minnambalam :திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம்னு ஒரு தகவல் அடிபடுதுய்யா.. இதை பத்தி திமுக வட்டாரங்களில் கேட்டப்ப, “2007-ல் கனிமொழி முதல் முறையா ராஜ்யசபா எம்.பி.யானாங்க..
அப்ப காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்.. அவங்க மத்திய அமைச்சராகல.. 2-வது முறையா 2013-ல் ராஜ்யசபா எம்.பியானாங்க.. ஆனால் 2014-ல் இருந்து மத்தியில பாஜக கூட்டணி ஆட்சிதான்..
கனிமொழியும் 2019, 2024-ல் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு ஜெயிச்சுட்டாங்க.. இருந்தாலும் அவங்க மத்திய அமைச்சராகும் வாய்ப்பே கிடைக்காம போயிருச்சு.. இனியும் அதுக்கான சான்ஸ் இல்லைன்னுதான்னு சொல்றாங்க.. அதனால வர்ற சட்டமன்ற தேர்தல்ல கனிமொழி போட்டியிட்டு தமிழக அமைச்சராக வாய்ப்பிருக்கு”ன்னு சொல்றாங்கப்பா..
ஓஹோ.. கனிமொழி தரப்புல என்ன சொல்றாங்க? எந்த தொகுதியில போட்டியிடுவாங்களாம்?
இதை பத்தி கனிமொழி தரப்புல கேட்டா, “அப்படி எல்லாம் இல்லைங்க.. மேடத்தை (கனிமொழியை) மாநில அரசியலுக்கு வாங்கன்னுதான் எல்லாரும் சொல்றாங்க.. இப்ப கூட தென் மாவட்டங்களில 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய சொல்லி லிஸ்ட் கேட்டிருந்தாரு சிஎம்…மற்றபடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடறது பத்தி எல்லாம் கட்சித் தலைவரான சிஎம்தான் முடிவெடுப்பாரு” என சொல்கின்றனர்.
இருந்தாலும், கனிமொழி களமிறங்கனும்னு முடிவு செஞ்சா தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியாகத்தான் இருக்கும்னு நம்ம சோர்ஸ்கள் சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக