வியாழன், 25 பிப்ரவரி, 2021

கமலஹாசனின் சக்கர நாற்காலி பேச்சு .. கலைஞர் மீதான பார்ப்பன விஷம் ...மீண்டும் மீண்டும்

Thamira Aathi : கமலின் மநீம 4ம் ஆண்டு துவக்கவிழா பேச்சினை முழுதும் கேட்டேன்.
கிட்டத்தட்ட 50 நிமிடங்கள். எந்தவிதமான அரசியல் புரிதலும், பொறுப்புமற்ற, வன்மம் நிறைந்த கிட்டத்தட்ட ஒரு அதிமுக அமைச்சரைப் போன்ற ஒரு பேச்சு.
எம்ஜியாருக்கு ஜால்ரா! நான் சிவாஜி, காமராசர்லேர்ந்து எல்லாரையும் பார்த்தவன் எனும் அதே சுயமோகப் பாட்டு!
ஊழல் மட்டுமே இங்கிருக்கும் ஒரே பிரச்சினை எனும் ஆபத்தான பிரச்சாரம்!
அதிமுகவும், திமுகவும் ஒன்று எனும் திட்டமிட்ட பழி!!
எல்லாவற்றையும் விட நான் மிக அதிர்ந்த விசயம், 'சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன்' எனும் வன்மம் மிக்க வார்த்தைகள்!
'முற்போக்குப் பேசும் பாப்பான் மிக ஆபத்தானவன்' என்று பெரியார் குறிப்பிட்டது எத்தனை உண்மை என்று உறைக்கிறது.
சொல்லப்போனால், பயமாகவே கூட இருக்கிறது. நாம் சிந்திக்கிறோம் எனும் நினைப்பிலிருக்கும் நம்மையே இத்தனை வயது வரை ஒரு முற்போக்குப் பாப்பானால் நிற்க வைத்து தலையில் மிளகாய் அரைக்க முடியும் என்றால் பொதுமக்களின் நிலை?
நல்லவேளையாக அவர்கள் நம்மை விட அறிவாளிகளாகவே பல சந்தர்ப்பங்களில், தேர்தலில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இனியும் இருப்பார்கள். இந்த பித்தலாட்டக்காரர்களை எங்கு வைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.
கலைஞர், சக்கர நாற்காலியில் வளைய வந்ததில் யாருக்குக் கஷ்டமாம்?
அந்தச் சிரமத்திலும், உடல் நிலையிலும் ஓய்வை நாடாமல் கலைஞர் ஓடி ஓடி உழைத்தது, பெரியார் அதே வயதில் ஓய்வுக்கு ஆசைகொள்ளாமல் 'அம்மா, அம்மா' என்று வலியில் துடித்தபடி ஊர்ஊராக சென்று பேசியதுக்கு ஈடானது என்று விளங்குகிறது.
விநாடி நேர ஓய்வு எடுக்கவும் அனுமதிக்காத வெறிபிடித்த, இப்படியான சனாதன எதிரிகள் சூழ்ந்திருக்கும் நிலையில் அவர்களால் எப்படி ஓய்வை எண்ணியிருக்க முடியும்?
மலைப்பாக இருக்கிறது.
கமலுக்கும் வயதாகும். சக்கரநாற்காலி தேவைப்படக்கூடும். அதில் அமர்ந்தபடி சினிமாவில் நடிக்கவோ, இயக்கவோ அவர் விரும்பலாம். அப்போது அது எங்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாது கமல்ஹாசன்!
ஒரு கலைஞன் இந்த நிலையிலும் பணிபுரிய விரும்புகிறான் என்றுதான் நினைப்போம். ஆனால், கலைஞரின் சக்கரநாற்காலி உருண்டது அவரது தனிப்பட்ட விருப்பத்துக்காக அல்ல, தமிழர்களுக்காக! தமிழர்களின் சமூகநலனுக்காக! எங்களுக்காக! அது எப்படி எங்களைக் கஷ்டப்படுத்தியிருக்கும்?
பேசுங்கள் கமல், இன்னும் நிறைய பேசுங்கள், உங்களைப் போன்றோர் இன்னும் நிறைய பேசுங்கள்!! அப்போதுதான் எங்களுக்காக உழைத்த, எங்கள் முன்னோடிகளின் அருமையை நாங்கள் இன்னும் உணரமுடியும்!
இன்னொரு விதத்தில், கமலின் பேச்சு முழுதும் உள்ளூர பரவியிருக்கும் பயத்தை உணரமுடிந்தது. ரஜினியைப்போலவே பதவியில் அமர்வதுதான் வெற்றி என்பது போன்ற பேச்சு.
ஆனால், அது தமக்குக் கிடைகப்போவதில்லை, எதிர்கட்சியாகவாவது அமர்வோம் என்பதான சமாதானம்.
24 மணி நேரமும் கட்சி, பணி, ஆட்கள், பேனர், கூட்டம், வேன், கொடிகள் எனப் பார்த்துக்கொண்டேயிருக்கும் சூழலில் ஒருவன் தன்னை நிஜமாகவே தலைவனாகவே நினைத்துக் கொள்கிறான்.
அதிலிருந்து மீள்வது மிகச்சிரமம். அதனால்தான் இங்கு பல சிறிய கட்சிகளும் எத்தனை தேர்தல்கள், தோல்விகளை சந்தித்த பிறகும் மீண்டும் மீண்டும் நம்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
கமலும் தன்னை இப்போது ஒரு தவிர்க்க முடியாத சக்தி என நினைத்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்தத் தேர்தல் நாம் எதிர்பார்த்த, ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத முடிவை அவருக்குத் தரும்.
எம்ஜியாருக்கு ஜால்ரா அடித்து, கலைஞரை தாக்குவதன் மூலம் திமுகவுக்கு எதிரான ஓட்டுகளையும், குழம்பிக்கிடக்கும் அதிமுக ஓட்டுகளையும் ஒருசேர பெறலாம் எனும் குறுக்குப்புத்தி திட்டமாக இருந்தால், அதுவும் திமுகவுக்கு சாதகமாகவே அமையும். ஆனால் எந்த விதத்திலும் உங்களுக்கு அது உதவப்போவதில்லை
.
இழந்த மரியாதையை இனி சினிமாவிலும் உங்களால் மீட்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில், வன்மம் உள்ள மனம் ஒருபோதும் வெற்றிகாண இயலாது.
இறந்தகாலம் இல்லாமல் போய்விடப்போவதில்லை. என் போன்ற எத்தனையோ ரசிகர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டிப்பலகையாக தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எழுத்துகள் அழிந்துபோய்விட்ட அந்தப்பலகையை முறித்து அடுப்பில் போடவேண்டிய காரியத்தை காலம் செய்யும்.

கருத்துகள் இல்லை: