செவ்வாய், 7 மார்ச், 2023

தமிழ்நாடு பஜாக் உட்கட்சி பூசல், கூட்டணி டமார்.. ஜேபி நட்டா மார்ச் 10-ல் வருகை!

tamil.oneindia.com  - Mathivanan Maran : சென்னை: தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டமாக வெடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதால் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 10-ந் தேதி பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் விலகி அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து பாஜக ஐடிவிங்கில் இருந்து நிர்மல் குமார், திலீப் கண்ணன் ஆகியோரும் விலகினர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்தே பலரும் வெளியேறி வருகின்றனர்.
மேலும் பாஜகவுடனான கூட்டணியால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவியதாகவும் கூறப்படுகிறது.


இதனால் பாஜக அல்லாத இதர கட்சிகளுடனான கூட்டணிக்கு அதிமுக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் பாஜகவில் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா வரும் 10-ந் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதம் நடத்த உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜேபி நட்டா பங்கேற்கிறார்.

ஜேபி நட்டாவின் தமிழ்நாடு வருகையின் போது அண்ணாமலைக்கு எதிரான புகார்களை வாசிக்கவும் சில மூத்த நிர்வாகிகள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: