Suhan Kanagasabai : சென்னை சூளைமேடு கொலைவழக்கில் தான் செய்யாத கொலையை தார்மீகப் பொறுப்பேற்று இன்றும் அவ் வழக்கில் விசாரணைக்குச் சென்றுகொண்டிருக்கும் தோழர் டக்ளஸ் அவர்களின் பண்புகளில் ஒன்று தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்காது கடைசிவரை காப்பாற்றுவது .
25 வருடத்திற்கு முற்பட்ட ஒரு கைத்துப்பாக்கி , 2001 இல் .
ஒருசிலர் ஈ பி டி பி இலிருந்து பணம் ,துப்பாக்கி இவற்றோடு தலைமறைவாகியிருக்கிறார்கள்.
புலிகளால் வேட்டையாடப்பட்ட மிகக் கொடுமையான காலக்கட்டம் இறுதி 10 ஆண்டுகள்.
இயக்கங்களிலிருந்து துப்பாக்கிகளுடன் தப்பியோடியோர் அந்தத் துப்பாக்கிகளை விற்றே ஏதும் செய்யலாம் என்ற நிலை செய்திகளில் கூட இருந்தது.
இராணுவத்திலிருந்து ஆயுதத்துடன் தப்பியோடியோர் துப்பாக்கிகளை விற்று பிடிபட்டு மன்னிப்பளிக்கப்பட்ட செய்திகள் ஏராளம் உண்டு.
இந்த மதுகந்த விவகாரமும் இப்படித் தப்பியோடிய ஒருவரால் ஏற்பட்ட சிக்கலாகவே இருக்க வாய்ப்பு.
எந்நேரமும் இருக்கும் துப்பாக்கிகளை தோழர் போன்ற ஒரு அரசியல் ஆளுமை
கணக்குப்பார்த்து எண்ணிக்கொண்டிருக்கமுடியாது.
ஆயுதங்களிற்கான ஐந்தொகை எப்போதும் வெட்கத்திற்குரிய ஒன்று.
அவர்களது கேள்விக்கான தோழரது பதில் புரிந்துகொள்ளப்படக்கூடியது.
அவருக்கு இவ் விவரம் தெரியாத ஒன்றாகவே இருக்க வாய்ப்பு அதிகம்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு போதை லோக்கல் மாபியாவிடம் தற்காப்புக்கான துப்பாக்கி ஒன்றைக் கைமாற்றிவிடக்கூடிய அறிவிலியல்ல அவர்.
தற்கொலைத் தாக்குதல் முறையில் தன்னைக் கொல்லவந்த பெண்பிள்ளை ஒருவர் பிடிபட்டுச் சிறையிருந்தபோதும் சிறைச்சாலையில் தன்மீது திட்டமிட்டுக் கொலைவெறித் தாக்குதல் செய்த கும்பல்களதும் விடுதலைக்காக வேண்டியவர் தோழர் டக்ளஸ்.
தோழர் டக்ளசை நம்பலாம் என்பது எந்தவொரு தென்னிலங்கை அரசியற் தலைமைக்கும் இருக்கக்கூடிய பிரத்தியட்சமான நம்பிக்கை. இப்படியொரு நம்பிக்கையை வேறெந்த தமிழ் ஆயுத , அரசியற் தரப்பும் தென்னிலங்கை வட்டாரத்தில் இன்றுவரை கொண்டிருக்கவுமில்லை.
இவ் விவகாரம் பற்றி முன்னரே விசாரணைக்குக் கோரியிருந்தால் அது பற்றி விபரமான தரவுகளுடன் தோழர் சென்றிருக்கமுடியும் .அதற்கான நேர்மை தோழரிடம் உண்டு. வேறேதோ விசாரணைக்குக் கூப்பிட்டு வேறொரு சிக்கலை முன்வைத்து முற்கூட்டியே திட்டமிட்டுக் கைது செய்திருக்கிறார்கள்.
இந்த அரசுபோல அதிஸ்டவசமாக அரசியல் அதிகாரத்திற்கு வந்தவரல்ல தோழர் டக்ளஸ்.
அரசியற் தெளிவும் அரசியற் திரட்சியுமற்ற கோமாளிகளின் சர்க்கஸ்
கூடாரமாகிப்போன தமிழ் அரசியற் பரப்பில் என் பி பி அரசுக்கு வாய்ப்பான தரப்பும் இக் கோமாளிக் கூட்டம்தான். இதில் தோழர் டக்ளசின் இருப்பு ஏன் இந்த அரசுக்கு உறுத்துகிறது?
இடதுசாரி முறையிலமைந்த மக்கள் நலனை முன்னிறுத்திய வேலைத்திட்டங்களுக்குப்பதில் மலினமான உணர்ச்சிகளை ஆதாயப்படுத்துவதும் குறுக்குவழி அரசியல் செய்வதும் வலதுசாரிச் சமரசங்களைச் செய்வதும் இந்த அரசுக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது.
இந்த நேர்மையற்ற வஞ்சகங்களை இந்த அரசும் விரைவில் ஒருநாள் வளைதடி எறிதலில் எதிர்கொள்ள நேரும்.
Annesley Ratnasingham
இது ஒரு திட்டமிட்ட சதி ...
Annesley Ratnasingham
இலங்கையில் JVP யினர் வைத்திருந்த சட்டவிரோததுப்பாக்கிகளும் அவர்கள் எங்கிருந்து அவைகளை பெற்றுக்கொண்டனர் என்ற கட்டுரையை தான் வாசித்துக்கொண்டு இருக்கிறேன் ...அந்த கட்டுரையில் ஒரு பகுதியில் JVP யினர் 70 பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தார்கள் என்றும் குறிப்பிடப்படுள்ளது ...தொடர்ந்து வாசிக்கிறேன் .
Alex EraviVarma
Annesley Ratnasingham How...?
Annesley Ratnasingham
Alex EraviVarma Wait I will write soon ...அதைவிட எல்லா இடத்திலும் எனது பெயரை அழைத்து கொழுவிவிட நீர் முயல்கிறீர் ...உந்த பழக்கம் நல்லதல்ல ...கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் .....டக்லஸ் எனது அண்ணன் தான் ...நீர் ஏன் அவசரப்படுகிறீர் ??...புரியவில்லை ...அளவை மீறுவதாக தெரிகிறது ..
Alex EraviVarma
Annesley Ratnasingham ஐயா,
நீங்க எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டதுல எப்பவும் பெருமைப்படுறீங்க.
நீங்கதான் எல்லாத்தையும்
செஞ்சதால, நாங்க உங்களைப் பத்தி பெருமைப்படுறோம்.
அதுதான் உங்க மேல இருக்கிற மரியாதை, குறிப்பிடுதல்.
Sivachelvam Sellathamby Vinthan
நன்றி தோழர்,..
Mark Yasotharan
திட்டமிட்ட சதி ..
Gugendran Thillayambalam
தோழர் மக்களுக்காகவே வாழ்ந்தவர்
Mahan Nares
May be an image of text that says "நீதிமன்றம் இரண்டு வாரம் காலம் விடுமுறையில் உள்ள வேளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கைது செய்து தடுத்து வைப்பது NPP அரசின் அநாகரீக அரசியல் நடவடிக்கையாகும்"
1h
Reply
Mahan Nares
May be an image of one or more people and text that says "தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம்"
Alages Thambirajah
இந்திய அதிகார வர்க்கம் எதிர்தரப்பை வெள்ளிக்கிழமை கைது செய்து சனி , ஞாயிறு விடுமுறை தினங்களில் சிறையில் அடைப்பது போன்ற மட்டமான செயல்களில் JVP அரசு ஈடுபடுகின்றது 😇😇
JVP தனது கடந்தகால கொலை , கடத்தல் …… போன்ற செயல்களிற்கு தாங்களே பாவமன்னிப்பு வழங்கி தூய்மை அடைந்துள்ளார்கள்🥲😪
Villa Anandaram
//தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்காது கடைசிவரை காப்பாற்றுவது . // குற்றம் செய்திருக்க வாய்பிருந்தால் ஏன் காப்பாற்றணும்?
//எந்நேரமும் இருக்கும் துப்பாக்கிகளை தோழர் போன்ற ஒரு அரசியல் ஆளுமை கணக்குப்பார்த்து எண்ணிக்கொண்டிருக்கமுடியாது// தற்பாதுகாப்பிற்க்கு கொடுத்த துப்பாக்கி காணாமல் போனது தெரியாதா? எத்தனை துப்பாக்கிகள் வைத்திருந்தார்(20, 30)?
இது ரணிலை கைது செய்தது போல அரசாங்கத்தின் கையாலாகாதனம்.
டக்ளஸின் பாக்ரோட் வீட்டில் நடந்த சிதிரவதைகள், கொலைகள் பற்றி விசாரிக்கமல் துப்பாக்கி காணாமல் போனது பற்றி விசாரிப்பது வெறும் கண்துடைப்பு.
Yoga Valavan Thiya
இலங்கை இராணுவம் எதற்காக அந்த துப்பாக்கியை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கொடுத்தது என்ற கேள்வி சட்டரீதியாக இந்த வழக்கில் எழும். ஓர் அரசியலவாதிக்கு பாதுகாப்பு பிரச்சனை என்றால் பொலிசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அல்லது லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்து கொள்ளலாம் இவையனைத்தும் பொலிஸ் நிர்வாகத்தினூடாகவே நடைபெற வேண்டும். இராணுவம் நேரடியாக ஓர் அரசியல்வாதிக்கு துப்பாக்கி கொடுப்பது என்பது சட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்ட செயல். இந்ந வழக்கு நின்றுபிடிக்காது என்பது எனது கருத்து.
அதேசமயம் முன்னாள் ஆயுத போராட்ட அமைப்பின் தலைவர் என்ற வகையில் fire arms க்கான accountability and responsibility என்பது டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவர்களுக்கு உண்டு. Just like that , கைதவறி எங்கோ வைத்துவிட்டேன் என சொல்வது சரியானது அல்ல. நீதிமன்றத்தில் அவர் என்ன சொல்ல போகின்றார் என்பதே முக்கியமானது. பாதுகாப்புக்கு என வழங்கப்பட்ட துப்பாக்கி ஓர் அரசாங்க சொத்து அதனை சமூகவிரோத சக்திகளின் கைகளுக்கு சென்றுவிடாமல் பாதுகாத்திருக்க வேண்டியது அவரின் கடமையாகும்.
Annesley Ratnasingham
Yoga Valavan Thiya இதில் வேறு ஒரு சிக்கலும் இருப்பதாக கூறப்படுகிறது ...பொறுத்திருந்து பார்ப்போம் ...இப்பங்கை ராணுவத்தில் சிலர் எதனை ஆயிரம் துப்பாக்கிகளை விற்றார்கள் என்று அனுராவே பேசியதை கேட்டிருப்பீர்கள் ..
Alex EraviVarma
Annesley Ratnasingham Yes, and how many gone into underworld gangs hand
Annesley Ratnasingham
Yoga Valavan Thiya the JVP had 2233 weapons not handed over for 35 years....என்று ஒரு கட்டுரை சொல்கிறது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக