வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

தோழர் தா. பாண்டியனுக்கு செவ்வணக்கம்! .... அவரின் வரலாற்றில் சில பக்கங்கள்.

தோழர் தா.பாண்டியன் காலமானார்….. | E Tamil News
தோழர் தா பாண்டியன் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் . அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் மீதான நேயம் இருந்திருக்கிறது.
எல்லா அரசியல் தலைவர்களையும் போலவே  பல  விமர்சனங்களையும் தாண்டியது அவரின் அரசியல் சமூகப்பணி.
அமரர் தா. பாண்டியனின் பேச்சாற்றல் பிரமிக்கத்தக்கது.
இந்திய வரலாற்றை மட்டுமல்லாது ஈழ வரலாற்றையும் விரல்நுனியில் வைத்திருந்த வெகு சிலரில் தோழரும் ஒருவர்.
இடதுசாரி இயக்கங்களின் ஒரு முக்கிய தலைவராக இருந்தாலும் அவற்றின் வரலாற்று தவறுகளையும் நிகழ்காலத்தையும் பாரபட்சம் இல்லாதது விமர்சிக்கும் அவரது பண்பு மிகவும் பாராட்டுக்கு உரியது.
அவர் உண்மையில் ஒரு அரசியல் பல்கலை கழகம் என்றுதான் கூறவேண்டும்.
ஸ்ரீ பெரும்புதூரில் அமரர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நிகழவில்லை தோழரும் படுகாயமுற்றார்
இவர் இறந்துவிட்டார் என்றே முதலில் கருதப்பட்டது  நல்வாய்ப்பாக அவர் மீண்டுவிட்டார்  ஆனாலும் அவரது உடலில் இன்னும் சில உலோக துகள்கள் நிரந்தரமாக புதைந்திருந்தது.
அந்த சம்பவத்தின் குற்றவாளிகளை அவர் மன்னித்தது மட்டுமல்லாமல் அவர்களது விடுதலைக்காகவும் ஓங்கி குரல் கொடுத்தது அவரின் மனித நேயத்திற்கு மிகப்பெரும் சான்றாகும்.
தேர்தல் அரசியல் காரணமாக அவர் மேற்கொண்ட சமரசங்கள் இப்போதும் ஏற்று கொள்ள கூடியவை அல்ல.
அவர் கூட அவற்றை இட்டு பிற்காலத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் என்றெண்ணுகிறேன்.
எல்லாவற்றிலும் மேலாக அவர் சி பி ஐ எம் பொலிட் பீரோவில் உள்ள மேட்டுக்குடி அங்கத்தவர்களின் நிரந்தர அங்கத்துவம் பற்றி விமர்சித்திருந்தார் .
இதன் மூலம் பல தோழர்களின் உள்ளத்தை அவர் பிரதிபலித்தார் என்றே கருதுகிறேன்.
சுதந்திர விமர்சனம் இல்லாத எந்த அமைப்பும் காலாவதி ஆகிவிடும் என்பதை அவர் அறிந்தே இந்த விமர்சனத்தை வைத்தார் என்றெண்ண இடமுண்டு.
தோழர் ஜோதி பாசுவை தேடி பிரதமர் பதவி வந்த பொது அதை மறுத்த பொலிட் பீரோவின் சிறுமையை அவர் அம்பலப்படுத்தியது ஒரு வரலாற்று சேவை.
தோழர் பாண்டியன் அவர்களின் ஈழப்போராட்ட தொடர்பு பற்றி கூறாவிடின் எனது செவ்வணக்கம் சீர் பெறாது என்று கருதுகிறேன்
தோழர் பத்மநாபாவுக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார் தோழர் பாண்டியன்.
பத்மநாப உட்பட 14 ஈ பி ஆர் எல் எப் தோழர்கள் சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் இவரை மிகவும் பாதித்தது  
அவர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் இவர் பேசியது ஒரு இடி முழக்கம் என்றே கூறலாம் .
ஆனாலும் புலிகள் மீதான தனது கோபத்தை மறந்து அல்லது மன்னித்து அவர்களோடு நட்புறவு பாராட்டினார்.
அதிலும் குறிப்பாக செல்வி ஜெயலலிதாவிடம் புலிகள் சார்பாக பேசி அவரை ஓரளவாவது புலிகளுக்கு சார்பானவராக மாற்றியது தோழர் பாண்டியன்தான் .
அதிமுக தேர்தல் பிரசாரத்திற்கு புலிகள் விடயத்தை பயன்படுத்தலாம் என்று ஜெயலலிதாவுக்கு தோழர் பாண்டியன்தான் சரியாக எடுத்துரைத்தார் என்ற ஒரு கருத்து உண்டு.
முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் புலிகளோடு மிக மிக நெருங்கிய தொடர்பை பேணி இருந்தார்.
இறுதியில் புலிகள் சரணாகதி அடையும் முடிவை இவரிடம் கூறியது போது சரணாகதி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று அறிவியுங்கள் என்று தான் கூறியதாக அவரே ஒரு பேட்டியில்  கூறினார்.
அதற்கு உரிய வரிகளையும் தானே எழுதி அவர்களுக்கு அனுப்பியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது ஒரு வரலாற்று பதிவாகும்.               


கருத்துகள் இல்லை: