80ஸ் 90ஸ் காலகட்டத்தில் வில்லன் நடிகராகவும், கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கிய நெப்போலியன் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். ஆரம்பத்தில் எம்எல்ஏவாக இருந்து பிறகு மத்திய மத்திய மந்திரி ஆகவும் பதவி வகித்திருக்கிறார். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே எம் நேருவின் மருமகனான நெப்போலியன் 16 வயதிலேயே கே எம் நேருவிற்கு உதவியாளராக சேர்ந்திருக்கிறார்.
அதற்கு பிறகு தான் நடிக்க வேண்டும் என்று 27 வயதில் பல முயற்சிகள் எடுத்து “புது நெல்லு புது நாத்து” என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்தபோது நான் நடிகர் சிரஞ்சீவி போல இருக்கிறேன் என்று எல்லோரும் சொல்லுவாங்க என்று சொன்னதும் அதற்கு பாரதிராஜா யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிடனுமா என்று கேட்டபோது நமக்கு இவர் வாய்ப்பு தர மாட்டாரோ என்று பயந்து இருக்கிறார்.
ஆனால் பிறகு தான் நடித்த முதல் திரைப்படம் தனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பல பேட்டிகளில் நெப்போலியன் கூறி இருக்கிறார். அதிலும் 27 வயதில் தான் நடிக்க வந்த போது அறுபது வயது கிழவனாக தன்னை நடிக்க வைத்தார்கள். ஆனால் அது கூட எனக்கு பிரபலம் கொடுத்து விட்டது. அதற்குப் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததால் வில்லனாக அறிமுகம் ஆகி கதாநாயகனாகவும் மாறிவிட்டேன் என்று நெப்போலியன் கூறி இருக்கிறார்.
ஆனால் சினிமா மற்றும் அரசியல் என்று பிசியாக இருந்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். தன்னுடைய மூத்த மகன் தனுசுக்கு தசைசிதைவு நோய் நான்கு வயதிலேயே கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு பிறகு பல முயற்சிகள் செய்து, அவருடைய உடல்நிலை முழுமையாக சரியாகதால் தன்னுடைய மகன் அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக மொத்த குடும்பத்தோடு அமெரிக்காவில் நெப்போலியன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் தான் எங்கே இருந்தாலும் தன்னுடைய வீட்டிற்கு மருமகள் தமிழ்நாட்டில் இருந்து தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னுடைய மகனுக்கு இப்போது திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த பெண்ணோடு எங்கேஜ்மென்ட் செய்து வைத்திருக்கிறார். தன்னுடைய மகன் பிளைட்டில் பயணிக்கக் கூடாது என்பதால் தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவில் நெப்போலியன் குடும்பத்தினர் இருந்தாலும் அங்கு திருமணம் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அங்கிருந்து ஜப்பானில் சென்று திருமணத்தை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். இதற்காக செப்டம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவை விட்டு நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பான் நோக்கி புறப்பட்டு இருக்கிறார்கள். அதிகமான நேரம் இவர்கள் ட்ரெயினில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது நெப்போலியன் தான் போகும் இடங்களில் எல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இதுவரைக்கும் நெப்போலியனை அரசியல்வாதியாகவும் நடிகராகவும் பார்த்த ரசிகர்கள் இப்போது அவரை ஒரு யூடியூபராக பார்த்து வருகிறார்கள்
மகனுக்கு யூடியூபர் இர்பான் ரொம்பவே பிடிக்கும் என்பதால் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு அவரை அமெரிக்காவிற்கே நெப்போலியன் அழைத்து அவருடைய குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
அதற்கு பிறகு இர்பான் அடிக்கடி நெப்போலியன் வீட்டிற்கு அமெரிக்காவிற்கு சென்று வீடியோக்கள் வெளியிட்டு வருவதை பார்த்திருப்போம். இப்போது இர்பான் போலவே நெப்போலியனும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் நேற்று ஜப்பானில் தாங்கள் போன ஹோட்டல் பற்றி விவரமாக அந்த வீடியோவில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
அதை பார்க்கும்போது ரசிகர்கள் பலருக்கும் அந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் தான் பேசி இருக்கிறார். அந்த வீடியோவில் ஒரு இடத்தில் “எனக்கு மனசு பொறுக்கல.. எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது நான் உங்களிடம் இந்த ஹோட்டல் அமைப்பை பற்றி சுட்டி காட்ட வேண்டும் என்று கேமராவை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். இந்த ஹோட்டலில் இருந்து கீழே பார்க்கும் போது கடலில் போட் போவது தெரியும். ட்ரெயின் போவது தெரியும்”.
இந்த ஹோட்டல் சுற்றி கொண்டே இருக்கிறது. 360 கோணத்தில் இந்த ஹோட்டல் சுற்றி வந்து கொண்டிருக்கும்போது ஒரே நாளில் பகல் மற்றும் இரவு பொழுதை நாங்கள் பார்த்தோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று நெப்போலியன் கூறியிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கூறி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக