திங்கள், 6 மார்ச், 2023

இத பன்னி திங்குது; நாய் திங்குது; கோழி திங்குது. ..நீ போய் இப்படி கேட்டியா? கஸ்தூரி அப்துல்லா முகநூல் கருத்துமோதல்

 LR Jagadheesan : Wanted to know DMK party women  leaders' view on this. Particularly the ruling party’s women's wing’s official view/reaction to this public statement from their party MP. Media should seek the DMK female leaders' reaction. Hope some one ask a simple question-- what do they as women think about this statement.
Comments

Duraiz Arumugam : திமுக பெண் நிர்வாகிகள் கிட்ட என்ன ண்ணே கேட்கணும்??
கஸ்தூரி பாட்டி கலைஞர் கூட travel பண்ணாத பத்தியா?

LR Jagadheesan  : Duraiz Arumugam இந்த பதிவையும் அதில் நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்தையும் உங்கள் வீட்டுப்பெண்கள் அல்லது நீங்கள் பெரிதும் மதிக்கும் பெண்களிடம் காட்டி அவர்கள் உங்கள் கருத்து குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.
முடிந்தால் எனக்கும் தெரிவியுங்கள்.
இந்த ஒட்டுமொத்த சர்ச்சையையும் திமுக தரப்பில் ஆண்கள் ஆணின் பார்வையில் மட்டுமே அணுகிக்கொண்டு ஆணாதிக்க மொழியிலேயே பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர,
 இத்தகைய எதிர்வினைகளை திமுகவில் இருக்கும் பெண்களோ கட்சி சாராத பெண்களோ எப்படி பார்ப்பார்கள் எடுத்துக்கொள்வார்கள் என்கிற எந்த பரிசீலனையும் உங்களிடம் எழவே இல்லை. உங்கள் கருத்தும் அதே ஆணியப்பார்வை; ஆணாதிக்க மொழி என்பது தான் நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவது.
அடுத்து நீங்கள் திமுக கட்சிக்காரரா அல்லது ஆதரவாளரா என்பது தெரியாது.
ஆனால் துடிப்பான வளர்ந்துவரும் சுய தொழில் முனைவோர் என்பதை கவனித்து வருவதால் இந்த இலவச வேண்டுகோள்/ஆலோசனை:
ஒரு திமுக கட்சிக்காரராக/ஆதரவாளனாக உங்களின் பொதுவெளி சொல்லும் செயலும் ஒரு சுயதொழில் முனைவோராக உங்களை பாதிக்காமல் கவனமாக இருங்கள் செயல்படுங்கள்.
நீங்கள் எட்டவேண்டிய இலக்குகளும் கடக்கவேண்டிய தொலைவும் வெற்றிகொள்ள வேண்டிய சிகரங்களும் ஏராளம். உங்களின் பொதுவெளி அரசியல் செயற்பாடுகள் தொழில்முன்னேற்றத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். நன்றி

Kumarandas Kumarandas : சனாதனம் அல்லது பார்ப்பனியம் என்பதே ஆணாதிக்கமும் சேர்ந்தது தான்!
ஆக சனாதனத்தை / பார்ப்பனியத்தை ஏற்றிப்போற்றும் எவரும் அவர் பெண்ணாக இருந்தாலும் ஆணாதிக்க வாதிதான்!
தன்னை ஒரு பிராமணப் பெண்(பாப்பாத்தி ) என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படும் யாரும் பெண்ணியம் பேச அருகதையற்றவராவார்.
அதே போல பாப்பாத்தியாகத் தன்னைப் பீற்றிக் கொள்ளும் நபருக்கு பாதுகாப்பாக பெண்ணியத்தைத் தூக்கிக் கொண்டு வருவது அயோக்கியத் தனமாகும்.
தன்னை பாப்பாத்தி என்று அடையாளப் படுத்திக் கொள்வதே மிகவும் கொடூரமான ஆணாதிக்க வெறியின் பாற்பட்ட ஒன்றாகும்! தன்னை பாப்பாத்தி என்று சொல்வதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன?
தம்மைத் தவிர இங்குள்ள பெரும்பான்மைச் சமூகத்து மனிதர்கள் அனைவரும் விபச்சாரி மக்கள் ! அதாவது பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட , பட்டியலினப் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று மறைமுகமாக கூறுகிறார் என்று பொருள்! இதுவே பிராமணப் பெண்/ பாப்பாத்தி என்ற பெருமிதத்தின் பின்னுள்ள அர்த்தமாகும்.
ஆக பெண்ணியத்தின் முதல் எதிரி சனாதனமே/ பார்ப்பனியமே ஆகும்! பார்ப்பனியத்தை எதிர்க்காத , கண்டுகொள்ளாத பெண்ணியம் பாப்பாத்திகளின் கொல்லைப்புற அரசியலாகும்!
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் மீதான இதுவரையிலான இழித்தல் பழித்தல் எல்லாம் பார்ப்பனிய ஆணாதிக்கத்திலிருந்து தான் பிறப்பெடுத்துள்ளன என்பது கூட புரியவில்லை என்றால் அந்தப் பெண்ணியத்தால் என்ன விடுதலையைத் தரமுடியும்?
கஸ்தூரியின் அல்லக்கைகளுக்கு!


LR Jagadheesan : Renga Rajan நீங்கள் மேற்கோள் காட்டும் இவரது பூர்வாஸ்ரமம் பத்திரிக்கைத்துறை. அன்னார் அப்போது கலைஞரை பற்றி பேசாத எழுதாத அவதூறு எதுவும் பாக்கியில்லை. அதையும் தாண்டி அன்னார் தீவிர தமிழ்தேசியர்; ஈழ ஆதரவுப்புலிப்போத்து. 2009 இல் கலைஞருக்கு தமிழின விரோதி பட்டம் கட்டிய ஈழ கொளுகையாளர். கலைஞருக்கு தமிழினவிரோதி பட்டம் கொடுத்த ஆட்கள் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவிப்பது ஈயத்தைப்பார்த்து இளித்ததாம் பித்தாளை கதைதான்

Kalai Selvi  :  இந்த அளவு தரம் தாழ்ந்த ஒரு எம்பி .. இது தேவையா
MMஅப்துல்லா பதிவு ஒன்று பார்த்தேன்
கீழ்த்தரமாக இருந்தது அதிர்ச்சி
அப்துல்லா என்னைப் போன்ற சாதாரணன் என்றால் எழுதலாம்
ஒரு திமுக எம்பி அப்படி எழுதக்கூடாது
கலைஞர் இருந்திருந்தால் கடுமையாக கண்டித்திருப்பார்
கஸ்தூரி பாட்டி கேவலமானவராக இருந்திருக்கலாம்
கஸ்தூரி மம்மி கேவலமானவராக இருந்திருக்கலாம்
கலைஞரின் கேரக்டரை எப்படி அப்துல்லா அசாசினேட் செய்யலாம்
என் உடன்பிறப்பு என்றாலும்
நான் அவரை கண்டிக்கிறேன்

Mohamed Ashik : இதில் நடிகைக்கு எந்த கேவலமும் இல்லை.
கற்பொழுக்கத்தோடு வாழ்ந்த கலைஞர்க்குதான் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் எனக்கு என்ன பயம்னா...
"ஆமாம்... என் பாட்டி பற்றி திமுக எம்பி சொன்னது உண்மைதான்"ன்னு அந்த நடிகை ஒப்புக்கொண்டுவிட்டு......
"ஆகவே, எங்க தாத்தா சொத்துல பேத்தியான எனக்கும் பங்கு இருக்கு"ன்னு...
வாரிசுரிமை கோரி... சொத்துல பாகம் கேட்டு... கலைஞர் வீட்டுக்கு போயி பஞ்சாயத்தை கூட்டிட கூடாது. 😊

Arun Ashly  : Have you opposed or taken an opinion from DMK??
May be an image of 1 person and text that says 'Kasturi Shankar @Ka... 4h வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.'

Sundar Mathimaran : காலம் காலமா அந்த பொம்பள கலைஞரை அவதூறு அதை எந்த நடுநிலையும் கேள்வி கேட்காது. தாங்க முடியாமல் எதிர்வினையாற்றினால் பெண்ணென்றும் பாரமல் என்று தட்டை தூக்கிட்டு வந்துவிம வேண்டியது

தோழர் மணியன்
என்ன எழுதுவதென்று தெரியவில்லை.
மூத்த பத்திரிகையாளர்.
அவ்வளவு தான்

Radha Manohar :கலைஞர் என்ன செட் பிராப்பட்டீ ஆகிட்டாரா?
கலைஞர் கஸ்தூரியின் பாட்டியோடு ஊரை விட்டு ஓடிவந்தார் என்று இனி சங்கிகள் தாராளமாக கூறலாம்
இதை நாம் கூறவில்லை இதை எமக்கு கூறியதே கலைஞரின் ஆட்கள்தான் என்று சங்கிகள் நீதிமன்றம் வரை கூட சென்று வாதிடலாம்  . அதுதான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போல வீசியுள்ளார்களே?,
சங்கிகள் இதை ஒரு  புதிதாக ஒரு செய்தியாக  வாட்ஸப்பில் அவிழ்த்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை  ..
பிள்ளையாரப்பா இன்னும் என்னென்ன திராவிட சித்தாந்த பொழிப்புரைகளை கேட்கவேண்டுமோ?
ஆக கூடி கலைஞர் என்ற சொல்லை எழுதும் போது எந்த வித பொறுப்புணர்ச்சியும் இன்றி அசல் சங்கிகள் அல்லது சீமான்கள் போல எழுதும் அளவுக்கு கலைஞர் என்ன இவர்களின் ஸ்டுடியோ செட் புராபர்டீயா?
கஸ்தூரியை கண்டித்து அவரை ஒரு பெரிய அரசியல்வாதியாக்கியே தங்களை நிலை நிறுத்த வேண்டிய தேவை உண்மையான திராவிட கருத்தியலாளர்களுக்கு கிடையாது!
ஆனால் கஸ்தூரியின் பாட்டி கலைஞரோடு ரயிலேறி ஓடிவந்தார் என்று நாளையே சங்கிகளுக்கு புதிய ஒரு கதையை உருவாக்கி  அதுவும் ஒரு ராஜ்யசாபா எம்பியே சங்கி வாய்களுக்கு அவல் கொடுத்துள்ளார்.
சங்கிகளுக்கு இந்த கஸ்தூரி போனால் ஆயிரம் கஸ்தூரிகள் கிடைப்பார்கள்
ஆனால் கலைஞர் மீது இப்படி ஒரு வரிகளை ஏற்றுவதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்?
சீமான் போன்றவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாம் சற்றும் குறைந்தவர்கள் அல்லர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன்  வந்தது?
எந்த லெவெலுக்கும் கீழே இறங்கி அடிப்போம் என்றால்,   
நீங்கள் திமுகவின் உண்மையான திராவிட தொண்டர்கள் கிடையாது  
 பதவி சுகம் தேடிவந்த பஜனை கோஷ்டி என்று நான் கூறவில்லை,
.  ஆனால் காலம் அப்படி கூறுவதற்கு இனியாவது வாய்ப்பு வழங்காமல் இருங்கள்.

Srinivasan Karunanidhi : அந்த பதிவில் அப்துல்லா கஸ்தூரி பெயரை சொல்லவேயில்லையே.
திருட்டு ரயில் என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அனைவருக்கும் பொருந்துவதாக தானே சொல்லியிருப்பார்.

ஷிவானி சிவக்குமார் : அநத பதிவில் அப்துல்லா அண்ணன் அப்படி சொல்லவே இல்லையே !?
பதிவை படிக்காமதான் கம்பு சுத்துறீங்களா !?
கொடுமை !!

ஷிவானி சிவக்குமார் : போன பதிவில் ஒருவர் உளறியதை காப்பி பண்ணி பதிவு போட்றுக்கீங்க !
முதலில் பதிவை தெளிவா படிங்க !

சுந்தர் சுந்தர் : கலைஞரை தாங்குவது போல இழிவு செய்வது நீங்கள்தான்.
சங்கிகளுக்கு தோணாத கோணமெல்லாம் உங்களுக்கு எப்படி தோணுகிறது என தெரியவில்லை.
சகோதரர் அப்துல்லா ஒரு தடுப்பு முறையைத்தான் கையாண்டார்.
உங்கள் பதிவுதான் சங்கிகள் கையாள வசதியாக கையடக்கமாக உள்ள ஆயுதம்.
கலைஞரை செட் பிராபர்டி என சொல்வதற்கு எப்படி மனசு வந்தது என புரியவில்லை.
கலைஞர்தான் எல்லாம் என சொல்லும் இந்த பதிவை காப்பி பேஸ்ட் செய்தவரின் நோக்கத்தை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
முன்பு மாதிரி முனகி முனகி ஆட்டமாடினால் திராவிட இயக்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இவ்வளவு நாட்கள் அப்படி விளையாண்டதால்தான் கலைஞர் மீது கண்ட கழிசடைகளும் வன்மம் கக்குகிறது.

Kulitalai Mano : அப்துல்லா பொங்கியது கலைஞரை தப்பாக பேசியதற்காக அல்ல
அவர் பொங்க காரணம் கஸ்தூரி முஸ்லிம்கள் கைபர் போலான் வரத்து எனக் கூறியதால்

நிலவினியன் மாணிக்கம்  :  திராவிட சிந்தனையாளர்கள் எதிராளியின் நூலைப் படிக்காமல் யாரும் கருத்தை மறுப்பதில்லை.
கண்ணதாசன் அவன் வந்தாக எழுதியுள்ளதை திரித்தது A1-3D ஜெயா முண்டம்.
அந்நூலில் உள்தைக்காட்டியே அதை மறுக்க இயலுமே.நாம் எதற்கு கற்பனையாக நாம் கதைகள் பேச வேண்டும்
அப்துல்லாவின் உயரத்தில் அவர் அந்த நூலை குறைந்த பட்சம் வாங்கி படித்திருக்க வேண்டும்..
அதன் பிறகு இருக்கும் ஆதாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினாலே போதுமானதே.
அவர் கேள்விப்பட்டதை மட்டுமே வைத்து பதில் சொல்ல முயல்வதன் விளைவு இது ..
தொண்டர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த தேவையில்லை. அந்த ஆயுதத்தை திணித்த கஸ்தூரியை அவருடைய லெவலில் அடிப்பார்கள்.அதைத் தடுக்கத் தேவையில்லை

Kalai Selvi :  இந்த அளவு தரம் தாழ்ந்த ஒரு எம்பி .. இது தேவையா
MMஅப்துல்லா பதிவு ஒன்று பார்த்தேன்
கீழ்த்தரமாக இருந்தது அதிர்ச்சி
அப்துல்லா என்னைப் போன்ற சாதாரணன் என்றால் எழுதலாம்
ஒரு திமுக எம்பி அப்படி எழுதக்கூடாது
கலைஞர் இருந்திருந்தால் கடுமையாக கண்டித்திருப்பார்
கஸ்தூரி பாட்டி கேவலமானவராக இருந்திருக்கலாம்
கஸ்தூரி மம்மி கேவலமானவராக இருந்திருக்கலாம்
கலைஞரின் கேரக்டரை எப்படி அப்துல்லா அசாசினேட் செய்யலாம்
என் உடன்பிறப்பு என்றாலும்
நான் அவரை கண்டிக்கிறேன்

Kalidass Sekar :  ஏமா நீ சொன்னது சரிங்குறதுக்காக எதை எதையோ தூக்கினு வராதமா. கடுப்பு கூந்தல் ஆகுது.

LRJ  : ஒரு ஊர்ல ஒருத்தன் திடீர்னு மனுஷன் தின்னாத அசிங்கத்தை தின்னுகிட்டிருந்தானாம்.
அதைப்பார்த்து அதிர்ச்சியானவன் “இந்த அசிங்கத்தை எதுக்குடா நீ திங்கறே”ன்னு கேட்டானாம்.
“இத பன்னி திங்குது; நாய் திங்குது; கோழி திங்குது. அதுகிட்டயெல்லாம் நீ போய் இப்படி கேட்டியா? என்கிட்ட மட்டும் வந்து பெரிசா கேள்வி கேட்கற?” அப்படீன்னானாம்.
அந்த கதையா கெடக்கு ஊரு நிலவரம்.
பன்னியும் நானும் ஒண்ணுன்னு சொல்றவங்க கிட்ட என்ன பேச முடியும்?

LRJ  : இந்த பதிவில் இவர் உண்மையில் திராவிடர் இயக்கத்தின் கட்டக்கடைசி நிஜமான தலைவர் கலைஞரைத்தான் அவமதிக்கிறார். அதுவும் அவர் கடைசி மூச்சுவரை கட்டிக்காத்த அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். “நக்கும் நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன” என்பது கலைஞர் வெறுப்பாளர்களுக்குப் பொருந்திய காலம் போய் சித்தரஞ்சன் சாலை சின்ன ஜமீனின் அடியாள்களுக்கும் பொருந்தும் காலம் வந்திருக்கிறது. சித்தரஞ்சன் சாலை சின்ன ஜமீனுக்கு கலைஞர் மீது உண்மையான மதிப்பிருந்தால் தானே அவரது ஏவல் படைக்கு கலைஞரை அவமதிக்கக்கூடாது என்கிற பயம் இருக்கும்? எஜமானனுக்கே இல்லாத உண்மையான மரியாதை ஏவலாளிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இத பன்னி திங்குது; நாய் திங்குது; கோழி திங்குது. அதுகிட்டயெல்லாம் நீ போய் இப்படி கேட்டியா?


கருத்துகள் இல்லை: