வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் இரண்டாவது சம்பவம்

தினமலர் : சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த வாரம் நடந்த பட்டாசு விபத்தில் 23 பேர் உயிரிழந்தார்கள்.
அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 12-ம் தேதி சாத்தூர் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 3 அறைகள் சேதமடைந்தன. அறைக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண் உள்பட பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். . கடந்த இரு வாரங்களில் இரு வேறு பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: