Kandasamy Mariyappan : கலைஞர் கருணாநிதி நகரில் (KK Nagar) உள்ள அண்ணா பிரதான சாலை (Anna Main Road) பேசுகிறேன்.!
நான், எனது பெயரில் ஆட்சி நடத்தும் எனது தம்பிகள் கருணாநிதிக்கும், ராமச்சந்திரனுக்கும் நடுவில் இருக்கிறேன்.!
150 அடி அகலம் 1,500 மீ்ட்டர் நீளம் உடையவன்.!
பில்லர் சாலை என்ற பெயர் பலகையை என்மீது வைத்துள்ளனர்.!
மணப்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், நெசப்பாக்கம் பகுதிகளிலிருந்து நகரத்திற்குள்ளும்...
நகரத்திலிருந்து நெசப்பாக்கம், ராமாபுரம், வளசரவாக்கம் மணப்பாக்கம், போரூர் பகுதிகளுக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் என்மீது பயணம் செய்கின்றன.!
கடந்த 20 ஆண்டுகளாக வருடம் முழுவதும் யாராவது என்னை தோண்டிக் கொண்டே இருக்கின்றனர், அல்லது இயற்கையாகவே என்மீது ஒரு பெரிய பள்ளம் உருவாகி விடுகிறது.!
தம்பி முக. ஸ்டாலின் மேயராக இருந்த போது என்னை பிரித்து நடுவில் ஒரு குட்டி தடுப்பு சுவர் கட்டினார்.!
தம்பி மா. சுப்பிரமணியம் மேயராக இருந்த போது அந்த தடுப்பு சுவரை தொட்டி போல் கட்டி செடிகளை வைத்தார்.!
என்மீது எத்தனையோ தாய்மார்கள் கடைகள் வைத்து அவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.!
என்மீது எத்தனையோ இளைஞர்கள் இளநீர் கடைகள், சிறுகடி கடைகள் வைத்து பிழைக்கின்றனர்.!
என்மீது யார் யாரோ அவர்களது வாகனங்களை விட்டு செல்கின்றனர்.!
சிலர் அங்கேயே அமர்ந்து சாராயம் குடிக்கின்றனர்.!
ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் அவர்கள் விரும்பும் இடத்தில் நிறுத்திக் கொண்டு மக்களை ஏற்றி செல்கின்றனர்.!
இதனால்...
என் தம்பி கருணாநிதி பெயரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பலர் அவர்கள் வீட்டிற்குள் செல்லவோ, வெளியில் வரவோ சிரமப்படுகின்றனர்.!
திடீரென என்மீதிருந்த கடைகளையும் வாகனங்களையும் அகற்றி என்னை சுத்தம் செய்தனர். எனக்கு இனம்புரியாத ஆச்சர்யம்.!!!
பிறகுதான் தெரிந்தது ஒரு அரசு நிகழ்ச்சிக்காக தம்பி Udhayanidhi Stalin என்மீது மேடை அமைத்து பொதுமக்களிடம் பேசியுள்ளார்.!
தம்பி சென்றதும் அனைத்து வாகனங்களும், கடைகளும் என்மீது பழையபடி வந்துவிட்டன.!
தம்பி M. K. Stalin ஒன்றை புரிந்துகொள்..,
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்கள் வாக்கு சாவடிக்கு வருகிறார்களோ இல்லையோ, நமக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ...
உனது ஆட்சி சிறப்பாக அமைய தவறாமல் வீட்டுவரி கட்டுபவர்கள், வருமான வரி கட்டுபவர்கள் அவர்கள்.!
அவர்கள் மனம் கோணும்படி நடந்து கொள்வது முறையாகாது.!
என்னை சரி செய்து ஒரு அழகான சாலையாக மாற்றி, வாகன போக்குவரத்தையும், வாகன நிறுத்தத்தையும் முறைப்படுத்துமாறு இன்றைய மேயர் சகோதரி PriyaRajan DMK அவர்களிடம் அறிவுறுத்துங்கள்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக