செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

நமச்சிவாயம்.. இதான் பாஜக.. ரங்கசாமிக்கு ஆப்பு.. கொந்தளிப்பில் 2 கட்சிகள்.. புதுச்சேரி கூத்து

 ரங்கசாமி

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "நமச்சிவாயம், நமச்சிவாயம்" என உச்சரிப்பதே நமது லட்சியம் என்று புதுச்சேரி பாஜக மேலிடப் பார்வையாளர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியைச் சேர்ந்த, 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.. நாராயணசாமி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க தேவை எழுந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமும் தோற்று போய், காங்கிரஸ் அரசு கவிழ்ந்தே விட்டது..
நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததும், என்ஆர் காங்கிரஸின் தலைவர் ரங்கசாமிதான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்டது..
காரணம், இவர்தான் புதுச்சேரியை அன்று கட்டிப்போட்டவர்.. மூத்த தலைவரும் கூட.. தன் அரசியல் திறனால் பல சிக்கல்களை சாமர்த்தியமாக தீர்த்தவர்..

அதனால், நாராயணசாமி கிரண்பேடியுடனான மோதலில் இந்த 5 வருடம் கட்டி உருண்ட காலத்தில், மக்களுக்கு ஒருவித சோர்வு ஏற்பட்டுவிட்டது.. அதனால்தான் பெரும்பாலானோர் கவனம், ரங்கசாமி மீது திரும்பியது. மேலும் இவர் ஒருவர்தான் முழு பதவிக்காலத்தையும் முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்பதால் மக்கள் பார்வை இவர் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் பாஜகவிடம் வேறு பிளான் இருப்பது தெரிய வந்துள்ளது.
நமச்சிவாயம் அதாவது அவரை ஓரம் கட்டி விட்டு, அவரது உறவினரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவருமான நமச்சிவாயத்தை தூக்கி முன்நிறுத்த ஆரம்பித்துள்ளது பாஜக. அக்மார்க் காங்கிரஸ்காரராக இருந்தவர்தான் நமச்சிவாயம்.. மாநில அமைச்சராக பணியாற்றி வந்தவரும்கூட..

பாஜக முக்கிய பதவியான பொதுப்பணித்துறை அலங்கரித்தவர்... ஆனால், ஜனவரி 28ம் தேதி காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்.. இவர் பெயரைதான் பாஜக உச்சரித்து வருகிறது.. புதுச்சேரி பாஜக ஆபீசில் தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசினார்..

உச்சரிப்பு அப்போது, "நமச்சிவாயம், நமச்சிவாயம் என உச்சரிப்பதே நமது லட்சியம். கோவிலுக்குச் செல்வதும், கடவுளை வழிபடுவதும் நமது பண்பாடு. அதனால், நமச்சிவாயம், நமச்சிவாயம் என்போம். நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்" என்றார்.. நிர்மல்குமார் இப்படி சொன்னதுமே, பாஜக தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. கை தட்டினர்.. கத்தி கூச்சலிட்டு வாழ்த்து சொன்னார்கள்... ஆதரவினை அபரிமிதமாக காட்டினார்கள்.

வேட்பாளர் எனினும், பாஜக பொறுப்பாளரின் இந்தப் பேச்சால், புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்க வருகிறது.. "நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்" என்று ஏன் சொல்கிறது பாஜக? என்ற கேள்வி எழுந்துள்ளது. நமச்சிவாயம் நேற்றுதான் கட்சி தாவி வந்தார். வந்த வேகத்தில் அவரை முதல்வர் வேட்பாளராக்குவதன் மூலம் பாஜகவின் திட்டம்தான் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

ரங்கசாமி அதாவது காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து ரங்கசாமி ஆட்சி என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வந்த நிலையில் அப்படி இல்லை.. காங்கிரஸ்காரர்களை வைத்துக் கொண்டு பாஜக ஆட்சிதான் அடுத்து என்ற மறைமுக சிக்னலையே சுரானாவின் பேச்சு வெளிக்காட்டுவதாக உள்ளது. இதன் மூலம் ரங்கசாமிதான் பாஜகவின் அடுத்த குறியாகவும் இருக்கலாமோ என்ற மறைமுகமான எண்ணம் வெளிக்கிளம்பியுள்ளது

ஒரு சீட் கூட வெற்றி பெறாமல், வெறும் உருட்டலில், மிரட்டலில் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி கொள்ளலாம் என்றால் தேர்தல் ஒன்று தேவையில்லையே என்றகேள்வியும் எழுந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் எதற்கு என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது. புதுச்சேரியில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: