வெள்ளி, 26 டிசம்பர், 2025

மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கு மேற்கில் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுமா?

இலங்கை வித்வா பெருமழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மலையக மக்கள் இனியும் அங்கு வாழ முடியுமா?
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . பல கிராமங்கள் அடியோடு அழிந்து போய்விட்டது. பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டனர்.
இவர்களில் பலர் நாட்டின் பெரும் சம தரைப்பகுதியான வடக்கு கிழக்கு மேற்கு பகுதிகளில் குடியேற கூடிய வாய்பினையே எதிர்பார்த்து உள்ளனர்.
மலையக மக்களின் வாக்கு வங்கியை நம்பி இருக்கும் மலையக அரசியல்வாதிகள் இந்த கருத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இந்த மக்கள் வேறு இடங்களுக்கு போய்விட்டால்  இவர்களை வைத்து அரசியல் செய்யவோருக்கு வில்லங்கம்தான்.
இது பற்றி ஒரு காணொளி பேட்டியை தேசம் நெட் காணொளி வெளியிட்டது!
இதில் பிரபல மலையக கவிஞர் எஸ்தர் நாதனியால் கலந்து கொண்டார்.


இவர் கூறிய கருத்துக்கள் பற்றி சில வாத பிரதிவாதங்கள் ஆங்காங்கு நடக்கின்றது.
அவற்றில் சிலவற்றை இங்கு தந்துள்ளோம்!       

Mohana Dharshiny  :  பல யூடியுப்பர்களின் அரசியல் கேள்விகளின் தற்குறித்தனத்தை நாம் புதிதாக சொல்லத் தேவையில்லை..
இந்த பேட்டியை எடுத்தவரும் அவ்வாறே. Gossip கதைப்பதை அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அற்பர்களை அடையாளப் படுத்தவும் அவசியமில்லை.
ஆனால் இருநூறு வருடங்களாக வஞ்சிகக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் உரிமையை இப்படி அல்பத்தனமாக கொச்சைப்படுத்தும் ஒருவரை என்னவென்று சொல்ல? அரசியலாக பதில்சொல்ல தகுதியற்ற ஒருவர் எஸ்தர் நதேனியல். ஆகவே,
உனக்கு நண்டு சாப்பிடனும்னா நீ வடக்குக்கு போ....why me?
இஸ்லாமிய வெறுப்பும் ஆணாதிக்கமும் நிறைந்த உங்கள் அயோக்கியத்தனங்களை கேள்வி கேட்டதற்காக பல வருடத்திற்கு முன்பே ப்ளாக் பண்ணியாச்சே..... அப்புறம் எப்படி நான் வவுனியா என்று தெரிந்தது?
அரசியலில் தற்குறித்தனமாக உளறுங்கள். ஆனால், ஒரு தனி நபரை பற்றி பேசும் போதாவது உண்மையான தகவல்களுடன் பேசலாமே......
7:14 / 9:23
Sivalingam Sivakumaran
அப்போ மீன் பிரியர்களா இருக்கிற மலையக மக்கள் மட்டக்களப்பு போகணுமா...என்ன கொடும சார் இது
 Anjana Raji Sivaharon
அரசியல் வறுமை இருந்தால் தான் தனிநபரை பற்றி பேசி இன்பம் காண்பார்கள். தேசம் நெட்டின் வரலாறு நமக்குத் தெரிந்தது தானே. பாலியல் சுரண்டல்காரர்களை எல்லாம் மேடைக்கு கொண்டு வந்து பாலியல் துஷ்பிரயோகம் பற்றி நேர்காணல் எடுத்தவர்கள் தானே
Sundarason Palaniandy
அதுசரி மாத்தளைக்கு யாரை கேட்டு வவுனியா என்று பெயர் வைத்திங்க
தேமச அரசாங்கம் இந்த மாதிரி உங்கள் ஆட்சியில் நடக்கிறதா

Puwanesh JM
அடிப்படையில் புரிதல் இல்லாத கருத்துக்களின் முன்வைப்பாக உள்ளது.
குறித்த ஒரு பெரும்பான்மை சமூகம் சிந்திக்கிறது என்பதற்காக தங்களுடைய சமூகத்தின் அடிப்படை உரிமைகளையும் அதன் தாற்பரியங்களையும் விட்டுக் கொடுத்து விட முடியாது.
இப்போது எடுக்கின்ற முடிவுகள் அடுத்த தலைமுறையை பாதாளத்தில் தள்ளுபடி அமைந்து விடக்கூடாது.


Barathy Sivaraja
எங்கல இருந்து வாறிய…
வவுயாவில் இருந்து இடதுசாரியம் பேசக்கூடாது… சொல்லிப்போட்டேன்.
Study and research சீமான் ரேஞ்சில் செய்திருப்பா போல😂😜


Mohamed Ali Yaseer Arafath  ·
எதேய்! நம்ம மோகனா இன முரண்பாட்டை உருவாக்குற ஆளா??😂

Panneer Panneer
மலைகள் எங்கள் தெய்வங்கள்
மற்றும் எங்களின் தாய்மடி
விட்டுவிடச் சொல்கிற உனக்கு அது வெறும் நிலம் எங்களுக்கு
நாங்கள் பால் அருந்திய முலை.
தட்டி விட்டு செல்ல வெறும் தூசியில்லை
தாய்மண் .
கூமுட்டைகளுக்கு .........?

Uma Shanika
ஊடக தர்மம்? Fact checking??😢😢
செயற்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் credibility ஐ கேள்விக்குட்படுத்தினால் போதும்.

    1d

Che Jeevan
தோழர் வவுனியாவில் எங்கு இருக்கின்றீர்கள்.....
எப்போதும் முரண்பாட்டை உருவாக்குனீர்கள் ? 🤔🤣
இப்படியான பைத்தியங்கள் இன்னும் இருக்கின்றனவே ! இதுவும் மறுப்பதற்கில்லை உண்மையே

Mohana Dharshiny
Che Jeevan மலையக தேசிய இனம் என பேசுவதே முரண்பாட்டை உருவாக்குமாம்.

Ganga Jeyabalan
மோகதர்சினியின் வாழ்விடம் மற்றும் பிறப்பிடம் தொடர்பில் எஸ்தர் தனது நேர்காணலில் தவறான தகவலை குறிப்பிட்டிருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய தவறாகும். மற்றும் எஸ்தர் மோகனதர்சினியின் வாழ்விடம் தொடர்பில் தகவல்ப் பிழை இருப்பதால் எஸ்தருக்கு அரசியலாக பதிலளிக்க தகுதி இல்லை என தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் தவறாகும். மோகனதர்சினிக்கும் எஸ்தருக்கும் முகநூலில் என்ன குடுமிப்பிடி சண்டை நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் நன்றாக இல்லை. இருவருமே மலையகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். இருவருக்குமே மலையக மக்கள் தொடர்பில் கரிசனையும் அக்கறையும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். ஆகவே மோகனதர்சினியின் கருத்தும் எஸ்தரின் கருத்தும் ஒன்றாக இல்லாவிட்டாலும் இருவரின் கருத்தும் முக்கியமானது என்றே கருதப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாணியில் காட்டமான வசை பாடல்களை எதிர்க் கருத்தாளர்கள் மீது வைப்பதும் ஒருவகையில் கருத்தியல் வன்முறையாகும்.
எஸ்தரின் நண்டுக்கறியை எடுத்துக் கொண்டால் அந்த விடயம் உணர்ச்சி மிகுதியில் அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளாகும். உண்மையில் எஸ்தர் நண்டை சிலாகித்து பேசியதன் பின்னணியில் உள்ள சமூக உளவியலை கவனத்தில் எடுக்க வேண்டும். எஸ்தர் சொல்ல வந்தது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை தீவில் வாழும் மலையக மக்கள் எவ்வாறு நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் என்பதாகும். ஒரு தீவில் 200 வருடங்கள் வாழும் மலையக மக்களில் பலர் நண்டையே காணவில்லை என்பதன் அர்த்தம் அவர்களுடைய இருண்ட வாழ்க்கையின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. நண்டு சாப்பிட்டால் தான் விமோசனம் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் எஸ்தர் சொல்லவில்லை. எப்படியாயினும் ஒரு நேர்காணலில் சக பெண் சகோதரி வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் உடன்பாடு இல்லாவிடில் அதனை சுட்டிக் காட்டி பண்பாக விமர்சிப்பதன் மூலம் தான் பெண்கள் பெண்கள் பொது வெளியில் உரையாடுவதை ஊக்குவிக்கும். அதைவிட்டு ஆணாதிக்க மனப்பாங்குடைய ஆண்கள் எப்படி பொதுவெளியில் பெண்களை ஆக்ரோசமாக தாக்கி வாயடைக்க செய்வார்களோ அப்படி செய்யவது நல்லதல்ல. மலையக மக்களின் சுபீட்சத்தை விரும்புபவர்கள் திறந்த உரையாடல்களில் பாரபட்சம் காட்டாமல் ஈடுபடுவதே வரவேற்கத்தக்கதாகும்.

Mohana Dharshiny
Ganga Jeyabalan மலையக தேசியம் பற்றிய உரையாடல்கள் ஆரம்பித்து 25-30 ஆண்டுகளாகின்றன. மலையகம் 200 ல் இது பரவலாக பேசப்பட்டது
எப்போதும் அடுத்தவர்களின் கோசிப் கதைத்து திரியும் தேசம்நெட் போன்ற தரங்கெட்ட யூடியுப் வாயர்கள் ஒரு தனிநபரின் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்பது ஊடக அறமா?
, அதில் ஒருவரின் அடையாளம் பற்றி அயோக்கியத்தனமாக பேசிவிட்ட போய் இருப்பதற்கு அந்த ஊடகம் மன்னிப்பு கேட்கும் வரை பொதுவெளியில் செருப்படி விழத்தான் செய்யும்.
இங்கே யாரும் ஆணாதிக்க கருத்தை பேசவில்லை. தவறு செய்தது அந்த எச்சை யூடிப்பாளர்களும் பேட்டி கொடுத்த அரைகுறையும். அவர்களை மன்னிப்பு கேட்கச் சொல்லவும். இங்கே உங்கள் உபதேசம் தேவைப்படாது

Ganga Jeyabalan
Mohana Dharshiny
மன்னிக்கவும் நீங்கள் ஒரு தனிநபர் என்பது நீங்கள் எழுதும்வரை எனக்கு தெரியாது. நீங்கள் ஒரு சமூகப் போராளி என்று தான் இதுவரையும் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் தனிநபர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுந்து கருத்துச் சொல்வதில்லை. தனிநபர்கள் பொது வாழ்க்கையில் மக்கள் விரோத செயல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் போது தான் நான் கண்டனங்களை தெரிவிப்பது வழமையாகும். ஆகவே நீங்கள் ஒரு தனிநபர் என்று கூறுவதால் இதை நாங்கள் கடந்து போகலாம். நேர்காணல் கண்டவர் என்னுடைய குடும்ப உறவினர் என்பதால் அவர் மீதான விமர்சனத்தை எனக்கு வந்து பதிவிடுவதே வழமையாக ஆண் மையவாதிகள் சமூக வலைத்தளங்களில் ஆண்கள் மீதுள்ள வெறுப்பை பெண்கள் மீது காட்டும் பாணியாகவே உள்ளது. இங்கே மலையக தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாறான கருத்தை நான் ஏதும் குறிப்பிட்டிருக்கிறேனா? ஏதோ மலையகம் தொடர்பான கருத்தாடல்களை நீங்களும் உங்களுடன் சம்பந்தப்பட்டவர்களும் மட்டுமே குத்தகைக்கு எடுத்த மாதிரி கொதிக்க கூடாது. எஸ்தரின் கருத்துக்களுக்கு எஸ்தர் தான் பொறுப்பெடுக்க வேண்டும். நான் உங்கள் யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கவில்லை.

Mohana Dharshiny
Ganga Jeyabalan நேர்காணல் செய்தவர் உங்கள் குடும்ப உறுப்பினர் என்பது எனக்கு தேவையில்லாத விடயம். எனது பதிவில் கமெண்ட் செய்ததால் தான் நான் பதிலளிக்கிறேன்.
மலையக தேசியம் நான் குத்தகைக்கு எடுத்ததில்லை. பல தசாப்தங்களாக பலரும் பேசி வந்தது என்பதை தான் நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் குத்தகைக்கு எடுத்ததை போல உங்கள் குடும்ப உறவினர் பேசியது தவறு என்பதே இங்கே சர்ச்சைக்கு காரணம் .. ஆகவே இந்த விடயத்தை உங்கள் குடும்ப உறவுக்கு தெளிவு படுத்துங்கள் . இதை என்னிடம் கூற வேண்டியதில்லை

Mohana Dharshiny
Ganga Jeyabalan எஸ்தர் என்னைப் பற்றி பேசிய அவரது தனிப்பட்ட கருத்து தவறு. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தான் இந்த பதிவின் நோக்கம். அவரது தனிப்பட்ட தவறான கருத்திற்கு அவர் பதிலளிக்கும் வரை அவர் விமர்சிக்கப் படுவார். அது தவிர்க்க முடியாதது. தெரியாத விடயங்களை, தனிப்பட்ட நபர்கள் பற்றி பிழையான தகவலை , அவதூறுகளை பேசினால் செருப்படி வாங்குவது தவிர்க்க முடியாது.
உங்கள் குடும்ப உறவு என்று நீங்கள் தான் கூறிக்கொள்கிறீர்கள். நாங்கள் உங்கள் பெயரை டேக் செய்து அழைக்கவில்லையே... சம்மன் இல்லாமல் ஆஜராகி பேசுவதால் தான் உங்களுக்கு பதிலளிக்கிறோமே தவிற, உங்கள் உறவு , பந்தம், சொந்தம் பற்றி எங்களுக்கென்ன அக்கறை?

Ganga Jeyabalan
Mohana Dharshiny உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஜெயாலனை அவருடைய நேர்காணலுக்கு கீழ்ப் போய் அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை தெரிவித்திருந்தால் அதனைப் பற்றி கருத்தில் எடுத்து பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் நேரடியாகவே தேசம் நெட் பற்றி என்னுடைய முகநூல் கணக்கில் நான் போட்ட கருத்திற்கு தான் கொந்தளித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளில் வசை பாடினீர்கள். இப்போது பல்டியடித்து எனக்கு அக்கறை இல்லை என்று முன்னுக்கு பின் முரணாக கதைக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் எஸ்தரின் வார்த்தைகளை காட்டிலும் அதீத வன்மமும் காழ்ப்புணர்வும் தெரிகிறது. எனக்கு மனிதர்கள் தன்னிலை இழந்து முகநூலில் குழறும் போது அவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் தேவையென அவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது. எனக்கு எஸ்தரும் நெருங்கிய தோழி இல்லை. மோகனதர்சினி நீங்களும் நெருங்கிய தோழி இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் மீதான ஒரு தவறான கருத்திற்கு ஆற்றும் எதிர்வினை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. வன்முறைகளற்ற முறையில் தொடர்பாடல் செய்யக் கூடிய அளவுக்கு திராணியற்ற தன்மையைக் காணக்கூடியதாகவுள்ளது. செருப்பால் அடித்தல் மாதிரி கேள்வி கேட்டல் என்று நீங்கள் பதிவிடுவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும் வினோதமாக இருக்கிறது. செருப்பால் அடித்தால் அதன் மூலம் இன்னொருவர் மீதான கோபம் தணியும் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் சுயகொளரவம் பாதிக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்படுவார் என நீங்கள் இன்னும் பழமைவாத பழிவாங்கல் முறைமையில் நம்பிக்கையை வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முற்போக்கு , இடதுசாரி , பெண்ணியம் , மலையக தமிழ்த் தேசியம் மற்றும் மாற்று அரசியல் என்ற பாதையில் பயணிக்கும் பெண்ணான நீங்கள் சக பெண் சகோதரிகள் மீது குறிப்பாக என்மீதே இவ்வளவு வன்மத்தை கொட்டுவது ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பதையே வெளிப்படுத்துகிறது. நீங்கள் கடின வார்த்தைகளில் மற்றவர்களின் மீதான விமர்சனங்களை வைப்பதால் மட்டுமே சமூகப் போராளியாக பரிணமிக்க முடியாது. யப்பா இதற்கு மேல் புரிய வைக்க முடியாது. நன்றி வணக்கம் 🙏


Mohana Dharshiny
Ganga Jeyabalan பண்பாக உரையாடுவது பற்றி நீங்கள் வகுப்பு எடுப்பதாயின் தேசம் ஜெயபாலனுக்கு எடுங்கள்.
இன முரண்பாட்டை உருவாக்குபவராக என்னை குறிப்பிட்ட எஸ்தருக்கு உங்கள் அறிவுரையைக் கூறுங்கள்.
எனக்கு அவர், நீ என் லிஸ்ட் லயே இல்லையே..... ரேஞ்ச் பேர்வழி.
இப்படி பெண்கள் அடிபட வேண்டும் என்பதற்காகவே சிண்டு முடியும் எச்சைத்தனத்தை ஜெயபாலனிடம் நிறுத்தச் சொல்லுங்கள்.

 Ganga Jeyabalan
Mohana Dharshiny ஜெயபாலன் மட்டுமல்ல எந்த ஆணாக இருந்தாலும் பெண்களை சிண்டு முடிகிறார்கள் என்று தெரிந்தால் அதனை முறியடித்து பெண் சகோதரிகள் நீங்கள் தான் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். யார் எச்சைத்தனம் புரிகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் அதிபுத்திசாலியான நீங்கள் ஏன் உங்களை விட குறை அறிவுடைய பெண் என்று நீங்கள் கருதுகிற எஸ்தருடன் குழாயடிச் சண்டையில் ஈடுபட வேண்டும். சதியை மதியால் வெல்லலாமே? உங்களுடைய பெயரை குறிப்பிட்டது ஒரு நல்ல விடயத்திற்காகவே என்று தான் நான் நினைத்தேன். மலையகத் தேசியத்திற்காக மோகனதர்சினி குரல் கொடுப்பதால் தான் உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உங்கள் பெயரை குறிப்பிட்டதாகவே நான் கருதினேன். அதற்கு எஸ்தர் அளித்த பதில் தான் இங்கே சர்ச்சையாக பார்க்கப்படுகிறது. அப்படியாக இருந்தாலும் அது எஸ்தருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

Mohana Dharshiny
Ganga Jeyabalan எஸ்தரின் அறிவை அளவீடு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நரி இடம் போனால் என்ன? வலம் போனால் எனக்கென்ன? நம்மீது விழுந்து பிடுங்காமல் போனால் சரி. ஆனால் நான் இனமுரண்பாட்டை உருவாக்குவதாகவும் வவுனியாவை சேர்ந்தவர் என்றும் நரி ஊளையிடுவதால் தான் அதை சாத்த வேண்டிய தேவை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ....

Mohana Dharshiny
Uma Shanika முடியல ஸ்ஸப்பா....ஆஆஆ

Ganga Jeyabalan
Mohana Dharshiny சிறு பிள்ளைகள் சண்டை போல உள்ளது. எஸ்தர் சொன்னதால் நீங்கள் இன முரண்பாட்டை உருவாக்குகிறீர்கள் உண்மை என மற்றவர்கள் நம்பி விடவா போகிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம். இப்படியான விமர்சனங்களை உணர்ச்சி மிகுதியால் எதிர்கொள்வது மாற்று அரசியல் பேசுபவர்களுக்கு பொருத்தமாக இல்லை.

Mohana Dharshiny
Ganga Jeyabalan எஸ்தர் சொன்னதை யாரும் நம்பப் போவதில்லை.. ஆனால் வாய் இருக்கிறது என்பதற்காக யாரை என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகும் அயோக்கியத்தனத்தை கேள்வி கேட்பது சுரணை உள்ள மனிதர்களுக்கு உள்ள குணம். உங்களுக்கு இல்லை என்பதற்காக எனக்கு இல்லாமல் போக வேண்டுமென்பதில்லையே...
இப்போது அவ்வாறு அவதூறு பேசும் கழிசடையை எதுவும் சொல்லாமல் மூடிக்கொண்டிருந்து விட்டு, இங்கே வந்து சளம்பாதீர்கள்.
எப்போதும் பொறுமையாக பேசிக் கொண்டிருக்கமாட்டேன்?.,

Ganga Jeyabalan
Mohana Dharshiny நீங்கள் இவ்வளவு நேரமும் பொறுமையாகத் தான் பேசிக் கொண்டு இருந்தனிங்களா? பொறுமையாக பேசிக்கொண்டே இருக்க மாட்டேன் என்று மிரட்டுவதன் அர்த்தம் என்ன? நீங்கள் முகநூலில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் பயமுறுத்தலில் இறங்குவதன் அரசியல் பரிணாமம் என்ன?

Mohana Dharshiny
Ganga Jeyabalan இது ஒரு கருத்து. அதை கருத்தாக தான் எதிர்கொள்கிறேன். எஸ்தர் உளறியதற்கு அது மன்னிப்பு கேட்கட்டும். நீங்கள் கிளம்புங்கள். நீங்கள் உங்களைப் பற்றி அவதூறு பேசும் போது அமைதியாக கடந்து போங்கள்.
எனக்கு அயோக்கியத்தனத்தை அமைதியாக கடந்து பழக்கமில்லை.
இனி கமெண்ட் செய்ய வேண்டாம்ஃ

Mohana Dharshiny
Ganga Jeyabalan குடுமிப்பிடி சண்டைகள் போடுவதும் தூண்டிவிடுவதும் தேசம்நெட் போன்ற யூடிப்வாயன்களின் தொழில்.. எனது கருத்து முரண்பாடு எப்போதும் அரசியல் முரண்பாடாக தான் இருக்கும்.
ஒரு கருத்தை பேசினால்பேசுபவரின் பிறப்பிடம், வாழிடம் எல்லாம் பேசுவது எனது பண்பல்ல ..
உங்கள் உபதேச மூட்டைகளை இங்கே பேசாதீர்கள்

Ganga Jeyabalan
Mohana Dharshiny மோகனதர்சினி உங்களுக்கு என்னாச்சு? கோபத்தில் தன்னிலை மறந்து கருத்துக்களை பதிவிடுகிறீர்கள். தங்களுக்கு இருக்கிற அறிவுக்கு நான் உங்களுக்கு உபதேசம் செய்யுமளவுக்கு புத்திசாலி அல்ல. ஏதோ நமக்கு சரி எனப்பட்டதை கருத்தாக பதிவு செய்தேன். அதனை நீங்கள் உபதேசமாக எடுத்து விட்டீர்கள்.

கருத்துகள் இல்லை: