வியாழன், 25 பிப்ரவரி, 2021

கேரளா மீனவர்களோடு ராகுல் காந்தி கடலில் நீச்சலடித்து மீன் பிடித்த காட்சி

Jeyalakshmi C - tamil.oneindia.com ; கொல்லம்: வயநாடு தொகுதி எம் பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் கொல்லத்தில் மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்தார்.
சட்டென்று படகில் இருந்து கடலில் குதித்து நீந்தினார்.
இதனைப் பார்த்த மீனவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா வந்துள்ளார்.
கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது.
ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். ராகுல்காந்தி இன்று கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம் செய்து வலை வீசி மீன் பிடித்தார்.
அந்த மீன்களை படகில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்தனர். அந்த மீன்களை ருசித்துச் சாப்பிட்டார் ராகுல்காந்தி
கடலில் நீச்சல் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி சட்டென்று கடலில் குதித்து நீச்சலடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல்காந்தி திடீரென்று கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

கடல் பயணத்தில் ராகுல் மீனவர்களிடம் அவர் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மிகவும் சகஜமாகப் பழகியது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து சில மீனவர்கள் கடலில் குதித்தனர். அப்போது எதற்காக மீனவர்கள் கடலில் குதித்தனர் என்று என்னிடம் அவர் கேட்டார். வலையில் இருக்கும் மீன்கள் சில சமயம் கடலுக்குள் சென்று விடும். அதற்காக வலையை இழுப்பதற்காகக் கடலில் குதித்துள்ளனர் என்று கூறினேன்.

நீச்சலடித்த ராகுல்காந்தி நீச்சலடித்த ராகுல்காந்தி நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறிய ராகுல் காந்தி, திடீரென படகில் இருந்து கடலில் குதித்தார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடலில் அவர் நன்றாக நீந்தினார். படகில் வந்த போது எங்களது குடும்பத்தைக் குறித்தும் அவர் கேட்டறிந்தார். நான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன் தான். ஆனாலும் ராகுல் காந்தியைப் போல ஒரு தலைவர் முன் எந்த அரசியலுக்கு இடமில்லை என்கிறார் பிஜு.

எளிமையான தலைவராக மாறும் ராகுல்

எளிமையான தலைவராக மாறும் ராகுல்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி கரூரில் சமையல் கலைஞர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டார். தனது கையால் தயிர் ரைத்தா கலந்தார். அந்த வீடியோ வைரலானது. புதுச்சேரியில் மாணவிகள் மத்தியில் பேசும் போது உற்சாக மிகுதியில் குதித்த மாணவியின் கைகளை பிடித்து அன்பாக பேசி புகைப்படம் எடுத்தார். இப்போது மீனவர்களிடம் உரையாடி எளிமையான தலைவராக பிரபலமடைந்து வருகிறார் ராகுல்காந்தி.

கருத்துகள் இல்லை: