வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

2000 ஆண்டுக்கு பிறகு எலீட் இனத்தின் அடையாளம் அழிய ஆரம்பிச்சுது... ரஜினி, கமல், சகாயம் ஐஏஎஸ் அன் சோ ஆன்...

Kathir RS : ஒரு காலத்துல எலீட் எனும் மேட்டுகுடியினர் 5% தான்.. இந்த 5% எலீட்ல 5% கூட ஓட்டு போட வரமாட்டாங்க.. ஆனா இவுங்கள நம்பித்தான் மொத்த கார்பரேட் கம்பெனிகளும் FMCG கம்பெனிகளும் இயங்குச்சு. கார்லேருந்து ஷாம்பூ வரை இவர்கள்தான் மெயின் டார்கெட். அதனாலதான் அந்த காலத்து விளம்பரங்களில் இவர்களைப்போன்ற வெள்ளைத் தோல் தோற்றமுள்ளவர்களை மையப்படுத்தி வெளிவந்தன.பிற்பாடு விளம்பரம்னாலே இப்டிதான் இருக்கனும்னு ஆயிடுச்சு.
இப்படி ஓட்டு போடாத இந்த எலீட்கள் பெருசா எந்த பிரச்சனையும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தாங்க.
வீட்டு வேலை சமையல் தோட்டம் வாகனம் ஓட்ட என எல்லாத்துக்குமே அவங்களுக்கு ஆள் இருப்பாங்க..அவுங்க எல்லாரும் எஜமான விசுவாசத்தோட பயத்தோட வேலைசெய்வாங்க..செத்தாலும் வேலையவிட மாட்டாங்க...
எங்கேயும் எதையும் அவுங்களால சாதிச்சுக்க முடியும்...போட்டி குறைவு..அல்லது போட்டியே இல்லை.எல்லா இடத்திலும் மரியாதை.சாதாரண மக்கள் கூட தாமாக முன்வந்து உதவும் ஒருவிதமான உயர்ந்த சிறப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள்
வீட்டில் வேலை செய்பவர்களுக்கு
இவுங்களா பாத்து எது செஞ்சாலும் அது பெரிய கொடையாகவும் வள்ளல் தன்மையாகவும் பார்க்கப்பட்டகாலம் அது.
இதெல்லாம் 1970-80-90 வாக்குல இருந்த நிலமை.
90களுக்கு பிறகு ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் படித்து முன்னேறத் தொடங்கிய பிறகு நிலமை மாற ஆரம்பிச்சுச்சு..
அந்த எலீட்டுகளுக்கு சர்வைவல் சிக்கல் ஆரம்பிச்சுது.. வேலைக்கு ஆள் இல்ல..எங்க போனாலும் கூட்டம் போட்டி..அச்சம்..யாரையும் நம்ப முடியல.யாரும் முன்னணி மாதிரி விசுவாசமா அடிமையா இல்ல..கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க..சம்பளம் டிமான்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க..ஒரு வார்த்தை கோபமா பேசினாக் கூட போடா மயிருன்னு வேலைய தூக்கி போடடுட்டு போக ஆரம்பிச்சாங்க..இப்படி பல சிக்கல்..
இந்த சிக்கல் அதிகமாயிட்டே போச்சு ஆனா அவுங்களால ஒன்றும் பண்ண முடியல..
2000 ஆண்டுக்கு பிறகு இந்த ஒரிஜினல் எலீட் இனத்தின் அடையாளம் அழிய ஆரம்பிச்சுது.
பணக்கார்ர்கள் எண்ணிக்கை அபரீதமா அதிகரிக்க ஆரம்பிச்சுது.
நிறைய தொழில் முனைவோர் புது முதலாளிகள் பணக்காரர்கள் தோன்றினர்.
இவர்கள் கலர் அந்த பழைய பெரும்பான்மை எலீட் கலரான வெள்ளைத் தோலாக இல்லாமல்..கறுத்த உருவம் கொண்டவர்களாக இருந்தார்கள்.கன்சல்டன்ட்கள் தொழிலதிபர்கள் உயர் அரசு பதவியினர் என பல ரகங்களில் இந்த எண்ணிக்கை அதிமாயின..அந்த புதிய எலீட் தொழிலதிபர்கள் வகையறாக்களின் பணக்கார பிள்ளைகள் வழக்கத்திற்கு மாறாக கறுப்பாகவே பிறந்து வளர்ந்தார்கள்.அவர்கள் சமூகத்தில் ஆடி காருடன் வலம் வருவதை பார்த்து பழைய எலீட்டுகளுக்கு வயிறெறிந்தாலும் பாவம் இதை தடுக்க அவர்களால் முடியவில்லை.
இந்த புதிய எலீட்டுகள் பழைய எலீட்டுகளல்லர்..ஆனால் எலீட்டுகள் தான்.
இப்போது இந்த எலீட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
5% எலீட் இப்போது 25% வரை உயர்ந்து விட்டது. இவர்களில் பலர் ஓட்டு போடக் கூடிய எலீட்டுகள்.
இந்த புது எலீட்டுகளின் மனநிலை என்னவென்றால்..தாம் பழைய எலீட்டுகளை மேட்ச் செய்து விட்டதால் தாமும் அந்த ஏலீட்டுகளாகிவிட்டோம் என்பதாகும்.
அதாவது.. டர்ட்டி பாலிட்டிக்ஸ்.. ரிசர்வேசன ஒழிக்கனும்..ஊழல ஒழிக்கனும்..திராவிடத்தால் வீழ்ந்தோம்.. என பழைய எலீட்டுகளின.மௌத் பீசாக இந்த புதிய எலீட்டுகள் பேச ஆரம்பித்தனர்.இதை அந்த பழைய எலீட்டுகளே எதிர்பார்க்கவில்லை.
இப்போ அந்த பழைய எலீட்டுகள் ஒரு ப்ளான் போட்றாங்க...
விளைவு...
ரஜினிகாந்த்
கமலஹாசன்
சகாயம் ஐஏஎஸ்
அன் சோ ஆன்...
கதிர் ஆர்எஸ்
25/2/21
Kathir RS
- பதிவு
அதிமுகவுக்கு இந்த நவீன எலைட்களின் பெருமளவு ஆதாரவு உண்டு😥
குறிப்பாக கொங்கு மண்டல எலைட்களின் ஆதரவு உண்டு..

கருத்துகள் இல்லை: