Sundara Cholan : 95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகி விட்டது.
அதற்கு எதிராக திமுக எவ்வித எதிர்வினையும் செய்ததாகத் தெரியவில்லை.
ஒரு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ கிடையாது.
அநியாயமாகப் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற அவர்களை நேரில் சந்தித்து, விண்ணப்பிக்க உதவி செய்வது போன்றவற்றை இந்நேரம் திமுக முன்னெடுத்து இருக்க வேண்டாமா? அப்படி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
அவசரமாக அள்ளித் தெளித்த கோலம் என்கிற கதையாக தயாரித்த வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தை அணுகலாம். பயனிருக்குமா என்பது வேறு விஷயம்.
என்ன தான் திட்டம் வைத்திருக்கிறது திமுக? பாஜக திட்டம் பலிக்காது என்று வசனம் மட்டும் போதாது.
இதில் சுணக்கம் காட்டினால் திமுக அதிக இழப்புகளைச் சந்திக்கும் என்பது உறுதி.
Murali Murali
இந்த பெயர் நீக்க விவகாரத்தில் ஆளும் ஒன்றிய பாஜகவின் மோசடி என்பது ஆளும் வர்க்கத்தின் பெரும் பகுதியினரின் திட்டமாக இருக்கலாம்
அதற்கு திமுகாவினரும் உடந்தையாக இந்த மோசடியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது
R. Radhakrishnan
100 நாள் வேலை திட்டத்தை மோதிய அரசாங்கம் இழுத்து மூடிய சூழ்நிலையில் எப்படி என்ன செய்வது.
Sidhambaram Voc
சட்டவாதத்தில் உள்ளது. அரசியல் நடைமுறை ஏதும் இல்லை தோழர். ஆட்சிக்கு வந்தது முதலே இதே அணுகுமுறைதான்.
Dharmar Dharmarr
யாருக்கு ஓட்டு வேணுமோ அல்லது யாரோட ஆதரவு ஓட்டு இல்லையோ அவங்க இந்த வேலையைச் செய்கிறார்கள் தோழர்.
வாலாசா வல்லவன் ·
உண்மைதான் தோழர்.
Subbalakshmi Subburaj
உண்மை தோழர்.
Kothandaramanmani
திமுக இழப்பு மட்டும் அல்ல.இந்துத்துவ பாசிஸ்ட் கும்பலுக்கு இந்தியா முழுவதும் எந்த தடையும் இராது.
Sigamani Subramanian
கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பிக்க உதவி செய்ய திமுக
செயல்பாடு என்பது இருப்பதாக
தெரியவில்லை விளம்பரம் மட்டும்
பல லட்சம் பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டதாக ...
Manali Abdul Kadar
ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ தேவையில்லை..நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்கவேண்டிய எந்த முயற்சியையும் அந்தந்த ஒன்றிய செயலாளரோ நகர செயலாளரோ எடுக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று.
Santhanam Ganapathy
பெயர் பட்டியலில் யார் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் சொல்லிவிடுவார்கள் நீக்கப்பட்ட பெயர்களை அவர்கள் தான் சொல்ல வேண்டும் அந்தந்த வார்டில் திமுக வீடு வீடாக போய் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது நீக்கப்பட்டவர்கள் சொன்னால் அதற்குரிய பாமை ஃபில்லப் பண்ணி கொடுத்து வாக்காளர் பட்டியலில் பெயரை கொண்டு வரலாம்
Arunachalam Gopalakrishnan
உச்சநீதிமன்ற த்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக