகவே சென்றனர். பிரபாகரன் மட்டுமே திரும்பி வந்தார். பொட்டு தப்பிச் செல்லும் முயற்சியின் போது கொல்லப்பட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லாதுவிடின் பிரபாகரன் பக்கத்திலேயே இருந்திருப்பார்.   பொட்டு அம்மானின் உடல் கிடைக்கவில்லை என்பதில் இராணுவம் உறுதியாக இருப்பதால் பொட்டு அம்மானின் உடல் இராணுவத்தின் கையில் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரனே பொட்டு அம்மானின் உடலை அழித்திருக்கலாம்.
    கேள்வி: பொட்டு தப்பியிருக்க முடியுமல்லவா?
பதில் : விவாதத்திற்கு வேண்டுமானால் ஆம் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.  பிரபாகரனும் பொட்டுவும் உயிருடன் உள்ளனர். அவர்கள் சில வருடங்களின் பின்னர் தோன்றுவர் என்பது அவர்களின் நினைவை அவமதிப்பதும் கேவலப்படுத்துவதும் ஆகும். இந்த நகைப்புக்குரிய விடயத்தை தொடர்ந்து அழுத்தி கூறுபவர்கள் மடத்தனமான கதையை விட்டுவிட்டு பிரபாகரனையும் பொட்டுவையும் வெளிக்கொணரவேண்டும்.
    கேள்வி: பிரபாகரனின் உடல் தொடர்பாக இன்னொரு கேள்வி. பிரபாகரனின் குடும்ப அங்கத்தவர்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் வழங்கும்படி கோருவர் என்றும் வெளிநாட்டுப்புலிகள் அதனைப் பெற்றுக்கொண்டு 40 வருடங்களுக்கு மேலாக தான் வகுத்துக்கொண்ட கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்த மனிதனுக்கு இறுதி அஞ்சலியை ஒழுங்கமைப்பர் எனவும் நான் எதிர்பார்த்தேன்.
பதில் :  உங்களைப் போலவே நானும் அப்போது யோசித்தேன். இது தொடர்பில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர வழிகளிலும் ஆலோசனையை பெற்றுக்கொண்டேன். பிரபாகரனின் சகோதரங்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் தரும்படி கேட்டால் இலங்கை அரசுமீது இது தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என எனக்கு கூறப்பட்டது. எனவே நான் பிரபாகரனின் சகோதரனுடனும் அவரது சகோதரிகள் இருவரில் ஒருவருடனும் இந்த கோரிக்கை விடயமாக தொடர்பு ஏற்படுத்தினேன். நான் அவமதிக்கப்பட்டேன். உண்மையில் பிரபாகரனின் சகோதரியின் கணவர்; தன் மனைவியின் கையிலிருந்த தொலைபேசியை பறித்துஇ இனிமேல் போன் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியை முகத்தில் அடித்தாற்போல வைத்துவிட்டார். எனவே என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கிடையில் பிரபாகரனின் உடலை எரித்து சாம்பலை கடலில் தூவியதாக அரசாங்கம் அறிவித்தது. அவ்வளவுதான்.
    கேள்வி:  சரி பிரபாகரன் சண்டையில் இறந்துவிட்டார். அந்த குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் பற்றி என்ன தெரியும்.? என்ன நடந்தது?
பதில் : எனக்கு கிடைத்த தகவலின்படி மனைவி மதிவதினி ஷெல் வீச்சில் கொல்லப்பட்டார். இது பிரபாகரனின் வெளியேறும் முயற்சியின் முன் நடந்தது என நான் நினைக்கின்றேன். சாள்ஸ் அன்ரனி முன்னரே சண்டையில் காய்பட்டிருந்தார். ஆனால் அவர் இறுதிவரை தனது அணியினரை சண்டைக்கு இட்டுச் சென்றார். நான் முன்பு கூறியது போலவே அவர் தப்பிப்போக விரும்பவில்லை. அவர் சண்டையில் உயிர் துறந்தார். இதில் இன்னொரு விடயத்தை கூறவேண்டும். சொர்ணலிங்கம் அல்லது சங்கரின் (செப்ரம்பர் 27 2001 இல் கொல்லப்பட்டவர்) மனைவி குகா பற்றி கூறவேண்டும். குகா சாள்ஸ{டன் இருந்து அவரோடு இறந்து போனார். மதிவதனியின் நெருங்கிய சிநேகிதி குகா. அவர் சாள்ஸ{டன் தான் எப்போதுமிருந்து தாயாக அவரைக் கவனிப்பேன் என மதிவதினியிடம் உறுதியளித்திருந்தார். அவர் ஏனைய தலைவர்களின் மனைவிமார் அல்லது விதவைகள் போலன்றி விட்டுப்போக மறுத்துவிட்டு சாள்ஸ{டன் இருந்துவிட்டார். மகள் துவாரகாவும் போர்க்களத்தில் போராடி மரணித்துவிட்டார். அவர் மே.14 இல் இறந்து விட்டதாக அறிந்தேன்.
ஆக இளைய பிள்ளையான பாலசந்திரனைப் பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அவர் தன் தாயோடு நெருக்கமாக இருந்திருப்பார். எனவே ஷெல் வீச்சில் தாயோடு இறந்திருக்கலாம். ஆனால் இறந்த பாலசந்திரனின் உடல் என இன்ரநெற்றில் காட்டப்பட்ட படம் அவர் ஷெல்வீச்சில் இறந்தது போலல்ல. எனவே இதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.
    கேள்வி: பிரபாகரனும் அவரது குடும்பமும் இந்தமாதிரி கொல்லப்பட்டது உங்களுக்கு பேரிடியாக இருந்திருக்கும். அவரது திருமணத்தில் நீங்கள்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தீர்கள் என நினைக்கிறேன். அவருடைய சிரேஷ்ட துணைத்தலைவர்களும் தளபதிகளும் இருந்தபோதும் நீங்கள் எப்படி மாப்பிள்ளைத் தோழனாக ஆகினீர்கள்?
பதில் : ஆம் நான் பிரபாகரனின் குடும்பத்துக்கும் நெருக்கமானவனாக இருந்தேன். அவர்களது மரணம் எனக்கு பேரிழப்பு. என்னால் அவர்களுக்கு உதவவோ காப்பாற்றவோ முடியாமல் போனமை எனக்கு நிரந்தரமான சோகத்தின் மூலமாகவே இருக்கும். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்ததைப் பற்றிக் கேட்டீர்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரன்,மதிவதனி மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்யவிரும்பியபோது அநேகமான சிரேஷ்ட தலைவர்களும் தளபதிகளும் அதை விரும்பவில்லை. இது இயக்கத்தை பாதிக்கும் என்னும் காரணத்தால் அவர்கள் எதிர்த்தனர்.
அந்தக் கட்டத்தில் பிரபாகரன் என்னிடம் வந்தார். முன்னர் நடந்த ஒரு விடயத்தால் இதைப்பற்றி என்னிடம் கூற வெட்கப்பட்டார். நான் இயக்கத்தில் சேர்ந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு புரட்சியாளன் காதலில் விழக்கூடாது எனக் கூறி எனது காதலை கைவிடும்படி பிரபாகரன் கூறினார். பெரும் தயக்கத்துடன் நான் அவருக்கு கீழ் படிந்து எனது காதலை துறந்தேன். பின்னர் சூழ்நிலைமாறி, பிரபாகரன் காதல் வயப்பட்டு எனது உதவியை நாடி வந்திருந்தார். அவர் அந்தரப்பட்டது ஆச்சரியமானது அல்ல. ஆனால் நான் உடனேயே எனது ஆதரவை வழங்கி திருமணம் செய்யக் கூறினேன். நான் பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேசி அவர்கள் மனதை மாற்றினேன். பிரபாகரனின் தந்தையை கண்டு அவரது மகனின் திருமணம் பற்றி கூறியது நான்தான். இந்த காரணத்தால் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாகினேன்.
    கேள்வி: திருமணத்தின் பின்னரும் நீங்கள் அவருக்கும் குடும்பத்துக்கும் நெருக்கமானவராக இருந்தீர்களா?
பதில் : ஆம். நான் அதிகமாக வெளியே இருந்தபோதும் அக்காலத்தில் பிரபாகரனுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தேன். நான் பிள்ளைகளுடனும் மதிவதனியுடனும் பேசுவேன். நான் திருமணம் செய்தபின் எனது மனைவியும் மதிவதனியும் தொலைபேசி மூலம் பேசிக்கொள்வார்கள். நான் கப்பலில் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பரிசுப்பொருட்களை அனுப்புவேன். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காட்டுக்குள் போக வேண்டியிருந்தபோது இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு சமாளிப்பது மதிவதனிக்கு கஷ்டமாக இருந்தது. பிரபாகரன் அவர்களை சிறிது காலம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு அனுப்ப விரும்பினார்.  அவர் அவர்களை சுவீடனில் இருந்த பழைய தோழனான 'சிங்கம்' என்பவரிடம் அனுப்ப விரும்பினார்.
அவரகள் படகு மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின் நான் பயண ஆவணங்;களை தயாரித்து அவர்களை ஸ்கண்டிநேவியாவுக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் பிரபாகரனின் நண்பனுக்கு சில பிரச்சினைகள் இருந்ததையும் அதனால் அவருக்கு மதிவதனியையும் பிள்ளைகளையும் தன்னுடன் வைத்திருப்பது சிரமம் என்பதையும் அறிந்துக்கொண்டோம். எனவே நான் ஆபத்தான போதிலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சுவீடனுக்கு சென்று தாயையும் பி;ள்ளைகளையும் டென்மார்க் அனுப்பிவைத்தேன். நான் அவர்களுக்கு அங்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்தேன்.
    கேள்வி: மதிவதனியின் குடும்ப அங்கத்தவர்களுடனா?
பதில் : இல்லை அவர்களோடு அல்ல. அவர்கள் தயக்கம் காட்டினர். இது வேறு இடம்.  பின்னர் 1987 இல் பிரேமதாஸ அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை நான் முறையான பயண ஆவணங்களை பெறுவதற்குப் பயன்படுத்திக்கொண்டு ஸ்கண்டினேவியா சென்றேன். அங்கிருந்து நானே தாயையும் பிள்ளைகளையும் கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் எனக் கூறி பிரபாகரனிடம் ஒப்படைத்தேன். பிரபாகரனுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி. பிரபாகரனின் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டு வந்த அந்தக் காலத்தையும் என்னால் உதவமுடியாமல் போன இந்தக் காலத்தையும் நினைக்கும்போது எனக்கு கவலைக்கு மேல் கவலையாக உள்ளது. அந்த நாட்களில் மகனும் மகளும் என்மீது பிரியமாக இருந்தனர். நான் அவர்களை அடிக்கடித் தூக்கித் திரிவேன்.
    கேள்வி: ஆம் எனக்கு முன்னர் நீங்கள் சார்ள்ஸை தூக்கி வைத்திருக்கும் படங்களை பார்த்த ஞாபகம் உள்ளது. சாள்ஸ் அன்ரனியும் அவரது சகோதரியும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் படித்துக்கொண்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வந்தன. என்ன நடந்தது? அவர்கள் எப்போது திரும்பி வந்தனர்.? ஏன் வந்தனர்.?
பதில் : இல்லை. இல்லை. அவர்கள் ஒருபோதும் படிப்புக்காக வெளிநாடு செல்லவில்லை. அதெல்லாம் பொய்.
    கேள்வி: அப்படியானால்?
பதில் : இரண்டு பேருமே மிகவும் கெட்டிக்காரர்கள். உயர்கல்வியில் அவர்கள் மிகவும் நன்றாகவே செய்திருப்பார்கள். தாயார் மதிவதனி இதில் மிக அக்கறையாக இருந்தார். பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 இல் வன்னிக்கு வந்திருந்தபோது மதிவதனி பிள்ளைகள் வெளிநாட்டில் படிப்பதற்கான ஆயத்தங்களை செய்யும்படி என்னிடம் கேட்டிருந்தார். எனவே நான் சிறிது காலம் எடுத்து கவனமான தயாரிப்புகளை மேற்கொண்டேன். இவர்களின் ஆளடையாளம் தெரியாமல் மிகவும் பாதுகாப்பான சூழலில் வெளிநாட்டில் கல்வியை ஆரம்பிப்பதற்கான,  ஒரு போதும் பிழைபோகாத ஏற்பாடுகளை செய்தேன். மதிவதனிக்கு பெரிய சந்தோசம். ஆனால் பிரபாகரன் முதலில் சம்மதித்திருந்தாலும் பின்னர் தன் மனதை மாற்றிக்கொண்டார். அவர் பிள்ளைகளை அனுப்ப மறுத்துவிட்டார். மதிவதனியால் அவரது நிலைப்பாட்டை மாற்றமுடியவில்லை. அவ்வளவுதான். அவர்கள் ஒருபோதும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவில்லை. பின்னர் இருவருமே தாமாகவே இயக்கத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட போராளிகளாயினர்.
    கேள்வி: பிரபாகரன் ஏன் இப்படிச் செய்தார்?
பதில் : அவரது கொள்கைதான் காரணமென நான் நினைக்கிறேன். மற்றவர்களின் பிள்ளைகள் வன்னிக்குள் இருக்கவேண்டிய நிலையில் தனது பிள்ளைகளை  பாதுகாப்புக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்புவது சரியில்லை என அவர் நினைத்தார். இதே கொள்கைதான் தனது மகனையும் மகளையும் இயக்கத்தில் சேரத் தூண்ட வைத்தது. மற்றவர்களின் பிள்ளைகள் சண்டையில் ஈடுபடும்போது தனது பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது எனவும் அவர் எண்ணினார்.
    கேள்வி: இந்த விடயம்  தொடர்பாக உங்கள் விளக்கத்துக்கு நன்றி. உண்மை நிலையை பற்றி எமக்கு பிழையான தகவல்கள் வழங்கபட்டது போல் உள்ளது. இருந்தாலும் பிரபாகரனின் மரணம்பற்றி பிழையாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. சரியான தகவல் தரப்படவில்லை. இது ஏன்? உங்களுக்கும் நெடியவனுக்கும் இடையில் ஏன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளது?
பதில் : ஆரம்பத்தில் உண்மையை ஏற்றுக்கொள்வதை  மறுத்ததானது உணர்வுகளுடன் தொடர்பானதாக இருந்தது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டதாக நான் முதலில் அறிக்கை விட்டபோது உளவுத்துறையை  சேர்ந்த கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பவர் அதை மறுத்து அறிக்கைவிட்டார். பின்னர் அவர் உண்மையை விளக்கிக் கொண்டு பிரபாகரனின் மரணத்தை ஒப்புக்கொண்டு இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். நெடியவனையும் அவரது ஆட்களையும் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர்கள் வேண்டுமென்றே அதை வெளிப்படையாக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்றும் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் தொடர்கின்றது என்றும் கதைகளை பரப்பி வருகின்றனர்.
நாம் தமிழ் ஈழத்தை போராடிப்பெற்று பிரபாகரன் வெளிப்படும்போது அதை அவருக்கு பரிசாக கொடுக்கவேண்டும் என தமிழ் நாட்டு தலைவர்கள் சொல்லி வருவதும் இவர்களின் பொய்ப்பிரச்சாரத்துக்கு உதவியாக உள்ளது.
    கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருப்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் நெடியவனின் உள்நோக்கம் என்ன?
பதில் :  பணம். இப்போது எல்லாம் பணம்தான். நான் பிரபாகரன் இறந்துவிட்டார் என அறிக்கைவிட்டபோது தலைவர் உயிரோடு உள்ளார் எனக் கூறி அதை எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கம் அஞ்சலி செலுத்த நான் திட்டமிட்டபோது அவர்கள் அதை தடுத்தார்கள். முதலில்   பிரபாகரன் உயிருடன் உள்ளார் என அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்றே நான் நினைத்தேன். பின்னர் அவர்கள் உண்மை தெரிந்தும் நடிக்கின்றனர் என்பதை கண்டுகொண்டேன்.
    கேள்வி: அது எப்படி?
பதில்:  சிலகாலத்தின் பின் எமது முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். நான் உறுதியாக இருந்த விடயங்களில் ஒன்று பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்வதும், ஒருவாரகாலததுக்கு அனுஷ்டிப்பை நடத்துவது என்பதாகும். அதற்கு, நெடியவன் பிரபாகரனின் மரணத்தை நாம் ஒருபோதும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும்  அப்படி ஏற்றுக்கொண்டால் இயக்கத்தினால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் சேர்க்க முடியாது என்றும் கூறினார். நான், இயக்கம் ஒன்றை பொய்களைக் கூறிக்கொண்டு நடத்தமுடியாது என அவர்களுக்கு கூறினேன். அது மாத்திரமல்ல, இவ்வளவு  காலமும் தமிழ் இலட்சியத்துக்காக ஓய்வின்றிப் போராடிய அந்த தலைவருக்கு நாம் புகழாஞ்சலி செலுத்த தவறுவோமானால் நாம் நன்றி கெட்டவர்களாக இருப்போம் எனவும் கூறினேனன்.
பிரபாகரன் எமது போராட்டத்தின் ஆத்மாவாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டினேன். அவரின்றி போராட்டமோ இயக்கமோ தமிழ் ஈழமோ இல்லை. எமக்கு ஆயுதங்கள் வாங்கவே பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆயுத போராட்டம் முடிந்துவிட்ட நிலையில் அவ்வளவு பெருமளவு பணம் எமக்கு தேவையில்லை. வெளிநாட்டில் உள்ள எமது வர்த்தக செயற்பாடுகள் எமது கொள்கைப்பிடிப்புள்ள ஆதரவாளர்களின் சிறு நன்கொடைகள் என்பன இயக்கத்தை நடத்தப் போதுமென்று கூறினேன்.
எமது புதிய கடமைப்பொறுப்பு எமது மக்களுக்கு உதவுவதுதான். போர் நடத்துவது அல்ல என்றும் நான் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை வெளியில் கொண்டு வருவதும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதும்தான் உடனடியான நோக்கம் எனவும் கூறினேன். அடுத்து இடம் பெயர்ந்த தமிழர்களை விடுவித்து மீளக்குடியமர்த்தல் என்றேன்.
நெடியவன் தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார். எமக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவாக நான் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் தலைவராக ஆகினேன். இது ஜுலை 2009 இல் நடந்தது. நான் பிரதம செயலாளராகவும் நெடியவன் வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான செயலாளராகவும் இருந்தோம். நவம்பரில் மாவீரர் வாரத்தின்போது பிரபாகரனின் மரணத்தை நினைவு கூருவது என ஏற்கப்பட்டிருந்தது.
ஆனால், இது நடந்து சில வாரங்களுக்குள் ஓகஸ்ட் 05 இல் நான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். அதோடு எல்லாம் முடிந்துப்போனது. நெடியவனின் கை ஓங்கியது. எனவே பிரபாகரனின் மரணம் ஏற்கப்படவில்லை. அவர் உயிரோடுள்ளார் என்ற மாயை தொடர்ந்து பேணப்படுகிறது.
    கேள்வி:  இந்த மாயையை தொடர்ந்து பேணுவதில் பணம் முக்கிய பாத்திரம் வகிப்பதாக முன்னர் கூறினீர்கள் என்னால் இது ஏன் , எவ்வாறு என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். ஆனால் இதை நீங்கள் விளக்கமாக கூறமுடியுமா?
பதில் : போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ( சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு  தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது  ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின்  மீதான தமது கட்டுப்பாட்டை  தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும்.
    கேள்வி: நெடியவனின் அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை இது விளக்குகிறது.  ஆனால் ஏன் நெடுமாறன் , வைகோ (வை. கோபாலசாமி) போன்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூட பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனக் கூறுகின்றனர். அவர்கள் உண்மையாகவே இதை நம்புகிறார்களா?
பதில் : இல்லை. அவர்களுக்கும் உண்மை தெரியும். இவர்களுக்கும் நெடியவனால் கட்டுப்படுத்தப்படும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்புகள் உண்டு. அத்துடன் அவர்களின் அரசியல்  எல்.ரீ.ரீ.ஈ. வெல்லப்பட முடியாது. பிரபாகரன் சாகாவரம் பெற்றவர் என்பவற்றை  மையமாக வைத்து நடத்தப்படுவது . எனவே அவர்கள் பிரபாகரன் உயிருடன் உள்ளார்,  தமிழ் ஈழம் மலரும் என்று சொல்லத்தான் வேண்டும்.
    கேள்வி: நெடுமாறன் ,  வைகோ போன்றவர்களுக்கு உண்மையை விளங்க வைக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?
பதில் : சென்ற வருடம் நான் பிடிபடுவதற்கு முன் நெடுமாறனுடன் உண்மை நிலையை விளக்கி நீண்ட நேரம் பேசினேன். அப்போது அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் மத்திய செயற்குழுவை பிரபாகரன் இறந்துவிட்டார் எனக் கூறும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வைக்குமாறு கூறினார். என்னால் அதை எப்படி செய்ய முடியும். தலைவர்கள் எல்லோருமே ஒன்றில் இறந்து விட்டனர், அல்லது காணாமல் போயிருந்தனர் ,  அல்லது பிடிப்பட்டு இருந்தனர். பின்பு இந்த நெடுமாறன், வைகோவுடன் சேர்ந்து ஒரு ஊத்தை வேலை செய்தார். இவர்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; கே.பி. இந்திய உளவு நிறுவனமான றோவின் கையாள் எனக் கூறும் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

அதன்பின் நான் அவர்களோடு பேச முயல்வதை நிறுத்திவிட்டேன். நான் வைகோவுடன் பேசவில்லை. ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரியும் என்பதை நம்பகமான முறையில் நான் அறிவேன். பிரபாகரனின் மரணம்பற்றி தனிப்பட்ட முறையில் கூறப்பட்டப்போது வைகோ குலுங்கி குலுங்கி அழுதார். ஆனால் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பொய்யை பகிரங்கமாக கூறிவருகிறார்.
இவர் இரகசியமாக எவ்வளவுதான் அழுதாலும் எல்.ரீ.ரீ.ஈ இன் வீழ்ச்சி தொடர்பில் இவரது குற்றவுணர்வு தொடரத்தான் செய்யும். இந்திய அனுசரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை கெடுத்தவர் இவரே.
    கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? வைகோ இது தொடர்பில் செய்தது என்ன? செய்யாமல் போனது என்ன?
பதில் : நான் ஒரு புறத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயன்றுகொண்டிருந்தப்போது மறுபுறத்தில் நடேசனும் ( பாலசிங்கம் மகேந்திரன்) இதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தி.மு.க விலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகளான முதலமைச்சர் கருணாநிதியின் மகளும் ராஜ்சபா உறுப்பினருமான கனிமொழி, கத்தோலிக்க குருவான வண. ஜகத் கஸ்பர் என்பவருடன் இணைந்து மத்திய அரசின் அமைச்சரான பி.சிதம்பரத்துடன் யுத்த நிறுத்தமொன்றினை கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தனர். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த சமயம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தலைவி ஜெயலலிதா எல்.ரீ.ரீ.ஈ சார்ந்த நிலைப்பாட்டை எடுத்த நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் தோல்வியடைய வேண்டி வருமோவென பயந்திருந்தனர். எனவே சிதம்பரம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை தனித்து விடுக்க வேண்டும் என விரும்பினார். ஒரு அம்சம் ஆயுதங்களை மௌனிக்க வைக்க ஒப்புக்கொள்வதுடன் ஆயுதங்களை காலகதியில் ஒப்படைப்பதாகும். மற்றையது தமிழ் ஈழத்துக்குப் பதிலாக ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொளவதாகும்.
எல்.ரீ.ரீ.ஈ தனது பெயரில் வெளியிடுவதற்கான அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈக்காக சிதம்பரம் அவர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தன் கையாலேயே எழுதினார் என நான் கேள்விப்பட்டேன். இந்த அறிக்கை வி;;டப்பட்டபின் மத்திய அரசு கொழும்பு மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் எனவும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் கொண்டு வரப்படும் எனவும உறுதியளிக்கப்பட்டது.
வைகோ,  நெடுமாறன் போன்றோருக்கு இந்த ஏற்பாட்டை பற்றிய விபரங்களை கூறவேண்டாம் என நடேசனுக்கு கூறப்பட்டிருந்தப்போதும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான கே.மகேந்திரன் என்பவருடன் இது விடயமாக ஆலோசித்துள்ளார்.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்   தலைமையிலான தேர்தல் கூட்டணியில் வைகோவின் மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இவரது கட்சியான இந்தி கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) யும் சேர்ந்திருந்ததது. மகேந்திரன் இந்த திட்டம்பற்றி வைகோவுக்கு தெரிவித்துவிட்டார்.
இவர்கள் இருவரும் காங்கிரஸ{ம் தி.மு.கவும் யுத்தம் நிறுத்தத்திற்கான பெருமையை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என கவலைப்பட்டனர். எனவே இவர்கள் இந்த திட்டத்தை கெடுக்க விரும்பினர். வைகோ எல்.ரீ.ரீ.ஈ யுடன் கோபித்தார். தமிழ் ஈழத்திற்கு மாற்றாக வேறு எதையாவது எல்.ரீ.ரீ.ஈ ஏற்றுக்கொண்டால் மக்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்  எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவான வேறு கட்சிகளும். தமது எல்.ரீ.ரீ.ஈ க்கான ஆதரவை நிரந்தரமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என நடேசனுக்கு வைகோ எச்சரித்தார்.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலில் பாரிய வெற்றியை பெறும் எனவும் புதுடில்லியில் பி.ஜே.பி அரசாங்கம் அமையும் எனவும் நடேசனுக்கு பிழையான நம்பிக்கை ஊட்டப்பட்டது. இதன்பின் யுத்தநிறுத்தம் ஒன்றை கொண்டுவரும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் இ தேர்தலுக்கு முந்திய எந்த போர் நிறுத்தமும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு உதவுவதாக அமையும்.
எனவே இந்த நடேசன் அறிக்கையை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டார். சிதம்பரத்தால் எதுவும் செய்யமுடியவில்லை. எல்லாமே வைகோவால் வந்ததுதான். இவர்கள் சுயநலமானவர்களாக இருந்தனர். இதனால் தேர்தலில் தாம் வெற்றி பெறுவோம் என நினைத்து வரக்கூடியதாக இருந்த யுத்த நிறுத்தத்தை தடுத்துவிட்டனர்.
    கேள்வி : கூறப்பட்டப்படி ஓர் அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈ வெளியிட்டுருந்தாலும் எல்.ரீ.ரீ.ஈ, தோல்வியின் விளிம்பில் இருந்த தருணத்தில் கொழும்பின் மீது யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்கும்படியான நிர்ப்பந்தத்தை பிரயோகித்திருக்க முடியுமா? இன்னுமொன்று பி.ஜே.பி.  வென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி தமிழ்நாடு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட இலங்கையில் நடப்பவற்றை ஓரிரு நாட்களில் மாற்றியிருக்க முடியாது. இராணுவத்தின் வேகமான முன்னேற்றம் காரணமாக இந்தியா விரும்பினாலும் கூட இந்தியா நடவடிக்கை தொடங்க முன்னரே எல்லாமே முடிந்து போயிருக்கும்?
பதில் : நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சொல்வது என்னவென்றால், இந்தியாவின் உதவியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை முயற்சிப்பதற்கான ஒரு வாய்ப்புக்கூட இந்த வைகோ என்ற மனிதனால் தொடக்க  நிலையிலேயே அழிக்கபட்டுவிட்டது என்பதைத்தான். தனது தேர்தல் நோக்கத்துக்காக எல்.ரீ.ரீ.ஈ ஐ பலியிடவைத்த ஒரு சுயநல அரசியல்வாதி. இப்போது அவர் பிரபாகரனுக்காக தனியாட்கள் முன்னிலையில் முதலைக் கண்ணீர் விடுகிறார். பகிரங்கத்தில் இன்னுமொரு ஈழ யுத்தம்பற்றிக் கதைக்கின்றார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்?
    கேள்வி : அண்மைக்காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை  பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
பதில் : உண்மை சொல்வதுதான் எனது பதில். இது உண்மையில் மிக எளிதான கதை.........

(தொடரும்)

(தமிழில்: ந.கிருஷ்ணராசா
)

புலிகளின் பயிற்சிக்கு உதவுமாறு ஒஸ்ரின் என்னிடம் கேட்டார் – முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை மேற்கொள்ள திருகோணமலைக் கடற்பரப்பில் ஒரு பகுதியை வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் கேட்டதாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் அளித்த சாட்சியம் உண்மைக்குப் புறம்பானதாகும் எனத் தெரிவித்த கடற்படைத் தளபதி தயா சந்தகிரி மேலும் தெரிவிக்கையில்…,
யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் ஒஸ்ரின் பெர்னாண்டோ உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் அளித்த சாட்சியம் உண்மைக்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திடப்படும் வரையில் ஐக்கிய தேசிய முன்னணி   அரசாங்கம்   படைத் தளபதிகளிடம்   கருத்துக் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவினைப் பிழையான வழியில் இட்டுச் செல்ல ஒஸ்ரின் பெர்னாண்டோ முயற்சிக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத் திடப்படுவதற்கு முதல் நாளில் படைத்தளபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து உடன்படிக்கை குறித்து அறிவிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதியின் ஊடாகத் தாம் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்த தகவல்களை அறிந்து கொண்டதாக ஒஸ்ரின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்து முற்றிலும் பிழையானதாகும்

பெண் எம்.எல்.ஏ.,வை சிறைக்கு தள்ளிய ரியல் எஸ்டேட் அதிபர்கள்

குடியாத்தம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லதா. சட்டசபையில், வெட்டிப்பேச்சு பேசாமல், சபாநாயகர் கொடுத்த நேரத்தை வீணாக்காமல் எப்போதும் மக்களின் பிரச்னைகளைப் பற்றியே பேசுவார். அப்படிப்பட்டவர், சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதானார் என்ற செய்தி பரவியதும், தொகுதி மக்களும், கட்சித் தலைமையும் அதிர்ச்சியடைந்தது.

உண்மையில் நடந்தது என்ன? : குடியாத்தம் தொகுதியில் மேல் ஆலத்தூரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக 26 ஆதிதிராவிடர் குடும்பங்களும், 10 முஸ்லிம் குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினால் தான், அதை சுற்றியுள்ள இடத்தில் பிசினஸ் செய்ய முடியும் என்ற நெருக்கடி, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஏற்பட்டது. உடனே, வீடுகளை காலி செய்யுமாறு 36 குடும்பங்களையும் மிரட்டினர். மிரட்டலுக்கு அஞ்சாத மக்கள், "காலங் காலமாக நாங்கள் வசிக்கும் வீட்டை காலி செய்ய மாட்டோம். என்ன நடந்தாலும் சரி, எங்கள் உயிர் இந்த இடத்தில் தான் போகும்' என்றனர்.  கடைசியில், ரியல் எஸ்டேட் அதிபர்களின் கைவரிசையால் புல்டோசர் மூலம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டரிடம் மனு தந்தனர். தொகுதி எம்.எல்.ஏ., லதாவிடம் ஓடினர். அவரிடம் நடந்த விவரத்தை சொல்லி கதறி அழுதனர். வீடு இழந்த மக்களின் பரிதாப நிலையைக் கண்டு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பும் உதவி செய்ய முன்வந்ததும், போராட்டக்குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் எம்.எல்.ஏ., லதா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் நாராயணன் மற்றும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் மத்தியில் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக அதே இடத்தில் தங்கிக் கொள்ள பேச்சு நடத்தப்பட்டது.  பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், திடீரென 500 போலீசார் திபுதிபுவென பேச்சுவார்த்தை நடந்த அறைக்குள் நுழைந்ததும், அங்கிருந்த அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் கேட்ட புகாரில், லதா எம்.எல்.ஏ., உட்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு உடனடியாக மாநில தலைமை குரல் கொடுக்கவில்லை. கட்சித் தரப்பில் விசாரணை நடத்தி, எம்.எல்.ஏ., எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்தபிறகே, லதா கைதுக்கு மாநில தலைமை கண்டனம் தெரிவித்தது. கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக சென்னையில் கூட்டப்பட்டது. லதா உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கு தீர்மானமாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் கடந்த 17ம் தேதி கோர்ட்டில் ஜாமீன் பெற்று லதா விடுதலையானார்.  திடீரென சிறைவாசத்திற்கு  தள்ளப்பட்டதை எதிர்பார்க்காத லதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட மற்றும் மாநில தழுவிய போராட்டங்களை நடத்துவது குறித்து மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து வருகிறது.

அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், லதா மீது கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் ஒரு எம்.எல்.ஏ., கோர்ட்டில், 15 நாள், "ரிமாண்ட்' செய்யப்பட்டது இதுவே முதல் முறை. மதுரை உத்தமபுரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா எம்.பி., ரங்கராஜன் தாக்கப்பட்டார். ஆதிதிராவிட மக்களுடன் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்தியதற்காக நாகை எம்.எல்.ஏ., மாரிமுத்து மீதும் போலீசார் தள்ளு முள்ளு சம்பவத்தை அரங்கேற்றினர்.  அரூர் எம்.எல்.ஏ., டில்லிபாபுவின் தொகுதியில் அரசு நலத்திட்ட விழாக்களில் அவரது பெயரை இருட்டடிப்பு செய்து, எந்த விழாக்களுக்கும் அவரை அழைப்பதில்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ரீதியான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், எங்கள் கட்சி எம்.எல்.ஏ., க்களை ஆளுங்கட்சி பழி வாங்குகிறது. இந்த அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இசாக் Benjamin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-22 10:50:14 IST
Surely the Real Estate people will be suporter's of Ruling DMK paty.Nowadays CM had only time to attend Cinema Function's & making them as Party senior member's, so CM & DCM has no time to look into Public Issues. Public should react on this Issues.Still People eat the Ration Rice & Watch Free TV to put Vote by getting money. Jaihind....
Endhiran - Sydney,ஆஸ்திரேலியா
2010-08-22 10:04:40 IST
I come from the same place where this MLA comes from.She is my friend aunty. She is doing good job,but real estate goons put her in trap.What the government is going to do against the offender?...
G யுவராஜா - Bangalore,இந்தியா
2010-08-22 09:59:58 IST
திமுக விடம் இருந்து அதிகாரம் முடிவுக்கு வர போகிறது. ஆயிர மாயிரம் கோடிகளாக கொள்ளை அடித்துவிட்டும் மக்களுக்காக உழைக்கும் எண்ணம் வர வில்லையே ?...
2010-08-22 09:53:37 IST
தி மு க அழியும் காலம் நெருங்கிகுகொண்டிருக்கிறது..... மக்களே இலவசம் உங்களை சொம்பெரியக்குகிறது......
RAMGANI - SIVAKASI,இந்தியா
2010-08-22 09:46:30 IST
ஒரு எம்எல் கே இ ப் படியா...
பாலா - புதுக்கோட்டை,இந்தியா
2010-08-22 09:23:03 IST
காசிற்கு வேலை பார்க்கும் சிரிப்பு police...
BALAJI - CHENNAI,இந்தியா
2010-08-22 09:21:38 IST
இலவசம் இலவசம் என்று ஏமாந்த தமிழ் நாட்டுமக்கள் "இலை வசம் " போய் விடுவார்கள் ....ஆஹா பிரமாதம்...
பாலா - புதுக்கோட்டை,இந்தியா
2010-08-22 09:19:36 IST
லஞ்சத்தில் ஊரும் ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கே இச்சம்பவத்தின் ஆணிவேர்...
jeeva - singapore,இந்தியா
2010-08-22 09:01:02 IST
உண்மையை சொன்ன தினமலர்க்கு நன்றி .....
mvbala - ch,இந்தியா
2010-08-22 08:55:36 IST
IF THE POLICE WANTS TO ARREST JALEEL(RAPEKING) POLICE WANTS MANJATHUNDU PERMISION HENCE IT IS PROVED MANJATHUNDU IS INVOLVED IN EACH AND EVERY ACTIVITIES OF THIS CRIMINALS,THIS IS HIGH TIME TO TEACH A LESSON TO ENTIRE DMK GANG....
ஜிலேபி and ஜிலேபி - நிலக்கோட்டை,இந்தியா
2010-08-22 08:40:52 IST
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா............
Kim - korea,இந்தியா
2010-08-22 06:43:59 IST
என்ன கொடுமை I HATE போலீஸ் இதே திமுக MLA ஆக இருந்தால் போலிஸ் வேடிக்கை பார்க்கும் இல்லாவிட்டால் போலிஸ் அடி வாங்கும் ! சிரிப்பு போலிஸ்...
Senthil - chennai,இந்தியா
2010-08-22 06:17:09 IST
First time I am hearing about Good MLA. Great Ladha. I wish you to get well soon. Don't worry about these rowdies, god will be always there with good people. Don't spoil your health because of these rowdies....
V.SUBBARAO - SINGAPORE,இந்தியா
2010-08-22 05:18:36 IST
தமிழக 'பெருங்குடிமக்களே' நமது ஆளும் கட்சியினரின் பிற்படுத்தப்பபட்டோரின் மேலுலள்ள மாயப் பற்றும், செயல்களும். "பணமென்றால் பிணமும் வாயைத்திறக்கும்" ; இவர்கள் உயிர்பிழைத்து பறித்துக்கொண்டு ஓடிவிடுவர்....
குமார் - சிங்கப்பூர்,இந்தியா
2010-08-22 05:03:58 IST
பொய் வழக்கு போட்ட அந்த ரியல் எஸ்டேட் அதிபரை என்ன செய்தார்கள்? மிக மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-08-22 04:01:28 IST
தி.மு.க "கூட்டு குடும்ப" கொள்ளைகளையும்,ஆளுங்கட்சி அடாவடிகளையும்,மக்கள் விரோத போக்கினையும் - தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக பார்த்து கொண்டுதான் இருகிறார்கள்! இலவசம் இலவசம் என்று ஏமாந்த தமிழ்நாட்டு மக்கள் அடுத்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் "இலை வசம்" போய் விடுவார்கள் என்பது நிச்சயமாகி விட்டது ! எங்கே போனீர்கள் ஜோபெட் போன்ற "ஜால்ராக்களே" வாருங்கள்-வந்து இது போன்ற ஒரு மக்கள் விரோத போக்கிற்கு முடிந்தால் உருப்படியாக ஒரு கருத்து சொல்ல முடியுமா என்று பாருங்கள்?உங்களால் எப்படி முடியும்?...
ஸ்ரீனி - போஸ்டன்,இந்தியா
2010-08-22 02:28:41 IST
அந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் யார், யார் ?......
jaffer - dubai,இந்தியா
2010-08-22 01:29:42 IST
makkaluku unmayaha ullaikum arasyal vathiai DMK ennum roudi arasal poruthukolla mudiyathu.dont worry u can carry on your jobs to protect our pepole.welldone we need such a politician in tamil nadu....

TNA இப்போதைக்கு இப்படியே காலத்தைப் போக்கலாம்.

சுருதி மாறிய பேச்சு
(வாகுலன்)
இனப் பிரச்சினையின் தீர்வு தான் எல்லாவற்றிலும் முன்னுரிமை பெற வேண் டியது என்று தமிழ்த் தலைவர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தார்கள். ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து மிக அண்மைக்காலம் வரை இத் தலைவர்களின் பேச்சு இவ்வாறா கவே இருந்தது. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வெவ்வேறு பெயர்களில் வலம் வந்தாலும் ஒரே பாணியி லேயே பேசினார்கள். தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை என்ற கேள்விக்கு இவர்களின் பதில் அது.
இன்று சுருதி கொஞ்சம் மாறியிருக்கின்றது. தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இனப் பிரச் சினைக்கான தீர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடப் பிரச்சினை கள் பற்றிப் பேசுகின்றார்கள்.
புலிகளும் இப்படித்தான் பேசினார்கள். எந்த அரசாங்கத்துடன் பேசினாலும் அன்றாடப் பிரச்சினை பற்றியே பேசினார்கள். இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது புலிகளுக்கு வேப்பங்காய் மாதிரி. அதனால் அரசியல் தீர்வு பற்றிய பேச்சைத் தவிர்ப்பதற்காக அன்றாடப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடப் பிரச்சினைகள் பற்றியே கூடுதலாகப் பேசுகின்றார்கள்.
அன்றாடப் பிரச்சினைகளும் பேச வேண்டியவைதான். உதாரண மாக மீள்குடியேற்றம் பிரதானமான அன்றாடப் பிரச்சினை. அது பற்றிப் பேசாமலிருக்க முடியாது. ஆனால் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வு பற்றியும் பேச வேண்டுமே. இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமேயானால் மற்றைய எல்லாப் பிரச்சினைகளும் மறைந்துவிடலாம்.
புலிகளின் தீர்வு தனிநாடு என்பதால் அவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசவில்லை. கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வு பற்றிய பேச்சைக் குறைத்துக்கொண்டதற்கு அது காரணமல்ல. அரசியல் தீர்வு பற்றி என்ன செய்வது என்பதில் சரியான முடிவுக்கு வர இயலாமையே காரணம்.
இவர்கள் சிலகாலம் தனிநாட்டு அலையோடு அள்ளுண்டு போனவர்கள். இப்போதும் சிலர் அந்த அலையில் நனைய விரும்புகின்ற போதிலும் கூடுதலானோர் அதனோடு தங்களை இனங்காட்ட விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு காண்பதற்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவும் இயலாத நிலையில் உள்ளனர்.
இவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தும் நிலைப்பாடே இவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. முழுமையான தீர்வைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என்று கூறகின்றார்கள். இந்த நிலைப்பாடு தீர்வை வெகுதூரம் தள்ளிவிடும் என்பது கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தெரியும். இன்றைய நிலையில் கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு கூடுதலான அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதே ஆக்கபூர்வமான அணுகுமுறை என்பது அவர்கள் அறியாததல்ல.
முழுமையான தீர்வையே ஏற்போம் எனக் கூறியது புலியின் வாலைப் பிடித்தது போலாகிவிட்டது. அந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவது அவர்களுக்குச் சங்கடமான சங்கதி. அதனால் இனப் பிரச்சினை பற்றிய பேச்சைப் பின்தள்ளிவிட்டு உடனடிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றார்கள். இப்போதைக்கு இப்படியே காலத்தைப் போக்கலாம்.
(வாகுலன்)

வெளிநாட்டு, இரட்டைக் குடியுரிமை கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக யாழ்ப்பாணம் செல்ல அனுமதியில்லை

சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டவர்கள் தரைவழியாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஏ-9 வீதி வழியாக பொதுமக்கள் மட்டுமே பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் - இரட்டைக் குடியுரிமை பெற்ற இலங்கையைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
வடபகுதிக்குச் செல்லும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

அனுரத்த ரத்வத்த மலேசிய தூதுவராக நியமனம்!

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்த மலேசிய தூதுவராக நியமனம்!

மலேசியாவுக்கான இலங்கை தூதுவராக முன்னைநாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் கதாநாயகனான இவர் பின்னர் ஜ.தே.க. ஆட்சிக்கு வந்தபோது  பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 2002ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி குற்றங்களில் இருந்து விடுவித்துள்ள மஹிந்த அரசு தற்போது அவரை மலேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமித்துள்ளது

வைகோ காலை வாரினார் போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில்

வைகோவின் நடவடிக்கைகளினால் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியவில்லை: கே.பி
தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனதாக குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தகவல்கள் வை.கோவிடம் பரிமாறப்பட்டதாகவும் இதனை வை.கோ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்

அ‌‌ஜீத், கௌதம் இணையாமல் போனதற்கு யார் காரணம்? அ‌‌ஜீத்தான

அ‌‌ஜீத், கௌதம் இணையாமல் போனதற்கு யார் காரணம்? அ‌‌ஜீத்தான் காரணம் என பேட்டிகளில் கூறிவந்த கௌதம் மீண்டும் அதனை உறுதி செய்திருக்கிறார்.அ‌‌ஜீத் முதலில் ஜூலையில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். பிறகு டிசம்பர் என்றிருக்கிறார். பிறகு திடீரென்று வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாக தெ‌ரிவித்துள்ளார். மேலும் அ‌‌ஜீத்தை வைத்து படம் பண்ண நினைத்த தயரிப்பாள‌ரிடம் கௌதம் வேண்டாம் என்றும் தெ‌ரிவித்திருக்கிறார்.இதையெல்லாம் பத்த<ரிகை பேட்டியில் தெ‌ளிவாக குறிப்பிட்டிருக்கும் கௌதம், இனி அ‌‌ஜீத்திடம் போய் நிற்க வேண்டிய தேவை எனக்கில்லை என உறுதியாக கூறியுள்ளார்.கௌதமின் சரமரியான குற்றச்சாற்றுக்கு இதுவரை அ‌‌ஜீத் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க- தி.மு.க. கட்சிகளை ஆட்டி வைக்க திட்டம்: தேர்தல் பணி துவக்கிய பா.ம.க.,

திராவிட கட்சிகளை ஆட்டி படைக்க பா.ம.க., தனித்து போட்டியிட்டு 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற 60 சட்டசபை தொகுதிகளை தேர்வு செய்து, "பென்னாகரம்' பாணியில் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது.கடந்த 1990ல் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டது.

திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமுதாயம் சார்ந்த அரசியல் கட்சியான பா.ம.க., 1991 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தி 1996ல் ஆண்டிமடம், இடைப்பாடி, தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய நான்கு தொகுதிகளை கைப்பற்றியது.அடுத்தடுத்த தேர்தல்களில் அ.தி.மு.க.,- தி.மு.க., என கூட்டணி மாறி மாறி எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள் மட்டுமின்றி மத்திய அமைச்சர் பதவியையும் ருசித்து பார்த்தது. 2001ல் அ.தி.மு.க., கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளை கைப்பற்றியது. 2006ல் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் 31 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதிகளை கைப்பற்றியது.கடந்த 2004 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் ஆறு எம்.பி., பதவியை கைப்பற்றினர். 2009ல் அ.தி.மு.க., கூட்டணிக்கு மாறிய பா.ம.க., ஏழு தொகுதிகளில் படுதோல்வியடைந்ததோடு, அ.தி.மு.க., உறவு முறிந்ததாக அறிவித்தது. தோல்வியை தழுவியதால் பா.ம.க.,விலிருந்து தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் கட்சிகளிலிருந்து விலகி ஆளும் கட்சிக்கு தாவினர்.அதிர்ச்சியடைந்த பா.ம.க., தொண்டர்களை தக்க வைக்கும் நோக்கில், நான்கு மாதத்திற்கு முன் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது. கிராமங்களில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆளும்கட்சியை அதிர வைக்கும் வகையில் 40 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. தன் பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்த பா.ம.க., பென்னாகரம் தொகுதியில் மேற்கொண்ட யுக்திகள் எதிர்பார்த்த அளவு பலன் கொடுத்ததாக நம்பிக்கை கொண்டுள்ளது.

வரும் 2011 சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேராவிட்டாலும், தனித்து போட்டியிட்டு 20க்கும் மேலான தொகுதிகள் கைப்பற்றி கட்சியின் அங்கீகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக 1991ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது தனித்து போட்டியிட்டு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்ற 60 சட்டசபை தொகுதிகளை தேர்வு செய்து, பென்னாகரம் பாணியில் தேர்தல் யுக்திகளை கையாண்டு, அதிக ஓட்டுகளை பெற நடவடிக்கை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளான தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் கலக்கமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகை மேற்கொண்டுள்ளது.பா.ம.க.,வின் தேர்தல் பணியால் அந்த கட்சி தனித்து போட்டியிடுவதை தவிர்க்க, அதிக சீட்டுகளை கொடுப்பதற்கு திராவிட கட்சிகள் பேச்சு நடத்தி வருவதாகவும் பா.ம.க.,வினரே தகவல்களை பரப்பி வருகின்றனர். தவிர பழைய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுத்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தும் வேலையும் துவங்கியுள்ளது.

இது குறித்து பா.ம.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் ஏமாற்றி வருகின்றனர். 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் 31 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததில், ஏழு தொகுதிகள் அ.தி.மு.க., அமைச்சர்களாக இருந்த தொகுதிகளாகும். வரும் 2011 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி முடிவாகவில்லை.தேர்தலில் கூட்டணியின் போது 40 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தல் பணிகளை போல், 1991ல் தனித்து போட்டியிட்டபோது 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற 60 தொகுதிகளை தேர்வு செய்து, கட்சி உறுப்பினர் சேர்த்தல், கூட்டம் நடத்துதல் போன்ற பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் தேர்தல் பணிகள் துவங்கப்பட்டு, கட்சி வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டாலும் 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்து, தேர்தல் பணியாற்ற அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக திருப்போரூர் தொகுதியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., ஆறுமுகம் போட்டியிடுவார் என்று கட்சியின் நிறுவனர் அறிவித்துள்ளார், என்றார்.
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-22 07:47:18 IST
தேர்தலில் பா ம க தனித்து நின்றால் தமிழ் நாட்டுக்கு மிகவும் நல்லது.அனைத்து தொகுதிகளிலும் டெபொசிட் காலியாகும்.அரசுக்கு நல்ல வருமானம் வரும்.பா ம கவும் ஒழிந்து விடும்.மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் பா ம காவுக்கு இருந்தால் தனியாக நிற்க வேண்டும்....
pandi - singapore,சிங்கப்பூர்
2010-08-22 07:37:58 IST
Dr-ku AAAAAAAAAAAppu....
moosa - kayal,இந்தியா
2010-08-22 07:09:36 IST
அடே மானம் கெட்டேவனே ஒரு தொகுதியல் வெற்றி பெற mudiuma.?...
murali - guangzhou,சீனா
2010-08-22 07:09:22 IST
விரட்டுங்கள் இந்த ஜாதி டாக்டர் raamadaasi...
பாஷா. J - DUBAI,இந்தியா
2010-08-22 07:06:38 IST
பாவம், வேற வழி இல்லை! இப்படி தினத்தோறும் அறிக்கை விட்டாவது பா.ம.க இருக்குதுன்னு கண்பிகத்தான். நிறைய கமன்ட் அடிச்சி நோகடிகாதிங்க, பிறகு கோபம் வந்து கட்சிய கலட்சிடபோரங்க....
நவீன் - விரிதூர்,இந்தியா
2010-08-22 07:05:26 IST
வணக்கம், "தற்போது தேர்தல் நிலவரப்படி தனித்து நின்ற ஐயாவின் கட்சி இருபது தொகுதியும் டப்பா டான்ஸ் ஆடி deposit இழந்தது" . தைலாபுரத்தில் தலையில் துண்டு போட்டு அடுத்த முறை விஜய சாந்தி கட்சியுடன் கூடு சேருவோம் என்று ஸ்டாடேமென்ட் விடலாம்...
Rathna - chennai,இந்தியா
2010-08-22 06:59:45 IST
இவர்கள் திட்டம் போட்டு அறிக்கை விடுகிறார்கள். இன்று விடுமுறை என்பதாலும், வாசகர்கள் கருத்துக்கள் அதிகம் வராது என்று எண்ணுகிறார்கள். ஆனால், இன்றும் இங்குதான் அதிகம் கருத்துக்கள் வரும், அதில் சந்தேகம் இல்லை.. :)...
ரகு - சீர்காழி,இந்தியா
2010-08-22 06:49:10 IST
மக்களே இவர்கள் கட்சி போன்று இருந்தால் நம் நாடே உருப்புடாது. இவர்கள் மரம் வெட்டி மற்றும் சாலை மரியளினால் நான் குறிபிட்ட நாட்களில் வெளி நாட்டு வேலை விசாவினால் பாதிப்பு அடைந்தது 20 வருடத்திற்கு முன்னர் நல்ல வேலை பறிபோனது. தயவு செய்து எந்த ஒரு அரசியல் வாதியும் இதை போன்று காரியம் செய்யாதிர்கள். இதனால் பிரசவம், குழந்தைகளின் படிப்பு, வேளைக்கு போவோர்கள், மற்றும் அவசரத்தில் இருப்பவர்கள் வயுறு எறிவார்கள்.... விட்டு விடுங்கள் அயோக்கிய தனத்தை....
Naseerudeen - Riyadh,சவுதி அரேபியா
2010-08-22 04:19:26 IST
மருத்துவர். அய்யாவின் இன்றைய காமெடி... பா.மா.க இருக்கும் கூட்டணிக்கே ஓட்டுபோடுவதில்லை என நானும் என் தோழர்களும் முடிவு செய்துள்ளோம்... இதில் தனித்து போட்டியிட உமக்கு எப்படித்தான் தோன்றுகிறதோ? உன்னையும் யாரும் கண்டுகொள்வதில்லை, பி.ஜே.பியையும் யாரும் கண்டுகொள்வதில்லை... பேசாமல் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கலாம் (?).... தமிழக அரசியல் தளத்தில் பா.மா.க, பி.ஜே.பியின் ரொம்ப பரிதாப நிலையில் உள்ளது......
மதுரை விருமாண்டி - Madurai,இந்தியா
2010-08-22 04:17:31 IST
ஒரு வேளை திராவிட கட்சிகளின் தலைவர் அல்லது தலைவியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, அழுது, கதறி, பின்னர் காலில் கிச்சு கிச்சு மூட்டி "ஆட்டி வைக்க" போகிறாரோ என்னவோ....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-08-22 03:31:14 IST
விலைவாசி உயர்வு,மின் வெட்டு,மழை நீர் தேங்குவதால் சுகாதார கேடு,"குடும்ப கூட்டு கொள்ளைகள்",போக்குவரத்து சீரமைக்காததால் ஏற்படும் நெரிசல்,பெட்ரோல் மற்றும் மின்சார கட்டணம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உயர்வு என்று பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் எங்களை போன்ற தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களுக்கு இது போன்ற "கிச்சு கிச்சு கிச்சாஸ்" ராமதாஸ் கூட்டத்தின் நகைச்சுவைகளை படிப்பதால் ஒரு வித "ஆறுதல்" ஏற்படுகிறது ! ஆகவே திரு.ராமதாஸ் அவர்களுக்கும் அவர்களை சேர்ந்த கூட்டதினர்களுக்கும் "தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின்" என்ற பட்ட பெயரை வழங்குமாறு அனைத்து உலக காமடியன் சங்கத்தில் கோரிக்கை வைக்கிறேன் !...
சுஜாதா தயாநிதி - லண்டன்,இந்தியா
2010-08-22 03:26:28 IST
இந்த நாகரீக சமுகத்தின் வன்முறையாளர் ஜாதிய சிந்தனையாளர் தமிழின பிரிவினையாளர்...
சிராஜ் - ஜெட்டாஹ்,சவுதி அரேபியா
2010-08-22 03:24:32 IST
இனிமேலுமா ஆட்டி வச்சதெல்லாம் பற்றாதோ!...
பாவை ரஹீம் nasser crane jubail - papanasam,இந்தியா
2010-08-22 03:19:07 IST
மரம்வெட்டி தர்போதுதன் ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கு. இத்துடன் ஒழித்தது பா.ம.க....ஐயா தயவு செய்து இம்முறை யாரும் இத்த பாச்சோந்திய கூட்டணியில் செர்க்க வேண்டம்......
tripleyem - பாரிஸ்,பிரான்ஸ்
2010-08-22 03:18:55 IST
சும்மா குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் தனித்து நின்று தனது செல்வாக்கை காட்டவேண்டும்,அதைவிட்டு நான் இருக்கும் இடம்தான் வெற்றி என்று அகங்காரம் காட்டிக்கொண்டு ராமதாஸ் பொழுதை கழிக்க வேண்டாம். அதுதான் நாட்டுக்கு நல்லது...
அம்பி - அல்கோபர்,சவுதி அரேபியா
2010-08-22 02:48:57 IST
இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு..........
தமிழ் விரும்பி - குவைத்,இந்தியா
2010-08-22 02:41:54 IST
ஐயா தனித்து போட்டி இட்டு பாருங்கள். உங்கள் சாயம் வெளுத்து போகும். மறுபடி மரம் வெட்டி தான் கட்சியை வளர்க்க வேண்டும்...........
soman - தோஹா,கத்தார்
2010-08-22 02:25:02 IST
ஆமா....உள்ளூர்ல ஓணான் புடிக்க முடிலயாம், ஆனா வானம் ஏறி வைகுண்டம் போவானாம்...மொதல்ல கட்சி அங்கீகாரம் நிக்குமா பாரு.. பொடவ கடையிலையோ, வேட்டி கடையிலையோ, நிழலுக்கு ஒதுங்க முடியுமா பாரு... அப்புறம் காட்டலாம் மத்த வித்தை எல்லாம்......
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-22 02:22:12 IST
தமிழக மக்களே,தினமலர் வாசகர்களே,பா.ம.க வரும் தேர்தலில் அராஜகம்,வெட்டு,குத்து,தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நல்ல திட்டங்கள் வர விடாமல் தடுத்தல்,போன்ற செயல்களில் ஈடுபட்டால் இந்திய ஜனாதிபதிக்கு தந்தி அனுப்புங்க.ஜாதி வெறியை தூண்டி விடுபவர் நல்ல அரசியல் வாதியே கிடையாது.காடுவெட்டி 5000 பேரை கட்சியில் வைத்துக்கிட்டு தமிழ்நாட்டு மக்களை பயமுறுத்துகின்றார்.பயப்படதிங்க மக்கள் சக்தி முன் இவர் ஒரு கொசு....
Maariji - Kuwait,இந்தியா
2010-08-22 02:14:25 IST
Dr.Ramadas vait for comming election. puplic thir vaiting for u to give lessan(Vaikkaporanga AAAAAAppu)...
dhayanithi - london,இந்தியா
2010-08-22 02:13:20 IST
பிரிவினைவாதத்தை விட கொடியது மதவாத ஜாதிய அரசியல்... தமிழர் மனதில் நஞ்சை விதைக்கும் நரிகளை நாட்டை விட்டே அப்புறபடுத்துவோம்..!...
mayilvaganan - Dublin,அயர்லாந்து
2010-08-22 01:36:15 IST
ஜனநாயக நாடு சார், அவங்க பலத்த காட்ட அவர்களுக்கு உரிமை உண்டு ....
rajasji - munich,ஜெர்மனி
2010-08-22 00:34:41 IST
toooo early !...."பாவம் மாம்பலம் அழுகி நாறிப் போய் விடப் போகிறது"!!! @ rajasji

நான் மகான் அல்ல, இரண்டு இனிது இனிது.

நேற்று இரு படங்கள் வெளியாயின. ஒன்று நான் மகான் அல்ல, இரண்டு இனிது இனிது.சுசீந்திரனின் நான் மகான் அல்ல பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கார்த்தி தனது முந்தையப் படங்களைப் போல பத்து ஐம்பது பேரை தனியாளாக அடித்து தலைவலியை ஏற்படுத்துவதாக சாதாரண ரசிகர்களே ரிச்சலாகின்றனர். பையாவின் பாதி அளவுக்காவது படம் போகுமா என்பதே சந்தேகம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.நான் மகான் அல்ல படத்துக்கு அப்படியே நேர்எதிராக இனிது இனிது வெளியாகியிருக்கிறது. கே.வி.குகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வன்முறையும், ஆபாசமும் துளியுமில்லை. கேம்பஸ் கதையான இதில் மாணவர்களின் நல்ல பக்கங்கள் மட்டும் பாஸிடிவ்வான விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இனிது இனிது மெதுவாக அனைவர் மனதிலும் இடம்பிடிக்க வாய்ய்புள்ளது.

லெபனானிலிருந்து இலங்கைப் பெண்களை அழைத்துவர இலங்கை தூதுவராலயம் ஏற்பாடு!

லெபனான் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான சுமார் நூறு இலங்கைப் பணிப்பெண்களை அழைத்துவர இலங்கை தூதுவராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.கடவுச்சீட்டு இன்மை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அல்லது நாளை இவர்கள் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

எழுத்தாளர் ஜெயராஜ் மீண்டும் கேபீயுடன் ஒரு நேர்காணலை நிகழ்த்தி வழக்கம் போல தனது கற்பன

http://dbsjeyaraj.com/dbsj/archives/1651

Q: What about the stories about Prabhakaran surrendering and being shot after being humiliated?
A: No that never happened. If I know anything about Prabhakaran he would never ever have surrendered. I know the stories being spread. Some do so deliberately. Some simply repeat what they hear without thinking.
I know reliably that a senior TNA leader went around saying that Prabhakaran had surrendered and was brought to Sarath Fonseka who made the LTTE leader kneel down and then shot him. Nonsense! I can’t understand why a veteran Tamil leader who used to cringe before Prabhakaran should speak about him this way after death.



But the army people who defeated Prabhakaran speak highly of him and the way in which he died. Top persons in the defence establishment –I think you understand who I am referring to – told me that they had been very impressed by the courageous way in which this group had fought to the very end and died without surrendering.But some of our people are insulting Prabhakaran after his death. I want to reiterate that my leader fought to the very end and had a “Veera maranam” (heroic death)

 பிரபல எழுத்தாளர் ஜெயராஜ் மீண்டும் கேபீயுடன் ஒரு நேர்காணலை நிகழ்த்தி வழக்கம் போல தனது கற்பன  வளத்தை  வெளிக்காட்டி  உள்ளார்.
எதோ எதோ எல்லாம் எழுதி உள்ளார். முக்கிய மான சாராம்சம் இதுதான்.
பிரபாகரன் சரணடையவில்லை வீரமரணம் அடைந்த்துள்ளார்.
அவரது சகல குடும்ப அங்கத்தினர்களும் எதோ ஒரு வகையில் வீரமரணம்தான் அடைந்திருக்க வேண்டும்.
நெடியவன் ஏமாத்திப்போட்டார் அதாவது பிரபா குடும்பம் தப்பி ஓட ஹெலி வாங்க வேண்டி இருந்தது அதற்கு உரிய காசை கடைசி வரை தரவில்லை. அதனால் அந்த அப்பாவி குடும்பத்தை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
வைகோவும் நெடுமாறனும் தமது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் கடைசி நேரத்தில் கனிமொழியும் சிதம்பரமும் ஏற்பாடு செய்த உத்த நிறுத்த ஒப்பந்தத்தை குழப்பி அடித்தார்கள். (இது ஒன்றும் புதிய செய்தி இல்லை)
தற்போது பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுதான் ஏறக்குறைய சகல புலி ஆதரவு அமைப்புகளும் புலன்பெயர் அரசியலை நடத்தி வருகின்றன.
மொத்தத்தில் இவற்றில் பல உண்மைகள் ஏற்கனவே எல்லோரும் அறிந்த்தவை தான். சரணடையவில்லை என்ற பிரமாண்டமான பொய்யை நிலை நிறுத்த ஜெயராஜ் மிகவும் பிரயாசை படுகிறார்.

இந்திய தூதரகம் ,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சேவையை வழங்கும்.

வடக்கை முழுமையாக மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல ஆவணம் பரிமாற்றம்
 யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்தியாவின் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களை அமைப்பது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக எழுத்துமூல ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் சி.ஆர்.ஜயசிங்கவும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவும் இந்த ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த ஜூனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தியப் பிரதமருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகத்தைத் திறப்பதென இரு தலைவர்களும் இணங்கியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும்வலுப்படுத்துவதற்காக இராஜதந்திரப்பிரதிநிதிகள் அலுவலகங்களைத் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதேசமயம், புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் இயங்கும் சென்னை, மும்பையிலுள்ள துணைத் தூதரகங்களுடன் மேலதிகமாகத் துணைத்தூதரகங்களை அமைப்பதற்கான இலங்கையின் ஆர்வத்தையும் இந்தியப் பிரதமர் வரவேற்றிருந்தார். இந்தப் புரிந்துணர்வை உத்தியோகபூர்வமான ஏற்பாடாக உருவாக்குவதற்காக நேற்று இருநாடுகளும் எழுத்துமூல ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.இதன்பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகமானது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சேவையை வழங்கும். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்டங்களுக்கான சேவையை வழங்கும். (மொனராகல மாவட்டமானது கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரகத்தின் கீழ் மாற்றப்படும்.) பரஸ்பர இணக்கத்துடன் இந்த இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலக மாவட்டமானது விரிவுபடுத்தப்படும்

சாபக்கேடு கூட்டணியின(TNA)் உருவத்தில் தொடர்கிறது.சுயநலம் சுயநலம் சுயநலம்

 TNA யின் எதிர்ப்பு அரசியல் எவ்வளவு காலம் சென்றாலும் பலன் தரப்போவதில்லை!

நடைமுறைச் சாத்தியமான வழியில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையும் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அன்றாடப் பிரச்சினைகளின் தீர்வுக்காகச் செயற் படுவதையும் நோக்கமாகக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டே தமிழ்க் கட்சிகளின் அரங்கம். இவ்வாறான ஒரு கூட்டுச் செயற்பாடு இன்றைய நிலையில் மிகவும் அவசியமானதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக அரங்கக் கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சி இதுவரையில் பலிக்கவில்லை. கூட்டமைப்பு அரங்கத்தின் அழைப்புக்கு முடிவு எதையும் கூறாமல் இழுத்தடிப்பதற்கான நோக்கத்தை அரங்கக் கட்சிகள் சரியாக விளங்கிக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
கூட்டமைப்பை இணைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் போல் தெரிகின்றது. இது அரங்கம் செயலில் இறங்குவதை இயன்றளவு தடுப்பதற்கான தந்திரோபாயம். இந்தத் தந்திரோபாயத்துக்குப் பலியாகாமல் இருக்க வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தாமதமின்றி அதன் வேலைத் திட்டத்தைத் தயாரித்துச் செயலில் இறங்க வேண்டும். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றில் அரங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும், அல்லது மக்களுக்கு முன்னால் மாற்று வேலைத்திட்டமொன்றை வைக்க வேண்டும்.
இனப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு எது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் இன்றும் தனிநாட்டு மாயைக்குள் சிக்கியிருக்கலாம். அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது நிரூபண மாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையே மாறுபட்ட அபிப்பிராயம் இருக்க முடியாது. சமஷ்டித் தன்மை கொண்ட முழுமையான அதிகாரப் பகிர்வு என்பதை எல்லா அரசியல் கட்சிகளுமே ஏற்றுக்கொள்கின்றன. இன்றைய நிலையில் அரசியல் தீர்வு முயற்சி எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதிலேயே கருத்து வேறுபாடு உண்டு.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் நடைமுறைச் சாத்தியமான வழியைச் சிபார்சு செய்கின்றன. உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்றுக் கொண்டு முழுமையான தீர்வுக்கான முயற்சியை முன்னெடுப்பதே அந்த வழி. இந்த நடைமுறை மக்களுக்கு உடனடி விமோசனத்தையும் காலப் போக்கில் முழுமையான அரசியல் தீர்வையும் பெற்றுத் தரக்கூடியது.
அரைகுறைத் தீர்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முரணான நிலைப்பாட்டையே தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றது. அரைகுறைத் தீர்வை ஏற்க முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு. உடனடியாகச் சாத்தியமான தீர்வையே அரைகுறைத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றார்கள். அது அரைகுறைத் தீர்வு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அத்தீர்வை ஏற்பதால் தமிழ் மக்கள் எதையாவது இழக்கின்றார்களா என்பதும் எதையாவது புதிதாகப் பெறுகின்றார்களா என்பதுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. உதாரணமாக மாகாண சபையை எடுத்துப் பார்ப்போம்.
வடக்கு, கிழக்கு மாகாணசபை இப்போது பழங்கதை ஆகிவிட்டது. இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுக் கிழக்கு மாகாணத்தில் தனியான மாகாண சபை செயற்படுகின்றது. இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிலைமைக்குத் தமிழ்த் தலைமைகள் பிறரைக் குறை சொல்வதால் பலனில்லை. வடக்கு, கிழக்கு மாகாண சபை அம் மாகாணங்களிலுள்ள எல்லா இன மக்களினதும் நன்மதிப்பை பெறும் வகையில் தொடர்ந்து செயற்பட்டிருந்தால் பெரும்பாலும் இந்த நிலை தோன்றியிருக்காது.
முதலில் தெரிவு செய்யப்பட்ட வடக்குஇ கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையை ஐக்கிய தேசியக் கட்சியும் புலிகளும் கூட்டுச் சேர்ந்து ஏற்படுத்தினார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படுவதற்கான முதலாவது ‘அத்திவாரம்’ அது எனக் கூறலாம். அந்த மாகாண சபையைச் செயற்படுத்த வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தச் சந்தர்ப்பத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை.
மக்கள் மாகாண சபையை ஏற்பதால் அவர்கள் இப்போது அனுபவிக்கும் நன்மை மற்றும் உரிமைகளில் எதையும் இழக்கப் போவதில்லை. அதேநேரம் புதிய பல நன்மைகளை அவர்கள் பெறுவார்கள். மக்கள் எதையும் இழக்காமல் புதிய பல நன்மைகளைப் பெறக்கூடிய மாகாண சபைகளுக்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
எதிர்ப்புக்கு இவர்கள் கூறும் பல காரணங்களுள் ஒன்று மாகாண சபை தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதாகும். மாகாண சபை தமிழ் மக்களின் அபிலாஷையை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றது என்று எந்தவொரு தமிழ்க் கட்சியும் கூறவில்லை. மாகாண சபையை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே இக்கட்சிகளின் நிலைப்பாடு.
இந்த இடத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பிரதான முரண்பாடு தோன்றுகின்றது. கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாடு. முழுமையான தீர்வன்றி வேறு எதையும் ஏற்க முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலப்பாடு. இது நடைமுறையில் தோற்றுவிட்டது. இந்த நிலைப்பாட்டின் மூலம் தமிழ் மக்கள் உள்ளதையும் இழந்தார்களேயொழிய எதையும் பெறவில்லை. மக்களுக்கு இழப்பை ஏற்படுத்தாமல் தீர்வைப் பெறக் கூடிய வழிவகைகளே இன்றைய தேவை.
அரசாங்க ஆதரவு கட்சிகள்
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் இணக்க அடிப்படையில் செயற்படுவதற்கு எதிராகக் கூட்டமைப்பு கூறும் இன்னொரு காரணம் அரங்கத்தில் உள்ள கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவை என்பதாகும்.
அரங்கத்தில் உள்ள கட்சிகளுள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே அரசாங்கத்தில் இருக்கின்றது. மற்றையவை சுதந்திரமாகச் செயற்படுகின்றன.
தமிழ் மக்களின் உரிமையைப் பெற வேண்டுமானால் அரசாங்கத்தை எதிர்த்தே தீர வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசாங்கத்துடன் இணக்கமான நிலையில் செயற்பட்டு உரிமைகளைப் பெறுவதா அல்லது எதிர்நிலை எடுத்துச் செயற்படுவதா என்பது பற்றிய தீர்மானம் சமகால யதார்த்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் மூலம் ஆட்சி அமைக்கக் கூடிய நிலையில் இல்லை. அது ஒருபுறத்தில் உட்கட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. மறுபுறத்தில் நாளுக்கு நாள் மக்களாதரவை இழந்து வருகின்றது. மேலும், இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் நழுவல் போக்கையே பின்பற்றி வந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவை வளர்த்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது வெறும் கற்பனை.
இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இடதுசாரிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயற்படும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை.
அரசாங்கத்துடனோ வேறு கட்சிகளுடனோ எவ்வித உறவும் இல்லாமல் தனித்து நின்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமானதல்ல. பதின்மூன்றாவது திருத்தமாக இருந்தாலென்ன அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வாக இருந்தாலென்ன அரசாங்கமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயற்படும் கட்சிகளை விமர்சனம் செய்து கொண்டும் எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சாதிக்க முயற்சிக்கின்றது? எதையும் சாதிக்க முடியாது. அப்படியானால் எதற்காக இந்த நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள்?
தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் தலையில் போட்டு அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு அரசியல் செய்வதன் மூலம் இலகுவாக அம்மக்களின் வாக்குகளைப் பெற முடியும். இது வெகுஜன விருப்புவாத (பொப்யூலிஸ்ட்) அரசியல். இதன் மூலம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தலாம். ஆனால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. அறுபது வருடங்களாக இதே பாணியிலான அரசியலையே நம் தலைவர்கள் செய்து வருகின்றார்கள். இதுவரை மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்த அரசியலை இன்னும் நூறு வருடங்கள் செய்தாலும் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் தலைவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
காலத்துக்குக் காலம் சிலரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவது தான் தமிழ் மக்களின் அரசியலாகிவிடக்கூடாது. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே அரசியலின் குறிக்கோள். அதற்கேற்ற விதத்தில் தலைவர்கள் மாற வேண்டும். மாறாவிட்டால் தலைவர்களை மாற்ற வேண்டும்

இந்திய பிரதிநிதியாக இலங்கைக்கு T.R. பாலு அல்லது ப. சிதம்பரம் வரக்கூடும்

 இந்திய அரசின் பிரதிநிதியாக t.r. பாலு அல்லது ப சிதம்பரம் வரக்கூடும் என்று தெரிய வருகிறது. பாலு வருவதாயின் சகுனம் சரி இல்லை. ஒழுங்காக மனிதர்களுடன் பழக தெரியாத இந்த தேவர் மகன் மேலும் காரியத்தை கெடுப்பார் என்பது நிச்சயம்.இவர் இங்கு வந்து நம்மை வித்து தன பிசிநேச்களை ஒழுங்காக செய்வார். பாலு சென்ற முறை வந்து வவுனியா அரச அதிபரிடம் தராதரம் இல்லாமல் பேசியதை சுலபத்தில் மறந்து விடமுடியாது.

விஜய் , இப்போது தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு ப் பக்கமும்

இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும்,
'அய்யோ நான் தமிழனுங்ணா' என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் [^], இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு [^]ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)

ஆம்... முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய்.

அது த்ரீ இடியட்ஸின் தெலுங்கு ரீமேக்.

ஷங்கர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய், ஆர்யா மற்றும் ஜீவா நடிக்கின்றனர். தெலுங்கில் விஜய் பாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், தெலுங்கிலும் விஜய்யே நடித்தால் என்ன? என்று அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான ஷங்கரிடம் (எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் ஷங்கர்!) கேட்டுள்ளார். சற்று யோசித்த ஷங்கரிடம், இதற்கு முன் விஜய்யின் டப்பிங் படங்கள் சில தெலுங்கில் நன்றாக ஓடியதாக புள்ளி விவரமெல்லாம் சொன்னாராம் (விஜய் படங்களில் 90 சதவீதம் தெலுங்கு ரீமேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது!).

இப்போது ஒரு வழியாக விஜய்யை தெலுங்கில் அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டாராம் ஷங்கர்!

ஆக.. விரைவில் விரல் சொடுக்கி தெலுங்கில் பஞ்ச் டயலாக் விடப் போகிறார் விஜய்!

பதிவு செய்தவர்: geetha
பதிவு செய்தது: 22 Aug 2010 12:03 am
இந்த தேவிடிய மகன் தமிழ் மக்களைத்தான் சித்திரவதை பண்ணினான் இப்போ தெலுகு மக்களையும ! இவனையெல்லாம் செருப்பால சுசு thorathathunum

பதிவு செய்தவர்: prabu
பதிவு செய்தது: 21 Aug 2010 11:46 pm
தெலுகு படம் இப்போது மிகவும் மாறிவிட்டது ஆடைகள் விஷயத்தில் தமிழ் நடிகர்கள் இன்னும் என்டீயர் காலத்தில்தான் இருக்கிறார்கள் விஜயீன் ஒரே மாதிரியான நடிப்பு எடுபடாது வஜய்க்கு நடிப்பைவிட அதிஷ்டதில்தான் வண்டி ஓடுது

Fish War ? நாங்கள் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது,ராமேஸ்வரம் மீனவர் தலைவர்கள்

உங்கள் பகுதியில் இருக்கும் ஆயிரம் படகுகளைப் பார்த்து எங்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்போதே இங்கு மீன் வளம் நீர்த்துவிட்டது,இலங்கை மீனவர.

தமிழக மீனவர்களால் தங்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் வழிவகை குறித்து ஆலோசிக்க இலங்கைத் தமிழ் மீனவர் குழு ஒன்று, கடந்த 17-ம் தேதி ராமேஸ்வரம் வந்தது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க யாழ்ப்பாணம், வடமராச்சி, வன்னி, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மீனவ அமைப்பு களின் நிர்வாகிகள், பேசாலை பங்குத் தந்தை புஷ்பராஜ், இலங்கை மீன் துறை இணை இயக்குநர் லால் டிசில்வா மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட 21 பேர் வந்தனர்.
ராமேஸ்வரம் தீவு மீனவர்களால் வரவேற்கப்பட்ட இவர்கள், மறுநாள் காலை பாம்பன், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகங்களுக்கு சென்று, அங்கு இருந்த நம் மீனவர்களின் படகுகளைப் பார்த்து வியந்ததுடன், மீன்பிடி முறைகளையும் கேட்டனர். அன்று மாலை தங்கச்சிமடத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு முன், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட 'நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு' நிர்வாகி களான விவேகானந்தன், யு.அருளானந்தம் ஆகியோரிடம் பேசினோம்.
''83-ம் ஆண்டில் இருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் பிரச்னைகள் உள்ளன. அங்கே போர் முடிவுக்கு வந்த நிலையில், இனி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை, இந்தப் பிரச்னையில் இரு நாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட வேண்டும். மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டத்தால் அரசுகளால் ஏதும் செய்ய முடியாது. தற்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் நம்மால் பாதிக்கப்படாமல் இருக்கவும், நமது மீனவர்களும் பாதிக்கப்படாத வகையிலும் இருக்க இந்தப் பேச்சுவார்த்தை வழி வகுக்கும்!'' என்றனர்.
கலந்தாய்வுக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இலங்கை மீனவர் குழுத் தலைவர் சூரியகுமரன், ''பரஸ்பரமாக மீன் பிடித்த நமக்குள் கால மாற்றமும், தொழில் மாற்றமும் பிரச்னைகளை ஏற்படுத்தி விட்டன!
உங்கள் பகுதியில் இருக்கும் ஆயிரம் படகுகளைப் பார்த்து எங்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்போதே இங்கு மீன் வளம் நீர்த்துவிட்டது. இனி எதிர்கால சந்ததிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற நிலையில் நீங்கள் எங்கள் பிரதேசத்துக்குள் மீன் பிடிக்க வருகிறீர்கள். நீங்கள் வரும் டிராலர்கள் எங்கள் மக்களின் சிறு வலைகளை நாசப்படுத்துகிறது. எங்கள் கரையில் இருந்து பார்த்தால், உங்கள் டிராலர்களின் வெளிச்சம் தெரியும் அளவுக்கு எல்லை தாண்டி வருகிறீர்கள். மீன் வளத்தை அழிக்கும் தங்கூசி (நைலான்) வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கிறீர்கள். இதனால் எங்கள் பிரதேசமும் மீன் இல்லாப் பிரதேசமாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏற்கெனவே, எல்லாம் இழந்து தவித்து எஞ்சி இருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஊறு ஏற்படுத்த வேண்டாம் என முறையிடவே வந்துள்ளோம். எங்கள் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லை தாண்டி வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!'' என தாங்கள் வந்த நோக்கத்தை விவரித்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், அந்தோணி ஆகியோர், ''குறைந்த கடல் பரப்பைக்கொண்ட நாங்கள் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது. மீனுக்கும் மீனவனுக்கும் எல்லைகள் கிடையாது. எங்களை நவீன மீன் பிடிப்புக்குத் தள்ளியது எங்கள் அரசுதான். அதன்படி ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே நாங்கள் தொழில் செய்கிறோம். இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆண்டு முழுவதும் உயிர் வாழ்கின்றன. அதனால்தான் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய இந்தத் தொழில் இப்போது 50 லட்சம் வரை உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், உடனடியாக எங்கள் தொழிலை மாற்றச் சொல்லி முறையிடுவது ஏற்கக்கூடியதாக இல்லை. ஆனாலும், உங்கள் கஷ்டங்களையும் நாங்கள் புரிந்துகொண்டு, காலப்போக்கில் எங்கள் மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்வோம்'' என உறுதியளித்தனர்.