செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

இலங்கையில் நாட்டார் வழிபாட்டை அழித்தொழித்த ஆறுமுக நாவலர்

May be an image of 2 people and text that says 'இயற்கை வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தில், எங்களது மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத, ஆகம் வழிபாட்டைப் புகுத்தியவரும் நாவலரே ரே.பெரும்பாலான சிறுதெய்வக் கோயில்கள் நாவலரால் ஆகம் முறையிலமைந்த பெருங் கோவில்களாக மாற்றப்பட்டன. -அருளினியன் அவர்கள் எழுதிய 'கேரள டயரீஸ்''
Dhinakaran Chelliah : · அழிந்து போன நாட்டார் வழிபாடு!   தமிழ்நாட்டுப் பண்பாட்டின் அடையாளம் என்பதே இயற்கை வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு,மூத்தோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு,நடுகல் வழிபாடு,நாட்டார் தெய்வ வழிபாடுகளே.தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை நாட்டார் கோயில்கள் இல்லாத இடம் இல்லை, குல தெய்வ வழிபாடு இல்லாத குடும்பங்களும் இல்லை. ஆனால், தொப்புள் கொடி உறவுகள் உள்ள ஶ்ரீலங்காவில் மருந்துக்கும் நாட்டார் வழிபாட்டு கோயில்களோ குலதெய்வ வழிபாடோ,திருவிழாக்களோ இல்லை.இது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
ஶ்ரீலங்காவில் அதிலும் யாழ்ப்பாணம் பகுதியில் நாட்டார் வழிபாடு ஏதும் இல்லை என்ற தகவலை முதன் முதலில் அறிந்தபோது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.இதற்கு முக்கிய காரணம் ஆறுமுக நாவலர் என்பதை எனது ஈழ நண்பர்கள் மூலமாகவும் பிறகு நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை உறுதிப் படுத்தும் விதமாக அருளினியன் அவர்கள் எழுதிய கேரள டயரீஸ் எனும் நூலில் எழுதிய ‘நாவலரும்-சைவ வெள்ளாள மேலாதிக்கமும்’ கட்டுரையும் அமைந்துள்ளது.
கட்டுரையின் சிறு பகுதி இதோ;
“இயற்கை வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தில், எங்களது மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத,
ஆகம வழிபாட்டைப் புகுத்தியவரும் நாவலரே. கண்ணகி கோயில்கள், கண்ணகி அம்மன் கோயில்களாக்கப்பட்டன. வேல் கோட்டங்கள்,முருகன் கோயில்களாக்கப்பட்டன.பெரும்பாலான சிறுதெய்வக் கோயில்கள் நாவலரால் ஆகம
முறையிலமைந்த பெருங் கோவில்களாக மாற்றப்பட்டன.சிறுதெய்வ வழிபாடு யாழ்ப்பாணத்தில் இன்று கிட்டத்தட்ட
முற்றுமுழுதாகவே சிதைக்கப்பட்டுவிட்டது. சிறு தெய்வக் கோவில்கள் எல்லாம் ஆகம முறைப்படி அமைந்த பெருந் தெய்வக்
கோவில்கள் ஆக்கப்பட்டுவிட்டன. கண்ணகி, ஐயனார்,கருப்பண்ணசாமி,முனி, மாடசாமி, கன்னிமார்,முனியப்பர், அண்ணன்மார் போன்ற பல சிறுதெய்வங்கள் இவரால்
காணாமல் போகச் செய்யப்பட்டன. இதன் மூலம் எமது மண்ணின் ஆன்மாவை நீர்த்துப்போகச் செய்தார் ஆறுமுக நாவலர்.
நான் நாவலரின் பாரம்பரியம் நம்பப்படும்
பாரம்பரியத்தில் வந்தவன். வீட்டிலும்,
நான் படித்த பாடசாலையிலும் நாவலரின் பங்கு மிகப் பெரியதாக இருந்தது.
எனது சிறுவயது சிந்தனைப் போக்கில் நாவலரின் பங்கு மிகப் பெரியது. சைவ பரிபாலன சபை வைத்த அத்தனை பரீட்சையிலும் நான் தேர்ச்சி அடைந்துள்ளேன். நாவலர் பேச்சுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். எனது பிரச்சனை,
இன்று யாழ்ப்பாணத்தில் தாண்டவமாடும் வெள்ளாள சாதிக் கொழுப்புகளுக்கு நாவலர் காரணமாக இருந்துள்ளார் என்பதுதான்.
அதை எதிர்க்க வேண்டியது எங்களது கடமை.
எனது பரம்பரை மதம் மாறாமல், நான் இன்னும் ஆதி இந்துவாக இருப்பதற்கு,நாவலர் ஐயாவின் பங்களிப்புக் காரணமாக இருந்திருந்தால் நான் அதற்குத் தலை வணங்குகிறேன்.ஆனால், நாவலர் ஐயாவால் யாழ்ப்பாணத்தில் பரப்ப ப் பட்ட சைவ வெள்ளாளக் கருத்தாக்கத்தை நாங்கள் அனைவரும் மறுக்க வேண்டிய காலத்தில் நிற்கிறோம்”
நாட்டார் தெய்வங்களான அய்யனாரோ,கருப்பசாமியோ,சுடலையோ,
மாடனோ,மதுரைவீரனோ,பேச்சியம்மனோ,
மாடத்தியோ,முனியாண்டியோ ஈழ மக்கள் குடியேறிய நாடுகளுக்கு இன்னும் போகாமல் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?!

கருத்துகள் இல்லை: